உண்மையை விரும்பாத அறிவிலிகளா!?

நான் சுல்தான் என்ற பெயரில் பதிவை ஏற்படுத்தி சில இடுகைகளை இட்டிருக்கிறேன். அந்தப் பதிவிலிருந்த சில இஸ்லாமிய இடுகைகளை தனியே எடுத்து இந்த பதிவைத் தொடங்கினேன். இஸ்லாத்தைப் பற்றிய தவறான கண்ணோட்டத்தை நீக்குவதற்காக என்னால் இயன்ற முயற்சிதான் இப்பதிவு. தேவையுள்ளவர்கள் அவ்வப்போது வந்து படிக்கிறார்கள். யாரோ ஒரு நண்பர் இன்று லிங்க் கொடுத்ததால், இதைப் பார்வையிட்ட ஒருவருக்கு அல்லது ஒரு குழுமத்திற்கு, இந்த பதிவு பிடிக்கவில்லையென்றால் மூடிக் கொண்டு போக வேண்டியதுதானே. என் இந்த பதிவை ஸ்பேம் என்று ரிப்போர்ட் செய்திருக்கின்றார்கள்.

அந்த நல்ல உள்ளங்களுக்கு ஏற்பட்ட வயிற்றெறிச்சலில்தான் நான் உறங்கிப் போனது தெரிந்தது. அவர்கள் வயிற்றெறிச்சலை வளர்க்க இனி அடிக்கடி இங்கேயும் எழுத முயற்சிப்பேன். டைஜின் போன்ற மாத்திரைகளை கொஞ்சம் தாராளமாக கைவசப்படுத்திக் கொள்ளுங்கள்.

என் நண்பர் ஒருவர் அவர் நண்பரோடு பத்தாண்டுகளுக்கும் மேலாக ஒரே அறையில் வசித்து வந்தார். பின்னர் நம் நண்பரின் நண்பர் வாழ்வின் முன்னேற்றம் வேண்டி கனடா போய்ச் சேர்ந்தார். அங்கே போன ஓரிரு ஆண்டுகளில் அவர் இஸ்லாத்தை தம் வாழ்வியலாக ஏற்றார். சில மாதங்கள் கழித்து அவர் நம் நண்பருடன் போனில் பேசும் போது தாம் முஸ்லீமான விடயத்தையும் தெரியப் படுத்தினார்.

அப்போது நம் நண்பர், "ஏனப்பா இவ்வளவு ஆண்டுகள் என் கூட இருந்தாய். இவ்வாறு ஒரு நாட்டமுள்ளது எனக்கு தெரியவுமில்லை. நீர் சொல்லவுமில்லையே" எனக் கேட்டபோது, அவரோ, "நான் இவ்வளவு ஆண்டுகள் உன்னுடன் இருந்தும் நீ என்றாவது இஸ்லாத்தைப் பற்றி எனக்குச் சொல்லி இருக்கிறாயா? நீ சொல்லி இருந்தால் எனக்குள் இந்த மாற்றம் முன்னமே நடந்திருக்கலாம். சொல்ல வேண்டியது உனக்கு கடமையில்லையா? ஆனாலும் இறைவன் எனக்கு இப்போதுதான் நாடியிருக்கிறான் போலிருக்கிறது" என்று சொன்னாராம். அதைக் கேட்டதிலிருந்து என் நண்பர் பல நாட்கள் தவித்தது போலவே, நானும் சில நாட்கள் தவித்திருக்கிறேன்.

என்னுடைய கடமை எடுத்துச் சொல்வது மட்டும்தான். ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பத்தில் உள்ளது. நேர்வழி கொடுக்கக் கூடியவன் இறைவன் ஒருவன்தான்.

இறைவனின் நாட்டப்படி இனி தொய்வின்றி தொடத் தொடர முயற்சிப்பேன்.

அன்புடன்
சுல்தான்

16 comments:

Unknown said...

Ha Ha Ha

Even if you act like intellectual in public forum, situations like this reveal who you are funda'mentally'!!

why can't you muslims think out of this narrow band of religion?

Do you view this entire universe only with the eyes of century old arabic beliefs?

Why can't you guys wake up? Just few days ago, Mr.Dharumi ripped off the absurdities in mohamed's religion. None of guys could answer his questions

My request to you is to please think and try to come out

PARAMS

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

//Ha Ha Ha//
Don't laugh for nothing man. People think you diferently.

//Even if you act like intellectual in public forum, situations like this reveal who you are funda'mentally'!!//
1+1=2 this is fundamental. If you are applying this in your daily life, you are fundamentalist. You want to be on the mental list or fundamentalist.

//Do you view this entire universe only with the eyes of century old arabic beliefs?//
Islam is from God, the Almighty. Withut trying a litle to know the truth, if you believe what is taught to you narrow mindedly is true, then you are in fault Mr. Params.

//Why can't you guys wake up? Just few days ago, Mr.Dharumi ripped off the absurdities in mohamed's religion. None of guys could answer his questions//
Please go through Mr.Dharumi's page once again, the questions were already answered by Mr.Adirai Farook. If that is not open your mind, I feel sorry for you.

//My request to you is to please think and try to come out//
Now it is your turn Mr. PARAMS.

Anonymous said...

நான் அபிஅப்பா!

அனானி அன்பர்களே தேவை இல்லாமல் பேசவேண்டாம். உங்களுக்கு பிடிச்சா படிங்க இல்லாட்டி விடுங்க! அதை விடுத்து தேவை இல்லாதது பேச வேண்டாம்!

இப்படிப்பட்ட அனாமதேய பின்னூட்டங்களை வெளியிட்ட சுல்தான் பாய்க்கு என் கண்டனங்கள்.

பெயரோடு பின்னூடம் போடுபவர்களோடு மல்லுகட்டுங்கள். நாங்க உங்க பக்கம். உங்களை நேரில் பார்த்திராத பழகிடாத ஜந்துக்களுக்கு நீங்க பதில் சொல்வது எங்களுக்கு ஒரு அசிங்கம் என்பதை உணரவும்!

வருத்தமுடன்
அபிஅப்பா

Unknown said...

//வருத்தமுடன்
அபிஅப்பா//
நீங்கள் சொன்னது போல இனி கட் பண்ணிடுவோம்.
வருத்தம் நீக்குக அபி அப்பா.

அபி அப்பா said...

நன்றி சுல்தான் பாய்!

எங்க உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்தமைக்கு!

அன்புடன்
அபிஅப்பா

குறிப்பு: இந்த பதிவின் 5ம் பின்னூட்டம் போட்டது ஒரிஜினல் அக்மார்க் அபிஅப்பாதான்! நான் தூங்க போகும் முன் சைன் அவுட் செஞ்ச பின்னே இந்த பதிவை படிச்சேன். அப்படிய்யெ அந்த பின்னூட்டம் போட்டேன்.

விளக்கம் சொல்லவே இப்ப சைன் இன் செய்தேன்!

பழமைபேசி said...

எங்க அன்பு அண்ணன் அப்துல்லா அவங்க பதிவுல நான் போட்ட பின்னூட்டத்தையே, படியெடுத்து இங்க போடலாம்ன்னா, அவரோட பதிவையே கடத்திட்டாங்க....இஃகிஃகி!

அநாகரிக மறுமொழியைப் பிரசுரம் செய்வது, அது இடுவதற்கு இணையானது. கிட்டத்தட்ட இந்த கருத்துல நான் பின்னூட்டம் இட்டதா நினைவு!!

Unknown said...

//அநாகரிக மறுமொழியைப் பிரசுரம் செய்வது, அது இடுவதற்கு இணையானது//

நன்றி பழமைபேசி.
அபி அப்பாவுக்கு கொடுத்த பதில்
"இனி கட் பண்ணிடுவோம்.
வருத்தம் நீக்குக"

Unknown said...

Dear Sulthan Bhai,

I have read more about islam and muslims than a muslim.

I have read the consolidation of mohamed's so called messages that you call as Quran.
Even I can quote from it like "Marry among the right handed you posses and slaves; one; two; three; four; as you like"

I would really like to hear from the women folk of islam about how they tolerate biased rights to men.

You may want to read more about alisina (former muslim) and others like nesakumar

I invite you to a more broader all loving piloshophy called Hinduism.
Please rememer that it is the one that you gave you enough freedom to talk about other belief and allowed other faiths to live in harmony

Hope you understand

PARAMS

Unknown said...

அன்பின் பரம்ஸ்
உங்களின் முந்தைய கருத்துரைக்கு வரிக்கு வரி பதில் எழுதினேன். அதை விட்டு விட்டு அடுத்ததற்கு வந்து விட்டீர்கள். எனவே என் பதிலுரையை நீங்கள் முழுவதும் ஏற்றுக் கொண்டீர்கள் எனக் கொள்கிறேன்.

I have read more about islam and muslims than a muslim.
உங்களுக்குச் சொல்லித் தரப்பட்டவைகள்தான் உண்மைகள் என நினைந்து, நீங்கள் அறிந்து விட்டதாக இறுமாந்து இருக்கிறீர்கள் நண்பரே.

I have read the consolidation of mohamed's so called messages that you call as Quran.
Even I can quote from it like "Marry among the right handed you posses and slaves; one; two; three; four; as you like"
தப்பும் தவறுமாக இந்த மாதிரி இந்த ஒரு வசனத்தை சொல்வதற்கு குர்ஆனை முழுதும் அறிந்திருக்க வேண்டியதில்லை நண்பரே. மாற்று மதத்தவருக்காக முஸ்லீம்களால் நடாத்தப்படும் ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்தால் போதும். இந்தக் கேள்வி கண்டிப்பாக கேட்கப்படும். அதற்கு பற்பல தடவைகளில் பற்பல கோணங்களில் பதிலளித்து பதிலளித்து ... ... ... திரும்பவும் அதே என்று எரிச்சல் வரவழைக்கும் கேள்வி. தமிழ் வலைப்பக்கத்தை வலம் வந்தாலே தெளிவு பிறக்கும்.
படிப்பை முடித்து விட்டு இப்போதுதான் வந்திருக்கின்றீர்கள் என நினைக்கிறேன்.
I would really like to hear from the women folk of islam about how they tolerate biased rights to men.
ஒரு இஸ்லாமிய பெண் அறிஞரின் வாயால் கேட்டுத் தெளிவு பெற வேண்டுமென்றால், நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை உங்கள் பெண்களிலிருந்து சிலரை அனுப்பி கேட்க ஏற்பாடு செய்யுங்கள். சிறப்பாக பதிலளிக்க பலர் தயாராகவே உள்ளனர். அதன் பின்னர் உங்கள் பெண்களிலிருந்து கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.

You may want to read more about alisina (former muslim) and others like nesakumar
இந்தக் கருத்துரைக்கு இதே பதிவில் ஏமாறாதவனுக்கு எழுதிய பதிலையே உங்கள் முன் வைக்கிறேன். திரும்ப திரும்ப எழுதியதையே எழுத அலுப்பாக இருக்கிறது.

"உங்களுக்கு அம்பேத்கர், அம்பேத்கர் என்று ஒருவர் இருந்தார் தெரியுமா?. தற்போதைய ஆர்.எஸ்.எஸ் தலைவர்களோடு தலைவர்களாக மேடையில் படம் காட்டப்படுகிறதாம்!!. அவர் எழுதிய 'Riddles of Rama & Krishna' படித்துக் காட்டட்டுமா? அல்லது பதிவில் எழுதிக் காட்டட்டுமா?

இதை விடவும் சிறப்பாக 'Oh You Hindu Awake'என்ற தலைப்பில் 'Dr. Chatterjee. M.A., Ph.D. (USA)' அவர்கள் எழுதிய புத்தகம் இருக்கிறது. அது, 'ஓ! இந்துக்களே! விழித்தெழுங்கள்' என்று தமிழிலும் உள்ளது. வாசித்துக் காட்டட்டுமா? அல்லது பதிவுகளில் தொகுதி வாரியாக எழுதிக் காட்டட்டுமா?

இந்தப் புத்தகங்கள், உங்களைப் போன்ற பல பேரின் மூடியிருந்த அறிவுக் கண்ணைத் திறந்ததாம். நீங்களும் அறிவைப் பலப்படுத்திக் கொள்ளவும், கண் திறக்கவும் ஆர்வமாயிருந்தால் சொல்லுங்கள். தமிழிணைய அனுமதியும் பெற்றுத் தாருங்கள். படிக்க, என் கண்களே கூசுகிறது.

உங்களுக்கு இறைவன் கொடுத்த அறிவைப் பயன்படுத்துங்கள். நீங்களே ஆராய முற்படுங்கள். திருக்குர்ஆனும், ஹதீஸ் நூல்களும் தமிழிலேயே கிடைக்கின்றது. இராமாயணம், மகாபாரதம், பகவத்கீதை, மனுஸ்மிருதி முதலிய புத்தகங்கள் கூட தமிழிலும் உள்ளதாம். உதவிக்கு நல்லெண்ணத்தில் எழுதப்பட்ட அறிஞர்களின் ஆக்கங்களைப் பார்வையிடுங்கள். இது போன்ற திமிர் புத்தகங்களை(எழுத்துக்களை)படித்தவுடன் குப்பைக்குத் தள்ளுங்கள்."

I invite you to a more broader all loving piloshophy called Hinduism.
Please rememer that it is the one that you gave you enough freedom to talk about other belief and allowed other faiths to live in harmony
இந்த சப்பைக்கட்டு தேவையில்லை. ஹிந்துயிஸமாக நீங்கள் குறிப்பிட்டவற்றிலிருந்து நான் கேள்விகள் கேட்கிறேன். நீங்கள் தெளிவான பதிலை உங்கள் வலைப்பக்கத்தில் எழுதுங்கள். அல்லது
முஸ்லீம்களைப்போல நீங்கள் உங்கள் இந்துயிஸக் கொள்கையை கேள்வி கேட்க யார் வேண்டுமானாலும் வாருங்கள் என அழைப்புக் கொடுங்கள். நான் உங்களால் இந்து என்றழைக்கப்படும் பதினைந்து நபர்களோடு வந்து கேள்வி கேட்கிறேன். ஹிந்துயிஸத்தை தெளிவாக அறிந்த உங்களில் ஒருவர் வந்திருப்பவர்களில் மிகுதியானோர் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் பதில் சொல்லட்டுமே. அதை அப்படியே வீடியோவில் பதிவு செய்து வலையில் ஏற்றுவோம்.

Hope you understand
ஏற்றுக் கொள்கிறீர்களா நண்பர் PARAMS

கீழை ராஸா said...

வாழ்த்துக்கள் சுல்தான் பாய்...இனிதே தொடங்குங்கள்...தொடருங்கள்

Unknown said...

நன்றி கீழை ராஸா. தொய்வின்றி தொடர தங்களின் துஆவில் என்னையும் இணைத்துக் கொள்ளுங்கள் சகோதரரே.

mkr said...

வெறும் மார்க்கத்தை பின்பற்றினால் போதும் என்ற நிலையால முஸ்லிம்கள் இருக்கிறார்கள்.ஆனால் அவர்கள் மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருந்து மார்க்கத்தை எடுத்துரைப்பது நமது கடமை மறந்து விடுகிறார்கள்.உங்களை போன்றவர்களின் இந்த முயற்சிக்கும் இறைவனிடத்தில் நன்மையுண்டு.

பாத்திமா ஜொஹ்ரா said...

தவிச்சுப்போன சுல்தானின் மனசு படித்தேன்,பகிர்ந்தேன்!

http://anboduungalai.blogspot.com/2010/05/blog-post_29.html

உங்களைப் பற்றித்தான் சகோதரரே,உங்கள் கட்டுரையின் பிரதிபலிப்பாக

Unknown said...

எடுத்திட்டமைக்கு நன்றி சகோதரி. ஜஸாக்கல்லாஹ்