இஸ்லாம் பற்றி வினவுக்கும் சாகித்துக்கும்-1

//கதவைத் திறக்காமலேயே உள்ளிருந்தபடியே பதில் சொன்னார் என் நண்பனின் மனைவி. அரைக்கால் ட்ரவுசரை போட்டுக் கொண்டு தெருவில் விளையாடிய போதிலிருந்தே அவன் எனக்கு நணபன்//
அவருக்கு நீங்கள் நண்பன். அவர் மனைவிக்கு நீங்கள் தோழி இல்லையே. அவரது நீண்ட கால நண்பர் என்றதால் அன்பாகச் சொன்னார்கள். அதே தெரியாத ஒருவராக இருந்தால் "அவர் வீட்டில் இல்லை. எப்ப வருவாரோ தெரியாது" என்று முகத்திலறைந்தாற்போல் சொல்லி இருப்பார்கள்.

'அவர் எனக்கு சகோதரி மாதிரி' என்பதெல்லாம் இஸ்லாம் ஏற்றுக் கொள்ளாது.
'உடன் பிறந்த சகோதரியா? இல்லையே! இடத்த காலி பண்ணு' - இதுவே இஸ்லாமிய முறை.
இவ்விரண்டில் எது சரி என்று எங்காவது உங்களுக்குத் தெரிந்த இடத்தில் நண்பர்களால் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பார்கள், கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

எல்லோரையும் சந்தேகக் கண்ணோடு பார்ப்பதுதான் இஸ்லாமா?
இல்லை. தவறு நடக்க ஏதுவான பாதைகளும் அடைக்கப்பட வேண்டும் - இதுதான் இஸ்லாம்.
இது பெண்களுக்கு மட்டுமான சிறையா? இல்லை. இருபாலாருக்கும் பொது. மற்றவர்கள் வீட்டுக்கு போனால் வெளியிலிருந்து ஸலாம் சொல். மூன்று முறை சொல்லியும் பதிலில்லையா? அவ்விடத்தில் நிற்காதே. போய் விடு.
உனக்கு மஹ்ரமில்லாத பெண்ணிடத்தில் தனித்திருக்காதே. ஒரு பெண்ணும் அவளுக்கு மஹ்ரமில்லாத ஆணும் தனித்திருந்தால் மூன்றாவதாக அங்கே (மனதை வழிகேட்டில் இழுக்கின்ற) ஷைத்தான் இருக்கின்றான் - இது இஸ்லாம். (மஹ்ரம்- திருமணம் செய்வதற்கு தடை செய்யப்பட்ட உறவினர்கள். உதாரணமாக: பெண்களுக்கு - தந்தை, தமையன், மாமன் முதலியோர். ஆண்களுக்கு - தாய், தமக்கை, மாமன் மனைவி முதலியோர்)


//“மாமா” நல்லா இருக்கீங்களா? எப்பவந்தீங்க? என்று நலம் விசாரிக்கும் பண்புக்கு மாறிவிட்டாள்.//
'சரியாகத்தான் சொல்லி இருக்கின்றீர்கள். 'நல்ல பண்பு'

இஸ்லாமிய பெண்கள் அன்னிய ஆடவர் முன்னிலையில் ஒரு குறிப்பிட்ட அளவு உடை அணிந்திருக்க வேண்டியது அவசியம். அந்தளவு உடை எல்லா நேரத்திலும், குறிப்பாக தன் கணவர், குழந்தைகள் முன் அவசியமில்லை. குறைந்த உடையில் துணி விலக வாய்ப்புகள் அதிகம். எழுந்து மறைவான இடம் செல்வதற்கு இது முதல் முக்கிய காரணம்.

நீங்கள் சந்திக்க வந்தது அவரை. அவரைச் சந்திப்பதில் தடை இல்லை.
வீட்டுக்கு வந்தவரை உபசரிப்பது நல்ல குடும்பப் பண்பாடு. அவர்களால் இயன்றவரை உங்களை நல்ல முறையில் உபசரிக்கின்றார்கள்.
அவர்கள் குடும்பப் பெண்களை பார்க்க வேண்டிய தேவை உங்களுக்கு ஏன்?! அல்லது தேவையின்றி அவர்கள் ஏன் உங்களைப் பார்க்க வேண்டும்?!.

இத்தனை நாள் மாமா என்றழைத்து விளையாடியிருந்த பெண் (வயதுக்கு வந்து விட்டது என்பதற்காக) ஒரேயடியாய் விலகி விட்டால் வித்தியாசமாகத் தெரியும். அதனால் அம்மாவோட ஒட்டிக் கொண்டு உங்களை விசாரிக்கிறது. படிப்படியாக அதுவும் குறைந்து விடும்.

இதிலே என்ன குறையை கண்டு பிடித்தீர்கள். நல்ல பண்புகளைப் பழகட்டும் பேணட்டும். இருட்டிலிருந்து கொண்டு வெளிச்சத்தை பழிக்காதீர்கள்.
-----------------------------------------------------------------------------------

//உழைக்கும் பெண்களிடமும் கடைநிலையில் இருந்த அன்றாடங்காச்சி களிடமும் இந்தப் பண்பாடு வேறாகத்தானிருந்தன//
வண்ணாரப்பேட்டை, திருச்சி குத்பிஷா நகர், பாலக்கரை ஆற்றோரத்தின் அருகில், பாளையங்கோட்டை விவசாயக் குடும்பங்கள் போன்றவர்களிடம் வீடுகளில் மறைவாக இருந்து கொள்ள வசதிகளில்லை என நீங்களே சொல்கிறீர்கள். அவர்களிடம் எண்ணமிருந்தாலும் வீடுகளில் வசதிகளில்லாததால் அப்படி இருக்கின்றார்கள்.

இஸ்லாம் எப்போதுமே ஒருவரது இயலாமைக்காக அவரைக் குற்றம் பிடிப்பதில்லை. வசதியுள்ளவர்கள் அவர்களது இயலாமையைப் போக்க வேண்டும் என்று பணிக்கிறது.

அவர்களும் வசதி வந்து விட்டால் அதாவது நடுத்தர நிலைமைக்கு வந்து விட்டால், அதன் பின்னர் நீங்கள் சொன்னதுதான்
"தான் மதிப்புமிக்க கௌரவமான குடும்ப பாரம்பரியம் கொண்டவர்கள் என தன்னைக் கருதிக் கொள்ளும் நடுத்தரவர்க்கத்தின் மத்தியில் மட்டுமே இந்தப் பண்பாடு காணப்பட்டது. இவர்களே இசுலாமிய சமுதாயத்தின் பிரதான தூண்களாகவும் இருந்தனர்."

//எனது நண்பர் கஹாரின் தாயார் விவசாயி. அவர் திருமணம் செய்ததிலிருந்து அவரை கதவுகளும் பாதுகாப்பு செயினும் தடுக்கவில்லை. தலையில் சாணம் சுமந்து விவசாயம் செய்தவர். ஆனால் கஹாரி எலக்ட்ரிசியன் பட்டப்படிப்பு படித்துவிட்டு ஓரளவு சுமாராக சம்பாதிக்கத் தொடங்கியதால் நடுத்தரவர்க்கத்தின் பண்பாட்டினையே கௌரவம் என வரித்துக் கொண்டுவிட்டார்.//
கஹாரின் தாயாரின் சாணம் சுமந்து விற்ற ஏழ்மை. அதனால் இந்தப் பண்பாடுகளைப் பேண முடியாத இயலாமை. வசதி வாய்ப்புகள் வந்ததும் தம்மை சரி செய்து கொண்டுள்ளார். இதிலென்ன தவறு.
-----------------------------------------------------------------------------------
//உலமாக்கள், இந்திய இசுலாமிய அமைப்புகள் போன்றவர்கள் கிராமங்களிலுள்ள ஏழை விவசாயிகளை தன்னுடைய சமூக அங்கமாக ஏற்றுக்கொண்டாலும் சேரிகளில் வாழ்பவர்களையும், அன்றாடம் கூலி வேலைக்குச் செல்லும் பெண்களின் குடும்பங்களையும் கண்டுகொள்வதே இல்லை. இவர்களின் உழைக்கும் வர்க்க பண்பாடு இசுலாமியக் கோட்பாடுவாதிகளுக்கு நெருடலாக இருப்பதே காரணம்.//

இதுதான் பிரதானமாக நீங்கள் தவறிழைக்கும் இடம். ஒரு சில காலத்துக்கு முன் இஸ்லாம் சரிவர தெரியாதிருந்த போதுதான் பள்ளிவாசல்களில் சில்லறையை கொடுப்பதும், மக்களை நெருக்கியடிக்க வைத்து சில்லறைகளை விநியோகிப்பதும்தான் ஜகாத் (எனும் ஏழைகளுக்கான வரி) என நினைக்கப்பட்டிருந்தது. இப்போது அது (ஸதக்கா எனும்) சிறிய தர்மம்தான் அதனால் ஜகாத் வழங்கப்பட்டு விட்டதாக எண்ணி விடக்கூடாது என தெளிவாக அறியப்பட்டு விட்டது.

இஸ்லாமிய அமைப்புகளின் மூலம் உரியவர்களிடம் பெறப்பட்ட ஜகாத், அதைப் பெறத் தகுதியான (நீங்கள் கூறியுள்ளது போலுள்ள) ஏழைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு உதவி செய்யப் படுகின்றனர். இன்ஷாஅல்லாஹ் இது தொடர்ந்தால் முஸ்லீம்களில் ஒரு பெரிய மாற்றம் நிகழும்.

எம் ஊருக்கு அடுத்த முஸ்லீம்கள் நிறைந்து வாழும் ஒரு ஊரில் யார் வீட்டில் திருமணம் போன்ற எந்த விருந்து வைபவங்கள் நடந்தாலும் வசதியற்ற அந்த அனைத்து குடும்பங்களுக்கும் உணவளிப்பதாக உறுதியளித்தால் மட்டுமே உலமாக்களும் ஜமாஅத்தினரும் அவ்விருந்துகளில் கலந்து கொள்வர்.

முஸ்லீம்களுக்கும் முஸ்லீமல்லாதவர்களுக்கும் இஸ்லாம் சரிவர புரிய வைக்கப்பட வேண்டும் என (இப்படி தலைகீழாக இல்லாமல் நேர்மையான முறையில்) நீங்களும் எங்களுடன் இயைந்து யோசிக்கின்ற காலம் விரைவில் வர இறைவனை இறைஞ்சுகிறேன்.
------------------------------------------------------------------------------------
இன்னும் வரும்

65 comments:

மின்னுது மின்னல் said...

மேலும் மொட்டையடித்தல் சம்பந்தபட்ட ஹதிஸ் ஆதாரத்தையும் கேட்டு இருக்கலாம் :)


ஓ பாகம் 2 வருமா? :)))

Anonymous said...

Masha Allah,Grean explanation. May Allah give hidaya to everyone.

FRIENDS said...

Superb brotrher

Rifaj Aslam said...

its a great and nice reply may be they can understand now but these pepople always look into the islam wearing theri own black spectacles

thanks a lot may Allah almighty reward you

Unknown said...

வருகை தந்த மின்னுது மின்னல், அனானி, ஃப்ரண்ட்ஸ், ரிபாஸ் அஸ்லம் ஆகியோருக்கு நன்றிகள்.

Rafiq said...

அன்பு சகோதராருக்கு தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக...
அருமையான விளக்கங்களை அளித்திருக்கிறீர்கள்.. நானும் அவர்களின் தளத்திலேயே என்னால் இயன்ற அளவு விளக்க முயன்றேன்.. ஏனோ அவர்கள் எல்லாம் அறிந்து கொண்டும் தெரிந்து கொண்டும் வேண்டுமென்றே ஏற்க மறுகின்றனர் அல்லது அப்படி நடிக்கிண்றனர்..

பெண்ணுறிமை பெயரிலே இப்படி பேசும் நண்பர்கள் தங்களுடைய வீட்டு பெண்களிடத்திலும் புர்காவை (உடல் அங்கங்களை அழகுகளை முழுமையாக மறைக்கும் உடை) அணிவித்து பார்த்து விட்டு அவர்களின் கருத்துகளை கேட்டறிந்து விட்டு எதில் இருக்கிறது கண்ணியம் எதில் இருக்கிறது; எந்த உடை அடுத்தவர்களின் அத்துமீறளான பார்வையில் இருந்து காக்கிறது என்பதை முடிவு செய்து கொள்ளட்டும்..

Anonymous said...

//அவர் எனக்கு சகோதரி மாதிரி' என்பதெல்லாம் இஸ்லாம் ஏற்றுக் கொள்ளாது.
'உடன் பிறந்த சகோதரியா? இல்லையே! இடத்த காலி பண்ணு' - இதுவே இஸ்லாமிய முறை//

ஓ அப்படியா, அப்படி என்றால் இஸ்லாமிய ஆண்கள் யாரும் சொந்த தாய் சகோதரி அல்லாத பிற பெண்களை அந்த கண்ணோட்டத்தில் பார்க்க மாட்டீர்களா, சொந்த தாய் சகோதரி அல்லாத பெண்களை வேற மாதிரி எண்ணத்தில் தான் பார்க்க வேண்டும் என்று அல்லா சொல்லி இருக்கிறாரா.

M. Jaya prakash

Unknown said...

//அப்படி என்றால் இஸ்லாமிய ஆண்கள் யாரும் சொந்த தாய் சகோதரி அல்லாத பிற பெண்களை அந்த கண்ணோட்டத்தில் பார்க்க மாட்டீர்களா, சொந்த தாய் சகோதரி அல்லாத பெண்களை வேற மாதிரி எண்ணத்தில் தான் பார்க்க வேண்டும் என்று அல்லா சொல்லி இருக்கிறாரா.//
இந்த மாதிரி கேள்வி வருமென்றுதானே அடுத்த வரியிலேயே அதற்கு பதில் சொல்லி இருக்கிறேன்.
பாருங்கள்
//எல்லோரையும் சந்தேகக் கண்ணோடு பார்ப்பதுதான் இஸ்லாமா?
இல்லை. தவறு நடக்க ஏதுவான பாதைகளும் அடைக்கப்பட வேண்டும் - இதுதான் இஸ்லாம்.//
சொந்த தாய் சகோதரி இல்லையென்றால் அவர்களுடன் நீங்கள் ஒருமையில் தனிமையில் இருக்காதீர்கள் அது சில நேர சபலங்களை மனதில் ஏற்படுத்தலாம்.
சரியாக பார்க்கவில்லையென நினைக்கின்றேன்.

என்றாலும் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஜெயப்ரகாஷ்.

Unknown said...

அன்பின் ரபீக்
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹ்

வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோதரரே. பொதுத்தளங்களில் ஓரிரு தெளிவுகள் மாத்திரம் கொடுத்தால் போதும். நாம் சொல்லி அவர்கள் திருந்தி விடப் போவதில்லை. உண்மையை நோக்கி ஒரு பொறி அவர்களின் மனதுக்குள் உதித்தால் அது போதும். நீங்கள் கூடுதல் தெளிவுகள் கொடுக்க முற்பட்டால் உங்களை முக்கிய விடயத்திலிருந்து விலக்கி கோபமுண்டாக்கி வேடிக்கை பார்ப்பார்கள். கீழே உள்ளதை நினைவில் இருத்துங்கள்.
சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது உண்மையில் அசத்தியம் அழியக் கூடியதே.

தருமி said...

//தனக்கு உரிமையற்ற மற்ற பெண்களை துகிலுரித்து கீழ்த்தரமாக பார்க்கத் துடிக்கும் காமாந்தக கண்களுக்கு புர்கா கேடாகத்தான் தெரியும்//

//சொந்த தாய் சகோதரி இல்லையென்றால் அவர்களுடன் நீங்கள் ஒருமையில் தனிமையில் இருக்காதீர்கள்//


டூ மச் ... !
exxtreeme puritanism !
doubting thomas ...

Unknown said...

//டூ மச் ... !
exxtreeme puritanism !
doubting thomas ...//

நன்றி தருமி ஐயா.

மனிதன் தவறு செய்பவனாகவே படைக்கப்பட்டுள்ளான். இவை, படைத்தவன் தன் படைப்பை வழி நடத்த கொடுத்த வழி முறைகள்.

உங்களுக்காக மட்டும் சொன்னால் வருத்தப்படலாம். மனிதன் புனிதனாக வாழ, ஆண்களுக்கும் பெண்களுக்குமாக, உலக மக்கள் அனைவருக்காகவும் 1400 ஆண்டுகளாக இஸ்லாம் அதை சொல்லிக் கொண்டிருக்கிறது.

தருமி said...

//உலக மக்கள் அனைவருக்காகவும் 1400 ஆண்டுகளாக இஸ்லாம் அதை சொல்லிக் கொண்டிருக்கிறது.//
ரொம்ப தவறாக இஸ்லாம் அதை தவறாகச் சொல்லிக் கொண்டிருக்கிறது.

இப்படி ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரு ஈர்ப்பு இருக்கிறதென்றால் அதுவும் உங்க அல்லா (தவறாகக்) கொடுத்ததுதான். இப்படிக் கொடுத்துட்டு பிறகு அதைப் பண்ணாதே என்று கடவுள் சொல்லுமானால் ....

வேடிக்கைதான்!

தருமி said...

//மனிதன் தவறு செய்பவனாகவே படைக்கப்பட்டுள்ளான்.

படைத்தவன் தன் படைப்பை வழி நடத்த கொடுத்த வழி முறைகள். //

இந்த இரண்டுக்கும் ஏதாவது ஒரு லாஜிக் இருக்கா? கடவுளே மனிதனை தவறு செய்பவனாக படைப்பான். பின் அதையே கடவுளின் வழிமுறை என்கிறீர்கள்.

மனுசனாலே முடியாததை செய்வதற்காக சாமி மனுசனைப் படைச்சாரா??!! என்னங்க இது!!

வேடிக்கை!

மதம் என்றால் இம்புட்டு கண்மூடித் தனமாக இருக்கணுமான்னு தெரியலைங்க.

Unknown said...

//ரொம்ப தவறாக இஸ்லாம் அதை தவறாகச் சொல்லிக் கொண்டிருக்கிறது.//
'தவறு ஏற்படக்கூடிய வாய்ப்புகள் கூட இல்லாமல் போக வேண்டும்' என்பது தவறாக தெரிகிறதென்றால் இது தெரிய வேண்டிய கண்களின் கோளாறுதான்.

//இப்படி ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரு ஈர்ப்பு இருக்கிறதென்றால் அதுவும் உங்க அல்லா (தவறாகக்) கொடுத்ததுதான். இப்படிக் கொடுத்துட்டு பிறகு அதைப் பண்ணாதே என்று கடவுள் சொல்லுமானால் .... வேடிக்கைதான்!//

மனித இயல்பு தவறுக்கு தூண்டக்கூடியதாக இருக்கும். அதை வென்று அவன் நல்லவனாக வாழத்தான் வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றைப் பேணுவதால் அவன் நல்லவர்களில் உள்ளவன் என்று நிரூபிக்கப் பட்டு சொர்க்கத்தின் சொந்தக்காரனாகிறான்.

வானையும், பூமியையும் அவற்றுக்கு இடையே இருப்பவற்றையும் வீண் விளையாட்டுக்காக நாம் படைக்கவில்லை (திருக்குர்ஆன் 21:16ன் கருத்து).
இவ்வுலக வாழ்வு அழிவற்ற மறுமை வாழ்வுக்கான தேர்வுக் களம் என்பதில் உறுதியான நம்பிக்கையுள்ள எங்களுக்கு அவை வேடிக்கையில்லை.

//மனிதன் தவறு செய்பவனாகவே படைக்கப்பட்டுள்ளான். படைத்தவன் தன் படைப்பை வழி நடத்த கொடுத்த வழி முறைகள்.இந்த இரண்டுக்கும் ஏதாவது ஒரு லாஜிக் இருக்கா? கடவுளே மனிதனை தவறு செய்பவனாக படைப்பான். பின் அதையே கடவுளின் வழிமுறை என்கிறீர்கள்.
மனுசனாலே முடியாததை செய்வதற்காக சாமி மனுசனைப் படைச்சாரா??!! என்னங்க இது!!
வேடிக்கை! மதம் என்றால் இம்புட்டு கண்மூடித் தனமாக இருக்கணுமான்னு தெரியலைங்க.//

தவறுகளில் வாழ்வது சுலபமானது. நேர்வழியில் வாழ்வது அவ்வளவு சுலபமானதல்ல. மனிதன் தவறுக்கு தூண்டக்கூடிய சுலபமான வழிமுறையையே நாடக்கூடியவனாக படைக்கப்பட்டிருக்கிறான். அந்த தவறுகளை, அந்த இயல்பை வெல்வதற்கான வழிமுறைகள் கூடவே வழிவழியாக அல்லாஹ்வால் வழங்கப்பட்டு வந்துள்ளது. தேர்ந்தெடுத்து வாழ்ந்தவன் வெல்வான். மற்றவன் அழியாப் பெருந்துயரில் உழல்வான்.
இஸ்லாம் என்று வந்து விட்டால், லாஜிக்குகளே தெரியாமலாகி, இம்புட்டு கண்மூடித் தனமாக எதிர்க்கணுமாங்க ஐயா?

தருமி said...

//இஸ்லாம் என்று வந்து விட்டால், லாஜிக்குகளே தெரியாமலாகி...//

sorry sultan.. உங்க லாஜிக்குகளை என்னால் புரிந்து கொள்ள முடியாது.

உங்கள் மதக் கோட்பாடுகளை மேலும் மேலும் தெரிந்து கொள்ளும்போது சொல்லத்தோன்றும் ஒரே வசனம் ...

THANK GOD ... I WAS BORN IN ANOTHER RELIGION.

வால்பையன் said...

//மனிதன் தவறு செய்பவனாகவே படைக்கப்பட்டுள்ளான். //


கடவுள் முன்னாடி வந்தா செருப்பாலடிச்சிட்டு, நீ தானப்பா தவறு செய்யபவனாகவே படைத்தாய்ன்னு சொல்லிரலாம்!

தவறு செய்ய படைக்கபட்ட மனிதன் நல்லது செய்தால் கடவுளுக்கு கோபம் வராதா!? பெரிய முரண்பாடா இருக்கே! கடவுள் எதுக்காக படைச்சானோ அந்த வேலையை செய்வது தானே சரி!

என்ன நான் சொல்றது?

Unknown said...

//sorry sultan.. உங்க லாஜிக்குகளை என்னால் புரிந்து கொள்ள முடியாது.
உங்கள் மதக் கோட்பாடுகளை மேலும் மேலும் தெரிந்து கொள்ளும்போது சொல்லத்தோன்றும் ஒரே வசனம் ...
THANK GOD ... I WAS BORN IN ANOTHER RELIGION.//

இறைவன் யாருக்கு நன்மையை நாடுகிறானோ அவர்களுக்கு அவர்களின் கல்வியறிவை அவன் விசாலப்படுத்துகிறான் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.

சொல்வது என் கடமை. உண்மைகளைப் புரிந்து கொள்ள முயற்சிப்பதும், ஏற்பதும், ஏற்காததும் அவரவர் விருப்பத்திலும் இறைச் சித்தத்திலும் உள்ளது. நன்றி தருமி ஐயா.

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும். அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும். எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. - திருக்குர்ஆன் 3:185ன் கருத்து

தவ்பா செய்து, (பாவங்களிலிருந்து விலகி) ஈமான் கொண்டு, (ஸாலிஹான) - நல்ல - செயல்களைச் செய்கிறார்களே அவர்களைத் தவிர, அத்தகைய (ஸாலிஹான)வர்கள். (ஜன்னத்தில்) - சுவர்க்கத்தில் பிரவேசிப்பார்கள். (அவர்கள் அடைய வேண்டிய நற்பயன்) எதிலும் அவர்களுக்குக் குறைவு செய்யப்பட மாட்டாது.- திருக்குர்ஆன் 19:60ன் கருத்து

வால்பையன் said...

//சுவர்க்கத்தில் பிரவேசிப்பார்கள்.//


தயைகூர்ந்து சொர்க்கத்தில் என்ன, என்ன இருக்கும் என குரானில் சொல்லப்பட்டிருக்கிறது என எனக்கு சொல்வீர்களா!?

அதற்குறிய குரான் சுட்டி கிடைத்தாலும் பரவாயில்லை, அறியும் ஆவல் பலநாட்களாக உள்ளது!

வால்பையன் said...

இன்னோரு பின்னூட்டம் கூட போட்டேனே!?

Unknown said...

//தயைகூர்ந்து சொர்க்கத்தில் என்ன, என்ன இருக்கும் என குரானில் சொல்லப்பட்டிருக்கிறது என எனக்கு சொல்வீர்களா!?
அதற்குறிய குரான் சுட்டி கிடைத்தாலும் பரவாயில்லை, அறியும் ஆவல் பலநாட்களாக உள்ளது!//

வருகைக்கு நன்றி வால்பையன்

குர்ஆன் நெடுகிலும் சுவர்க்கத்தைப் பற்றிய வர்ணணைகள் நிறைந்துள்ளது. தமிழில் குர்ஆன் உள்ளது. படித்துப் பாருங்கள். http://www.tamililquran.com/

அல்லது உங்கள் முகவரி தாருங்கள். உங்களுக்காக ஒரு தமிழில் விளக்கத்தோடு கூடிய ஒரு குர்ஆன் இலவசமாக அனுப்பித் தர முயற்சிக்கிறேன்.
என் மின் மடல்: mdsultan@eim.ae

வால்பையன் said...

முழு படத்தையும் பிறகு பொறுமையாக பார்த்து கொள்கிறேன், தற்பொழுது கிளைமாக்ஸ் பற்றி தான் கேள்வி!

எந்த எந்த அதிகாரம் என்று எண் கொடுத்தாலும் போதும்!

Unknown said...

முதலில்:
தவறான வார்த்தைப் பாவனைகளை மிகுதியானோர் விரும்புவதில்லை - நானும் அப்படித்தான் வால்பையன்.

//தவறு செய்ய படைக்கபட்ட மனிதன் நல்லது செய்தால் கடவுளுக்கு கோபம் வராதா!? பெரிய முரண்பாடா இருக்கே! கடவுள் எதுக்காக படைச்சானோ அந்த வேலையை செய்வது தானே சரி!
என்ன நான் சொல்றது?//

இதற்கு தருமி ஐயாவுக்கு கொடுத்த பதிலையே திரும்பவும் தருகிறேன். புரியவில்லையென்றால் விபரம் தாருங்கள். மேலும் விபரம் தர முயற்சிக்கிறென்.

மனித இயல்பு தவறுக்கு தூண்டக்கூடியதாக இருக்கும். அதை வென்று அவன் நல்லவனாக வாழத்தான் வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றைப் பேணுவதால் அவன் நல்லவர்களில் உள்ளவன் என்று நிரூபிக்கப் பட்டு சொர்க்கத்தின் சொந்தக்காரனாகிறான்.

வானையும், பூமியையும் அவற்றுக்கு இடையே இருப்பவற்றையும் வீண் விளையாட்டுக்காக நாம் படைக்கவில்லை (திருக்குர்ஆன் 21:16ன் கருத்து).
இவ்வுலக வாழ்வு அழிவற்ற மறுமை வாழ்வுக்கான தேர்வுக் களம் என்பதில் உறுதியான நம்பிக்கையுள்ள எங்களுக்கு அவை வேடிக்கையில்லை.

தவறுகளில் வாழ்வது சுலபமானது. நேர்வழியில் வாழ்வது அவ்வளவு சுலபமானதல்ல. மனிதன் தவறுக்கு தூண்டக்கூடிய சுலபமான வழிமுறையையே நாடக்கூடியவனாக படைக்கப்பட்டிருக்கிறான். அந்த தவறுகளைஇ அந்த இயல்பை வெல்வதற்கான வழிமுறைகள் கூடவே வழிவழியாக அல்லாஹ்வால் வழங்கப்பட்டு வந்துள்ளது. தேர்ந்தெடுத்து வாழ்ந்தவன் வெல்வான். மற்றவன் அழியாப் பெருந்துயரில் உழல்வான்.

Unknown said...

//எந்த எந்த அதிகாரம் என்று எண் கொடுத்தாலும் போதும்!//
நன்றி வால்பையன்
அந்த தளத்திலேயே தேடும் பொறி உள்ளது. தமிழில் எழுத வசதியும் உள்ளது. என்னென்ன வேண்டுமே எல்லாவற்றையும் தேடிப் பெறுங்கள்.

தருமி said...

http://www.faithfreedom.org/oped/skm51109p2.htm

Book by the great Imam Ghazzali: Ihya Uloom Ed-Din. The Sunnis consider this epic as next to Quran.

Volume 4,
Page-4.430
“According to Prophet Muhammad (SW) the Hurs of Paradise will be pure women—free of menstruation, urine, stool, cough and children. The Hurs will sing in Paradise on divine purity and praise—we are most beautiful Hurs and we are for the honored husbands.

தருமி said...
This comment has been removed by a blog administrator.
வால்பையன் said...

//rivers of wine delicious to those who drink, //


நான் இஸ்லாமுக்கு மாறப்போறேன்!

:)

தருமி said...

சுல்தான்
எனக்கும் குரான் ஆண்களுக்காகச் சொல்லும் சுவனத்தின் மேல் பிரியம்தான். ஆனாலும் ..

//உண்மைகளைப் புரிந்து கொள்ள முயற்சிப்பதும், ஏற்பதும், ஏற்காததும் அவரவர் விருப்பத்திலும் இறைச் சித்தத்திலும் உள்ளது. //

நான் 'இப்படி' இருப்பது இறைச் சித்தம் என்றால் அதற்கு நான் எப்படி தண்டிக்கப்படலாம்? .. இல்லை .. இது என் முயற்சியால் என்றால், என்ன ஆச்சு இறைச் சித்தம்?

அதோடு நீங்கள் சொல்லும் 'அவரவர் விருப்பத்திலும் இறைச் சித்தத்திலும்' இரண்டில் எது effective & efficient??

free will vs predeterminism?

தருமி said...

//தவ்பா செய்து, (பாவங்களிலிருந்து விலகி) ஈமான் கொண்டு, (ஸாலிஹான) - நல்ல - செயல்களைச் செய்கிறார்களே அவர்களைத் தவிர, அத்தகைய (ஸாலிஹான)வர்கள். (ஜன்னத்தில்) - சுவர்க்கத்தில் பிரவேசிப்பார்கள்./

இதில் தவ்பா செய்து, ஸாலிஹான் செய்தாலே போதும் என்று நான் நினைக்கின்றேன்.

தருமி said...

//வானையும், பூமியையும் அவற்றுக்கு இடையே இருப்பவற்றையும்..//

எவ்வளவு பிரமாண்டமான universe.. அதில் எவ்வளவு சின்னூண்டு பால்வீதியில் உள்ள மிக மிகச் சின்ன உலகத்தில்.. பரம சின்னச் சின்னூண்டாக .. மனிதர்கள் நாம் இருக்கிறோம்.

இந்த பரம சின்னச் சின்னூண்டு மனிதனுக்காக இந்தப் பிரபஞ்சத்தையே கடவுள் படைத்தார் என்பது நமக்காக (வேலையில்லாமல்) கடவுள் படைத்திருப்பார் என்று எல்லா மதங்களும் செய்யும் போதனையில் ஏது லாஜிக்?
================

//இவ்வுலக வாழ்வு அழிவற்ற மறுமை வாழ்வுக்கான தேர்வுக் களம் என்பதில் ..//
இதைப் பற்றிய லாஜிக்கும் என் பழைய பதிவுகளில் இருக்கிறது.

ஆனா நீங்கதான் எந்த கேள்விக்கும் முழுசா பதில் தராம இருந்திர்ரீங்களே .. என்ன பண்றது?

தருமி said...

"இஸ்லாம் பற்றி வினவுக்கும் சாகித்துக்கும்-1"

எந்த பதிவுகளுக்காக இப்பதிவை இட்டீர்கள் எனத் தெரிந்து கொள்ளலாமா? தேடி கிடைக்கவில்லை.

தருமி said...

பெண்களுக்கான சுவனம் எப்படியிருக்குமென்று கேட்டிருந்தேன். எல்லாம் இருவருக்கும் ஒன்றுபோல்தானோ ?

//................The Prophet (May peace and blessings be upon him) said: "Yes, there is no difference in this between man and woman." Narrated by Abu Dawud, at-Tirmizi 113 and others. The last phrase is in Sahih al-Jami’ under No. 2333

Unknown said...

//எனக்கும் குரான் ஆண்களுக்காகச் சொல்லும் சுவனத்தின் மேல் பிரியம்தான். ஆனாலும் ..//
இந்த கேள்வி இப்போதில்லை. குர்ஆன் இறங்கிக் கொண்டிருந்த அந்த காலத்திலேயே நபியவர்களின் மனைவி அன்னை ஆயிஷா அவர்களால் நபியிடம் கேட்கப் பட்டது.

தவறு செய்யாதீர்கள் எனச் சொன்னால் அது இருபாலாருக்கும் பொதுவானதுதான். அது போல குறிப்பாக ஆண்களுக்காக சொல்லப்பட்டவை அல்லது பெண்களுக்காக சொல்ல்ப்பட்டவை தவிர மற்ற யாவும் இருபாலாருக்கும் பொதுவானதுதான்.

சொர்க்கத்தில் உங்கள் மனம் விரும்பிய யாவும் கிடைக்கும். நீங்கள் நினைத்ததை விடவும் நிறைவாக கிடைக்கும் என்றால் அது இரு பாலாருக்கும் பொதுவானதுதான்.

//அதோடு நீங்கள் சொல்லும் 'அவரவர் விருப்பத்திலும் இறைச் சித்தத்திலும்' இரண்டில் எது effective & efficient??//
ஒரேயொரு விடயத்தை மட்டும் சிந்திக்க மனித மூளை திறன் அற்றது. அதுதான் விதியைப் பற்றியது. எனவே அதைப் பற்றி விவாதிக்காதீர்கள் என்பது எங்களுடைய பாடம்.

நன்மையை நோக்கி நடக்க முயற்சியுங்கள். இல்லை என் விதி இப்படியே வாழ்வதுதான் என முடிவெடுத்து விட்டால் அது உங்களுக்கும் இறைவனுக்குமிடையே உள்ளது. அவன் தீர்ப்பளிக்கும் நாளுக்காக உங்களுடன் நாமும் காத்திருப்போம்.

Unknown said...

//நான் இஸ்லாமுக்கு மாறப்போறேன்! :)//
அல்லாஹ் யாருக்கு நாடியிருக்கிறானோ! நேற்றுவரை பெரியர்தாசன் அப்துல்லாஹ்வாக மாறுவார் என்று சொன்னால் உங்களைப்போல் சிரிக்கத்தான் தோன்றும் வால்பையன். இன்று அவர் முஸ்லீம். எல்லாப்புகழும் இறைவனுக்கே.

தருமி said...

//நீங்கள் நினைத்ததை விடவும் நிறைவாக கிடைக்கும் என்றால் அது இரு பாலாருக்கும் பொதுவானதுதான்.//

குரானின் மேற்கோள்கள் சொல்லுவது இரு பாலாருக்கும் பொதுவானது என்று சொல்லப்படும் நிலையிலா உள்ளது. நிலாவைக் காட்டும் பிள்ளையிடம் பலூன் வாங்கித் தருவதுபோலிருக்கிறது நீங்கள் சொல்லும் விளக்கம்.

தருமி said...

//அதைப் பற்றி விவாதிக்காதீர்கள் என்பது எங்களுடைய பாடம். //

நல்லது -- எதற்குப் பதில் இல்லையோ அதற்கு இப்படி ஒரு 'பாலபாடம்' சரிதான். இல்லீங்களா?

Unknown said...

//இதில் தவ்பா செய்து, ஸாலிஹான் செய்தாலே போதும் என்று நான் நினைக்கின்றேன்.//
எல்லாவற்றையும் ஒன்றாகவா செய்ய முடியும். ஒவ்வொன்றாகத்தானே... தருமி ஐயா. :)

நேற்றுவரை 'இல்லல்லாஹ்' சொன்னவர் இன்று 'லாயிலாஹ' என்று சேர்த்துக் கொண்டார்.
இல்லல்லாஹ் = வணங்கத் தகுதியானவன் என்று எவருமில்லை
லாயிலாஹ = அல்லாஹ்வைத் தவிர

தருமி said...

//பெரியர்தாசன் அப்துல்லாஹ்வாக மாறுவார் என்று சொன்னால் உங்களைப்போல் சிரிக்கத்தான் தோன்றும் வால்பையன். இன்று அவர் முஸ்லீம். எல்லாப்புகழும் இறைவனுக்கே.//

பெ.தா. மாறிட்டார். அதனால் எல்லாப்புகழும் இறைவனுக்கே. சரி .. வால்ஸும் நானும் இப்படி இருப்பதற்கும் எல்லாப்புகழும் இறைவனுக்கே இல்லையா? ஏனெனில் அதுவும் "இறைச் சித்தம்" தானே; இல்லீங்களா?

அவனின்றி அணுவும் அசையாது ....

வால்பையன் said...

சொர்க்கத்தில் பெண்களும் மதுவும் கிடைத்தால் யார் தான் இஸ்லாமுக்கு மாற மாட்டார்கள்!

இன்னோரு சந்தேகம், ஆண்களூக்கு சொர்க்கத்தில் இவையெல்லாம் கிடைக்கும் என்று உள்ளதே, பெண்களுக்கு என்ன கிடைக்கும் என ஏன் போடவில்லை!?

அவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடையாதா!?

கல்வெட்டு said...
This comment has been removed by a blog administrator.
Unknown said...

//இந்த பரம சின்னச் சின்னூண்டு மனிதனுக்காக இந்தப் பிரபஞ்சத்தையே கடவுள் படைத்தார் என்பது நமக்காக (வேலையில்லாமல்) கடவுள் படைத்திருப்பார் என்று எல்லா மதங்களும் செய்யும் போதனையில் ஏது லாஜிக்?//
அதை அறியத்தான் மனிதனுக்கு அறிவும் சிந்திக்கும் திறனும் கொடுக்கப் பட்டுள்ளது. எல்லா மதங்களையும் ஆய்ந்து தெளியுங்கள். உங்களுக்கு இறைவன் நேர்வழியைக் காட்ட நானும் பிரார்த்திக்கிறேன்.

//ஆனா நீங்கதான் எந்த கேள்விக்கும் முழுசா பதில் தராம இருந்திர்ரீங்களே .. என்ன பண்றது?//
எந்தெந்த கேள்விகள் நீங்கள் என்னிடம் கேட்டு இன்னும் பதில் தரப்படாமல் இருக்கிறது என்று சொன்னால் இன்ஷா அல்லாஹ் விளக்கம் தர தயாராகவே இருக்கிறேன். என் மின் மடல்: mdsultan@eim.ae

//பெண்களுக்கான சுவனம் எப்படியிருக்குமென்று கேட்டிருந்தேன். எல்லாம் இருவருக்கும் ஒன்றுபோல்தானோ?//
சுவர்க்கம் கிடைக்கப் பெற்ற எல்லோருக்கும் மனம் விரும்பிய அனைத்தும் அவர்கள் விரும்புவதை விடவும் நிறைவாகக் கிடைக்கும் எனும் போது தனித்தனியாக வேண்டுவதன் அவசியம் இருக்காதல்லவா?

//எந்த பதிவுகளுக்காக இப்பதிவை இட்டீர்கள் எனத் தெரிந்து கொள்ளலாமா? தேடி கிடைக்கவில்லை//
இதன் 3வது கருத்துரையில் டிஸ்கியில் கிழுள்ளவாறு எழுதி அதன் சுட்டியும் கொடுத்துள்ளேன்.
"திரு. வினவு அவர்கள் தமது தளத்தில் 2010-ல் 'இசுலாமியப் பெண்கள்: மதமும் வாழ்க்கையும்' என்ற தலைப்பில் திரு. சாகித் அவர்கள் எழுதி இருந்த இடுகையை எடுத்தது இட்டிருந்தார். அதற்கான கருத்துரை எழுதப்போய் அது மூன்று இடுகைளாக நீண்டு விட்டது."

sekar said...

அன்பு நண்பரே,

எனது சொந்த கேள்வி ஒன்று.... நான் இப்போது கனடாவில் இருக்கிறேன்... என் வீட்டின் எதிரில் ஒரு நண்பர் (பூர்விகம் பாகிஸ்தான்) கடை வைத்துள்ளார். நான் பழகிய சிறந்த இனிமையான மனிதர்களில் அவர் ஒருவர். நல்ல பணிவு, இன்முகத்துடன் பேசுவார். ஆனால் அவரது மனைவி பர்தா அணிந்து அங்கு வேலை செய்வதை பார்க்கும் பொது மனது நெருடுகிறது. அவரும் நன்றாக பேசுபவர். உங்கள் வாதப்படி வீட்டில் அப்படி இருப்பதை நியாயம் என்கிறீர்கள். ஆனால் ஒரு சாதாரண பெண் ஒரு பொது இடத்தில் சகஜமாக பழக முடியாமல், அந்த பர்தா அணிவதால் எல்லோரிடமிருந்தும் ஒரு விதமான பார்வையை (பச்சையாக சொன்னால் தீவிரவாதி போல) ஏற்றுக்கொண்டு, அவர் கணவர் சிரித்து பேசி வியாபாரம் செய்வது போல செய்ய இயலாமல் .... அவர் மனதில் என்ன நினைத்து கொள்வார் ? தருமி அய்யா சொன்னதற்கு எதிர்ப்பதமாக "கடவுளே நீ ஒழிக.... நான் ஏன் இந்த மதத்தில் பிறந்தேன்" என்றா...
அந்த பெண்ணின் பாவம் படைத்த கடவுளின் தலையிலே விடியாதா ????
"stoning of soraya " படம் பார்த்து என்னால் அதிகாலை 3 மணி வரை தூங்க முடியவில்லை... இது தனி மனித குற்றமே என்று நீங்கள் வாதிட்டாலும், அப்படி ஒரு சட்டம் இறைவனால் ஏன் போதிக்கபட்டது?

இப்போது எல்லாம் வல்ல அந்த இறைவன் வந்தால் நான் என் வீட்டு கதவை கூட திறக்க மாட்டேன்...

இதை படிக்கும் எல்லா நண்பர்களுக்கும் ஒரு வேண்டுகோள்.. தயவு செய்து பர்தா அணிவதை தடை செய்யுங்கள்

- சேகர்

Unknown said...

கல்வெட்டு சொன்னது:
//இந்த வார்த்தைகள் உண்மையான குரானா என்று சரிபார்க்க சுல்தானை வேண்டுகிறேன்.

நன்றி கல்வெட்டு
40:45ல் அவ்வாறு இல்லை. கீழே மொழி பெயர்ப்பு

40:44 'எனவே, நான் உங்களுக்குச் சொல்வதை நீங்கள் விரைவில் உணர்வீர்கள்¢ மேலும், நான் என் காரியத்தை அல்லாஹ்விடம் ஒப்படைத்து விடுகிறேன் - நிச்சயமாக அல்லாஹ் அடியார்களைக் கண்ணுற்றவனாகவே இருக்கின்றான்' (என்றும் அவர் கூறினார்).
40:45 ஆகவே, அவர்கள் திட்டமிட்ட தீமைகளை விட்டும் அல்லாஹ் அவரைக் காத்துக் கொண்டான். மேலும் வேதனையின் கேடு ஃபிர்அவ்னின் கூட்டத்தாரைச் சூழ்ந்து கொண்டது.
40:46 காலையிலும், மாலையிலும் அவர்கள் நரக நெருப்பின் முன் கொண்டுவரப்படுவார்கள்¢ மேலும் நியாயத் தீர்ப்பு காலம் நிலைபெற்றிருக்கும் நாளில் 'ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரைக் கடினமான வேதனையில் புகுத்துங்கள்' (என்று கூறப்படும்).//

வால்பையன் said...

நீங்கள் கொடுத்துள்ள மொழிபெயர்ப்பு தான் அதிகாரபூர்வமானதா!?

அவர் ஆங்கில மொழிபெயர்பு தானே காட்டினார், மூல மொழியான அரபியில் இருந்து ஆங்கிலத்துக்கு மாற்றும் போது ஒன்றும், தமிழில் மாற்றும் போது ஒன்றும் வருமா!?

Unknown said...

தருமி ஐயா கொடுத்துள்ளவற்றில் உண்மையான வசன கருத்துகளோடு பொய்யையும் கலந்து விட்டிருக்கின்றார்கள் எனவே அவை நீக்கப்படுகிறது.

எவன் வேண்டுமென்றே உண்மையோடு பொய்யைக் கலந்து இஸ்லாத்துக்கு தீங்கு செய்ய நாடுகிறானோ அந்த நாசக்காரனை அல்லாஹ்விடமே விட்டு விடுகிறோம். அவனே நியாயம் செலுத்தவும் தண்டிக்கவும் தகுதியானவன்.

Unknown said...

//அவர் ஆங்கில மொழிபெயர்பு தானே காட்டினார், மூல மொழியான அரபியில் இருந்து ஆங்கிலத்துக்கு மாற்றும் போது ஒன்றும், தமிழில் மாற்றும் போது ஒன்றும் வருமா!?//
மூல மொழியான அரபியில் இருந்து ஆங்கிலத்துக்கு மாற்றும் போது ஒன்றும், தமிழில் மாற்றும் போது வேறு ஒன்றும் வராது. ஆனால் அவர் எடுத்ததுள்ளது, இஸ்லாத்தை எதிர்ப்பவர்களால் குர்ஆன் வசனத்தின் கருத்துகளில் தங்கள் இடைச்செருகல்களை திணித்து வைத்திருப்பவர்களிடமிருந்து.

Unknown said...

//நல்லது -- எதற்குப் பதில் இல்லையோ அதற்கு இப்படி ஒரு 'பாலபாடம்' சரிதான். இல்லீங்களா?//
இல்லை. நீங்கள் கேட்டீர்கள் என்பதற்காக புதிதாக உருவாக்கப் பட்டிருந்தால்தான் அவ்வாறு சொல்ல முடியும். இவை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லி வைக்கப் பட்டவைகள்.

//பெ.தா. மாறிட்டார். அதனால் எல்லாப்புகழும் இறைவனுக்கே. சரி .. வால்ஸும் நானும் இப்படி இருப்பதற்கும் எல்லாப்புகழும் இறைவனுக்கே இல்லையா? ஏனெனில் அதுவும் 'இறைச் சித்தம்' தானே; இல்லீங்களா? அவனின்றி அணுவும் அசையாது ....//
மீண்டும் பழைய பதில்தான்.
நீங்கள் இருவருமே "நன்மையை நோக்கி நடக்க முயற்சியுங்கள். இல்லை என் விதி இப்படியே வாழ்வதுதான் என முடிவெடுத்து விட்டால் அது உங்களுக்கும் இறைவனுக்குமிடையே உள்ளது. அவன் தீர்ப்பளிக்கும் நாளுக்காக உங்களுடன் நாமும் காத்திருப்போம்"

Unknown said...

//சொர்க்கத்தில் பெண்களும் மதுவும் கிடைத்தால் யார் தான் இஸ்லாமுக்கு மாற மாட்டார்கள்!//
இறந்த பிறகுதானே என்று நீங்களே இன்னும் மாறவில்லையே.

//இன்னோரு சந்தேகம், ஆண்களூக்கு சொர்க்கத்தில் இவையெல்லாம் கிடைக்கும் என்று உள்ளதே, பெண்களுக்கு என்ன கிடைக்கும் என ஏன் போடவில்லை!? அவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடையாதா!?//
இதைப்பற்றி தருமி கேட்டு பதிலும் சொல்லி இருக்கிறேன். மேலே பாருங்களேன்.

Unknown said...

//குரானின் மேற்கோள்கள் சொல்லுவது இரு பாலாருக்கும் பொதுவானது என்று சொல்லப்படும் நிலையிலா உள்ளது. நிலாவைக் காட்டும் பிள்ளையிடம் பலூன் வாங்கித் தருவதுபோலிருக்கிறது நீங்கள் சொல்லும் விளக்கம்.//

இது விடுபட்டு விட்டது தருமி ஐயா.
குர்ஆனை படிக்க சொன்னால் படிக்க மாட்டோம் என பிடிவாதம் பிடிக்கின்றீர்கள். இஸ்லாத்தைப் பற்றிய தேடுதலுக்கு இஸ்லாத்தின் எதிரிகளின் உதவியை நாடுகின்றீர்கள். வாழ்க!. நீங்கள் தேடுவதுதானே உங்களுக்கு கிடைக்கும்.

நேரான வழியில் சிந்தித்து சரியானதை நோக்கி பயணப் படுங்கள். குர்ஆனை நேரடியாக ஆய்ந்து பார்த்தீர்களானால்... இரு பாலாருக்கும் பொதுவானதாக சொல்லப் படுபவைகள், நிலாவைக் காட்டும் பிள்ளையிடம் பலூன் வாங்கித் தருவது போலிருக்கிறதா மாற்றமாக இருக்கிறதா என்பது புலப்படலாம். சிந்திப்பவர்களுக்கு குர்ஆன் நேர்வழியைக் காட்டும்.

Unknown said...

//... ஆனால் ஒரு சாதாரண பெண் ஒரு பொது இடத்தில் சகஜமாக பழக முடியாமல்இ அந்த பர்தா அணிவதால் எல்லோரிடமிருந்தும் ...//

அன்பின் சேகர்
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

அந்தப் பெண் உங்களிடம் சிரித்து பேச முடியவில்லையே என்று வருத்தப் பட்டாரா? இல்லையே!. அவர் யாராரிடம் சிரித்துப் பேச வேண்டுமோ அவர்களிடம் பேசிக் கொண்டுதானிருக்கிறார். உங்கள் மனைவியிடம் அவர் அரைகுறை உடையிலிருந்தாலும் அவசியமற்ற மற்றவர்கள் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதை நிங்கள் விரும்பலாம். அது உங்கள் பிரச்னையைச் சார்ந்தது.
அவர், அந்தப் பெண்ணே அதை விரும்பவில்லையே! சிந்தனை செய்யுங்கள்.

//... இது தனி மனித குற்றமே என்று நீங்கள் வாதிட்டாலும், அப்படி ஒரு சட்டம் இறைவனால் ஏன் போதிக்கபட்டது?//
இதைப் போன்றவர்களுக்காகத்தான் அந்த சட்டமே போதிக்கப் பட்டுள்ளது.

தருமி said...

////ஆனா நீங்கதான் எந்த கேள்விக்கும் முழுசா பதில் தராம இருந்திர்ரீங்களே .. என்ன பண்றது?//
எந்தெந்த கேள்விகள் நீங்கள் என்னிடம் கேட்டு இன்னும் பதில் தரப்படாமல் இருக்கிறது என்று சொன்னால் இன்ஷா அல்லாஹ் விளக்கம் தர தயாராகவே இருக்கிறேன். //

என்ன சுல்தான் இப்படி கேட்டுட்டீங்க. எனக்காக மூன்று பதிவுகள் போட்டு அதற்குப் பதிலாக நான் ஒரு பதிவு போட, யாரோ தேடியதும் தலைகாட்டிவிட்டு போனீங்க; அப்புறம் அந்தப் பதிவுக்கும் வரல; உங்க பதிவுகளிலும் அடுத்து ப்ல நாட்கள் எழுதாது விட்டு விட்டீர்கள்.அதன்பின் கூட திருமங்கைகள் பற்றிகூட ஒரு கேள்வி கேட்டேன் ....

தருமி said...

இந்தப் பதிவில் கேட்ட கேள்விகளுக்குக் கூட நீங்கள் முழுமையாகப் பதில் சொல்லவில்லை. ஒரு உதாரணம்:
//இந்த பரம சின்னச் சின்னூண்டு மனிதனுக்காக இந்தப் பிரபஞ்சத்தையே கடவுள் படைத்தார் என்பது நமக்காக (வேலையில்லாமல்) கடவுள் படைத்திருப்பார் என்று எல்லா மதங்களும் செய்யும் போதனையில் ஏது லாஜிக்?//
அதை அறியத்தான் மனிதனுக்கு அறிவும் சிந்திக்கும் திறனும் கொடுக்கப் பட்டுள்ளது. எல்லா மதங்களையும் ஆய்ந்து தெளியுங்கள். உங்களுக்கு இறைவன் நேர்வழியைக் காட்ட நானும் பிரார்த்திக்கிறேன். //

சரி .. எனக்கு வழி தெரியலை; சாமியைக் கும்பிடச் சொல்கிறீர்கள். [போகட்டும். நீங்கள்தான் சாமி கும்பிடுவர்தானே .. எங்கே இந்தக் கேள்விக்கு உங்கள் பதில் ...?

இது போல் இன்னும் நிறைய இப்பதிவிலேயே ........

Unknown said...

//என்ன சுல்தான் இப்படி கேட்டுட்டீங்க. எனக்காக மூன்று பதிவுகள் போட்டு அதற்குப் பதிலாக நான் ஒரு பதிவு போட, யாரோ தேடியதும் தலைகாட்டிவிட்டு போனீங்க. அப்புறம் அந்தப் பதிவுக்கும் வரல. உங்க பதிவுகளிலும் அடுத்து ப்ல நாட்கள் எழுதாது விட்டு விட்டீர்கள்.அதன்பின் கூட திருமங்கைகள் பற்றிகூட ஒரு கேள்வி கேட்டேன் ....//
உங்கள் கேள்விகளுக்காக மூன்று இடுகைகள் பதிலாக இட்டேன். நீங்கள் அதற்கு பிறகும் கேள்விகளை வைத்தீர்கள். அதில் குறிப்பாக 'இது சுல்தானுக்காக மட்டும் அல்ல' என்றும் குறிப்பிட்டிருந்தீர்கள். வேறொரு சகோதரர் அவற்றுக்கு அப்போதே பதில் இட்டிருந்தார். சரிதானே ஐயா?

எனினும் எனக்கு அப்பதில்களில் திருப்தி இல்லாதிருந்தது என்னவோ உண்மை. அதனால் உங்களுக்கு நானே பதில் எழுத வேண்டுமென நினைத்திருந்தேன். அதற்காகத்தான் உங்களுக்கு பதில் எழுத பாக்கி இருக்கிறதென்று குறிப்பிட்டிருந்தேன்.

திருமங்கைககள் பற்றியும் இன்ஷா அல்லாஹ் விரைவில் எழுதுகிறேன். கேள்வி கேட்பது போன்றதல்ல பதில் எழுதுவது என்பது பேராசிரியரான உங்களுக்கும் தெரியும்.

இவையிரண்டை தவிர வேறெதும் இருக்கிறதா?

Unknown said...

//சரி .. எனக்கு வழி தெரியலை; சாமியைக் கும்பிடச் சொல்கிறீர்கள். போகட்டும். நீங்கள்தான் சாமி கும்பிடுவர்தானே .. எங்கே இந்தக் கேள்விக்கு உங்கள் பதில் ...?//

நீங்கள் எழுதியதையும் அதற்கு நான் பதிலாக எழுதியதையும் இட்டு விட்டு பதில் எங்கே என்று மீண்டும் கேள்விகளை வைக்கின்றீர்களே.

அறிய வேண்டிய ஆர்வம் இருப்பவர்கள், அதை தெளிவாக அறிவதற்கு முன்னமே, குறை கூறி புறம் பேசித் திரியலாமா அய்யா,

வான மண்டலமும் பால் வீதிகளும் எவ்வளவு பெரியனவாக இருந்தாலும் அவை மனிதனுக்கு சிறியவைதான். ஏனெனில் மனிதனைப்போல் சிந்திக்கும் ஆற்றல் அவைகளுக்குத் தரப்படவில்லை. அவைகளுக்கு இடப்பட்டுள்ள கட்டளைகளை விட்டும் அடிபிறழாமல் செல்லக்கூடிய அறிவு மட்டும்தான்.

இதைப்பற்றித்தான் விலாவரியாக நான் எழுதி இருந்தேன். அவை அல்லாஹ்வின் அத்தாட்சிகளினின்றும் உள்ளவை. அவை எத்தகைய ஒழுங்கமைப்பில் படிப்படியாக படைக்கப்படுள்ளன. ஒரு படைப்பாளன் இல்லாமல் இத்தகைய ஒழுங்குகள் வருவதற்கான நிகழ்தகவின்படி சாத்தியக்கூறுகள் என்ன? என்றெல்லாம் கேட்டிருந்தேன். சிந்திப்பதில் என்னுடன் வர இயலாமல் பூவுக்குள் வாசம் என எழுதி இருந்தீர்கள்.

அவையனைத்தும் மனிதனுக்காகவே படைக்கப்படக் கூடாதா? குறைந்தது இறைவனைப் பற்றிய மனித சிந்திப்பிற்காகவாவது அவை உள்ளதா? இல்லையா?

இதைத்தான் 'அதை அறியத்தான் மனிதனுக்கு அறிவும் சிந்திக்கும் திறனும் கொடுக்கப் பட்டுள்ளது. எல்லா மதங்களையும் ஆய்ந்து தெளியுங்கள். உங்களுக்கு இறைவன் நேர்வழியைக் காட்ட நானும் பிரார்த்திக்கிறேன்' என பதிலிறுத்திருந்தேன்.

//இது போல் இன்னும் நிறைய இப்பதிவிலேயே ........//
இன்னும் என்னென்ன இப்பதிவிலுள்ளது விளங்கவில்லை எனச் சொன்னால் மேலும் விளக்க ஆயத்தமாய் இருக்கின்றேன்.

Rajan said...
This comment has been removed by a blog administrator.
Rajan said...
This comment has been removed by a blog administrator.
sekar said...

//உங்கள் மனைவியிடம் அவர் அரைகுறை உடையிலிருந்தாலும் அவசியமற்ற மற்றவர்கள் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதை நிங்கள் விரும்பலாம். அது உங்கள் பிரச்னையைச் சார்ந்தது.
அவர், அந்தப் பெண்ணே அதை விரும்பவில்லையே! சிந்தனை செய்யுங்கள்.//

அதாவது பர்தா அணியாவிட்டால் அடுத்தது அரைகுறை ஆடையா ???? சபாஷ்...

//அந்தப் பெண்ணே அதை விரும்பவில்லையே//
அடப்பாவிகளா, எங்கோ உங்கார்ந்து கொண்டு அந்த பெண் அதை விரும்பவில்லை என்று சொன்னால் இது திட்டமிட்டு உலகம் பூர இப்படி தான் இருக்கும் எண்டு சொல்லுமளவு... இஸ்லாமிய பெண்களின் எல்லாப் பாவமும் இறைவனுக்கே...

//... இது தனி மனித குற்றமே என்று நீங்கள் வாதிட்டாலும், அப்படி ஒரு சட்டம் இறைவனால் ஏன் போதிக்கபட்டது?//
இதைப் போன்றவர்களுக்காகத்தான் அந்த சட்டமே போதிக்கப் பட்டுள்ளது.//

எதைப் போன்றவர்களுக்காக ?????

Unknown said...

//அதாவது பர்தா அணியாவிட்டால் அடுத்தது அரைகுறை ஆடையா ???? சபாஷ்...//
நன்றி

//அடப்பா ... ... ... சொன்னால் ... ... ...எண்டு சொல்லுமளவு... இஸ்லாமிய... ... ... இறைவனுக்கே...//
என்னால் விளங்க முடியா கருத்துரை.

//எதைப் போன்றவர்களுக்காக ?????//
தமக்கு உரிமையில்லா பெண்களை உரித்துப் பார்க்கத் துடிக்கும் இதைப் போன்றவர்களுக்காக

தருமி said...

//குர்ஆனை நேரடியாக ஆய்ந்து பார்த்தீர்களானால்... இரு பாலாருக்கும் பொதுவானதாக சொல்லப் படுபவைகள், நிலாவைக் காட்டும் பிள்ளையிடம் பலூன் வாங்கித் தருவது போலிருக்கிறதா மாற்றமாக இருக்கிறதா என்பது புலப்படலாம். //

எத்தனை தடவை சொன்னதையே திருப்பிச் சொல்ல வேண்டியதுள்ளது! நான் தெரிந்து கொண்டவரை ஆணுக்கு என்னென்ன கிடைக்கும் என்ற லிஸ்ட் இருக்கிறது. பெண்ணுக்கு என்னென்ன கிடைக்கும் என்ற லிஸ்ட் தாருங்கள். மீண்டும் இரு பாலாருக்கும் ஒன்றுதான் என்று சொல்லி விடாதீர்கள்.

தருமி said...

//அவையனைத்தும் மனிதனுக்காகவே படைக்கப்படக் கூடாதா? குறைந்தது இறைவனைப் பற்றிய மனித சிந்திப்பிற்காகவாவது அவை உள்ளதா? இல்லையா?//

பிரபஞ்சமே மனிதனுக்காக அல்லா படைத்தது என்றா சொல்கிறீர்கள்? (பிரபஞ்சத்தில் மனிதர்கள் எத்துணை சிறிய அம்சம் என்று கூறியுள்ளேன்.)

தருமி said...

//தமக்கு உரிமையில்லா பெண்களை உரித்துப் பார்க்கத் துடிக்கும் இதைப் போன்றவர்களுக்காக//

ஒரு பெரிய வேண்டுகோள் சுல்தான்.

தயவு செய்து புர்க்கா வேண்டாமென்று சொல்பவர்களைப் பற்றிய உங்கள் வார்த்தைகள் மிக மிகக் கொடூரமாக உள்ளன. வழக்கமாக மிகவும் polite மொழியில் எழுதும் தாங்கள் இப்படி எழுதுவது மிகவும் கஷ்டமாக உள்ளது. 'உரித்துப் பார்க்கத் துடிக்கும் .. காமாந்தகர்கள் ..அவர்கள் குடும்பப் பெண்களை பார்க்க வேண்டிய தேவை உங்களுக்கு ஏன்? ...

ஆணென்றால் வெறும் செக்ஸ் மட்டும்தானா .. பெண்ணைப் பார்ப்பதே செக்ஸ் என்பதற்காக மட்டும்தானா ...

நீங்கள் நினைப்பதுபோல் இது புர்க்கா வேண்டாமென்று சொல்லும் ஆண்களையல்ல ... இப்படி வசைச் சொற்களை சாடுபவரைத்தான் சார்கிறது.

தருமி said...

//சிந்திப்பதில் என்னுடன் வர இயலாமல் பூவுக்குள் வாசம் என எழுதி இருந்தீர்கள்.//

யார் யாருடன் வரவில்லை, சுல்தான்.பூவுக்குள் வாசத்திற்குப் பிறகு வந்த இரு பத்திகளும் பதிலோடு இருந்ததை கண்டு கொள்ளவில்லையா?

தருமி said...

//உங்கள் கேள்விகளுக்காக மூன்று இடுகைகள் பதிலாக இட்டேன். நீங்கள் அதற்கு பிறகும் கேள்விகளை வைத்தீர்கள். அதில் குறிப்பாக 'இது சுல்தானுக்காக மட்டும் அல்ல' என்றும் குறிப்பிட்டிருந்தீர்கள். வேறொரு சகோதரர் அவற்றுக்கு அப்போதே பதில் இட்டிருந்தார். சரிதானே ஐயா?//

பின்னூட்டத்தில் என் 7 கேள்விகள், அதற்கு 3 இடுகைகளில் பதில்கள்; அதற்குப் பதிலாக சுல்தானுக்கு மட்டும் அல்ல என்ற என் தனியிடுகை.

அதில் உங்கள் ஒவ்வொரு பதிலுக்கும் மறுபதில் கொடுத்து, அதோடு திருமங்கைகள் பற்றியும் ஒரு கேள்வியும் சேர்த்தேன்.
நீங்களும் வரவில்லை; வேறு எந்த சகோதரரும் வரவுமில்லையே ...

அதனால் இப்போது இன்னொரு தனிப்பதிவு. முடிந்தால் வாருங்கள்.

Unknown said...

//'சிந்திப்பதில் என்னுடன் வர இயலாமல் பூவுக்குள் வாசம் என எழுதி இருந்தீர்கள்.'
யார் யாருடன் வரவில்லைஇ சுல்தான்.பூவுக்குள் வாசத்திற்குப் பிறகு வந்த இரு பத்திகளும் பதிலோடு இருந்ததை கண்டு கொள்ளவில்லையா?//

தருமி ஐயா. 'சிந்திப்பதில் என்னுடன் வர இயலாமல்' என்பதில் இப்படி ஒரு புரிதல் ஏற்பட்டமைக்காக வருந்துகிறேன். நான் என்னவோ பெரிய சிந்தனையாளன் போலவும் நீங்கள் என்னோடு போட்டி போட முடியவில்லை என்றும் நான் சொல்ல வரவில்லை. மன்னிக்கவும். 'என் எண்ண ஓட்டத்தோடு இயைந்து வராமல்' என பொருள் கொள்ளவும். இதை புதிய இடுகையில் இன்ஷாஅல்லாஹ் மேலும் விளக்குகிறேன்.

கோவி.கண்ணன் said...

//இஸ்லாமிய பெண்கள் அன்னிய ஆடவர் முன்னிலையில் ஒரு குறிப்பிட்ட அளவு உடை அணிந்திருக்க வேண்டியது அவசியம். அந்தளவு உடை எல்லா நேரத்திலும், குறிப்பாக தன் கணவர், குழந்தைகள் முன் அவசியமில்லை. குறைந்த உடையில் துணி விலக வாய்ப்புகள் அதிகம். எழுந்து மறைவான இடம் செல்வதற்கு இது முதல் முக்கிய காரணம்.
//

ஒட்டு மொத்த ஆண்கள் சமூகத்தின் பார்வை தான் பெண்களின் மீதான ஆடையை திணித்திருக்கிறது என்று சொல்ல வருகிறீர்களா ?

உங்கள் வாதப்படி பார்த்தாலும் சகோதரன், கணவன் கண்களுக்கு தவிர்த்து பெண் என்பவள் பர்தா அணிந்து தான் இருக்க வேண்டும், ஏனெனில் அண்ணியை, மருமகளை வெறித்துப் பார்க்கும் ஆண்கள் கூட சமூகத்தில் உண்டு. எக்ஸப்சன் கேஸ்கள் என்று நீங்கள் பதில் சொல்லலாம். ஆனால்

அதே எக்ஸ்பசன் தான் பர்தா அணியாத பெண்களின் மீது நடக்கும் பாலியல் ரீதியான வன்முறையும். பெண்களின் பர்தா என்பது பெண்களை பாதுகாக்கும் என்று சொல்வது ஆண்கள் அனைவரும் காமவெறியர்கள், காமப் பார்வையாளர்கள், அது தான் அவனது அடிப்படை குணமே என்பது போல் இருக்கிறதே. பர்தா போடாத பிற மதப் பெண்களை இஸ்லாமிய ஆண்கள் காமப்பார்வையுடன் தான் பார்க்கிறார்களா ? மாற்று மதத்தினர் ஒரு இஸ்லாமிய ஆணை வீட்டுக்குள் அழைத்தால் அவர்கள் வீட்டு பெண்களுக்கு பர்தா போட்டுவிட்டு இஸ்லாமிய ஆண்கள் முன் நிறுத்த வேண்டுமா ?

நான் பர்தாவுக்கு எதிராக எதுவும் சொல்லவில்லை, ஆனால் பர்தாவின் தேவைக்குச் சொல்லப்படும் காரணத்திற்கு எதிராகத்தான் கேட்கிறேன்.

பர்தா பற்றிய கருத்தில், இஸ்லாமில் பெண்களுக்கு பர்தா என்பது மதம் தொடர்புடைய கட்டுப்பாட்டிற்கான உடை என்ற ஒற்றை வரி விளக்கத்தை என்னால் ஏற்கமுடியும். மற்ற விளக்கங்களை மத ஆதரவு கருத்துகளாகவே பார்க்கிறேன், ஒரு இஸ்லாமியருக்கு அந்த கருத்தும் வெகு இயல்பானது என்பதாக நான் கருதுகிறேன்.

நான் பொதுவாக மட்டுமே கருத்து கூறினேன், மற்றபடி
'எங்க வீட்டு பெண் என்ன உடை போட்டால் உனக்கு என்ன ?' என்பது போன்ற பதில்களுக்காக நான் இதை எழுதவில்லை. தருமிக்கு நீங்கள் சொன்ன பதிலில் போன்ற தவறான புரிதல் ஏற்படுது. நீங்களோ, நானோ, அவரோ யாரும் யாருக்கும் எதிரி அல்ல.

Unknown said...

//ஒட்டு மொத்த ஆண்கள் சமூகத்தின் பார்வை தான் பெண்களின் மீதான ஆடையை திணித்திருக்கிறது என்று சொல்ல வருகிறீர்களா?//
பொதுவாக பெண்களின் உடலமைப்பு, அவர்களின் தன்மை (முள் மேல் சேலை விழுந்தாலும், சேலை மேல் முள் விழுந்தாலும் நட்டம் என்னவோ சேலைக்குத்தான்) போன்ற காரணிகளால் முகம் கைகள் மட்டும் தெரிகின்ற ஆடைகளே அவர்களுக்கு இயல்பானது.
முகம் கைகள் அவர்களில் கவர்ச்சிப் பகுதி இல்லையா எனக் கேள்வி வரலாம். இயன்றவரை அவர்களின் செயல்பாட்டுக் இடையூறு வராமல் இருக்க இதுவே சரியானதாகத் தோன்றுகிறது.
இல்லை சிலருக்கு இன்னும் கூடுதலாகத் திறந்திருந்தால் நல்லது என நினைப்பவர்கள் they are more exposed and so more vulnerable என்பதையும் சேர்த்தே புரிவது நலமாய் இருக்கும்.
அடுத்து எல்லா ஆண்களுமே கேவலமானவர்களா என்ற கேள்வி வரும்
இல்லை. எல்லோருமே அப்படி இல்லை என்றே எடுத்துக் கொண்டாலும், கேவலமானவர்கள் என்று முகத்தில் எழுதி இருப்பதில்லை. அதனால் அத்தகு கேவலமானவர்களிடமிருந்து தப்பிக்க வேண்டியது அவசியம். ஏனெனில் முள் மேல் சேலை... ... ...
//சொந்த வீட்டிலேயே அண்ணியை, மருமகளை வெறித்துப் பார்க்கும் ஆண்கள் கூட சமூகத்தில் உண்டு//
அதே பதில்தான். அவர்களும் இயல்பாய் வாழ வேண்டுமல்லவா? இயல்பான வாழ்வுக்கு சிலவகை நிர்ப்பந்தங்களை ஏற்கத்தான் வேண்டி இருக்கிறது. இஸ்லாத்தில் கணவனுடைய சகோதர(ன்)ர்கள் முன்னிலையில் பர்தா மிகவும் அவசியம்.
இந்த சட்டங்கள் நியதிகள் எல்லாம் மனிதனின் நல வாழ்வுக்குத்தான். முடியாது என்று இருப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவரவர் வினைகளுக்கு அவரே பொறுப்பு.

அடுத்து,
//மாற்று மதத்தினர் ஒரு இஸ்லாமிய ஆணை வீட்டுக்குள் அழைத்தால் அவர்கள் வீட்டு பெண்களுக்கு பர்தா போட்டுவிட்டு இஸ்லாமிய ஆண்கள் முன் நிறுத்த வேண்டுமா?//
உங்கள் இயல்புப்படி நீங்கள் வாழலாம். அவர் முஸ்லீமோ முஸ்லீமல்லாதவரோ, ஆனால் உங்களுக்கு 'எந்தப் புற்றில் பாம்பு!' எனத் தெரியாது. சில பேருடைய முன் உங்கள் பெண்கள் வருவது உங்கள் மனதினுள் சங்கடங்களைக் கூட ஏற்படுத்தி இருக்கலாம். எங்களுக்கு, அதாவது பர்தா பெண்களுக்கும் அவர்களுடைய ஆண்களுக்கும் அந்த சங்கடங்கள் கிடையாது. அவர்கள் இயல்புப்படி அவர்கள் வாழ்வதால் இந்த சங்கடங்கள் வராது. மனதில் பாதுகாப்புணர்வு இருந்து கொண்டெ இருக்கும்.

//தருமிக்கு நீங்கள் சொன்ன பதிலில் போன்ற தவறான புரிதல் ஏற்படுது. நீங்களோ, நானோ, அவரோ யாரும் யாருக்கும் எதிரி அல்ல.//
கேள்வி கேட்பவர்கள் எல்லாம் எதிரிகள் அல்ல. நான் யாரையும் எதிரியாக நினைக்கவே இல்லை. கேள்விகளில்தான் மனித சிந்தனை மலருகிறது என்பதுதான் என் எண்ணமும். கொடுக்கும் பதிலை புரிந்து, அதில் உண்மையிருந்தால் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம், துணிவு எனும் அறிவு நாணயம் போன்றவை சிலருக்கு இல்லாததுதான் வருத்தமளிக்கிறது.

என்ன இத்தனை நாள் கழித்து என்று தோன்றினால்......
ஆயிரக்கணக்கில் இடுகை எழுதுபவருக்கு பதில் சொல்றதுன்னா சும்மாவா? :))