வால்பையனுக்கு கடுமை அகற்றப்பட்ட பதில்

(அன்பின் வால்பையன்,
உண்மையில் எம் முந்தைய நீக்கப்பட்ட இடுகையில் எழுத்துக்களை கடுமையாக்கி உம்மை வருத்தத்தில் ஆக்கியிருந்தால் அதற்காக உளமாற நான் வருந்துகிறேன். ஏன் அவ்வாறு எழுத நேர்ந்தது என்பது நம்மிருவருடன் மற்றவர்களும் அறிந்ததே. தேவையேற்படின் அதற்காக தங்களிடம் மன்னிப்பு கோரவும் தயங்க மாட்டேன்.

எழுத்துக்களில் எமக்கும் தடித்தனமாய் எழுத இயலும். எனினும் அவை எம் கொள்கைக்கு எதிரானது. நாம் அழகான முறையில் எம் கருத்துக்களை எடுத்துச் சொல்லவும் விவாதிக்கவுமே எப்போதும் விரும்புகிறோம். எனவே கடுமையான வார்த்தை பிரயோகங்கள் நீக்கப்பட்டு வெளியிடப்படுகிறது.)

ஒரு வாரத்துக்கு முன் பதிவர் நண்பர் சென்ஷி அவர்கள் வால் பையன் மற்றும் ராஜனுக்கு என்ற தலைப்பிலும் நண்பர் ஜிகே (கோவி. கண்ணண்) அவர்கள் வால்பையன் மற்றும் இராஜனுக்கு வேண்டுகோள்! என்ற தலைப்பிலும் வெளியிட்டிருந்த இடுகைகளை படிக்க நேர்ந்தது. அதன்பின் வால்பையன் அவர்களின் 'குர்ரானில் குஜிலி கும்பா" என்றஇடுகையும் படிக்க கிடைத்தது (அமீரகத்தில் அவர் பதிவு தடை செயயப்பட்டுள்ளதாம்). சென்ஷியுடைய, ஜிகேயுடைய பதிவுகளில் வால்பையன் கொடுத்திருந்த பின்னூட்டங்கள் அவரின் வாதங்கள் பதிலளிக்கப்பட இயலாத வாதங்கள் என்ற நிலையிலும் பின்னூட்டங்கள் இட்டிருந்தார். அதற்காகவே இந்த இடுகை.

முதலில்
அன்பின் வால்பையன்.
ஒரே கேள்வியை அழகாகவும் கேட்க முடியும். அருவருப்பான முறையிலும் கேட்க முடியும். கனியிருப்பக் காய் கவராமல் எந்த விவாதத்தையும் அழகான முறையில் கொண்டு செல்வதுதான் நல்ல பண்பாடாக அமைய முடியும். எனவே உங்கள் இடுகையிலுள்ள அருவருப்பை அகற்றுங்கள். அதற்காக வருத்தம் தெரிவிப்பது நல்ல பண்பாடாக இருக்கும்.

சிலருக்கு கலைஞர் கருணாநிதி அவர்களிடம் சில கோபங்கள் இருக்கலாம். விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் அவரை விமர்சிக்கும்போது கண்டிப்பாக சில பண்புகளை ஒழுக்கங்களை கடை பிடித்தாக வேண்டியது அவசியம். ஏனெனில், உங்களுக்கு பிடிக்கா விட்டாலும் தமிழகத்தின் கணிசமான மக்களால் தலைவர் என போற்றப்படும் தலைவர்களில் ஒருவர் அவர். அதற்காக அவரது தொண்டர்களாலேயே ஆட்டோ அனுப்பி கவுரவிக்கப்பட்டால், திமுக அனுதாபிகள் எல்லாம் தீவிரவாதிகள் எனப் பொருள் கொள்ளப்பட மாட்டாது. இது ஒரு உதாரணம்தான்.

அவற்றையெல்லாம் விட பல படிகள் மேலாய் முஹம்மது நபி (அன்னாரின் மீது சாந்தி தவழுவதாகுக) அவர்கள், இவ்வுலகத்தின் குறைந்தது ஐந்திலொரு பகுதி மக்களால் தம் உயிரினும் மேலாய் மதித்து போற்றப்படும் பெரும் தலைவர், வழிகாட்டி. அவரது ஒவ்வொரு சொல்லும், செயலும், அங்கீகாரமும் எங்களுக்கு எங்கள் பெற்றோரை விடவும், மற்றெல்லா மனிதர்களை விடவும், பல்லாயிரம் மடங்கு உயர்ந்தது. அவரை விமர்சியுங்கள். ஆனால் அவற்றில் அவரது கண்ணியத்திற்கு களங்கம் தரும், தரம் தாழ்ந்த வார்த்தை பிரயோகங்கள் தவிர்க்கப் பட்டிருக்க வேண்டியது அவசியம். அதுவே நற்பண்பு. அத்தகு விமர்சனங்களுக்கு தகுதியுள்ளோர் தேவையேற்படின் பதிலளிப்பர். யாரும் யாரையும் நிர்ப்பந்திக்க முடியாது. ஏனெனில் 'பதிலில் உள்ள நியாயங்களை ஏற்றுக் கொள்ளும் அறிவு நாணயம், கேள்வி கேட்பவர்களிடத்தில் மிகப் பெரும்பாலும் இல்லை' எனும் வாதத்தை என் அனுபவம் ஏற்றுக் கொள்கிறது.

தரமற்ற வார்த்தைகளை கொண்டிருந்ததால் இவ்விமர்சனங்களுக்கு பதில் சொல்லி நேர விரயம் செய்ய விருப்பமில்லாமல் இருந்தது. என்றாலும் உதாரணத்துக்காக சில பதில்கள் மட்டும்
//... ... ... தனது காம இச்சைக்காக, அவர் பல திருமணங்களை செய்யவில்லை என்று கூறுவர் பார்க்க.
மனைவி துணைவி ஸ்டைல் ... ... ...! அம்பது வயசுக்கு மேல இந்தாள ஐஸவர்யா ராயா கட்டும். பல்லு போன கெழவிக தான் கட்டும்! //
1400 வருடத்துக்கு முந்திய அராபிய கலாச்சாரம் பற்றி ஏதாவது தெரியுமா? அப்போதைய பெண்களின் நிலையைப் பற்றி ஏதாவது படித்திருக்கின்றீர்களா? உங்கள் பாட்டியோட காலத்தில் அவர்களின் நிலைமை எவ்வாறிருந்தது என அவர்களிடம் கேட்டுத் தெளிந்து, பின்னர், 1400 வருடத்துக்கு முந்தைய நாட்களில் பெண்களின் வாழ்வு எவ்வாறிருந்து இருக்கும் என எண்ணிப் பாருங்கள்.

நபி அவர்களது 25வது வயதில் அவரது முதல் திருமணம். 40வது வயதில்தான் அண்ணல் அவர்களுக்கு முதன்முதலாக இறைச்செய்தி வந்தது. அதன் பிறகான அவரது கடுமையான போராட்ட வாழ்வுக்குப்பின் குறைந்தது ஐந்தாறு ஆண்டுகளுக்குப்பின் மக்காவின் மக்கள் அவருடைய செய்திகளுக்கு செவி சாய்த்து கூடுதலாக இணையத் துவங்கினர். அப்போது அவரிடம் பேசப்பட்ட பேரத்தில் ஒன்று. அதை நீங்கள் விட்டு விட்டால் அதற்குப் பிரதியாக அரபுலகத்திலேயே அழகான பெண்களை (பெண்ணையல்ல - பெண்களை) உமக்கு மணமுடித்துத் தருகிறோம் என்பதாகும். யோசியுங்கள். அந்த காலத்து ஐஸ்வர்யா ராய்களை அவர்களே கட்டிக் கொடுக்க தயாராய்த்தான் இருந்தார்கள்.

அவர் மற்ற பெண்களை மணமுடித்த போது, உம்மையும் எம்மையும் போல் பக்கத்து தெருவில் வசிப்பவரே 'பையன் யாரு?' என்று கேட்கக் கூடிய நிலையில் இல்லை. அந்தக் காலத்திய (ரிஸஸனுக்கு முந்தைய) அமெரிக்காவாக இருந்த ரோம சாம்ராஜ்யமே அவரது பேரைக் கேட்டு கதி கலங்கியது. முடி சூட்டிக் கொள்ளா விட்டாலும் மாமன்னர்.

அடுத்து அவரது திருமணங்கள் காம இச்சைக்காக என நிறுவ //ஆயிஷா கூறினார். அல்லாஹ்வின் தூதர் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தபோது நாளை ... ... ... அவர்களின் உமிழ்நீர் என் உமிழ் நீருடன் கலந்திருந்த நிலையில் அல்லாஹ் அவர்களை கைப்பற்றிக் கொண்டான்// என்ற ஹதீஸைக் குறிப்பிட்டு விட்டு
//அடச்ச! சிவ பூஜைல கரடி பூந்தா மாதிரி அருமையான நேரத்துல அல்லா பூந்து குட்டைய கொழப்பிட்டாருப்பா!// அதற்கடுத்து மேலும் பல அசிங்க வாதங்களை வைத்துள்ளீர்கள்.

நபியவர்களின் மரணத்தருவாயில் நடந்த நிகழ்ச்சியைப் பற்றிக் கூறும் போது, அது அவரைத் தமது உயிரினும் மேலாய் மதிப்பவர்களை எளிதில் உணர்ச்சி வசப்பட வைக்கும் என்பதை அறிந்து, அதற்கான விளக்கங்களை மேலும் அறிய முயற்சித்திருக்க வேண்டும். எங்கேயோ எழுதி வைத்தவைகளை படியெடுத்து, அதில் மேலும் பல அசிங்க வார்த்தைகளை சேர்த்து வைப்பது அறிவுடைமை ஆகாது.

நபியவர்கள் நோன்பு காலங்களிலும் மற்ற நாட்களிலும் மிஸ்வாக் எனும் பல் துலக்கும் குச்சியால் தம் பற்களை சுத்தம் செய்பவதை அதிகம் விரும்புபவராய் இருந்தார்கள். அது உங்களுக்கு கஷ்டத்தை தராது என்று இருந்திருந்தால் ஒவ்வொரு தொழுகைக்கு முன்னும் மிஸ்வாக் குச்சியினால் பல் துலக்குவதை கட்டாயமாக்கி இருப்பேன் என்று சொல்லுமளவுக்கு இருந்தார்கள்.

அன்னார் இறப்பெய்தும் அந்த தருணத்தில் மிகவும் நோய்வாய்ப்பட்டு, அடிக்கடி மயக்கம் வருவதும் தெளிவதுமாய் இருந்து, நடக்க முடியாமல் இருவரின் தோள்களில் தொங்கிக் கொண்டு, கால்கள் தரையில் இழுபட வீட்டை ஒட்டிய பள்ளிக்கு சென்றிருக்கிறர்கள். அத்தகு நிலையில் பள்ளியை ஒட்டிய ஆயிஷா அம்மையார் அவர்கள் வீட்டில் தங்கியிருந்த நிலையில், அவர் வீட்டுக்கு வந்திருந்த ஆயிஷா அம்மையாரின் சகோதரர் கையில் வைத்திருந்த மிஸ்வாக் குச்சியை பார்க்கிறார்கள். அது வேண்டுமா என அம்மையார் கேட்க ஆம் என்பது போல பார்க்கின்றார்கள். அப்போது அம்மையார் அவர்கள் தம் சகோதரர் கையில் வைத்திருந்த மிஸ்வாக்கை வாங்கி அதன் உபயோகப்படுத்தாத மறு முனையைக் கடித்து, நன்றாக மென்று மென்மையாக்கி நபி அவர்களின் வாயில் வைக்கின்றார்கள். இதுதான் 'அன்னாரின் உமிழ்நீர் என் உமிழ்நீருடன் கலந்திருந்த நிலை' என்று அம்மையார் சொல்கிறார்கள். உங்கள் வாத்திலுள்ள தவறை அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறென்.

அதற்கடுத்து இதற்கு துணையாக அபூதாவுதிலுள்ள ஒரு ஹதீஸை குறிப்பிட்டிருக்கின்றீர்கள்.
அதில் 'எனது நாவினை சுவைப்பார்' என்ற வார்த்தை கூடுதலாக வந்துள்ளதால் அது தவறான ஹதீஸ் என்பதை விளக்கவும் விளங்கவும் பெரிய முயற்சி எதுவும் தேவையில்லை. அபூதாவுது ஹதீஸ் புத்தகத்திலுள்ள தவறான ஹதீஸ்கள் நீக்கப்பட்டு சுனன் அபூதாவுது எனும் புத்தகம் வந்து பல ஆண்டுகள் ஆகி விட்டது.

கடைசியில்
நேரான கேள்விகளுக்கு தெளிவான பதில்கள் இஸ்லாத்தில் எப்போதும் உண்டு. தங்களின் முன் முடிவுகளைத் துறந்து விட்டு, திறந்த மனதுடன், உண்மைகளை அறியும் நன்நோக்குடன் மட்டும் அணுகுவோரால் அதன் உண்மைகளை அறிந்திட இயலும்.

45 comments:

வால்பையன் said...

ஆகா கேட்ட முறை தான் தப்பு, கேட்டது சரி, மேலும் அது உண்மையும் கூட இல்லையா!

ரொம்ப தேங்க்ஸ்!

சென்ஷி said...

பகிர்விற்கு நன்றி சுல்தான்ஜி..

kanavu oonjal said...

அவிங்களும் தான் ஏதாவது லுப் கெடக்குமா – அதை சொறிஞ்சுவிட்டு சுகம் அனுபவிக்கலாம்னு பார்க்கறாங்க. என்ன பண்றது இஸ்லாம் பக்கா ஸ்ட்ராங்கா இருக்கு.. வயிறு நெஞ்சு எல்லாம் எரியுது... சொறிஞ்சுவிட்டதால அரிச்ச எடம் எல்லாம் எரியுது.

கோவி.கண்ணன் said...

//முதலில்
வால்பையனிடம் 'உங்கள் அப்பா பெயர் என்ன?' என்று ஒருவர் கேட்பதாகவும், மற்றொருவர் 'உங்காத்தா யாரோடு படுத்து உன்னை பெத்ததாக சொன்னா?' எனக் கேட்பதாகவும் கொள்வோம். இரண்டுமே ஒரே பதிலுக்கான கேள்விகள்தான். ஆனால் அவை இரண்டையும் வால்பையன் ஒரே மாதிரியாக எடுத்துக் கொள்ள மாட்டார்.//

தன்னை நோக்கி நேரிடையாக சுட்டாவிட்டாலும் தாம் சார்ந்த
நம்பிக்கைகள் உயிரிலும் மேலானாது, அதைக் கேள்வி எழுப்புபவர்கள் தெரிந்தவர்கள், பழகியவர்கள், நண்பர்கள், உறவினர்கள் என்றாலும் கூட, அவர்களை வைத்தே உதாரணம் சுட்டி விளக்கலாம் என்பதாக புரிந்து கொள்கிறேன்.

கபிலன் said...

தெளிவான விளக்கம் !

தனிநபர் தாக்குதலைத் தவிர்த்து, விளக்கங்களை மட்டும் கொடுத்திருந்தால், மேலும் நன்றாக அமைந்திருக்கும் !

Anonymous said...

please dont reply or respond to these perverted guys.just ignore them.

Ahamed irshad said...

இத்தகைய தரமற்ற விமர்சனங்களுக்கு பதில் சொல்லி நேர விரயம் செய்ய விருப்பமில்லை///

நானும் இது மாதிரி எதிர்வினை ஆற்ற இருந்தேன்... தரமற்ற வார்த்தையும், கேவலமான எண்ணத்தை சொல்ல வந்தாலும் கண்ணியமான மார்க்கம் தடுக்கிறது.. பொறுமையாக இருந்தால் அந்தப் பதிவில் அவர்கள் சொன்னது உண்மையென அவர்கள் எண்ணிக்கொண்டிருப்பார்கள்...அந்தளவுக்குத்தான் அவர்களுக்கு 'ஏழர'றிவு உள்ளது என்ன செய்ய... சேற்றில் கல்லெறிந்தா என்னாகுமோ அது மாதிரி எண்ண வேண்டியதுதான்...

சிநேகிதன் அக்பர் said...

உங்களது விளக்கங்கள் மனதுக்கு ஏற்புடையதாக இருந்தது. இறைவன் உங்களுக்கு அதற்குரிய நற்கூலியை தருவானாக.

//இரண்டுமே ஒரே பதிலுக்கான கேள்விகள்தான். ஆனால் அவை இரண்டையும் வால்பையன் ஒரே மாதிரியாக எடுத்துக் கொள்ள மாட்டார்.//

இந்த வரிகளுக்கு முந்தைய வரிகள் வேண்டாமே. அதே விசயத்தை அதைவிட அழகிய வரிகளில் புரிய வைக்கலாம். அவர்கள் செய்த தவறை நீங்களும் செய்யவேண்டாமென நினைக்கிறேன்.( இது எனது கருத்து மட்டுமே)

சேலம்ஆனந்த் said...

எது பிடிக்கலையோ அதையெல்லாம் நீக்கிட்டு புது ஹத்தீஸ் உருவாக்கிக்கலாமா?

சேலம்ஆனந்த் said...

ஒருவேளை நபி அவர்கள் இப்போது இருந்தால் பலதாரமணத்தை எதிர்ப்பாரா இல்லை ஆதரிப்பாரா?

Anonymous said...

பொதுவாக பதிவுலகில் ஆன்மீக பதிவுகளுக்கு நேரிடையான விமர்சனம் கூறாமல் கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள். பதிவுலகில் தங்களின் பெயர் கவனிக்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். அவர்கள் எல்லா பதிவுகளிலும் அவ்வாறே செய்வார்கள். அவர்களின் கருத்க்க்களை நீக்குங்கள், அவர்களை புறக்கணியுங்கள்.

யார் என்ன சொன்னாலும் நபி அவர்கள் மிகவும் உயர்ந்த இறைத் தூதர் என்பதை யாரும் மறுக்க முடியாது.
நன்றி
உதயகுமார்
sievamayam@gmail.com

வால்பையன் said...

//எது பிடிக்கலையோ அதையெல்லாம் நீக்கிட்டு புது ஹத்தீஸ் உருவாக்கிக்கலாமா? //


அப்படியானால் இவர்கள் பழைய ஹதீஸ் பொய் எங்கிறார்களா!?

ஹதீஸ் என்பது முகமது நண்பர்கள், முகமது வாழ்வில் நடந்தவைகளை தொகுத்தது தானே!, குரானும், முகமது சொல்லி அவரது நண்பர்கள் தொகுத்தது தானே!

ஹதீஸ் பொய் என்றால் குரான்!?

Anonymous said...

இஸ்லாம் இந்த வாலறுந்த பையன்களைப் போல எத்தனையோ பையன்களை கடந்து தான் இன்றும் பலரை ஈர்க்கும் மார்க்கமாக திகழ்ந்து வருகிறது. "கடவுள் என்று ஒன்றே இல்லை" என்று திட்டவட்டமாக, தீர்க்கமாக இருந்தவர்கள் குர்‍ஆன் எனும் அற்புதத்தை நடுநிலையோடு ஆராயும் போது அதனுள் மூழ்கிப்போய், முஸ்லிமாகி இன்னும் அதனை மற்றோர்களுக்கு எத்தி வைத்து வருகிறார்கள்.

தான் கவனிக்கப்படவேண்டும் என்பது இந்த வாலறுந்த பய்யன்களிடம் இருக்கும் ஒரே எண்ணம் அதனால் தான் கண்ணியமற்ற வார்த்தை பிரயோகங்களினால் பிறரை ஈர்க்க முற்படுகிறார்கள். இது கொஞ்ச காலம் தான்.. மாறும்.

Unknown said...

//மேலும் அது உண்மையும் கூட இல்லையா! ரொம்ப தேங்க்ஸ்!//
ஆஹா. நன்றி. உங்களோட புரிஞ்சுக்கிற சக்தியை நினைச்சா புல்லரிக்குதுண்ணா.

நன்றி சென்ஷி

வருகைக்கும் கருத்துரைக்கும் kanavu oonjal

//அவர்களை வைத்தே உதாரணம் சுட்டி விளக்கலாம் என்பதாக புரிந்து கொள்கிறேன்//
வருகைக்கு நன்றி ஜிகே.
வார்த்தைகளில் உள்ள தடித்தனங்கள் எத்தனை வலிகளைத் தரும் எனப் புரிய வைக்க வேற வழி தெரியலீங்களே. வருந்துகிறேன் ஜிகே.

//தெளிவான விளக்கம் !//
மிக்க நன்றி கபிலன்.
//தனிநபர் தாக்குதலைத் தவிர்த்து, விளக்கங்களை மட்டும் கொடுத்திருந்தால், மேலும் நன்றாக அமைந்திருக்கும் !//
இந்த மாதிரி எழுதுவதில் எனக்கு உடன்பாடே இல்லை. எனினும் சில குழந்தைகளின் நோய் குணமாக, பிள்ளைக்குப் பிடிக்காது எனத் தெரிந்தே கசப்பு மருந்தைத் திணிக்க வேண்டி இருக்கிறது. ஜிகேவுக்கான பதிலையும் பார்க்கவும்.

வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி அஹ்மது இர்ஷாத்

வருகைக்கும் கருத்துரைக்கும் துஆவுக்கும் நன்றி அக்பர்
மேலே ஜிகே, கபிலன் அகியோருக்கான பதிலையும் பார்க்கவும்.

நிகழ்காலத்தில்... said...

கருத்து வரும்போது அவசியமானால் அதற்கு மறுப்பு தெரிவிப்பது சரியான செயலே..

இணைய வெளியில் என்ன செளகரியம் என்றால் எதிரே யாரும் இல்லாததால் யாரை வேண்டுமானாலும், எதைப்பற்றி வேண்டுமானாலும் வெளுத்து வாங்கலாம் :))

எந்த மதமானாலும் அதில் உள்ள நல்லவைகளை பாராட்டுவது அனைவருக்கும் பலனாகும்.:))

tsekar said...

உங்கள் கருத்தை சொல்ல உங்களுக்கு உரிமை உண்டு .ஆனால் நீங்களும் -மிகவும் மனதை புண்படும்படி எழுதி உள்ளீர்கள்!!!

மதம் என்பது என்ன ?

மிருகமான மனிதனை -நல்வழி படுத்துவது

உண்மையான முஸ்லிம் யார் ?

புனித குரான் சொல்வதை -முழு மனதோடு செய்பவர்கள்

குரான் வரன்தட்சனை வாங்குவதை -பாவம் என்கிறது

-எத்தனை முஸ்லிம்கல் வரன்தட்சனை வாங்காமல் -திருமணம் செய்கிறார்கள்?

உண்மையான கிறிஸ்துவன் யார் ?

புனித பைபிள் சொல்வதை -முழு மனதோடு செய்பவர்கள்
உண்மையான இந்து யார் ?
புனித -பகவத்கீதை சொல்வதை -முழு மனதோடு செய்பவர்கள்

அப்படி எத்தனை பேர் உண்மையாக இருகிறோம் ?

வெகு சிலர் தான் !!!

//முதலில்
வால்பையனிடம் 'உங்கள் அப்பா பெயர் என்ன?' என்று ஒருவர் கேட்பதாகவும், மற்றொருவர் 'உங்காத்தா யாரோடு படுத்து உன்னை பெத்ததாக சொன்னா?' எனக் கேட்பதாகவும் கொள்வோம். இரண்டுமே ஒரே பதிலுக்கான கேள்விகள்தான். ஆனால் அவை இரண்டையும் வால்பையன் ஒரே மாதிரியாக எடுத்துக் கொள்ள மாட்டார்.//
உங்கள் உதாரணம் மனதை புண்படுதும்

கோவி.கண்ணன் said...

என்னுடைய பின்னூட்டம் இன்னும் வரல, நான் எதுவும் தரக்குறைவாக எழுதவில்லைன்னு நினைக்கிறேன்.

:)

கோவி.கண்ணன் said...

// rouse said...

உங்கள் கருத்தை சொல்ல உங்களுக்கு உரிமை உண்டு .ஆனால் நீங்களும் -மிகவும் மனதை புண்படும்படி எழுதி உள்ளீர்கள்!!!//

கசப்பு மருந்துன்னு விளக்கம் சொன்னார், நீங்க ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் ஷாக் ட்ரீட்மெண்ட் என்று மறுவிளக்கம் சொல்லுவார். இல்லாவிடில் விஷ முறிவுக்கு விஷம் னு சொல்லுவார்
:)

Unknown said...

//என்னுடைய பின்னூட்டம் இன்னும் வரல, நான் எதுவும் தரக்குறைவாக எழுதவில்லைன்னு நினைக்கிறேன்.:)//
ஆமால்ல. உங்கள் பின்னூட்டத்தை முதல் தடவை பப்ளிஷ் பண்ணினேன். அப்புறமும் இருந்தது. இரண்டாவது தடவையாகவும் பப்ளிஷ் செய்தேன். ஏன் வரவில்லை எனத் தெரியவில்லையே ஜிகே. சிரிப்பான் எல்லாம் இருந்ததே.

Prathap Kumar S. said...

சுல்தான்ஜி எவ்வளவு எடுத்துரைத்தாலும் உறங்குற மாதிரி நடிக்கும் அறிவிலிகளை எழுப்ப முடியாது.
கருணாநிதியை வைத்து நீங்கள் சொன்ன உதாரணம் பொருத்தமாக இருந்தது.

Unknown said...

//எது பிடிக்கலையோ அதையெல்லாம் நீக்கிட்டு புது ஹத்தீஸ் உருவாக்கிக்கலாமா?//
முடியாது. எனினும்
குர்ஆனைப்போல ஹதீஸ்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட்டதல்ல. அவற்றில் மனித ஊடுருவல் நிகழ்ந்துள்ளது. எனவே அவற்றில் நம்பகத்தன்மை இல்லாததும் கலந்து விட்டிருக்கிறது. அதை தனிமைப்படுத்தி சரியானதை மட்டுமே பின்பற்ற வேண்டும். ஒரு ஹதீஸ் தரம் குறைந்தது என்று போகிற போக்கில் சொல்லி விட முடியாது. அதற்கு தகுந்த காரணங்கள் இருக்க வேண்டும்.

ஹதீஸ் கலையை வெறும் பின்னூட்டங்களினால் விளக்கி விட முடியாது. தமிழிலும் ஆங்கிலத்திலும் நிறைய குறிப்புகள் இணையத்தில் உள்ளன. தேடிப் பெறுங்கள்.

//ஒருவேளை நபி அவர்கள் இப்போது இருந்தால் பலதாரமணத்தை எதிர்ப்பாரா இல்லை ஆதரிப்பாரா?//
இஸ்லாத்தில் பலதார மணம் தனித்தலைப்பில் விவாதிக்க வேண்டிய பெரும் விடயம். இது குறித்தும் இணையம்நிறைய செய்திகள் குவிந்து கிடக்கிறது.

இந்தியாவின் ஆண் பெண் விகிச்சாரப்படி பெண்கள் குறைவு. என்ன காரணம் என்று சொல்லத் தேவையில்லை. மொத்த உலகில் 2006 கணக்கின்படி பெண்கள் 2சதவிகிதம் அதிகமாம். அந்த அதிகப்படியானவர்களுக்கு என்ன தீர்வு என்று நீங்கள்தான் சொல்லுங்களேன். நீங்கள் சொல்லக்கூடிய அந்த நல்ல முடிவு உங்கள் தங்கை தமக்கைக்கும் பொருந்த வேண்டும்.மொத்தத்தில் 2சதவிகிதம் குறைவாகத் தோன்றும் ஆனால் எண்ணிக்கையில் மிகப்பெரிய எண்ணாக வரும்.
நன்றி சேலம் ஆனந்த்.

Unknown said...

வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி உதயகுமார், நிகழ்காலத்தில், நாஞ்சில் பிரதாப்

//அப்படி எத்தனை பேர் உண்மையாக இருகிறோம் ? வெகு சிலர் தான் !!!//
நன்றி ரவுஸ். அப்படிப் பார்த்தால் எந்த புத்தகத்தையும் எந்த நன்னெறியையும் யாரும் முழுதுமாக பின்பற்ற வில்லையென்று பெரியார், அண்ணா, புத்தன், ஏங்கல்ஸ் போன்றவர்களின் கருத்துக்கள் உட்பட அனைத்தையும் தூக்கியெறிய நேரிடும்.

நன்மையான விடயங்களை சொல்லி வைப்பது கடமை. கேட்பவர்கள் கேட்கட்டுமே.

கோவி கண்ணண் அவர்கள் என் பதிலை எழுதியுள்ளார். அதையும் பாருங்கள் நன்றி ஜிகே.

Jazeela said...

உங்கள் பதிவை படித்த பிறகே ‘வால்பையன்’ என்றவர்கள் இப்படி கேடுகெட்ட பதிவுகள் எழுதியிருப்பதை அறிந்தேன். கெட்டதை பார்க்காதே, பேசாதே, கேட்காதே என்பதை கடைபிடிப்பதால் அவர் பதிவை படிக்க பிடிக்கவில்லை. துஷ்டனை கண்டால் தூர விலகி கொள்வோம்.

Anonymous said...

அந்த சர்ச்சைக்குறிய ஆள் இன் ஆள் அழகு(?)ராஜா கடையின் பதிவை ஜூலையில் காணவில்லை. அதைத்தூக்கி கடைசியில் கடைதிறப்புக்கு முன்னால் ...அதாவது 2008-இல் தூக்கிக்கொண்டு போய் ஒளித்து வைத்துள்ளனர்... மொத்தமாய் அழித்து விட்டிருந்தால் மகிழ்ந்திருக்கலாம். எனினும் அவர்களின் ஆபாச பின்னூட்டங்கள் அனைத்தையும் அழித்து விட்டார்கள்--இது அவர்களின் கடை(திறப்பு அன்று கூறிய) கொள்கைக்கு-வாக்குறுதிக்கு எதிரானது என்றாலும் கூட...!? இந்த அளவில் எதோ கொஞ்சம் மனம் திருந்தியது போன்று தோன்றுகிறது...

...எண்ண இருந்தாலும்....

அவர்களும் மனிதர்களதானே...

பார்க்கலாம்...

Unknown said...

வருகைக்கும் கருத்துரைகளுக்கம் நன்றி ஜெஸீலா, அனானி.

//அவர்களை வைத்தே உதாரணம் சுட்டி விளக்கலாம் என்பதாக புரிந்து கொள்கிறேன்//
//தனிநபர் தாக்குதலைத் தவிர்த்து, விளக்கங்களை மட்டும் கொடுத்திருந்தால், மேலும் நன்றாக அமைந்திருக்கும் !//
//இந்த வரிகளுக்கு முந்தைய வரிகள் வேண்டாமே.//
//ஆனால் நீங்களும் -மிகவும் மனதை புண்படும்படி எழுதி உள்ளீர்கள்!!! ... ... ...
உங்கள் உதாரணம் மனதை புண்படுதும்//
//கெட்டதை பார்க்காதே, பேசாதே, கேட்காதே என்பதை கடைபிடிப்பதால் அவர் பதிவை படிக்க பிடிக்கவில்லை.//
நன்றி ஜிகே, கபிலன், அக்பர், ரவுஸ், ஜெஸீலா
தங்கள் எண்ணப்படியே கடுமை நீக்கப்பட்டு விட்டது.

Unknown said...

நல்லா சொல்லீருக்கீங்க சுல்தான் பாய்... :) என்னத்து கடுமையை அகற்ற வேண்டும்????


கடுமைக்கு கடுமைதான் பதிலாக இருக்க முடியும்.

நட்புடன் ஜமால் said...

நல்ல பக்குவம் ஜி. நிறைய கற்று கொள்கிறேன்

தனிமனித தாக்குதல் தவிர்த்து (எடுத்துட்டிங்க - நன்றி)

abdullah said...

I know your blog is on Islam. Keep up the Good work.

அப்துல் பாஸித் said...

இணையத்தில் பிரபலமாவது எப்படி?

தனி மனிதரையோ, அல்லது மதத்தையோ கடுமையாக தாக்கி, எவ்வளவு இழிவான வார்த்தைகளை பயன்படுத்த முடியுமோ அவ்வளவையும் பயன்படுத்தி நாலைந்து பதிவுகளை போடுங்கள் (பதிவில் உண்மைகள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை).

அப்புறம் என்ன? அதிகமான பின்னூட்டங்கள் வரும், பிறகு நீங்கதான் இணையத்தில் டாப்பு...

உபயம்: வால்பையன்

Unknown said...

குர்ஆன் என்பது அல்லாஹ் தன் தூதவரான ஜிப்ரீல் என்ற வானவர் மூலம் நபிக்கு அருளியது. அது நபியுடைய காலத்திலேயே மனித மனங்களில் தொகுக்கப்பட்டு விட்டது. அது இறைவனால் பாதுகாக்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது. அது தற்போதைய புத்தக வடிவிலில்லாமல் எலும்புகளிலும் மரப்பட்டைகளிலும் எழுதி வைக்கவும் பட்டிருந்தது. யாருடைய மனங்களில் தொகுக்கப்பட்டிருந்ததோ அவர்களில் சிலர் குழுவாக ஒரே நேரத்தில் கொல்லப்பட்ட போது அதை சரியானபடி தொகுத்து பாதுகாக்க வேண்டிய கட்டாயம் நபிக்கு பின் வந்த உத்தம கலீபாக்களால் உணரப்பட்டு தற்போதைய புத்தக வடிவிலானது.

கீழள்ளவை நம்பிக்கையாளர்களுக்கே போரடிக்கலாம். நீங்கள் கேட்டதால்தான் ஓரளவுக்கு சுருக்கமாய் விளக்குகிறேன்.

ஹதீஸ்கள் எனப்படும் நபியவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியவை செவிவழியாக ஒருவர் பின் ஒருவராக செய்தியாகத்தான் அறிவிக்கப்பட்டு வந்தது. நபியவர்களின் காலத்திற்கு பிந்தைய நூறாண்டுகளுக்குப் பின்னரே அவை தொகுக்கப்பட்டது. அதற்குள்ளாகவே அவற்றில் சிலரது விருப்பு வெறுப்புகளுக்கேற்ப கைச்சரக்குகள் நுழைவிக்கப்பட்டு விட்டது. யூதர்களும் தங்களின் பங்களிப்பை கணிசமாக செய்திருந்தனர். அது யாரிடமிருந்து யாருக்கு சொல்லப்பட்டு பின்னர் யாருக்கு என அந்த வரிசையில் வந்த அனைவருமே நம்பகமானவராக இருக்கும் பட்சத்தில் அது ஏற்றுக் கொள்ளப்பட்டதாகும். ஆரம்பத்தில் தொகுக்கப்பட்டவைகளில் நம்பகமற்ற செய்திகளும் கலந்தே இருந்தன. பின்னர் வந்த இமாம்கள் அவற்றை தரம் பிரித்து வைத்தனர். எது மாதிரியான தரமற்றவைகள் எல்லாம் இருந்தன என்பதையும் பின்னால் வருபவர்களுக்கு பாடமாக இருக்க தரமற்றவைகள் என்ற தலைப்பில் தனி நூலாக தொகுத்தும் வைத்துள்ளனர்.

எந்தெந்த வகையில் பலவீனமானவை என ஹதீஸ்கள் ஒதுக்கப்டுகின்றன?
1. ஒரு ஹதீஸை நபித்தோழர்கள் நேரடியாக அறிவிக்காமல் அதற்கு அடுத்தத் தலைமுறையினர் நேரடியாக அறிவித்தால், அவர்கள் நபி (ஸல்) அவர்களைப் பார்த்துப் பழகும் வாய்ப்பில்லை என்பதால் அத்தகைய ஹதீஸ்கள் பலவீனமாகி விடும்.
2. அறிவிப்பாளர்களுக்கு மத்தியில் தொடர்பின்மை இருந்தால் அவைகளும் பலவீனமாகும்.
3. நபித்தோழர் ஒரு ஹதீஸை அறிவித்து அதன்பிறகு வரும் அறிவிப்பாளர்களிடையே தொடர் விடுபட்டிருந்தால் அதுவும் தொடர் அறுந்த பலவீனமான ஹதீஸாகும்.
4. எனக்கு இவர் இந்த ஹதீஸை அறிவித்தார் என்று ஒரு அறிவிப்பாளர் கூறும் போது அவர்கள் இருவரும் சமகாலத்தில் வாழ்ந்தவராகவும் இருவரும் நேரடியாக சந்திக்கும் வாய்ப்பை பெற்றவராகவும் இருக்க வேண்டும். அதில் ஏதாவது குறை இருந்தால் அதுவும் பலவீனமாகும்.
5. நபித்தோழர்களைத் தவிர்த்து இதர அறிவிப்பாளர்களில் எவராவது பொய்யர் என்று பரவலாக இனங்காட்டப்பட்டால் அதுவும் பலவீனமாகும்.
6. மார்க்கத்திற்கு முரணான காரியங்களைச் செய்யக் கூடியவர்கள் அவர்களது செயல்களை நியாயப்படுத்தி ஹதீஸ்கள் அறிவித்தால் அதுவும் பலவீனமாகும்.
7. ஒரு அறிவிப்பாளர் இளமையில் நல்ல ஞாபக சக்தியுடன் இருந்து பிற்காலத்தில் ஞாபக சக்தியில் தடுமாற்றம் ஏற்பட்டால், தடுமாற்றம் ஏற்பட்ட பின்பு அறிவித்தவை பலவீனமாகும். அவருக்கு எப்போது தடுமாற்றம் ஏற்பட்டது என்ற தகவல் தெரியாவிட்டால் அவர் அறிவித்த முழு செய்திகளும் பலவீனமாகும்.
8. ஒரு செய்தியை அறிவிக்கும் போது ஒருமுறை ஒருவர் பெயரையும் அடுத்த முறை அறிவிக்கும் போது பெயரை மாற்றியும் அறிவித்தால் தடுமாற்றத்தின் காரணத்தால் அதுவும் பலவீனமாகும்.
9. மொழி, இனம், பாரம்பரியம், மார்க்கத்தில் பிரிவினை இவைகளை அனுமதித்து அல்லது புகழ்ந்து அறிவிக்கப்படும் அறிவிப்புகள் மொத்தமாக குர்ஆனுக்கு முரண்படுவதால் அவைகளும் பலவீனமாகும்.
10. ஹதீஸ் கலை வல்லுனர்கள் அனைவர்களிடமும் அறிமுகமில்லாத, தகவல் கிடைக்காத ஆட்கள் மூலம் ஒரு செய்தி வந்தால் அதுவும் பலவீனமாகும்.
11. தந்தை வழியாக மகன் அறிவிக்கும் செய்தியில் மகனுடைய சிறு வயதிலேயே தந்தை இறந்திருந்தால், தந்தையிடமிருந்து செவியுறும் வாய்ப்பை இழந்திருந்தால் அதுவும் பலவீனம்.
12. ஒரு தந்தைக்கு பல மகன்கள் இருந்து மகன்களுடைய பெயர் குறிப்பிடாமல் இன்னாரின் மகன் அறிவித்தார் என்று கூறினால் அதுவும் பலவீனமாகும்.
13. இறைவன் கருணையாளன் என்பதால் எத்தகைய பொய்யும் பேசலாம், தவறில்லை என்ற கொள்கை வாதிகள் அறிவிக்கும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமாகும்.
இப்படி ஏராளமான வழிகளில் ஹதீஸ்கள் தரம் பிரிக்கப்படுகின்றன.
சந்தேகமானவற்றை பின்பற்ற வேண்டாம் (அல் குர்ஆன் 17:36). என்ற இறை கட்டளைக்கிணங்க, சந்தேகம் ஏற்படும் எல்லா செய்திகளையும் ஹதீஸ் கலை மேதைகள் ஒதுக்கி தள்ளிவிட்டார்கள்.

குர்ஆனுடன் எந்த வகையிலும் ஒத்துப் போகாத - முரண்பட்டே நிற்கும் ஹதீஸ்கள் ஏதாவது இருந்தால் அப்போது நாம் குர்ஆனுக்கு முக்கியத்துவம் கொடுத்து விட வேண்டும். ஹதீஸ்கள் முக்கியம் என்று குர்ஆனை அலட்சியப்படுத்தி விடக் கூடாது (நன்றி: http://tamilislam-qa.blogspot.com & ஜி.என்.)

Unknown said...

Blogger சொதப்புகின்றது. வால்பையன் கருத்துரை வரவில்லை. அதற்கான பதில்தான் மேலே.

Unknown said...

வால்பையன் கருத்துரை நடுவில் புகுந்ததெப்படியோ தெரியவில்லை. ஆக வந்து விட்டது.

வால்பையன் said...

//குர்ஆன் என்பது அல்லாஹ் தன் தூதவரான ஜிப்ரீல் என்ற வானவர் மூலம் நபிக்கு அருளியது.//

ஆறு நாளில் மொத்த உலகையும் படைத்த கடவுள் அந்த ஜிப்ரீலை எப்போது படைத்தார், எங்கே வைத்திருந்தார்!

//அது நபியுடைய காலத்திலேயே மனித மனங்களில் தொகுக்கப்பட்டு விட்டது. அது இறைவனால் பாதுகாக்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது.//

பாதுகாக்கபடும் என உறுதியளிக்கப்பட்டும் அதன் மூலம் ஏன் அழிக்கபட்டது, அவர்களுக்கு கடவுளின் உறுதி மேல் நம்பிக்கை இல்லாததாலா!?

//ஹதீஸ்கள் எனப்படும் நபியவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியவை செவிவழியாக ஒருவர் பின் ஒருவராக செய்தியாகத்தான் அறிவிக்கப்பட்டு வந்தது. நபியவர்களின் காலத்திற்கு பிந்தைய நூறாண்டுகளுக்குப் பின்னரே அவை தொகுக்கப்பட்டது. //


குரானும் முகமது வழியாகவே அதாவது முகமதுவின் சொல் வழியாகவே பிறரிடம் சொல்லப்பட்டது, ஹதீஸ் மாதிரியே குரானும் முகமதுவின் மறைவுக்கு பின்னரே தொகுப்பட்டது, ஏற்கனவே சொன்னது போல் அதன் மூலம் மொத்தமாக அழிக்கப்பட்டு விட்டது, அப்போது அதன் நம்பகதன்மையில் சந்தேகம் வந்துவிடுகிறதே!

எனது ப்ளாக்கில் நான் சொல்வதெல்லாம் உண்மை என்று ஒரு வார்த்தை எழுதினால் அனைத்தும் உண்மையாகிவிடுமா!?
புத்தகத்தில் இருக்கு என்பதற்காக கண்மூடித்தனமாக நம்புவது தான் பகுத்தறிவா!?


//எனக்கு இவர் இந்த ஹதீஸை அறிவித்தார் என்று ஒரு அறிவிப்பாளர் கூறும் போது அவர்கள் இருவரும் சமகாலத்தில் வாழ்ந்தவராகவும் இருவரும் நேரடியாக சந்திக்கும் வாய்ப்பை பெற்றவராகவும் இருக்க வேண்டும். அதில் ஏதாவது குறை இருந்தால் அதுவும் பலவீனமாகும்.//

குறை என்றால் முக்மதுவின் நடத்தைக்கு களங்கம் ஏற்படுத்துவது போல் இருந்தால், சரி தானே!
ஹதீஸின் முன்வடிவத்தில் முகமது இஸ்லாம் அல்லாத பெண்னை வைத்திருந்தார், அதுவும் மணமுடிக்காமல் என்று இருந்தது, ஆனால் முகமது பெயருக்கு களங்கம் வந்துவிடக்கூடாதே என அழிக்கபட்டது!, எது உண்மை என தெரியாமல் எவ்வாறு பின் வந்தவர்கள் அவற்றை அழிக்கலாம்!

முகமது நிச்சயமாக உத்தமராக தான் இருப்பார் என்ற குருட்டு நம்பிக்கை தானே!

Unknown said...

என்ன கேள்விகள் கேட்கிறீர்கள் என்று தெரிந்துதான் கேட்கிறீர்களா வால்பையன்? இன்னும் பதிலே உங்களுக்கு விளங்கவில்லையே!
//ஆறு நாளில் மொத்த உலகையும் படைத்த கடவுள் அந்த ஜிப்ரீலை எப்போது படைத்தார், எங்கே வைத்திருந்தார்!//
ஜிப்ரீலுக்கும் இந்த உலகுக்கும் என்ன தொடர்பு என நினைக்கின்றீர்கள்.
இந்த உலகு மட்டுமதான் இறைவன் படைத்தது என்று யாரும் உங்களுக்கு சொன்னார்களா?
உலகத்தை சுருட்டி கக்கத்தில் வைத்துக் கொண்டு கடலில் புகுந்த கதை போலென்று எண்ணி ஏமாறாதீர்கள்.

//பாதுகாக்கபடும் என உறுதியளிக்கப்பட்டும் அதன் மூலம் ஏன் அழிக்கபட்டது, அவர்களுக்கு கடவுளின் உறுதி மேல் நம்பிக்கை இல்லாததாலா!?//
மனித மனங்களில் பாதுகாக்கப் பட்டது என்று சொன்னேன். எந்த மூலம் அழிக்கப்பட்டது. என்ன கேள்வி இது?
ஒரு வேளை புத்தமாக தொகுக்கப்பட்ட வரலாற்றை பேசுகிறீர்களா? அது தலைப்புக்கு சம்பந்தமில்லாதது. தனித் தலைப்பில் பேசுவோம். தற்போதைக்கு இதைப் பாருங்கள். http://www.onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/munnurai/thokukkappatta-varalaru/
தெளிவாகவில்லையென்றால் மேலும் பேசலாம்.

//எனது ப்ளாக்கில் நான் சொல்வதெல்லாம் உண்மை என்று ஒரு வார்த்தை எழுதினால் அனைத்தும் உண்மையாகிவிடுமா!?//
உண்மை என்பதற்கு நீங்கள் தரும் விளக்கம் என்னவோ? நேரில் கண்டுணர்வது மட்டும்தான் உண்மை என்றாகுமா? வாதங்களுக்கு பதில் சொல்லலாம். விதண்டாவாதங்களுக்கு........... ??

பாரதியார், திருவள்ளுவர் புத்தகங்கள் அவர்களதுதானா? மூலமே இருந்தாலும்..., யாரோ சொல்ல அவர்கள் எழுதியதை வைத்திருந்திருப்பார்களோ என்று எண்ணிணால்......... இதெல்லாம் சிந்தனையா? சீழ் பிடித்த சிந்தனை தோழரே.

//குறை என்றால் முக்மதுவின் நடத்தைக்கு களங்கம் ஏற்படுத்துவது போல் இருந்தால், சரி தானே!//
நீங்கள் கண்டு பிடித்த பின், நான் திருத்தினால் அவ்வாறு சொல்ல ஏலும். பற்பல ஆண்டுகளுக்கு முன்னர் தொகுக்கப்பட்டதை எடுத்துச் சொன்னால்..... என்ன கொடுமை!

என்னென்ன காரணங்களால் ஒரு ஹதீஸ் பலவீனமாகிறது என்று பட்டியலே கொடுத்தேன். இதிலே நீங்கள் கேட்பது போன்ற பதிலை எவ்வாறு பெற முடிகிறது? பாவம்! என்று உம்மைப் பார்த்து வருந்தத்தான் தோன்றுகிறது. இறைவனே நேர்வழி தர போதுமானவன்.

Unknown said...

வால்பையன் நீங்கள் பதிலையே உணராமல் ஏதாவது கேட்க வேண்டுமென்று கிறுக்கத்தனமாக கேட்பவையெல்லாம் இங்கே அனுமதிக்கப்படாது. உங்கள் பின்னூட்டங்களுக்கு நான் கேட்ட கேள்விகளுக்கு விளக்கம் தாருங்கள். நான் கொடுத்த சுட்டி உபயோகப்படுத்தினீர்களா? புரிந்ததா எனச் சொல்லுங்கள். அதன் பின் ஒவ்வொன்றாக மேலே தொடரலாம்.

Unknown said...

ஜிகே. தயவு செய்து தங்கள் கருத்துரையை இன்னொரு முறை தர முடியுமா? ஏதோ தகராறு!

கோவி.கண்ணன் said...

//ஜிகே. தயவு செய்து தங்கள் கருத்துரையை இன்னொரு முறை தர முடியுமா? ஏதோ தகராறு!

10:26 AM
//உலகத்தை சுருட்டி கக்கத்தில் வைத்துக் கொண்டு கடலில் புகுந்த கதை போலென்று எண்ணி ஏமாறாதீர்கள். //

இரவில் சூரியன் அல்லாவின் நாற்காலிக்கு பின்னால் ஒளிந்து கொள்கிறது என்பது போன்று இதுவும் ஒரு 'கதை' தானே. நாற்காலி கதைக்கு ஏமாறுபவர்களுக்கும் இந்த விளக்கம் பொருந்தும் தானே.

Unknown said...

//நாற்காலி கதைக்கு ஏமாறுபவர்களுக்கும் இந்த விளக்கம் பொருந்தும் தானே.//
ஆமாம் ஜிகே. இது போன்ற கதைகளுக்கும் பொருந்தும். :)

Unknown said...

smart said:
Dear sultan,
Now this is not restricted

நன்றி smart
நீங்கள் pdfல் கொடுத்த இடுகைக்கான பதில் இடுகைதான் இது.

இன்று புதிதாய் ஏதோ போட்டிருக்கிறார் திரட்டியில் பார்த்தேன். இங்கு திறக்கத்தான் இயலவில்லை.

வாலில்லாதவன் said...

///இன்று புதிதாய் ஏதோ போட்டிருக்கிறார் திரட்டியில் பார்த்தேன். இங்கு திறக்கத்தான் இயலவில்லை.///---ரொம்ப நல்லதாபோச்சு... சந்தோஷமா இருங்க... கண்டுக்காதீங்க...

'இவை'கள் எல்லாம் இஸ்லாம் பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்று எதையும் கேட்பதில்லை...
எங்கள் ஊரில்(அதிராம்பட்டினம்) காகா என்றால் அண்ணன் என்று அர்த்தம்... அதற்காக காக்கைகூட்டம் "காகா"..."காகா" என்று காது கிழிய கரையும் போதெல்லாம் கண்டுகொண்டு ஓடிப்போய் "என்ன தம்பி" என்றா பதில் சொல்லிக்கொண்டு இருக்கிறோம்... "ச்சூ ச்சூ" என்று விரட்டி விட்டு அடுத்த வேலைய பார்ப்பதில்லையா..?

அதேமாதிரி போக்கிட்டே இருங்கள்...

செல்லும் பாதையில் நரகல் கிடந்தால், நரகலை மிதிக்காமல் ஒதுங்கிப்போவதே சிறந்தது. மாறாக சமூக அக்கறை என்ற நல்ல எண்ணத்தில் சுத்தப்படுத்த சுத்தப்படுத்த அந்த வேலையை செய்பருக்கு ரொம்ப சந்தோஷமாய்ப்போய்விடும். மீண்டும் மீண்டும் அசிங்கம் பன்னிக்கிட்டே இருப்பாங்க...

வால்பையன் said...

கேள்வி கேட்டா இப்படி தான் பேசுவிங்களா!?
யார் நரகல்ன்னு இப்போ தெரிஞ்சிருக்குமே!

Unknown said...

//இப்படி தான் பேசுவிங்களா!?//
எப்படி? இன்னும் படிக்கவே இல்லையே!

Unknown said...

mdsultan@eim.ae

வால்பையன் said...

//உங்கள் அனைவருக்கும் சாந்தி சமாதானம் உண்டாவதாக,
சுல்தான் சொன்ன விடயங்களுக்கு உங்கள் விமர்சனத்தை காணோமே //


பதிவே போட்டுட்டேனே, ஆல் இன் ஆல் ப்ளாக்கில்!

Dino LA said...

கலக்குறிங்க.