இஸ்லாம் பற்றி வினவுக்கும் சாகித்துக்கும் - 2

//இசுலாமியப் பெண்களின் பிரச்சினைகள் பற்றி விவாதிக்கும்போது நடைமுறை வாழ்க்கையின் வெளிப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் இசுலாமியர்கள் புர்கா என்றதும் சூடாகி விடுவது ஏன்?//
எத்தனை விரிவாக எடுத்துரைத்தாலும் அறிய முயற்சிக்காமல் முதல் கேள்விக்கே திரும்ப வரும் திமிர் கொண்டவர்களாக நிறைய பேர் இருப்பதுதான். தனக்கு உரிமையற்ற மற்ற பெண்களை துகிலுரித்து கீழ்த்தரமாக பார்க்கத் துடிக்கும் காமாந்தக கண்களுக்கு புர்கா கேடாகத்தான் தெரியும். இது பெண்களை தங்களின் காமாந்தக கண்களுக்கு விருந்தாக்கத் துடிக்கும் திமிர் பிடித்த ஆண் மேலாண்மையின் வக்கிர உணர்வு. ஆடு நனைகின்றதே என ஊளையிட்டு வெறி கொண்டு அழும் ஓநாய்கள்.

//சமூக ஆர்வாலர்கள் அப்பெண்களுக்கு புர்காவினால் ஏற்படும் சிரமங்களை முன்வைக்கும் போது அது அப்படி இல்லை என்று மறுப்பதும் அதனையே பெண்களை விட்டு பேசவைப்பதும் விவாதத்தில் எட்டப்படாத முடிவாக உள்ளது.//
புர்கா என்பது ஏதோ கருப்புத்துணி என்று நினைப்பதால்தான் பல கோளாறுகள் ஏற்படுகின்றன. உடம்பை மறைக்கின்ற, அழகை, அலங்காரங்களை வெளிப்படுத்தாத முறையில் அணியும் துணி எதுவானாலும் அது புர்காதான். கருப்பு அங்கியே ஆனாலும் அது அவரது உடலின் கன, பரிமாணங்களைக் காட்டி பிறர் கண்களுக்கு விருந்து படைப்பதாக இருந்தால் அது இஸ்லாமிய நெறிமுறைக்குள் வராது.

இந்திரா காந்தி அம்மையாருக்கு தன் பிரதமர் கடைமைகளை ஆற்றுவதற்கோ, ஜெயலலிதா அம்மையாருக்கு தம் முதலமைச்சர் பணிகளை நிறைவேற்றுவதற்கோ, கவர்னர் பாத்திமா பீவிக்கு அவர் கடமைகளை செவ்வனே செய்வதற்கோ, அன்னை தெரசா அம்மையாருக்கு தம் சமூகப்பணிகளை ஆற்றுவதற்கோ, பிணிகளைத் துடைப்பதற்கோ, தற்போதைய குடியரசுத்தலைவர் பிரதிபா தேவி பாட்டிலுக்கு அவர் தம் கடைமையைச் செய்வதற்கோ இத்தகைய துணிகள் எந்தத் தடையையும் ஏற்படுத்தவில்லை. சமூக ஆர்வலர்களாக தம்மை முன்னிறுத்தும் சில காமாந்தகர்கள் கண்களுக்குத்தான் இது தடையாகிறது. அதனால் விவாதப் பொருளாகிறது

கடினமான உடல் உழைப்பை கொடுக்கின்ற வகையில் உள்ள வேலைகளை பெண்களிடம் கொடுத்து அவர்களின் இயல்புக்கு மாறாய் அவர்களைப் பிழிந்தெடுக்காதீர்கள். அவர்களின் உடலமைப்புக்கு ஏற்ற இயல்பான நாசூக்கான வேலைகளை மட்டும் அவர்களுக்கு கொடுங்கள். வேறு வழியின்றி அவ்வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்திலிருக்கின்ற பெண்களுக்கு நிர்ப்பந்தம் என்ற முறையில் இஸ்லாம் அவரது உடைக்காக அவர்களை கட்டாயப் படுத்துவதில்லை. ஜமாஅத்துக்கும் வசதி படைத்தவர்களுக்கும் அவர்களை அந்த நிர்க்கதியான நிலையிலிருநது விரைவில் வெளியேற்றி நல்ல நிலைக்கு கொண்டு வருதல் கடமையாகிறது.

//இன்று அனைவரும் படிக்கவைக்கும் நிலையில் அந்த பெண்கள் புர்கா அணிந்தாலும் படிக்கச்செல்ல முடிகிறதே என்ற சந்தோஷத்தில் புர்காவை ஒரு அடக்குமுறையாகக் கருதுவதில்லை. ஒரு சில தீவிர மதப்பற்று இல்லாத குடும்பங்கள் அல்லது பெண்கள் மட்டுமே புர்கா அணியாத நிலையில் பள்ளி கல்லூரிகளுக்குச் சென்றாலும் பெரும்பாலனவர்கள் புர்கா அணிவதை ஒரு பொருட்டாக கருதுவதில்லை//
கல்லூரி செல்லும் இஸ்லாமிய பெண்கள் அறிவு பெற்று கல்லூரிக்கு செல்லும் அதே வேளை அறிவு குறைந்து புர்காவும் இடுகின்றனரா? எத்தகைய வளைந்தொடிந்த சிந்தனை!.

இஸ்லாம் சரிவர புரியாதிருந்த நேரத்தில் பெண்களென்ன ஆண்களே கல்லூரிக்குச் செல்லாமலிருந்தார்கள். இஸ்லாம் புரிந்து விட்டதால் பெண் கல்விக்கு இஸ்லாம் தரும் மகத்துவம் தெரிகிறது. அதனால் இஸ்லாமிய ஒழுக்கத்தைப் பேணிக் கொண்டே கல்லூரிக்குச் செல்கின்றனர். இஸ்லாமிய நெறிமுறைகளைப் பேணியவாறு இஸ்லாம் வலியுறுத்தும் கல்வியும் பெற முடிகின்ற போது அதில் தடை அவசியமற்றது எனப் பெற்றோரும் தெளிந்துள்ளனர்.

// திருமண விழாக்களில் புர்காவுடன் வலம் வரும் பெண்கள், ஆண்களின் கூட்டத்திடையே இயல்பாக வலம் வருகின்றனர். எதிர் எதிர் வரிசையில் அமர்ந்து விருந்துண்ணுகின்றனர். யாரும் எதற்கும் சங்கடப்படுவதில்லை எல்லாம் இயல்பாக குற்றமற்ற செய்லபாடுகளாக நாம் காணுகிறோம்.//
தங்களை கம்யுனிஸ்டுகளாகச் சொல்லிக் கொள்ளும் சிலரை வேறு சிலர் கம்யூனிஸ்டுகளாக முகமூடி அணிந்தவர்களென சித்தரிக்கின்றனர். இது போல உள்ளவைதான் பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஆயிஷா, ஸகனாஸ், மதுரைச் சேர்ந்த பாத்திமா, திருச்சியைச் சேர்ந்த பானு முதலானோர். எல்லா இடங்களிலும் அது போன்றவர்கள் உண்டு. இவையொன்றும் முஸ்லீம்களில் மட்டும் உள்ளதல்ல.

புர்கா அணிந்து தம்மை அழகாக மறைத்துக் கொண்டு தம் தேவைகளுக்காக வெளிவர இஸ்லாத்தில் தடை ஏதும் இல்லையே.

//காதுகளையும், நகை அலங்காரங்களையும் மறைத்துக்கொள்ளும் புர்காவெல்லாம் இன்று கிடையாது.//
எதற்காக புர்கா அணிய வேண்டும் எனத் தெரியாமல் கை, கால்கள், உடம்பின் பாகங்கள் வெளித்தெரிய சிலர் அணியும் துணிகளை அவர்கள் என்ன பெயரில் அழைத்துக் கொண்டாலும் அது இஸ்லாமிய உடையாகி விடாது.

//தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் போன்ற இசுலாமிய அமைப்புகள் தமிழக இசுலாமியப் பெண்களை புர்கா அணியச் செய்வதில் வெற்றி பெற்றுள்ளனர்//
ஆம். முஸ்லீம்களுக்கு முதலில் இஸ்லாத்தை போதிப்பதில் ஓரளவு வெற்றி பெற வைத்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.
--------------------------------------------------------------------------------

//பெண் உழைப்பு//
கணவர்தான் இஸ்லாமிய குடும்பத் தலைவர். தலைவர் பொருள் திரட்டும்போது பெண்ணை குடும்பத்துக்காக பொருள் திரட்ட இஸ்லாம் கட்டாயப் படுத்தவில்லை. சொத்துகளை தனியாக அடையவும் அதை முறையாக நிர்வகிக்கவும் பெண்களுக்குள்ள உரிமையை இஸ்லாம் தடுக்கவுமில்லை.

இதில் இஸ்லாம் செய்துள்ள குறைகள் என்ன என்று விளக்கினால் தெளிவு படுத்தலாம்.

//உழைக்கும் பெண்களைப் பொருத்தவரை அன்றும் இன்றும் ஏற்ப்பட்டுள்ள வேறுபாடு முதலாளித்துவத்தின் பண்பாடுதானேயொழிய குனர்ஆனுக்கும் இவர்களுக்கும் வெகுதூரம்//
உங்கள் பிழைப்புக்கு முதலாளித்துவம் பிரபுத்துவம் எதுவானாலும் பெயர் வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் இஸ்லாமிய அறிவு பெற்ற நம் தமிழ் சமுதாய பெண்கள் 'இத்தனை பேசுகின்றீர்களே எங்கள் நிலைமையிலிருந்து நாங்கள் வெளிவர என்னென்ன ஏற்பாடுகளைச் செய்துள்ளீர்கள்?' என்று தங்கள் இஸ்லாமிய மற்றும் தார்மீக உரிமையை பொதுவில் வைக்கக் கூடிய திறன் பெற்று விட்டனர். அதனால் உழைக்கும் மக்களோடு எல்லோருக்கும் இஸ்லாமிய அறிவு இன்னும் சிறப்பாக சென்றடையத்தான் நாம் இப்போது அதிகம் முயற்சிக்க வேண்டும்.

//பெண்ணின் உழைப்பில் உட்கார்ந்து தின்பதா? அல்லது அவள் வெளிநாடு சென்று சம்பாதிக்க நாம் இங்கே 'பொட்டையைப்' போல் பிரிந்து வாழ்வதா?' சுய கௌரவம் இடம்தரவில்லை. சமூகம் தனக்கு வழங்கியுள்ள விவாகரத்து என்ற அங்குசத்தை நீட்டத் தொடங்கினார்//
இஸ்லாம் புரியத் தொடங்கி விட்ட இந்த கால கட்டத்தில் தலாக் தலாக் தலாக் எனச் சொல்லி விட்டாலும் பிரிந்து விட முடியாது. ஒரு முறையாகவே கணக்கெடுக்கப்படும். அதனால்தான் இந்த அங்குசத்தை அவர் நீட்டத் தொடங்கினார். சரியான இஸ்லாமியத் தெளிவு நாட்டில் ஏற்படத் தொடங்காமல் இருந்திருந்தால் அவர் அப்போதே முடித்திருப்பார்.

//பாத்திமாவோ 'எதுவானாலும் பரவாயில்லை, நான், எனது முன்னேற்றத்தை கெடுத்துக்கொள்ள முடியாது' என்று உறுதியாக வீசிய கவண்கல் வேலை செய்தது//
இஸ்லாத்தில் அவருக்குள்ள உரிமையும் கடமையும் புரியத் தொடங்கி விட்டதாலோ என்னவோ அவரால் கவண்கல் வீச முடிந்தது. பொருள் முதல்வாதம் பேசிக் கொண்டிருந்தால், பொருளையும் இழந்து, யாராரிடமோ சிக்கி சின்னா பின்னமாகி இருப்பார்.

//நிறைய எடுத்துக்காட்டுகள் உள்ளன. தான் சம்பாதிக்கும் தொகையை தனது பெற்றோர்களுக்கு கொடுப்பதில் கட்டுப்பாடு இருக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக உறுதிமொழிகளைப் பெற்றுக்கொண்டு திருமணம் செய்து கொள்ளும் பெண்களும் இவர்கள் மத்தியில் வளர்ந்து கொண்டுதான் வருகின்றனர்.//
இஸ்லாமிய குடும்பவியலில் குடும்பத்தை நடத்த கணவர்தான் பொருள் கொண்டு வர வேண்டும். குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்புதான் மனைவிக்கு. தான் வேலை செய்து கொண்டே குடும்பத்தையும் சரி வர நிர்வகிக்க முடியும் என்ற நிலையிலிருக்கும் பெண்கள், தாம் பெறும் ஊதியத்தை அவர்கள் விரும்பிய நேர்மையான வழிகளில் செலவிடுவதில் தலையிட, கணவனுக்கு எவ்வித உரிமையுமில்லை. அவளாக விரும்பி அதிலிருந்து ஏதும் கொடுத்தால்தான் பெற்றுக் கொள்ளலாம். இவையனைத்தும் இஸ்லாமிய நெறிமுறைகளை பெண்கள் அறியத் தொடங்கியதால் விளைகின்ற நன்மைகள்தான்

//இசுலாமிய பெண் உழைப்பை முதலாளித்தவம்தான் தீர்மானிக்கிறதேயொழிய மதக் கோட்பாடுகள் இல்லை//
இதிலே முதலாளித்துவம் எங்கு வந்தது? அவ்வப்போது முதலாளித்துவம், பிரபுத்துவம், உழைக்கும் வர்க்கம். காலணியாதிக்கம், அடிமைத்தனம் இதில் எதையாவது போட்டால்தான் கட்டுரையை யார் எழுதினார் என்று தெரியும் என்பதற்காக போட்டிருந்தால்... சரிதான் பரவாயில்லை.

இன்னும் வரும்

69 comments:

Anonymous said...

Stupid Writing.

ரவி said...

Avvvvvvvvvvvvvvvvvvv,,,,,,,,,,,,

ஹுஸைனம்மா said...

தெளிவான விளக்கங்கள். நன்றி பலரின் சார்பில்.

கொஞ்சம் இந்தப் பக்கத்தின் ஃபார்மட்டிங் சரியாக்கினால், வாசிக்க எளிதாக இருக்கும். செய்தால் நல்லது.

Unknown said...

வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி அனானி, செந்தழல் ரவி.

Unknown said...

வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஹூஸைனம்மா.

//இந்தப் பக்கத்தின் ஃபார்மட்டிங் சரியாக்கினால், வாசிக்க எளிதாக இருக்கும்.//
அதப்பத்தியெல்லாம் எதுவுமே தெரியாதே. சொல்லித் தந்தால் சரி செய்து கொள்வேன் அல்லது சரி செய்து தந்தால் மகிழ்ச்சியடைவேன்.

நட்புடன் ஜமால் said...

விளக்கங்களுக்கு நன்றி.


ப்லாக் டெம்ப்ளேட் மாற்றுங்கள், தெரியவில்லையெனில் மடலிடுங்கள்.

Unknown said...

வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நட்புடன் ஜமால்

டெம்ப்ளேட் மாற்ற முயற்சிக்கிறேன்

பி.ஏ.ஷேக் தாவூத் said...

அன்பு சகோதரர் சுல்தான் பாய்,
உங்களுடைய விளக்கங்கள் மிக அருமை. ஆனால் குறைந்தபட்ச நேர்மைக் கூட இல்லாத இவர்களிடம் (வினவு & ம.க..இ.க ) நாம் எடுத்து வைக்கின்ற வாதங்கள் செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருக்கின்றது. குறைந்தபட்சம் இவற்றைப் பற்றி பொதுமக்கள் முன்னிலையில் விவாதத்திற்கோ அல்லது கலந்துரையாடலுக்கோ வாருங்கள் என்று அழைப்பு கொடுத்தும் அவர்கள் வரவில்லை. வந்தால் கம்யூனிச டவுசர் கிழிந்து விடுமோ என்றஞ்சியே வர மறுக்கின்றனர்.

Unknown said...

வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி பி.ஏ.ஷேக் தாவூத்.

தருமி said...

//தனக்கு உரிமையற்ற மற்ற பெண்களை துகிலுரித்து கீழ்த்தரமாக பார்க்கத் துடிக்கும் காமாந்தக கண்களுக்கு புர்கா கேடாகத்தான் தெரியும். இது பெண்களை தங்களின் காமாந்தக கண்களுக்கு விருந்தாக்கத் துடிக்கும் திமிர் பிடித்த ஆண் மேலாண்மையின் வக்கிர உணர்வு. ஆடு நனைகின்றதே என ஊளையிட்டு வெறி கொண்டு அழும் ஓநாய்கள்....
சமூக ஆர்வலர்களாக தம்மை முன்னிறுத்தும் சில காமாந்தகர்கள் கண்களுக்குத்தான் இது தடையாகிறது.//
புர்கா வேண்டாமென சொல்லும் எல்லோருமே காமாந்தகர்கள் என்று நீங்கள் சொல்வது உங்களுக்கே நியாயமாகப் படுகிறதா?

மதங்கள் ... so sad..

அப்துல் குத்தூஸ் said...

சகோதரர் சுல்தான் அவர்களே, மிக அருமையான பதில்.

********

யாருக்கு யார் வேண்டாம் என்று சொல்வது? மற்றவர்கள் உரிமையில் தலையிட நீ யார்?

புர்கா அணிவதால் என்ன சமுதாய கேடு வந்துவிட்டது என கூறமுடியுமா?

Unknown said...

//புர்கா வேண்டாமென சொல்லும் எல்லோருமே காமாந்தகர்கள் என்று நீங்கள் சொல்வது உங்களுக்கே நியாயமாகப் படுகிறதா?//

வருகைக்கு நன்றி தருமி ஐயா.
நியாயமான காரணங்களை மறுப்பதால் எனக்கு அப்படித் தோன்றுகிறது.

புர்கா வேண்டாமென சொல்ல வேறு என்ன காரணமாக இருக்கும். இஸ்லாம் மற்றும் இஸ்லாமியர்கள் மீதுள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக இருக்கலாம்.

//மதங்கள் ... so sad..//
எனக்கும் வருத்தம்தான். தம் அறிவை மறுத்து என்ன சொல்கிறோம் என அறியாதவர்களாக அறிவு ஜீவிகள்.

வருகைக்கு நன்றி அப்துல் குத்தூஸ்

தருமி said...

//நியாயமான காரணங்களை மறுப்பதால் எனக்கு அப்படித் தோன்றுகிறது.//
புர்கா வேண்டாமென்று சொல்லும் ஈமான்காரர்கள் + காபிர்கள் = காமாந்தகர்கள்.
நல்ல கணக்கு, சுல்தான்.
ஈமான் கொண்ட சிலரே புர்கா வேண்டாமென்று சொன்ன நீயா நானாவை நடத்த விடாமல் செய்ததைப் பார்த்தாலே, அதில் என்னதான் சொல்கிறார்கள் என்று பார்க்கக்கூட முடியாத உங்கள் 'உச்சநிலை'யைப் பார்த்தாலே பயமாகத்தானிருக்கிறது!

//புர்கா வேண்டாமென சொல்ல வேறு என்ன காரணமாக இருக்கும். இஸ்லாம் மற்றும் இஸ்லாமியர்கள் மீதுள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக இருக்கலாம்.//

ஏன் அந்த நிகழ்ச்சிகளோ இல்லை மற்றைய விவாதங்களையோ நன்றாகப் பாருங்கள். விதி தலைகீழ் - நீங்கள் வேண்டாமென்று சொல்வதலேயே அந்தக் காழ்ப்புணர்ச்சி வரலாம். எது முதல் என்று காண மனமில்லை உங்களுக்கு.

//மதங்கள் ... so sad..//
எனக்கும் வருத்தம்தான். தம் அறிவை மறுத்து என்ன சொல்கிறோம் என அறியாதவர்களாக அறிவு ஜீவிகள்.

உங்கள் 'அறிவை'ப் பார்த்தாலே ... வேண்டாமுங்க அது எனக்கு எப்போதும்.

உமர் | Umar said...

இன்றுதான் இந்த இடுகையையும் இதற்குத் தொடர்புடைய முந்தைய இடுகையையும் பார்த்தேன். இரண்டு இடுகைகளின் கருத்தும் ஒன்றாய் இருப்பதால், இங்கேயே உரையாடுகின்றேன். இந்தப் பதிவுகளிலோ, பின்னூட்டங்களுக்கான பதில்களிலோ நீங்கள் தெரிவித்த சில கருத்துக்கள் குறித்து முதலில் உங்கள் நிலை என்ன என்று அறிய விரும்புகின்றேன்.

//சொந்த தாய் சகோதரி இல்லையென்றால் அவர்களுடன் நீங்கள் ஒருமையில் தனிமையில் இருக்காதீர்கள் அது சில நேர சபலங்களை மனதில் ஏற்படுத்தலாம்.//

//தனக்கு உரிமையற்ற மற்ற பெண்களை துகிலுரித்து கீழ்த்தரமாக பார்க்கத் துடிக்கும் காமாந்தக கண்களுக்கு புர்கா கேடாகத்தான் தெரியும். இது பெண்களை தங்களின் காமாந்தக கண்களுக்கு விருந்தாக்கத் துடிக்கும் திமிர் பிடித்த ஆண் மேலாண்மையின் வக்கிர உணர்வு.//

இந்தக் கருத்துக்கள் தொடர்பில் பாக்கர் அவர்களைக் குறித்த உங்கள் எண்ணம் என்ன? (பாக்கர் யார் என்று கேட்பீர்களானால், அவர் INTJ இயக்கத்தின் தலைவர்.)

Unknown said...

வருகைக்கு நன்றி கும்மி.
//இந்தக் கருத்துக்கள் தொடர்பில் பாக்கர் அவர்களைக் குறித்த உங்கள் எண்ணம் என்ன? (பாக்கர் யார் என்று கேட்பீர்களானால், அவர் INTJ இயக்கத்தின் தலைவர்.)//
தனிப்பட்ட ஒருவரைப் பற்றி கருத்து கூற எனக்கு எவ்வித அதிகாரமுமில்லை. அது அவருக்கும் அவருடைய இறைவனுக்கும் இடையிலான விடயம்.

ஏதாவது ஒரு செயலைக் குறித்த கேள்விகள் இருக்குமானால் கேட்கலாம். அதற்கு இஸ்லாமியத் தீர்வு என்ன என எனக்குத் தெரிந்தால் நான் அறியத் தருகிறேன்.
கேள்விகளை தலைப்புக்கு தொடர்புடையதாய் அமையுங்கள்.

உமர் | Umar said...
This comment has been removed by a blog administrator.
Unknown said...

கும்மி கூறியது:
//தனிப்பட்ட ஒருவரைப் பற்றி கருத்து கூற எனக்கு எவ்வித அதிகாரமுமில்லை//

நன்றி சுல்தான். இதே நிலை எல்லா தனிப்பட்ட மனிதர்கள் தொடர்பாகவும் இருக்கும் என நம்புகின்றேன்.

[நாம் யாரையும் அவசியமின்றி புறம் பேச வேண்டாம். அதனால் நீங்கள் குறிப்பிட்ட சில விடயங்கள் நீக்கப்பட்டுள்ளன.]

//ஏதாவது ஒரு செயலைக் குறித்த கேள்விகள் இருக்குமானால் கேட்கலாம். அதற்கு இஸ்லாமியத் தீர்வு என்ன என எனக்குத் தெரிந்தால் நான் அறியத் தருகிறேன்.
கேள்விகளை தலைப்புக்கு தொடர்புடையதாய் அமையுங்கள்//

கேள்விகளை தலைப்புக்கு தொடர்புடையதாய் அமைக்கக் கேட்டுக்கொண்டுள்ளதாலும், ஒரு சிறு கேள்வி. சாஹித்தின் பதிவு இஸ்லாமியப் பெண்களின் வாழ்வியல் குறித்துதானே பேசுகின்றது? தலைப்போடு தொடர்புடைய கேள்விகள் என்றால், இன்றைய வாழ்வியல் எதார்த்த நிலை குறித்துதான் பேச வேண்டும்.

வினவு தளத்தில் வாழ்வியல் யதார்த்தம் தொடர்பான எனது கேள்விகளுக்கு பதிலளிக்க முன்வராத சிலர் போன்று நீங்களும் கடந்து சென்று விடுவீர்களா? கவனிக்கவும், பதிவு இஸ்லாமியப் பெண்களின் வாழ்வியல் குறித்து உரையாடுகின்றது.

Unknown said...

//நன்றி சுல்தான். இதே நிலை எல்லா தனிப்பட்ட மனிதர்கள் தொடர்பாகவும் இருக்கும் என நம்புகின்றேன்.//
ஆம் நண்பரே.

//வினவு தளத்தில் வாழ்வியல் யதார்த்தம் தொடர்பான எனது கேள்விகளுக்கு பதிலளிக்க முன்வராத சிலர் போன்று நீங்களும் கடந்து சென்று விடுவீர்களா? கவனிக்கவும், பதிவு இஸ்லாமியப் பெண்களின் வாழ்வியல் குறித்து உரையாடுகின்றது.//
கேள்விகளை முன் வையுங்கள் தோழரே. எனக்குத் தெரிந்தவரை பதிலளிக்க முயற்சிக்கிறேன்.

உமர் | Umar said...

//[நாம் யாரையும் அவசியமின்றி புறம் பேச வேண்டாம். அதனால் நீங்கள் குறிப்பிட்ட சில விடயங்கள் நீக்கப்பட்டுள்ளன.]
//

நான் எப்பொழுதுமே புறம் பேசுபவனல்ல. நான் குறிப்பிட்ட சம்பவம் கூட பிஜேயின் இணையதளத்தில் உள்ளது.

உமர் | Umar said...

//கேள்விகளை முன் வையுங்கள் தோழரே. எனக்குத் தெரிந்தவரை பதிலளிக்க முயற்சிக்கிறேன். //

நன்றி நண்பரே!

நான் தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் புதுகோட்டை மாவட்ட இஸ்லாமிய பெண்களின் இன்றைய புர்கா அணியும் நிலை குறித்து கூறுகிறேன்.

45 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் துப்பட்டி அல்லது வெள்ளை சீலை அணிகின்றனர். 40-45 வயதை உடைய பெண்கள், எந்த வித அலங்காரங்களும் அற்ற கருப்பு நிற அல்லது அடர் நிற புர்கா அணிகின்றனர். 30-40 வயதை உடைய பெண்கள் அலங்காரங்கள் நிறைந்த புர்கா அணிகின்றனர். 25-30 வயதை உடைய பெண்கள் கைப்பகுதி மற்றும் முன் கழுத்துப் பகுதி see-through என்னும் முறையில் அமையப்பெற்ற புர்கா அணிகின்றனர். 25 வயதிற்குக் குறைவான பெண்கள், கல்லூரிப் பெண்கள், திருமணம் போன்ற விஷேஷங்களுக்கு செல்லும்போது மட்டும் புர்கா அணிகின்றனர்; மற்ற இடங்களில் புர்கா அணிவதை தவிர்க்கின்றனர்.

இதனைப் பார்க்கும்போது, மதத்தின் பெயரால் தங்கள் உடை மீது விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை மீற பெண்கள் முன்வரத் தொடங்கிவிட்டனர். இன்னும் பத்தாண்டுகளில், கல்வி அறிவு பெற்ற, பெரும்பாலான இஸ்லாமியப் பெண்கள் புர்காவினை துறந்து விடுவர்.

இஸ்லாமியப் பெண்கள் தங்கள் உடையில் மேற்கொள்ளும் இத்தகைய மாற்றங்கள், மதத்தின் பெயரால் தங்கள் மீது திணிக்கப்படும் உடை மீதான வெறுப்பைதானே காட்டுகின்றது? இத்தகைய மாற்றங்கள், தொடர்பான உங்கள் பதில் என்ன? மேற்குறிப்பிட்ட பகுதிகளில் நீங்கள் வசித்திருக்காவிட்டால், அப்பகுதியை சார்ந்த நண்பர்களிடம் கேட்டால் தெரியக்கூடும். அதே பகுதியை போன்றே பல்வேறு பகுதிகளிலும் கூட மாற்றங்கள் நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்றன. மாற்றம் ஒன்றே மாற்றமில்லாதது.

Unknown said...

//நான் எப்பொழுதுமே புறம் பேசுபவனல்ல.//
மிகவும் நல்லது. உங்களைப் பற்றி, நீங்கள் விரும்பாத ஒன்றை, நீங்கள் அறியாமல் பேசுவது நன்மையானவற்றில் உள்ளதல்ல.

/நான் தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் புதுகோட்டை மாவட்ட இஸ்லாமிய பெண்களின் இன்றைய புர்கா அணியும் நிலை குறித்து கூறுகிறேன்.//
இஸ்லாமில் ஹிஜாப் என்பது 1400 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே மாதிரியானதுதான். யார் எந்த வகையாக உடையுடுத்தி அதை ஹிஜாப் என்று சொல்லிக் கொண்டாலும், இஸ்லாம் குறிப்பிட்ட உடற்பகுதி மறைத்த கண்ணிய உடை தவிர மற்றவைகள் ஹிஜாப் ஆகாது.

//இதனைப் பார்க்கும்போது, மதத்தின் பெயரால் தங்கள் உடை மீது விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை மீற பெண்கள் முன்வரத் தொடங்கிவிட்டனர். இன்னும் பத்தாண்டுகளில், கல்வி அறிவு பெற்ற, பெரும்பாலான இஸ்லாமியப் பெண்கள் புர்காவினை துறந்து விடுவர்.//
இவைகள் காலங்காலமாக இருந்து வருபவைதான். இஸ்லாத்தை பற்றிய அறிவு கிடைக்கும்போது அவர்களும் மாறி சரியாக ஹிஜாப் அணியத் தொடங்கி விடுவர்.

//மாற்றம் ஒன்றே மாற்றமில்லாதது.//
சில வயதுக்கான விருப்பங்கள் எல்லோருக்கும் இருக்கவே செய்யும். அதற்கான அத்துமீறல்களை அவ்வயது செய்யத் தூண்டும். தெளிவு வரும்போது மாறி விடுவர்.

மாற்றங்கள் இன்ஷா அல்லாஹ் மாற்றமில்லாமல் நிகழும்.

தருமி said...

சுல்தான்
புர்க்காவில் இன்னொரு சந்தேகம். காமாந்தகர்களின் கண்களில் படக்கூடாதென புர்க்கா. முகமும் கைகளும் புர்க்காவை விட்டு வெளியே தெரியலாம்.

முகம் பார்த்து காதலோ காமமோ ஏற்படாதா?

உமர் | Umar said...

//உங்களைப் பற்றி, நீங்கள் விரும்பாத ஒன்றை, நீங்கள் அறியாமல் பேசுவது நன்மையானவற்றில் உள்ளதல்ல//

பிஜே குற்றம் சுமத்தியுள்ளார் என்றுதான் கூறியிருந்தேனே தவிர என்னுடைய கருத்தாகக் கூறவில்லை.

//சில வயதுக்கான விருப்பங்கள் எல்லோருக்கும் இருக்கவே செய்யும். அதற்கான அத்துமீறல்களை அவ்வயது செய்யத் தூண்டும். தெளிவு வரும்போது மாறி விடுவர். //

மன்னிக்கவும் நண்பரே. ஒவ்வொரு காலகட்டத்திலும் நடைபெறுவதைக் குறிக்கவே வயதினைக் குறிப்பிட்டேன். இன்று 40 வயதுடைய ஒரு பெண், தனக்கு 60 வயதாகும்போது துப்பட்டி அணிய மாட்டார். அப்பொழுதும், அவர் புர்காதான் அணிவார். அதுபோல் இன்று 20 வயதில் இருக்கும், புர்கா அணியாத ஒரு கல்லூரி மாணவி, தனக்கு 40 வயதாகும்போது புர்கா அணியாமல்தான் இருப்பார். ஒத்துக்கொள்கின்றீர்களா?

சுமார் 20 வருடங்களுக்கு முன்பு கல்லூரியில் பயின்ற இஸ்லாமிய மாணவர்கள், கல்லூரிக்கு பேன்ட் அணிந்தும், தங்கள் சொந்த ஊருக்குச் செல்லும்போது, முந்தைய ஊரில் இறங்கி கைலி மாற்றிக்கொண்டும் சென்றனர். அப்பொழுது, பேன்ட் அணிபவர்களைக் கிண்டல் செய்துக் கொண்டிருந்தனர். ஆனால், இப்பொழுது கல்லூரியில் பயிலும் மாணவர்கள், தங்கள் சொந்த ஊரிலும் பேன்ட் அணிந்தே உள்ளனர். இது போன்ற மாற்றம்தான், இஸ்லாமியப் பெண்களிடம் இப்பொழுது நடைபெறத் தொடங்கியுள்ளன. இன்னும் சில ஆண்டுகளில், புதிதாக புர்கா அணியும் இஸ்லாமிய பெண்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிடும். நான் கூறுவது ஏற்கனவே புர்கா அணிந்திருப்பவர்கள், புர்காவைத் துறப்பார்கள் என்று அல்ல; மாறாக புதிதாக புர்கா அணியத் தொடங்கும் பெண்களின் விழுக்காடு முந்தைய பத்தாண்டுகளோடு ஒப்பிடும்போது மிகவும் குறைவாகவே இருக்கும் என்று. இஸ்லாமிய ஆண்களிடம் ஏற்பட்ட உடை மாற்றம் இஸ்லாமிய பெண்களிடத்திலும் நடைபெற்று வருவதை உணர்கின்றீர்களா?

//இஸ்லாத்தை பற்றிய அறிவு கிடைக்கும்போது அவர்களும் மாறி சரியாக ஹிஜாப் அணியத் தொடங்கி விடுவர்.//

இது உங்களுடைய கணிப்பா, ஆசையா என்று தெரியவில்லை. பெண்கள் தங்களுக்கான உடை விஷயத்தில் மற்ற மனிதர்களோ, மதமோ குறுக்கிடுவதை விரும்பவில்லை என்பதையே வாழ்வியல் யதார்த்தங்கள் எடுத்துரைக்கின்றன.

Unknown said...

//குற்றம் சுமத்தியுள்ளார் என்றுதான் கூறியிருந்தேனே தவிர என்னுடைய கருத்தாகக் கூறவில்லை//
யாராவது யார் மேலாவது குற்றம் சுமத்தி இருந்தால், அது அவர்கள் இருவருக்குமிடையே உள்ள விவகாரம். அதில் அவர்களுக்கிடையே இறைவன் தீர்ப்பளிப்பான். அதிலே உட்புகுந்து யாரையாவது குற்றம் சுமத்தி, இறைவனிடம் நாமும் சுமப்பானேன் என்பதன் தெளிவாகத்தான் 'உங்களைப் பற்றி, நீங்கள் விரும்பாத ஒன்றை, நீங்கள் அறியாமல் பேசுவது நன்மையானவற்றில் உள்ளதல்ல' என்று கூறி இருந்தேன். விளங்குவதில் ஏதும் தடுமாற்றத்தை உணர்கின்றீர்களா?

அல்லது நீங்கள் இல்லாத இடத்தில் உங்களின் முதுகுக்குப் பின்னால் உங்கள் குற்றங் குறைகளை மற்றவர்கள் பேசித் திரிவதை நீங்கள் விரும்புவீர்களா?

//இன்று 20 வயதில் இருக்கும், புர்கா அணியாத ஒரு கல்லூரி மாணவி, தனக்கு 40 வயதாகும்போது புர்கா அணியாமல்தான் இருப்பார். ஒத்துக்கொள்கின்றீர்களா?//
பொதுவாக இல்லை.

20 வயதில் கல்லூரியில் படிக்கும் பயமறியா இளங்காளை, எந்த பொறுப்புகளுமில்லாததால் கடற்கரை, தியேட்டர், வேறு மக்கள் கூடுமிடங்களில் என்று சைட் அடிக்க அலைவது போலவா பிற்காலங்களிலும் இருக்கிறார். பொறுப்புகள் வந்து உண்மைகள் தெரியும்போது அவைகளை அநாகரீகமாக உணர்கிறார் அல்லவா?

இது போலத்தான் இளம் வயதில் இருக்கும் ஒரு கல்லூரி மாணவி இன்று புர்கா அணியாமலிருப்பவர் மற்றவர்கள் தம்மை பார்க்கும்போது ஒரு கிளுகிளுப்பை உணரலாம். நாளாக நாளாக அவர் அந்த பார்வைகளில் அருவருப்பை உணருவார். தன் அங்கங்கள் அவசியமற்ற பிறர் கண்களுக்கு விருந்தாவதை வெறுப்பார். சரியாக உடையணிந்த அவர் குடும்பத்திலுள்ள மற்றவர்களை இத்தகைய பார்வைகள் சென்றடையாமல் இருப்பதும் அவர் அந்த குறுகுறுப்பின்றி இருப்பதையும் உணர்வார். சரியான இஸ்லாமிய வளர்ப்பு முறைகள் அவர்களை மாற்றி விடும்.

சரியான இஸ்லாமிய வளர்ப்பு முறை பெற்றோர்களிடமே இல்லையென்றால் நீங்கள் கூறுவது போல வாய்ப்பிருக்கிறது என்பதை ஏற்கத்தான் வேண்டும். இதனால் குறிப்பிட்ட அவர்கள் பாதிப்புக்குள்ளவார்களே தவிர இஸ்லாத்துக்கு எந்த பாதிப்புமில்லை.

//புதிதாக புர்கா அணியத் தொடங்கும் பெண்களின் விழுக்காடு முந்தைய பத்தாண்டுகளோடு ஒப்பிடும்போது மிகவும் குறைவாகவே இருக்கும் என்று//
முந்தைய பத்தாண்டுகளோடு தற்போதைய பத்தாண்டுகளை சரி வர கணக்கிட்டீர்களானால், இஸ்லாமிய அறிவுப் புரட்சி ஏற்பட்டுள்ள இன்றைய தமிழக இஸ்லாமிய சமூகத்தில் புர்காவின் எண்ணிக்கை மிக மிக அதிகரித்துள்ளது. இரு மடங்கல்ல அதை விடவும் மும்மடங்காய் பெருகியுள்ளதை அவதானிக்க முடியும்.

//இஸ்லாமிய ஆண்களிடம் ஏற்பட்ட உடை மாற்றம் இஸ்லாமிய பெண்களிடத்திலும் நடைபெற்று வருவதை உணர்கின்றீர்களா?//
நீங்கள் கொஞ்சம் குழம்புகிறீர்கள் என நினைக்கின்றேன். இஸ்லாத்தில் எந்த ஆடை வேண்டுமானாலும் உடுத்தலாம். அவை கருப்பாகவோ வெளுப்பாகவோதான் இருக்க வேண்டுமென்ற எந்த அவசியமுமில்லை. ஆனால் இஸ்லாம் குறிப்பிட்ட வரையறைகளில் இருக்க வெண்டும் என்பதுதான் முக்கியம்.
தற்போதே இஸ்லாமிய ஆண்களைப்போல் இஸ்லாமிய பெண்களிடமும் உடை மாற்றம் ஏற்பட்டுதானுள்ளது. அந்த காலத்தில் பொதுவாக வயது வந்த பெண்கள் துப்பட்டிதான் அணிவார்கள். (நீளமான ஒரு துணியை உடம்பை மறைத்து அணிவார்கள். அதை சுருட்டி அதன் முனைகளை கைகளில் பிடித்திருப்பார்கள்). இப்போது அது புர்கா ஆகி விட்டது. நாளை அது வேறு பெயரில் மாறலாம். ஆனால் அது மூட வேண்டிய பகுதிகளை மூடி சரியான ஹிஜாபாக இருக்கும்.

அப்போது ஆண்களிடம் கைலி இருந்தது, அது எவ்வளவு உடம்பை மறைத்ததோ அதே அளவு இப்போது பேண்ட் மறைக்கிறது. ஆனால் கைலியை விடவும் வசதியாக இருக்கிறது. பெயர் மாறலாம் துணிகள் மாறலாம் ஆனால் அவைகள் மறைக்க வேண்டிய பகுதிகளை மறைத்திருக்கும்.

உமர் | Umar said...

//யாராவது யார் மேலாவது குற்றம் சுமத்தி இருந்தால், அது அவர்கள் இருவருக்குமிடையே உள்ள விவகாரம். //

சமூகத்தில் நடைபெறும் சீர்கேடுகளைக் கண்டும், காணாததுபோல் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறீர்கள். நன்றி!

தவறு செய்தவர்கள் இஸ்லாமியராய் இருந்தால் மட்டும்தான் இந்த அறிவுரையா அல்லது எந்த மதத்தைச் சார்ந்தவராயிருந்தாலும் இந்த அறிவுரை பொருந்துமா?

//நீங்கள் கொஞ்சம் குழம்புகிறீர்கள் என நினைக்கின்றேன். இஸ்லாத்தில் எந்த ஆடை வேண்டுமானாலும் உடுத்தலாம்//

இன்றைய சமூக நிலைகளையும், முந்தைய சமூக நிலைகளையும் குறிக்கத்தான் கைலி, பேன்ட் என்று குறிப்பிட்டேன். இஸ்லாம், தொப்புள் முதல் மூட்டு வரையிலான பகுதிகள் என்று குறித்ததைத் தவிர வேறொன்றும் கூறவில்லை. ஆனால், இஸ்லாமியா சமூகத்தில் அல்லது நான் குறிப்பிட்ட பகுதிகளில் இருக்கும் முஸ்லிம்களிடையே பேன்ட் அணிவது கிண்டலுக்குரியதாய் இருந்து பிறகு மாறியுள்ளது. அதுபோலவே இஸ்லாமியப் பெண்களிடையேயும், புர்கா குறித்த சிந்தனை மாற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளது.

25 வயதிற்குட்பட்ட, கல்வி கற்ற, திருமணமான இஸ்லாமிய பெண்களில் பலரும் பெரும்பாலான நேரங்களில் புர்கா அணிவதில்லை. ஆனால், திருமணம் போன்ற உறவினர்கள் கூடும் நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது மட்டும் புர்கா அணியும் சில பெண்களும் உள்ளனர். இவையெல்லாம் பெண்களுக்கு புர்கா தொடர்பான சமூகக் கட்டமைப்பின் மீதான வெறுப்பையே வெளிப்படுத்துகின்றன. இங்கே நாம் பேசுவது இன்றைய வாழ்வியல் குறித்து என்னும்போது, பெண்கள் அவர்கள் அளவில் மேற்கொள்ளும் மாற்றங்கள் குறித்துத் திறந்த மனதுடன் பேச வேண்டும் என்று எண்ணுகின்றேன்.

//நாளை அது வேறு பெயரில் மாறலாம்//
அதன் பெயர் சுடிதார். இப்போழுதேத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். இன்னும் பத்தாண்டுகள் கழித்து புர்கா அணியாமல், சுடிதார் அணியும் பெண்கள் குறித்து பேசும்போது ஹிஜாபின் மாறுபட்ட வடிவம் என்று கூற வசதியாக இருக்கும்.

Unknown said...

//புர்க்காவில் இன்னொரு சந்தேகம். காமாந்தகர்களின் கண்களில் படக்கூடாதென புர்க்கா. முகமும் கைகளும் புர்க்காவை விட்டு வெளியே தெரியலாம்.
முகம் பார்த்து காதலோ காமமோ ஏற்படாதா?//

நன்றி தருமி ஐயா.

இறைவனோ அவன் தூதரோ முடிவெடுத்து கட்டளையிட்ட ஒரு விடயத்தில் எம்மைப் பொருத்தவரை அல்லது இஸ்லாமியரைப் பொருத்தவரை கட்டுப்பட்டேன். கீழ்ப்படிந்தேன் அவ்வளவுதான்.

எனினும் உங்கள் கேள்விக்காக:
பெண்களின் முகமும் கைகளும் ஆண்களுக்கு உணர்வு ஏற்படுத்தாத பகுதிகள் என்று சொல்ல முடியாது. எனினும் அவர்கள் யாரென்று அறியப்படுவதற்காகவும் அவர்களுடைய பொதுவான பயன்பாட்டிற்காகவும் அவைகளுக்கு இறைவன் விலக்களித்திருக்கலாம். ஆனால் அதிலும் சில மனிதர்களின் குறுகுறுப்பான பார்வைகளைத் தாங்க முடியாத சில இஸ்லாமிய பெண்கள் முகத்தை மூடிக் கொள்வதையும் முன் கைகளுக்கு உறையிட்டுக் கொள்வதையும் அவ்வப்போது காண முடியும். ஆனால் அவை இஸ்லாத்தில் அவசியமானதல்ல. இறைவன் கருணையானவன் அதனால் அவன் யாரையும் அவர்களுடைய இயல்புக்கும் மீறி அநாவசியமாக துன்பப்படுத்துவதில்லை. அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

அடுத்து: ஒரு பெண்ணை பார்த்து காதல் வயப்படுவது இஸ்லாத்தில் தவறானதல்ல. ஆனால் அடுத்ததாக, காதல் வயப்பட்ட அப்பெண்ணுடைய பெற்றோரிடம் முறையாக பேசி திருமணம் செய்து அவளை சட்டப்படி உமதாக்கிக் கொண்டு அல்லது உம்மை அவளுக்குரியவனாக்கிக் கொள்ள வேண்டும். இதல்லாமல் அதன்பின் செய்ய வேண்டியதை அதற்கு முன்னரே செய்யும் காதல் என தற்காலத்தில் சொல்லப்படும் காமவயப்படுதல்தான் தவறானது.

உமர் | Umar said...

நமது உரையாடல் அல்லாமல், நீங்கள் குறிப்பிட்ட ஒன்று.

//ஒரு சில காலத்துக்கு முன் இஸ்லாம் சரிவர தெரியாதிருந்த போதுதான் பள்ளிவாசல்களில் சில்லறையை கொடுப்பதும், மக்களை நெருக்கியடிக்க வைத்து சில்லறைகளை விநியோகிப்பதும்தான் ஜகாத் (எனும் ஏழைகளுக்கான வரி) என நினைக்கப்பட்டிருந்தது//

TNTJ அல்லது வேறு அமைப்பைச் சார்ந்தவர்களால், சில பகுதிகளில் சதக்கா வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் மக்களை நெருக்கியடிக்க வைத்து, கம்பு கட்டி வரிசையில் வர வைத்து சில்லறைகளை, ஜகாத் என்னும் பெயரில் கொடுக்கும் பெரும் பணக்காரர்களின் கொட்டம் எங்கும் அடங்கவில்லையே! இன்னும் சொல்லப்போனால், அவர்களது செல்வாக்கைப் பயன்படுத்தி பல ஜமாத்களில், சதக்காவிற்கு தடையே ஏற்படுத்தி வருகின்றனரே.

உமர் | Umar said...

@ தருமி அய்யா
//முகம் பார்த்து காதலோ காமமோ ஏற்படாதா?//

இஸ்லாத்தில் பெண்ணுடைய உடலில் கவர்ச்சிகரமான பகுதியாக பெண்ணின் தலைமுடி குறிக்கப்பட்டுள்ளது. எனவே அவற்றை மூடவேண்டும் என்பதால், பல நாடுகளில் புர்கா அணியாவிட்டாலும், தலையில் Scarf அணியும் பழக்கம் உள்ளது. இந்தியாவிலும் கூட கேரளாவின் பல பகுதிகளில், தங்களுடைய சாதாரண உடையோடு தலைக்கு Scarf அணிந்து வரும் இஸ்லாமியப் பெண்கள் உண்டு.

அனைத்து ஆண்களும், பெண்களின் தலைமுடியை பார்த்து மயங்குவதில்லை. ஆனால்,
கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்,
மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம் என்னும் பாடல் கூறும் கண்பார்வைக்கு மயங்கும் ஆண்கள் அநேகம். :-)

//இறைவனோ அவன் தூதரோ முடிவெடுத்து கட்டளையிட்ட ஒரு விடயத்தில் எம்மைப் பொருத்தவரை அல்லது இஸ்லாமியரைப் பொருத்தவரை கட்டுப்பட்டேன். கீழ்ப்படிந்தேன் அவ்வளவுதான்.//

கேள்வி ஏற்புடையதாய் இருந்து, பதில் அளிக்க இயலாவிட்டால், வரக்கூடிய பதிலும் இதுதான்.

Unknown said...

//சமூகத்தில் நடைபெறும் சீர்கேடுகளைக் கண்டும், காணாததுபோல் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறீர்கள். நன்றி!//
புரிவதில் உங்களுக்கு ஏதோ கோளாறு இருக்கிறதென்று நினைக்கின்றேன். ஒரு செயலைச் செய்தவர்களை, அவர் நல்லவரா கெட்டவரா என்பதை விமர்சிப்பதை விடவும், அந்த செயல் நல்லதா கெட்டதா, அதில் விளையும் சாதக பாதகங்கள் என்ன, என்று செயல்கள் விமர்சிக்கப் பட வேண்டும். அவர் முஸ்லீமாக இருந்தாலும் இல்லையென்றாலும் ஒரே நிலைதான். இன்னும் புரியவில்லையென்றால் மேலும் விளக்குவேன்.

//பெண்கள் அவர்கள் அளவில் மேற்கொள்ளும் மாற்றங்கள் குறித்துத் திறந்த மனதுடன் பேச வேண்டும் என்று எண்ணுகின்றேன்//
திறந்த மனத்துடன் மட்டுமில்லாமல், புரியாமல் போய் விடக்கூடாது என்பதற்காக உதாரணங்களுடனும் பேசி இருக்கிறேனே நண்பரே!

//அதன் பெயர் சுடிதார். இப்போழுதேத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.//
பிறகென்ன. இப்போதே சொல்கிறேன். இஸ்லாமிய அடிப்படைகளுக்கு விரோதமில்லாமல், உடம்பின் அவயங்கள், கண பரிமாணங்கள் தெரியாதவாறு, மறைக்க வேண்டிய பகுதிகள் மறைக்கப்பட்டு உடுத்தும் உடை சுடிதார் என்ற பெயரால் அழைக்கப்பட்டால் அதில் எங்களுக்கு எவ்வித வருத்தமுமில்லை.

உமர் | Umar said...

// ஒரு செயலைச் செய்தவர்களை, அவர் நல்லவரா கெட்டவரா என்பதை விமர்சிப்பதை விடவும், அந்த செயல் நல்லதா கெட்டதா, அதில் விளையும் சாதக பாதகங்கள் என்ன, என்று செயல்கள் விமர்சிக்கப் பட வேண்டும். //

நன்று. அமைப்பின் பொறுப்பொன்றில் இருந்தவர், உதவி கேட்டு வந்தவரிடம், அமைப்பின் பெயருக்கும் தனது பெயருக்கும் களங்கம் ஏற்படும் வகையில் நடந்துகொண்ட செயல் விமர்சனத்திற்கு உட்பட்டது என்றும், சமூகத்திற்கு தவறான எடுத்துக்காட்டாக அமைந்துவிடும் என்றும் கூறுகின்றேன். இப்பொழுது , அந்த நபரை விடுத்து, அச்செயலை விமர்சிக்கலாம் அல்லவா? அச்செயல் குறித்த உங்கள் பார்வை என்ன?

உமர் | Umar said...

//திறந்த மனத்துடன் மட்டுமில்லாமல், புரியாமல் போய் விடக்கூடாது என்பதற்காக உதாரணங்களுடனும் பேசி இருக்கிறேனே நண்பரே!//
//தற்போதே இஸ்லாமிய ஆண்களைப்போல் இஸ்லாமிய பெண்களிடமும் உடை மாற்றம் ஏற்பட்டுதானுள்ளது.//

மாற்றங்கள் நடைபெறுகின்றன என்பதை நீங்கள் ஏற்கனவே ஒப்புக்கொண்டுவிட்டீர்கள். இந்த மாற்றம் புதிதாக புர்கா அணியும் பெண்களின் விழுக்காட்டை குறைக்கும் என்று நானும், இல்லை இஸ்லாமிய அறிவுப் புரட்ச்சி அதனை அதிகப்படுத்தும் என்று நீங்களும் கூறுகின்றீர்கள். வாழ்வியல் தொடர்பான விவாதம் இது என்பதால், வாழ்வியலை தொடர்ந்து அவதானித்து வரும்போது விடை கிடைக்கும். :-)

உமர் | Umar said...

//இப்போதே சொல்கிறேன். இஸ்லாமிய அடிப்படைகளுக்கு விரோதமில்லாமல், உடம்பின் அவயங்கள், கண பரிமாணங்கள் தெரியாதவாறு, மறைக்க வேண்டிய பகுதிகள் மறைக்கப்பட்டு உடுத்தும் உடை சுடிதார் என்ற பெயரால் அழைக்கப்பட்டால் அதில் எங்களுக்கு எவ்வித வருத்தமுமில்லை.//

நன்றி!

Unknown said...

//TNTJ அல்லது வேறு அமைப்பைச் சார்ந்தவர்களால், சில பகுதிகளில் சதக்கா வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் மக்களை நெருக்கியடிக்க வைத்து, கம்பு கட்டி வரிசையில் வர வைத்து சில்லறைகளை, ஜகாத் என்னும் பெயரில் கொடுக்கும் பெரும் பணக்காரர்களின் கொட்டம் எங்கும் அடங்கவில்லையே! இன்னும் சொல்லப்போனால், அவர்களது செல்வாக்கைப் பயன்படுத்தி பல ஜமாத்களில், சதக்காவிற்கு தடையே ஏற்படுத்தி வருகின்றனரே.//
ஏதோ குளறுபடியாகத் தெரிகிறது.
சதக்கா என்பது சிறு தர்மங்கள். அவைகள் எங்கு வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் தேவையுடைய யாருக்கு வேண்டுமானாலும் வழங்கப்படலாம். அதை செல்வந்தர்கள் மட்டுமல்ல. எல்லோராலும் செய்ய முடியும். ஒரு பேசீச்சம்பழத்தின் பாதியைக் கொடுத்தாவது தர்மம் செய்யுங்கள் என நபியவர்கள் வலியுறுத்தி உள்ளார்கள்.
ஜகாத் என்பது செல்வந்தர்கள் தமது சொத்துக்களில் இருந்து ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை எடுத்து குர்ஆனில் குறிப்பிடப் பட்டுள்ள ஏழு சாரார்களுக்கு வழங்க வேண்டும். அதைக் கூட்டாகக் கொடுப்பது இஸ்லாமிய வழிமுறை. இது செல்வந்தர்கள் செய்யும் தொண்டு எனக் கணக்கிடப்படாது. அது அந்த ஏழு வகை மாந்தர்களின் உரிமை. அது செல்வந்தர்களுக்கான இஸ்லாமிய அடிப்படைக் கடமை.

மிகச் சுருக்கமாக கொடுத்திருக்கிறேன்.
இப்போது நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள் என அறியத் தாருங்கள்.

//இஸ்லாத்தில் பெண்ணுடைய உடலில் கவர்ச்சிகரமான பகுதியாக பெண்ணின் தலைமுடி குறிக்கப்பட்டுள்ளது. எனவே அவற்றை மூடவேண்டும் என்பதால், பல நாடுகளில் புர்கா அணியாவிட்டாலும், தலையில் Scarf அணியும் பழக்கம் உள்ளது//
தலைமுடியும் கவர்ச்சிகரமானதுதான். ஆனால் அது மட்டுமல்ல. அவ்வாறிருந்தால் தலையில் மட்டும் துணி அணிந்து விட்டு உடம்பின் பிற பகுதிகளை இஸ்லாம் கவனிக்காமல் இருந்திருக்கும். இஸ்லாத்தில் அந்நிலையில்லை. நீங்களாக ஒரு முடிவெடுத்து அதில் மேலும் என்னென்னவோ சொல்கிறீர்கள்.

//கேள்வி ஏற்புடையதாய் இருந்து, பதில் அளிக்க இயலாவிட்டால், வரக்கூடிய பதிலும் இதுதான்.//
இறைவனோ அவன் தூதரோ சொல்லாத ஒன்றை அவர்கள் மீது ஏற்றிச்சொல்லுதல் பெரும் பாவம்.

ஆனால் என் மனதில் தோன்றிய பதிலையும் அளித்திருக்கின்றேனே.

//சமூகத்திற்கு தவறான எடுத்துக்காட்டாக அமைந்துவிடும் என்றும் கூறுகின்றேன்//
அதற்கு மாற்றமாக இஸ்லாம் சொல்வதாக யாரேனும் சொல்கிறார்களா?

//மாற்றங்கள் நடைபெறுகின்றன என்பதை நீங்கள் ஏற்கனவே ஒப்புக்கொண்டுவிட்டீர்கள்//
மாற்றங்கள் பெயரில்தானே ஒழிய இஸ்லாமிய முறைமைகளில் இல்லை என்பதையும் தெளிவு செய்திருக்கின்றேன்

தருமி said...

கும்மி,
//இன்னும் பத்தாண்டுகளில், கல்வி அறிவு பெற்ற, பெரும்பாலான இஸ்லாமியப் பெண்கள் புர்காவினை துறந்து விடுவர்.//

நீங்கள் சொல்வதில் எனக்கு நம்பிக்கையில்லை. சுல்தான் சொல்வது போல் //இஸ்லாமிய அறிவுப் புரட்சி ஏற்பட்டுள்ள இன்றைய தமிழக இஸ்லாமிய சமூகத்தில் புர்காவின் எண்ணிக்கை மிக மிக அதிகரித்துள்ளது. // என்றே எனக்கும் தெரிகிறது.

ஒரு பதிவர் (யாரென்று நினைவில்லை) சொன்னது போல் 26/11-க்குப் பிறகு இந்தியாவில் இஸ்லாமியர்களின் இஸ்லாமியப் பண்புகள் மிகவும் வெளிப்படையாகி உள்ளதாக எனக்குத் தெரிகிறது.

தருமி said...

சுடிதாரின் வந்த மாணவி ஒரு ஆசிரியரானதும் இருசக்கர வண்டியில் வரும்போது புர்க்கா அணிய ஆரம்பித்தார். அதைப் பற்றிப் பேசும்போது விரைந்து செல்லும் வண்டியில் அணிவதை விடவும் ஆண் மாணவர்களும் இருக்கும் வகுப்பறையில்தானே அதன் தேவை அதிகம்; வகுப்பறையில் அணிவதுதானே என்றேன்.

அவர் இப்போது புர்கா அணிவதில்லை. காரணம் தெரியாது.

தருமி said...

//ஒரு பெண்ணை பார்த்து காதல் வயப்படுவது இஸ்லாத்தில் தவறானதல்ல. ஆனால் அடுத்ததாக, காதல் வயப்பட்ட அப்பெண்ணுடைய பெற்றோரிடம் முறையாக பேசி திருமணம் செய்து அவளை சட்டப்படி உமதாக்கிக் கொண்டு அல்லது உம்மை அவளுக்குரியவனாக்கிக் கொள்ள வேண்டும். இதல்லாமல் யும் காதல் என தற்காலத்தில் சொல்லப்படும் காமவயப்படுதல்தான் தவறானது.//

இஸ்லாமைத் தவிர மற்ற மதங்கள் அதன்பின் செய்ய வேண்டியதை அதற்கு முன்னரே செய்வதை ஒப்புக் கொள்கின்றனவோ?

தருமி said...

ஆண்கள் காமாந்தகர்களாக இருப்பதால் புர்க்கா. ஏனெனில் ஆண்களுக்கு பெண்களின் உடலில் அப்படி ஒரு ஈர்ப்பு. ஆகவே கடவுளே புர்க்கா போடச்சொல்லி விட்டார்.-- நீங்கள் சொல்வது.

நான் சொல்வது:
basically தப்பு யாருடையது? இப்படி காமாந்தகர்களாக ஆண்கள் இருப்பதும், ஆண்களை ஈர்க்கும் வடிவோடு பெண்களின் உடலிருப்பதுவும் யாரால்? நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தால் (காமாந்தகர்களாக ஆண்கள் இருப்பது) படைப்பின் தவறாகத்தான் எனக்குத் தெரிகிறது. தெரிகிறது என்ன தெரிகிறது ... ! இது படைப்பின் தவறு; படைத்தவனின் தவறு.

சரியா?

உமர் | Umar said...

//ஏதோ குளறுபடியாகத் தெரிகிறது.
சதக்கா என்பது சிறு தர்மங்கள்.//

இன்று தமிழகத்தின் பல பகுதிகளிலும், சில இளைஞர்கள் ஒன்றிணைந்து, அவர்கள் பகுதியைச் சார்ந்த வியாபாரிகளிடமும் பொதுமக்களிடமும், பணம் வசூல் செய்து, சதக்காத் திட்டத்திற்கு திட்டப்பணம் சேர்க்கின்றனர். பிறகு, அவர்கள் பகுதியைச் சார்ந்த மிகவும் வறிய நிலையில் இருக்கும் சில குடும்பங்களைக் கண்டறிகின்றனர். பிறகு ஒரு குடும்பத்திற்கு தேவையான அளவிற்கு அரிசி, கறி உள்ளிட்ட பொருட்களை திட்டப்பணத்தில் இருந்து வாங்கி, நோன்புப் பெருநாள் அன்று காலையில், அவர்கள் தேர்ந்தெடுத்த அனைத்துக் குடும்பங்களுக்கும் வழங்குகின்றனர். இவ்வாறு அவர்கள் பொருள் வழங்குவது, பெரும்பாலும் அதிகாலையில் பஜ்ர் தொழுகைக்கு முன்பு நடைபெறுகின்றது. இது போன்ற நிகழ்ச்சிகள், தற்பொழுது தமிழகத்தின் பல பகுதிகளிலும் நடைபெற்று வருகின்றன. இதனை சதக்காத் திட்டம் என்ற பெயரில் அழைக்கின்றனர்.

இன்னொருபுறம், அதே பகுதியைச் சார்ந்த பரம்பரை பணக்காரர்கள் அல்லது புது செல்வந்தர்கள், 27 ம் நாள் அன்று அல்லது நோன்புப் பெருநாளைக்கு முந்தைய நாளில், கம்பு கட்டி, ஏழைகளை அதற்குள்ளாக நெருக்கியடித்து வரச்செய்து, 10, 10 ரூபாயாகக் கொடுக்கின்றனர். இதனை, "அவர்கள்" ஜகாத் என்று கூறிகொள்கின்றனர்.

அந்தப் பகுதிகளில், சதக்காத் திட்டத்தை நடத்தும் இளைஞர்களுக்கு நற்பெயர் ஏற்படுவதைப் பார்த்து, கடந்த சில வருடங்களாக, உள்ளூர் ஜமாஅத் மூலம் நெருக்குதல் கொடுத்து, சதக்காத் திட்டத்தை நிறுத்திய, "ஜகாத்" வழங்கும் இஸ்லாமியர்கள் உள்ளனர்.

நண்பரே, உங்களுடைய ஊர் எதுவென்று, நீங்கள் விரும்பினால், கூறுங்கள். உங்கள் பகுதியைச் சார்ந்த மேலும் பல சம்பவங்களையும், நான் அறிந்திரிந்தால், என்னால் கூற முடியும் என்று எண்ணுகின்றேன்.

உமர் | Umar said...

//நீங்களாக ஒரு முடிவெடுத்து அதில் மேலும் என்னென்னவோ சொல்கிறீர்கள். //
சில நிகழ்கால உதாரணங்களையும் (கேரளா) அளித்திருந்தேனே!

//இறைவனோ அவன் தூதரோ சொல்லாத ஒன்றை அவர்கள் மீது ஏற்றிச்சொல்லுதல் பெரும் பாவம். //
அவர்கள் மீது ஏற்றிச் சொல்லுங்கள் என்று கூறவில்லை. உங்களுடைய கருத்து என்ன என்றுதான் கேட்டோம்.

//அதற்கு மாற்றமாக இஸ்லாம் சொல்வதாக யாரேனும் சொல்கிறார்களா?//

அதனுடைய சாதக பாதகங்களைப் பற்றி பேசினால், இனி இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெறாமல் தவிர்க்கமுடியுமே; யாரும் பாதிப்படையாமல் இருக்க முடியுமே! எங்கோ யாருக்கோ நடைபெற்ற சம்பவம் அல்லவே அது . ஒரு முன்னணி அமைப்பின் பொறுப்பில் இருந்த ஒருவர் செய்த தவறான செயலைப் பற்றி பேசவே முன்வராவிட்டால், இது போன்ற செயல்கள் அதிகரிக்க நீங்களும் துணை நின்றதாகதானே இருக்கும்.

Unknown said...

//இந்தியாவில் இஸ்லாமியர்களின் இஸ்லாமியப் பண்புகள் மிகவும் வெளிப்படையாகி உள்ளதாக எனக்குத் தெரிகிறது//
அவர்கள் நினைத்தது போல் நடக்காததால் வந்த வயிற்றெரிச்சல் - சில நேரங்களில் இப்படி பேச வைக்கும்..

//வகுப்பறையில் அணிவதுதானே என்றேன். அவர் இப்போது புர்கா அணிவதில்லை. காரணம் தெரியாது//
நீங்கள் கேட்டது சரியானதுதான். சுரிதாரே சரியான அளவு மறைத்து அணிந்திருந்தால் தேவையில்லை என நினைத்திருப்பாரோ அல்லது வேறென்னவோ

//இஸ்லாமைத் தவிர மற்ற மதங்கள் அதன்பின் செய்ய வேண்டியதை அதற்கு முன்னரே செய்வதை ஒப்புக் கொள்கின்றனவோ?//
இந்த மாதிரி ஒழுங்கீனங்களுக்காக மற்றவர்கள் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்வதை விட இஸ்லாமியர்கள் சிறப்பாக பங்களிக்கின்றனர். அதல்லாது இஸ்லாத்தில் காதலே தவறு என்பது மாதிரியான எண்ணம் பரவலாக இருக்கிறது. இவ்வாறு இல்லை எனச் சொல்வதற்காகத்தான் இந்த விளக்கம்.

Unknown said...

//தெரிகிறது என்ன தெரிகிறது ... ! இது படைப்பின் தவறு; படைத்தவனின் தவறு.//

அல்லாஹ் அவன் விரும்பியதை செய்யக்கூடியவன். அவன் கேள்வி கேட்பவன். கேட்கப்படுபவன் அல்லன். அவனது தவறு என்று சொல்வதாயிருந்தால் (நவூதுபில்லாஹ்- அல்லாஹ்விடம் மன்னிப்பை வேண்டுகிறேன்) நாளை அவனிடமே கேட்டுக் கொள்ளுங்கள்.

நீங்கள் இவ்வாறு சொல்லிக் கொண்டே இருக்கலாம். அதனால் சமூகத்துக்கு நீங்கள் என்ன நல்வழியைக் காட்ட முடியும். ஆடத் தெரியாதவன் ... என்றொரு முதுமொழிதான் நினைவுக்க வருகிறது.

எல்லா நன்மைகளும் தீமைகளும் பிரித்தறிவிக்கப்பட்டு சொல்லித் தரப்பட்டு விட்டது. ஏற்று நடப்பதும் ஏற்காமலிருப்பதும் அவரவர் நன்மை தீமைகளாக பதியப்படும்.

திரும்பவும் நாம் 'அ'வுக்கே வந்து விட்டோமென நினைக்கிறேன்.
"ஸ்ஸ் யப்பா இப்பவே கண்ணைக் கட்டுதே. திரும்பவும் 1ல் இருந்தா!!"
என்று சொல்லத் தோன்றுகிறது.

உமர் | Umar said...

@ தருமி அய்யா
//நீங்கள் சொல்வதில் எனக்கு நம்பிக்கையில்லை. சுல்தான் சொல்வது போல் //இஸ்லாமிய அறிவுப் புரட்சி ஏற்பட்டுள்ள இன்றைய தமிழக இஸ்லாமிய சமூகத்தில் புர்காவின் எண்ணிக்கை மிக மிக அதிகரித்துள்ளது. // என்றே எனக்கும் தெரிகிறது.//

காலம் பதில் சொல்லவேண்டிய கேள்வி இது. என்னுடைய அவதானிப்பையும், சுல்தான் அவர்களின் எண்ணத்தையும்,
அவற்றிற்கான விடையையும் காலத்தோடு பயணித்துத் தெரிந்துகொள்வோம்.

// 26/11-க்குப் பிறகு இந்தியாவில் இஸ்லாமியர்களின் இஸ்லாமியப் பண்புகள் மிகவும் வெளிப்படையாகி உள்ளதாக//

எனக்கு அப்படித் தோன்றவில்லை. கோவை குண்டுவெடிப்பை ஆதரித்த 'சில' இஸ்லாமியர்களும் கூட மும்பை சம்பவத்தைத் தீவிரமாக எதிர்த்தனர். இஸ்லாமியர்கள், தேசம் என்று வரும்பொழுது இந்தியா என்பதிலும், மதம் என்று வரும்போது இஸ்லாம் என்பதிலும் தெளிவாக இருக்கின்றனர். அத்வானி மீதும் மோடி மீதும் அவர்களுக்கு இருக்கும் வெறுப்பிற்கும் தேசத்தின் மீது இருக்கும் பற்றுக்கும் தொடர்பு கிடையாது. மும்பை சம்பவம் நடைபெற்ற சமயத்தில் கூட பெரும்பான்மை இந்துக்கள், இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகவே இருந்தனர்.

90களில் தொடங்கிய தவ்ஹீது எண்ணங்கள், இன்று பரவலாக பெரும்பாலான இஸ்லாமியர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இப்பொழுது இணையம் மற்றும் வெளி இடங்களில் உரையாடும் பெரும்பாலான இஸ்லாமியர்கள், தவ்ஹீது எண்ணம் கொண்டோராகவே உள்ளனர். மற்ற இஸ்லாமியர்களை விட, தவ்ஹீது எண்ணம் கொண்டோர் வெளிப்படையாக இஸ்லாம் குறித்து உரையாடுவர். ஒருவேளை , இந்த பிம்பம் அத்தகையத் தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளதோ என்னவோ?

உமர் | Umar said...

@ தருமி அய்யா
//இது படைப்பின் தவறு; படைத்தவனின் தவறு.//

நிச்சயமாக ஒத்துக்கொள்ளமாட்டார்கள்.
அவர்களைப் பொறுத்தவரை பொது அறிவு வேறு; இஸ்லாமிய அறிவு வேறு.

உமர் | Umar said...

//எல்லா நன்மைகளும் தீமைகளும் பிரித்தறிவிக்கப்பட்டு சொல்லித் தரப்பட்டு விட்டது. ஏற்று நடப்பதும் ஏற்காமலிருப்பதும் அவரவர் நன்மை தீமைகளாக பதியப்படும்.
//

எனக்கு சிறு வயதில் ஏற்பட்ட ஒரு சந்தேகம். தோள்களில் உட்கார்ந்து நன்மைகளையும் தீமைகளையும் பதிந்துகொண்டிருக்கும் மலக்குகள்; நான் சட்டை அணியும் பொது என்ன செய்வார்கள்? அவர்கள் மேல் சட்டை அணிந்து விடுவேனா? அல்லது அவர்கள் எம்பி குதித்து சட்டைக்கு மேல் அமர்ந்து கொள்வார்களா? (இன்று வரையிலும் எனக்கு அந்த சந்தேகம் இருக்கிறது. )

உமர் | Umar said...

//அதனால் சமூகத்துக்கு நீங்கள் என்ன நல்வழியைக் காட்ட முடியும்.//

நமக்கு தவறு என்று தெரிய வருபவற்றை திருத்திக்கொள்வதுதானே மனித இயல்பு! நம்முடைய பொது அறிவுக்கு தவறு என்று தெரிந்தாலும், இஸ்லாமிய அறிவிற்கு தவறு என்று தெரியாவிட்டால், அதனை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று கூறுவது என்னவென்று நீங்கள்தான் கூறவேண்டும்.

Unknown said...

//இதனை சதக்காத் திட்டம் என்ற பெயரில் அழைக்கின்றனர்//
நன்றாக கவனித்திருக்கின்றீர்கள். ஆனால் தூரத்தில் இருந்து பார்ப்பதால் அந்த திட்டத்திற்கான பெயர் சரி வரத் தெரியவில்லை. இது சாதாரணமாக எற்படுவதுதான்.

நீங்கள் குறிப்பிடுவது ஸதக்கா அல்லது ஜகாத் என்பதில் வராது. அதனை 'பித்ரா தர்மம்' என்பார்கள்.

ரமாதான் மாத விரத நாட்களில் ஏற்பட்ட சிறுசிறு பாவங்களுக்கு பரிகாரமாக தமது தேவைக்குப் போக எஞ்சியிருந்தால் அவற்றில் இருந்து ஒவ்வொரு குடும்பத்தினரும் தம் குடும்பத்தினர் ஒவ்வொருவருக்காகவும் ஒரு குறிப்பிட்ட அளவு (இரு கைக்கொள்ளளவு போல நான்கு பங்கு - அதை ஒரு ஸாஉ என்பர். அதை ஒவ்வொருவரும் அளந்தால் சரிவராது என்பதற்காக, அதற்கு ஈடான ஒரு தொகையை ஜமாஅத்திலிருந்து நிர்ணயித்து விடுவர்) உணவுப் பொருளை தர்மமாக வழங்க வெண்டியது கட்டாயமாகும். அது அந்தந்த வட்டார ஏழைகளுக்கிடையே வழங்கப்படும். எல்லா முஸ்லீம்களும் மகிழ்ச்சியோடு இருக்கின்ற அந்நாளில் சிலர் மட்டும் உணவின்றி வாடக்கூடாது என்பதற்காக அவர்கள் கேட்காமல் இருந்தாலும் அவர்களைக் கண்டறிந்து அந்த தர்மத்தை பகிர்ந்தளிப்பது கட்டாயமாகும். இதை நீங்கள் சொல்வது போல் JAQH, TMMK, TNTJ போன்ற இயக்கத்தின் இளைஞர்கள் கூட்டாக வசூலித்து வழங்கி வருகின்றனர்.

அதைப் பிடிக்காத சிலர் தம் பழைய தவறான பாதையிலேயே கதவடைத்து செய்து வருவதும் அவர்களின் செல்வாக்கை பயன்படுத்தி அந்த இளைஞர்களின் செயலைத் தடுப்பதும் நடந்து வருவது உண்மைதான். இப்போது ஒரு சில இடங்களைத் தவிர பல இடங்களில் அவர்கள் உண்மையை ஏற்று ஒதுங்கி விட்டார்கள்.

//நண்பரே, உங்களுடைய ஊர் எதுவென்று, நீங்கள் விரும்பினால், கூறுங்கள்.//
நான் பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு எனும் பேரூரைச் சேர்ந்தவன்.

Unknown said...

//சில நிகழ்கால உதாரணங்களையும் (கேரளா) அளித்திருந்தேனே!//
அது தவறு என்பதைத்தான் இஸ்லாம் தலையை மட்டும் பார்க்கவில்லை; உடல் முழுமைக்குமாக சொல்கிறது என சொல்லி இருந்தேன்.

//உங்களுடைய கருத்து என்ன என்றுதான் கேட்டோம்.//
என் மனதில் தோன்றிய பதிலையும் அளித்திருக்கின்றேனே.

//ஒரு முன்னணி அமைப்பின் பொறுப்பில் இருந்த ஒருவர் செய்த தவறான செயலைப் பற்றி பேசவே முன்வராவிட்டால், இது போன்ற செயல்கள் அதிகரிக்க நீங்களும் துணை நின்றதாகதானே இருக்கும்.//
சரிதான். அது போன்ற ஒரு நிகழ்வு நடந்திருந்தால் அது தவறான முன்னூதாரணம் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. அது பற்றி நிறைய விவாதங்கள் பல தளங்களில் நடந்துள்ளது.

உமர் | Umar said...

//ஆனால் தூரத்தில் இருந்து பார்ப்பதால் அந்த திட்டத்திற்கான பெயர் சரி வரத் தெரியவில்லை. இது சாதாரணமாக எற்படுவதுதான்.//

பல ஆண்டுகளுக்கு முன் எங்கள் ஊரில் இத்திட்டம் தொடங்கியபோது, நானும் நிர்வாகக்குழுவில் இருந்தேன். நான் இறைமறுப்பாளன் என்ற போதும், மற்ற அமைப்பைச் சார்ந்தவர்களுக்கு என்னுடைய பங்களிப்பு உறுத்தலாக இருக்கவில்லை. அந்த வருடம் அதனை சதக்கா என்றே அழைத்தோம்; இப்பொழுதும் அப்படியே அழைக்கிறோம். ஏன் பித்ரா என அழைக்கவில்லை என அறிந்து சொல்கின்றேன்.

//நான் பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு எனும் பேரூரைச் சேர்ந்தவன். //

நான் அறிந்த சிலர் அங்கு வசிக்கின்றனர். நானும் ஓரிரு முறை அங்கு சென்றிருக்கிறேன்.

Unknown said...

//தோள்களில் உட்கார்ந்து நன்மைகளையும் தீமைகளையும் பதிந்துகொண்டிருக்கும் மலக்குகள்//
தோள்களில் என்றிருக்கும். சிறுவயது என்பதால் தோள்களில் அமர்ந்து என கற்பனை செய்திருக்கின்றீர்கள் என நினைக்கிறேன். :))
இறைவனுடைய படைப்பகளில் எத்தனையோ உண்மைகள் நம் அறிவுக்குப் புலப்படாமலே இருக்கின்றன. இறைவனுடைய வல்லமையை பற்றி ஓரளவு உணர்ந்தால் கூட அவன் நினைத்ததை நடத்துபவன் என்பதையும் உணர இயலும்.

உமர் | Umar said...

//அது பற்றி நிறைய விவாதங்கள் பல தளங்களில் நடந்துள்ளது. //

அதனால் இங்கு பேச வேண்டாம் என்று கூறுகின்றீர். நன்றி.

//சிறுவயது என்பதால் தோள்களில் அமர்ந்து என கற்பனை செய்திருக்கின்றீர்கள் //

தொப்பி அணியாமல் ஓதினால், சைத்தான் தனது புட்டத்தால் தேய்ப்பான் என்றும் கூறப்பட்டது.

//இறைவனுடைய படைப்பகளில் எத்தனையோ உண்மைகள் நம் அறிவுக்குப் புலப்படாமலே இருக்கின்றன//

இன்றுவரையிலும் இந்த வாக்கியத்தை கேக்கும்போதெல்லாம் எனக்கு சிரிப்புதான் வருகிறது.

Unknown said...

//தொப்பி அணியாமல் ஓதினால், சைத்தான் தனது புட்டத்தால் தேய்ப்பான் என்றும் கூறப்பட்டது//
இதெல்லாம் இஸ்லாம் சரி வர விளங்காமலிருந்த அந்த காலத்தில் வெறுமனே சொல்லி வைக்கப் பட்டவைகள். ஆதாரங்கள் கேட்டால் பல்லிளித்து விடும்.

//இன்றுவரையிலும் இந்த வாக்கியத்தை கேக்கும்போதெல்லாம் எனக்கு சிரிப்புதான் வருகிறது//
இதையே சிறிது மாற்றிக் கூறினால் உங்கள் சிரிப்பு மறைந்து சிந்தனை துவங்கி விடும்.

"இயற்கை மறைத்து வைத்துள்ள எத்தனையோ பேரதியசங்கள் இன்னும் வெளிச்சத்தைப் பார்க்கமலேயே இருக்கின்றன. இந்த அண்டத்தையும் பேரண்டத்தையும் பற்றி எத்தனையோ பகுதிகளை இன்னும் அறிவியல் தொடவே இல்லை."

இது பார்வைக் கோளாறு. உண்மைகளை ஏற்க மறுக்கும் திரைகள்.

நாளை 'நாம் பாவியாகி விட்டோமே' என நீங்கள் துடிக்கக் கூடாது என்ற ஆர்வம், ஆதங்கம் எனக்கு. அதை இயன்றவரை சொல்லிய திருப்தி எனக்கு.
இன்னும் அறிவியலை நாங்கள் ஏற்க மறுக்கிறோம் என்கிற தவறான கண்ணோட்டம் உங்களுக்கு. வேறெதுவுமில்லை.

உமர் | Umar said...

//ஆதாரங்கள் கேட்டால் பல்லிளித்து விடும்.//

மலக்குகளுக்கும் அது பொருந்தும்.

//இதையே சிறிது மாற்றிக் கூறினால் உங்கள் சிரிப்பு மறைந்து சிந்தனை துவங்கி விடும்.//

சிந்தித்ததால்தான் சிரிப்பு வருகிறது.

//"இயற்கை மறைத்து வைத்துள்ள எத்தனையோ பேரதியசங்கள் இன்னும் வெளிச்சத்தைப் பார்க்கமலேயே இருக்கின்றன. இந்த அண்டத்தையும் பேரண்டத்தையும் பற்றி எத்தனையோ பகுதிகளை இன்னும் அறிவியல் தொடவே இல்லை//

அதைதான் நாமும் கூறுகிறோம். அறிவியல் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்பதற்காக, நமக்குத் தெரியாத விஷயத்தை கற்பனை கதாபாத்திரங்களால் ஆனது என்று கூறிவிடக் கூடாது.

//இது பார்வைக் கோளாறு. உண்மைகளை ஏற்க மறுக்கும் திரைகள்.//
இதைதான் இஸ்லாமியர்களிடம் மிகுதியாக இருக்கிறது என்று கூறுகின்றோம். குடல் வால் எனப்படும் appendix இருப்பதால் எவ்வித பயனும் கிடையாது; அது ஒரு தேவையற்ற உறுப்பு என்று அறிவியல் கூறினால், உடனே இறைவனின் படைப்புகளில் வீணானது எதுவும் கிடையாது என்று கூறுவதுதான் பார்வை கோளாறு. இஸ்லாம் என்னும் திரை, அறிவியலை முழுமையாக பார்க்கவிடாமல் உங்கள் கண்களைத் தடுக்கின்றது.

//நாளை 'நாம் பாவியாகி விட்டோமே' என நீங்கள் துடிக்கக் கூடாது //

நிச்சயமாக எனக்கு அப்படி ஒரு எண்ணம் வந்ததில்லை; வரப்போவதுமில்லை.

//இன்னும் அறிவியலை நாங்கள் ஏற்க மறுக்கிறோம் என்கிற தவறான கண்ணோட்டம் உங்களுக்கு//
அடுத்த மாதம், அறிவியல் என்னும் பெயரில் அபத்தங்கள் என நான் ஒரு தொடர் ஆரம்பிக்கின்றேன். அங்கு வாருங்கள்; உரையாடுவோம். குர் ஆனில் இருக்கும் அபத்தங்களைச் சுட்டிக்காட்டுகின்றேன்.

(குறிப்பு: நான் குர் ஆனை ஆங்கில மொழிபெயர்ப்பிலும் , தமிழ் மொழிபெயர்ப்பிலும் வாசித்தவன். மற்ற இஸ்லாமியர்களைப் போல், மீண்டும் வந்து குரானை வாசியுங்கள் என்று கூறாதீர்கள்)

Unknown said...

//மலக்குகளுக்கும் அது பொருந்தும்.//
நான் சொன்ன ஆதாரம் குர்ஆனிலிருந்தும் ஹதீஸிலிருந்தும். ஆகவே அது மலக்குகளுக்கு பொருந்தாது. வலது தோளிலும் இடது தோளிலும் நமது நன்மை தீமைகளை எழுதும் எழுத்தர் உண்டு என்பதற்கு ஹதீஸில் ஆதாரமுண்டு.

நீங்கள் கேட்டது நேரில் பார்க்கும் ஆதாரம் என்றால். ... ... நேரில் பார்ப்பதுதான் உண்மை என்பது பகுத்தறிவாகாது.

//அறிவியல் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்பதற்காக, நமக்குத் தெரியாத விஷயத்தை கற்பனை கதாபாத்திரங்களால் ஆனது என்று கூறிவிடக் கூடாது.//
அறிவியல் கண்டு பிடிக்காததால் சிலருக்கு என்னவென்றே தெரியா விடயம், நம்பிக்கையாளர்களுக்கு எதுவென்று உறுதியான நம்பிக்கையில் தெரிந்திருக்கிறது.

//அறிவியலை முழுமையாக பார்க்கவிடாமல் உங்கள் கண்களைத் தடுக்கின்றது.//
அறிவியல் இன்று ஒன்றை சொல்லும் நாளை அது மாறிடக்கூடும். இஸலாம் அவ்வாறானதல்ல.
மனிதன் தோன்றி இத்தனை மில்லியன் ஆண்டுகளாகியும் மனிதனுக்கு தேவையற்ற குடல்வால் ஏன்? இங்கே பரிணாமம் தோற்கிறதா?

//நிச்சயமாக எனக்கு அப்படி ஒரு எண்ணம் வந்ததில்லை//
நான் சொன்ன நாளை - இறை முன்னிலையில்.
நம்பிக்கையாளருக்கே அந்த எண்ணம் வர முடியும்.

//உரையாடுவோம். குர் ஆனில் இருக்கும் அபத்தங்களைச் சுட்டிக்காட்டுகின்றேன்.//
இன்ஷா அல்லாஹ் உரையாடுவோம். எது அபத்தம் எனத் தெளிய முயற்சிப்போம். இங்கு போன்று ஒன்றுக்கொன்றாய் உரையாடுவோம். விவாதிப்போம். கூடிக் கும்மியடித்து குழப்பாமல் நேர்மையான விவாதமாக்க உறுதியளியுங்கள்.

//குர் ஆனை ஆங்கில மொழிபெயர்ப்பிலும், தமிழ் மொழிபெயர்ப்பிலும் வாசித்தவன்//
மிக நன்று. நீங்கள் படித்தது இஸ்லாமிய எதிரிகளின் வலைத்தளத்திலிருந்தல்ல என நம்பலாமா?

உமர் | Umar said...

//இங்கு போன்று ஒன்றுக்கொன்றாய் உரையாடுவோம். விவாதிப்போம். கூடிக் கும்மியடித்து குழப்பாமல் நேர்மையான விவாதமாக்க உறுதியளியுங்கள்.//

நிச்சயமாய் உறுதியளிக்கிறேன். ஒவ்வொரு பதிவிலும் ஒரு வசனத்தை மட்டுமே எடுத்துக் கொள்ள உள்ளேன். அதனால் உரையாடல் வேறு பக்கம் செல்லாமல் இருக்க வாய்ப்புண்டு.

//மிக நன்று. நீங்கள் படித்தது இஸ்லாமிய எதிரிகளின் வலைத்தளத்திலிருந்தல்ல என நம்பலாமா?//
Yusuf Ali மற்றும் Pickthall ஆகியோர்களின் ஆங்கில மொழி பெயர்ப்புகள், பிஜே அவர்களின் தமிழ் மொழிபெயர்ப்புகள் இஸ்லாமிய எதிரிகளின் வலைதளத்தில் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. மேலும் பிஜே அவர்களின் தமிழ் மொழிபெயர்ப்பு முதன் முதலில் 2003-ல் அச்சில் வெளிவந்தபோது நேரடியாகச் சென்று வாங்கினேன்.

உமர் | Umar said...

//நேரில் பார்ப்பதுதான் உண்மை என்பது பகுத்தறிவாகாது.
//
அதற்கென்று உள்ள குணம் மற்றும் தன்மைகள் (Attributes and Properties) குறித்துதான் கேட்கின்றோம்.

புவி ஈர்ப்பு சக்தி கண்ணால் பார்க்க முடியாது; மனித உணர்வுகளால் உணர முடியாது; அறிவியலின் துணை கொண்டு அளவிட முடியும். அதுபோல் மலக்குகளை எப்படி அளவிடுவது அல்லது எப்படி உணர்வது?

//அறிவியல் கண்டு பிடிக்காததால் சிலருக்கு என்னவென்றே தெரியா விடயம், நம்பிக்கையாளர்களுக்கு எதுவென்று உறுதியான நம்பிக்கையில் தெரிந்திருக்கிறது.//

:-)

//மனிதன் தோன்றி இத்தனை மில்லியன் ஆண்டுகளாகியும் மனிதனுக்கு தேவையற்ற குடல்வால் ஏன்? இங்கே பரிணாமம் தோற்கிறதா?
//
தர்க்கமா? உரையாடலா? தனி பதிவில் உரையாட தயாராய் உள்ளேன்.

தருமி said...

//மனிதன் தோன்றி இத்தனை மில்லியன் ஆண்டுகளாகியும் மனிதனுக்கு தேவையற்ற குடல்வால் ஏன்? இங்கே பரிணாமம் தோற்கிறதா? //

ஓ! மனிதன் தோன்றி பல மில்லியன் ஆண்டுகள் என்பதை ஒத்துக் கொள்வது போல் தெரிகிறதே!

குடல் வால் மட்டுமல்ல இன்னும் பல உறுப்புகள் நம் உடலில் பரிணாமக் கொள்கையை நிலை நிறுத்த உள்ளன. ஆனால் அவைகள் படைப்பு வாதத்தை மறுக்கின்றன. பரிணாமத்தைப் பற்றி எழுத நினைக்கிறேன்.

நீங்கள் எப்படி அல்லா இப்படி "தவறுதலான" உறுப்புகளைப் படைத்திருக்கிறார் என உங்கள் தரப்புக் காரணங்களைக் கூறுங்களேன்.

Unknown said...

நன்றி தருமி ஐயா.
//மனிதன் தோன்றி பல மில்லியன் ஆண்டுகள் என்பதை ஒத்துக் கொள்வது போல் தெரிகிறதே!//
மனிதன் இறைவனைப்போல் என்றும் நிலைத்திருப்பவன் அல்லவே. அவன் இறைவனால் படைக்கப்பட்டு ஒரு கால அளவு இருக்காதா?

//பரிணாமத்தைப் பற்றி எழுத நினைக்கிறேன்.//
நீங்கள எழுதி முடித்ததும் 'தோற்கும் பரிணாமக் கொள்கை'யைப் பற்றி இன்ஷா அல்லாஹ் நானும் எழுத முயல்கிறேன்.

//அல்லா இப்படி 'தவறுதலான' உறுப்புகளைப் படைத்திருக்கிறார்//
அல்லாஹ் தவறுகளுக்கெல்லாம் அப்பாற்ப்பட்டவன். மனித அறிவுகள் அவனை அடையாது. அவனைப் பற்றி அவன் சொல்லித் தந்தவைகளை மட்டுமே நாம் அறிய முடியும்.

உங்கள் (கும்மி) வாதப்படியே குடல்வால் தவறு, பரிணாம வாதம் சரி என்றால் - பரிணாமம் தோற்கிறதே என்பதையே குறிப்பிட்டேன்.

Unknown said...

//மலக்குகளை எப்படி அளவிடுவது அல்லது எப்படி உணர்வது?//
குர்ஆனை அறிவதும் புரிவதும் கொண்டு. அதனால்தான் குர்ஆன் ஒரு வாழும் அற்புதம். நீங்கள் தொட்டு, பார்த்து, உணர்ந்து, அறிவியலால் அளந்து அறிகின்றீர்கள். இவையேதுமில்லாமல் உலகில் நான்கின் ஒரு பகுதி மக்களால் நீங்கள் உணராதவற்றையும் அறிய முடிகிறது.

//தர்க்கமா? உரையாடலா?//
நீங்கள் சொன்னதற்காக உடனே தோன்றிய தர்க்கம். இன்னும் நான் பரிணாம கொள்கையை பற்றி கூடுதல் படிக்க வேண்டி இருக்கிறது.

உமர் | Umar said...

//இவையேதுமில்லாமல் உலகில் நான்கின் ஒரு பகுதி மக்களால் நீங்கள் உணராதவற்றையும் அறிய முடிகிறது.//

சொன்னதை அப்படியே கேட்டுக்கொண்டவர்கள்தானே, அந்த நான்கில் ஒரு பகுதியினர்!அதன் பிறகு ஆராய்ந்திருந்தால், இது போன்று பேசமாட்டார்கள். ஹதீஸில் இருக்கிறது; அதனால் மலக்குகள் இருக்கிறன்றன என்பது ஏற்புடையது அல்லவே.

அவர் கூறினார்; அதனால் ஏற்றுக்கொள்கிறோம் என்பது மதவாதிகளின் பதில்.
அவர் இப்படி ஆராய்ந்து, இப்படி செய்தால் அறிய முடியும் என்று கூறினார்; அவர் கூறியதை எப்பொழுது வேண்டுமானாலும் சோதித்து அறிந்துகொள்ள முடியும்; அவரும் சோதித்துக் காட்டியுள்ளார் என்பது அறிவியலை ஏற்பவர்கள் கூறும் பதில்.
இரண்டில் எது Logical?

உலகின் நான்கில் ஒரு பகுதியினரில் யாரேனும் ஒருவர்
சொல்லட்டுமே, இந்த குணங்கள் உடையவை மலக்குகள் என்று; யாராலும் கூற முடியாது.

// நீங்கள் தொட்டு, பார்த்து, உணர்ந்து, அறிவியலால் அளந்து அறிகின்றீர்கள்.//
அதுதான் ஏற்புடைத்து.

உமர் | Umar said...

//நீங்கள எழுதி முடித்ததும் 'தோற்கும் பரிணாமக் கொள்கை'யைப் பற்றி இன்ஷா அல்லாஹ் நானும் எழுத முயல்கிறேன்.//
// இன்னும் நான் பரிணாம கொள்கையை பற்றி கூடுதல் படிக்க வேண்டி இருக்கிறது.
//

நிறைய படியுங்கள்; சிறு வயதில் கற்பிக்கப்பட்ட கற்பிதங்களின் உண்மை தெரிய வரும்.

Unknown said...

//நிறைய படியுங்கள்//
ஒரளவு படித்துள்ள போதே, அக்கொள்கை உருவான வரலாறிலிருந்தே அதிலுள்ள அறிவீனம் புரிகிறது. இன்ஷா அல்லாஹ் இன்னும் படிக்கிறேன்

Unknown said...

//அவர் கூறியதை எப்பொழுது வேண்டுமானாலும் சோதித்து அறிந்துகொள்ள முடியும்; அவரும் சோதித்துக் காட்டியுள்ளார்//
பரிணாமக் கொள்கைக்கும் இது பொருந்துமா?

//அதுதான் ஏற்புடைத்து.//
இந்த பிரமாண்ட படைப்புக்குள்ளே மனித அறிவின் எல்லைகள் மிக மிக மிகக் குறுகியது என்பதை அறிய முயலுங்கள் தோழரே.

தருமி said...

//அவன் இறைவனால் படைக்கப்பட்டு ஒரு கால அளவு இருக்காதா?//

அப்போது மனித ஆரம்பம் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?

தருமி said...

//குடல்வால் தவறு, பரிணாம வாதம் சரி என்றால் - பரிணாமம் தோற்கிறதே என்பதையே குறிப்பிட்டேன். //

குடல் வால் மட்டுமல்லாது வேறு சில தேவையில்லா உறுப்புகளும் பரிணாமத்தை காரண காரியங்களோடு நிரூபிக்கின்றன.

மீண்டும்: எப்படி அல்லா இப்படி "தவறுதலான" உறுப்புகளைப் படைத்திருக்கிறார் என உங்கள் தரப்புக் காரணங்களைக் கூறுங்களேன்.

தருமி said...

//உலகில் நான்கின் ஒரு பகுதி மக்களால் நீங்கள் உணராதவற்றையும் அறிய முடிகிறது.//


மீது 75% இருக்கிறதே! அவைகள் சொல்வதை எப்போதாவது காது கொடுத்து கேட்டதுண்டா?

தருமி said...

//இந்த மாதிரி ஒழுங்கீனங்களுக்காக மற்றவர்கள் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்வதை விட இஸ்லாமியர்கள் சிறப்பாக பங்களிக்கின்றனர்.//

சிரிப்பதைத் தவிர வேறென்ன சொல்ல ...!

உமர் | Umar said...

//பரிணாமக் கொள்கைக்கும் இது பொருந்துமா?
//

அறிவியலில் முதலில் ஒரு postulate அல்லது theory முன்வைக்கப்படும். பிறகு அதனை ஆராயும் முயற்சிகள் முன்னெடுக்கப்படும். ஆராய்ச்சிகள் அந்த theory- யின் தன்மையைப் பொறுத்து ஒரு கட்டமாகவோ பல கட்டங்களாகவோ நடைபெறும். ஒவ்வொரு முடிவும், அதன் பின்னர் அறிவிக்கப்படும். அந்த வரிசையில் பரிணாமக் கொள்கையின் பல குறிப்புகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. கவனிக்கவும் "Natural Selection" என்னும் process பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

புதிதாக ஒரு பழங்கால படிமம் கிடைத்தால், ஆராய்ச்சியாளர்கள் ஆராயத் தொடங்குவர். அதன் முடிவுகள் வெளிவரும் முன்னரே, Harun Yahya, P.Jainul Abdeen போன்ற மதவியாபாரிகள், இவர்கள் ஏதோ அறிவியலாளர்கள் போன்றும், ஆராய்ச்சியாளர்கள் எல்லாம் ஒன்றும் தெரியாதவர்கள் போன்றும் அந்தப் படிமம் பரிணாமக் கொள்கைக்கு கிடைத்த சவுக்கடி என்று பிதற்றத் தொடங்கிவிடுவார்கள். சமீபத்திய உதாரணம்: Ardi.

அறிவியலாளர்கள் "Natural selection"- ஐ நிரூபிக்க மேற்கொண்ட வழிகளை நீங்களும் மேற்கொண்டால் , உங்களாலும் நிரூபிக்க முடியும். அதை விடுத்து 'வாய் வைத்து வயிறு வளர்க்கும்' சிலர் சொல்வதைக் கேட்டால், அறிவியலை அறிய முடியாது.

உமர் | Umar said...

//இந்த பிரமாண்ட படைப்புக்குள்ளே மனித அறிவின் எல்லைகள் மிக மிக மிகக் குறுகியது என்பதை அறிய முயலுங்கள் தோழரே. //

மனித அறிவின் எல்லைகள் குறுகியது என்பதற்காக, எதையும் ஆராயாமல் சிறுவயதில் கூறப்பட்ட கதைகளை அப்படியே ஏற்றுக்கொள்வது எந்த வகையில் ஏற்புடையது?

தருமி said...

சில பின்னூட்டங்கள் இட்டிருந்தேன். ஒன்றும் வரவில்லையே.....