சவூதிதான் இஸ்லாமா?

(உணர்வுகள் வலைப்பூவில் “போதைப் பொருள் கடத்திய சவூதி இளவரசரை இஸ்லாமிய ‘ஸாரியா’ ஏன் தண்டிக்கவில்லை?” (http://unarvukal-unarvukal.blogspot.com/2007/02/blog-post_6745.html) என்ற தலைப்பில் இஸ்லாத்துக்கு எதிராகவும் எழுதப்பட்டுள்ளது. அதற்கு மறுப்பாக மறுமொழி இட எழுதியது நீண்டு விட்டதால் தனிப்பதிவாக.
எழுதியவர் இலங்கையைச் சார்நதவராகத் தெரிகிறது. அவ்வாறெனில் இந்தியாவைப் பற்றிச் சொல்லியுள்ள இடங்களில், இலங்கையைத் தொடர்பு படுத்திக் கொள்ளுங்கள்.)

//மூன்றாவதுலக நாடுகளின் முஸ்லீம்கள் சவூதி அரசகுடும்பத்தைப் பற்றிப் பீற்றிக் கொள்வதையும் அரேபியாவின் மீது அவர்களுக்குள்ள அளவுகடந்த விசுவாசத்தையும், ஏன் முழு அரேபியாவையுமே ஏதோ கடவுளின் சொர்க்கபூமி போல் நினைப்பதையும் எங்களில் பலர் அனுபவத்தில் அறிந்துள்ளோம்//

சவூதி அரச குடும்பத்தைப் பற்றி பீற்றிக் கொள்ள என்ன இருக்கிறது. அவர்களும் மனிதர்கள்தான். மனிதர்களுக்குரிய எல்லா பலவீனங்களும் அவர்களுக்கும் இருக்கும். 'ஜகத்குரு'க்களாக மனிதர்களால் நம்பப்படுபவர்களே பெருந்தவறு செய்ததாக சந்தி சிரிக்கிறதே.
இஸ்லாம் என்ற வாழ்க்கைப் பாதையில்
'எல்லா மனிதர்களும் தவறு செய்பவர்களே. அவர்களில் சிறந்தவர்கள் தன் தவறுக்காக வருந்தி இறைவனிடம் பாவ மன்னிப்புக் கோரி திருந்துபவர்களே.'

உடல் நலமும் பொருள் வளமும் உள்ளவர்கள் தம் வாழ்க்கையில் ஒரு முறையாவது மக்காவில் உள்ள அந்த புனிதத்தலத்தை தரிசிப்பது ஒவ்வொரு முஸ்லீமின் மீதும் கடமையாக இருப்பதால், எல்லா முஸ்லீம்களும் அந்த புனிதத்தலத்தை நினைவிலிருத்துகின்றனர்.

கல்லையும் மண்ணையும் கடவுளாக வணங்கி வந்த எங்களுக்கு, இஸ்லாம் என்ற மார்க்கத்தை எடுத்துச் சொன்னவர், அராபியாவிலிருந்து வந்ததால், அந்த பூமியின் மீது சிலருக்கு அன்பு இருக்கலாம். அஃதொன்றும் தவறல்லவே.

//சவூதி அரேபியா வேறுபாடுகள் இல்லாத சமத்துவமுள்ள நாடு போலவும், கையையும், காலையும் வெட்டியெறியும் இஸ்லாமிய ஸாரியாவை 21ம் நூற்றாண்டிலும் நடைமுறை ப்படுத்துவது சரியானதெனவும் வாதாடுவதைக் காணலாம்.//

சவூதியாவில் எந்த மனிதராயிருந்தாலும், அவர் கறுப்பராயிருந்தாலும் வெள்ளையராயிருந்தாலும், அவர் முன்னே வந்தால் முன்னே நின்று தொழுகிறார். அங்கு எவரும் 'கடவுள் முன்னிலையில் தாம் தான் உயர்ந்தவர்' என்று சொல்வதில்லை.
எமக்கு இஸ்லாம் கற்றுத் தந்துள்ளபடி, 'கடவுள் முன்னிலையில் இரண்டு சாரார்தான். ஒரு சாரார் இறையச்சம் நிறைந்த சிறந்த மனிதர்கள் - உயர்ந்தவர்கள். மற்றொரு சாரார் இறையச்சம் குறைந்தவர்கள் (அல்லது இறையச்சம் இல்லாதவர்கள்) -தாழ்ந்தவர்கள்.'
யாரோ ஒரு குழுமத்தில் பிறந்ததால் அவர் உயர்ந்தவர், வேறொரு குழுமத்தில் பிறந்ததால் அவர் தாழ்ந்தவர் என்று, அவர் செய்யாத தவறுக்கு, பிறப்பால் உயர்வு தாழ்வு பாராட்டாத, இந்த சமத்துவம்தான் சொல்லப்படுகிறது.

கையை காலை வெட்டும் ஷரியா தவறென்றால், அத்வானி போன்றவர்களே கற்பழிப்புக்கு மரண தண்டனை தர வேண்டும் என்று கேட்டதை யோசியுங்கள்.
தவறு செய்பவர்கள்தான், 'கையையும் காலையும் இழப்போமே' என்று வருந்த வேண்டும். 'இந்த தண்டணைகளால் தவறு செய்ய நினைப்பவர்களும் திருந்துவார்களே' என்று நல்லவர்களும், நீதி நியாயத்தின்படி வாழ நினைப்பவர்களும் எண்ணாமல் கலக்கமடைவது ஏன் என்பது புதிர்.

//பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் பெருமளவு சமப்படுத்தப் பட்டுள்ளதைக் காண்கிறோம்' என்கிறார் சுவனப்பிரியன்//

இந்தியாவையும் சவூதியையும் ஒப்பு நோக்குங்கள். ஏற்றத்தாழ்வுகளே இல்லை என்று சொல்லப்படவில்லை. பெருமளவு சமப்படுத்தப் பட்டுள்ளதாகத்தான் சொல்கிறார். தவறென்கிறீர்களா?
அங்கு போய் வந்தவர்களைக் கேளுங்கள். அங்கு அந்நாட்டு அரபிகளில், எத்தனை பேர் வீடு வாசலின்றி, தெருவோரம் தூங்கி, பிச்சையெடுத்து அலைகின்றனர் என்று. பின்னர் ஒப்பு நோக்குங்கள். பெருமளவு என்பதன் பொருள் புரியும்.

//நான்கில் ஒரு பங்கு சவூதி மக்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். பல சவூதி இளைஞர்களுக்குப் படித்து முடித்தாலும் சரியான தொடர்பில்லாது விட்டால் வேலை கிடைப்பதில்லை.//

நான்கில் ஒரு பங்கு என்று மிக மிகக் கூடுதலாக சொல்லப்பட்டுள்ளது.
வேலையில்லாதவர்களும், அவர்களின் தேவைகளுக்கான வசதியோடு இருப்பதைப் பார்க்கத் தவறுவது ஏன்?
அங்குள்ள களில் பலவற்றையும் வெளி நாட்டினர் செய்து அதற்கான ஊதியம் பெறுகின்றனர்.
'மற்ற மாநிலத்தவர் இங்கு வருவதால் இந்த மாநிலத்தார்க்கு வேலை கிடைப்பதில்லை' என்று ஒரே இந்தியாவில், ஒரு மாநிலத்தார் மற்றவர்களை அடித்துத் துரத்துகிறோம். உதாரணம்: நேற்று மும்பையிலும் பெங்களுருவிலும், இன்று அஸ்ஸாம்.
அங்கு, இப்போது, வெளிநாட்டவரை......

அங்கு சரியான தொடர்பில்லாத யாரும் வேலையில் இல்லையா? அல்லது அங்கு வேலையிலிருப்பவர்கள் எல்லாம் சரியான தொடர்பு வைத்திருப்பவர்கள்தானா?

வேலையில்லாத் திண்டாட்டம் இல்லாத நாடு எது? சவூதியில் உள்ளதை மட்டும் ஊதிப் பெரிதாகக் காட்டும் அவரின் நோக்கத்தை நீங்கள் புரிந்து கொள்ளாதது ஏன்?

//முன்னாள் சவூதி பிரஜையும் இன்று லண்டனில் வசிப்பவராகிய மாய் யமானி//

அவர் சொல்வதெல்லாம் எல்லா நாட்டிலும் உள்ளதுதான்.
ஒரு நாட்டை விட்டு வெறியேற்றப்பட்டவர் அல்லது அந்நாட்டு ஆள்பவர்களைப் பிடிக்காதவர்கள், வேறு நாட்டில் தங்கிக்கொண்டு இம்மாதிரி சொல்வதெல்லாம் வாடிக்கைதான். அதைத் தூக்கிப்பிடித்து இஸ்லாத்தை விமர்சிக்க அவசியமேதுமில்லை.

குடியாட்சியுள்ள இந்தியாவிலேயே, ஆள்பவர்களின் பிள்ளைகள் அமெரிக்காவிலும், இலண்டனிலும், பாரிசிலும் உல்லாசப் பொழுது போக்குக்கு போகவில்லையா? ஆளக்கொடுத்த எல்லோராலும் முடிகிற ஒன்றா? முடியாட்சியில் இது கொஞ்சம் கூடுதலாயிருக்கும். ஆனாலும் அது தவறுதான் என்பதை
//சவூதி அரச குடும்பத்தின் தனிப்பட்ட 'ஜெற்' விமான சுற்றுலாக்களையும், ஆடம்பரங்களையும், கேளிக்கைகளையும் பெரும்பான்மையான சவூதி அரேபியாவின் மக்கள் வெறுக்கிறார்கள் அது மட்டுமல்ல அவை இஸ்லாமிய விதி முறைகளுக்கும் எதிரானவை// என்று அவரே சரியாகச் சொல்கிறாரே.

//மூன்றாவதுலக நாடுகளின் முஸ்லீம்கள் மட்டும் சவூதி அரேபியாவைப் பற்றி அழகான ஆயிரத்திலொரு இரவுகள் மாதிரியான கற்பனையைக் கட்டவிழ்த்து விடுகிறார்கள்.//

முஸ்லீம்கள் மட்டுமா? மற்றவர்கள் இல்லையா?
அவ்வாறு சொல்லப்படுவதைக் கேட்டு அங்கே போகிறவர்களில் (முஸ்லீம்களல்லாத மற்றவர்களும்) திரும்பத் திரும்பப் போகிறார்களே. மும்பையில் சென்று பார்த்தால் போய் வந்தவர்கள் சவூதி வேலைக்கு அனுபவமுள்ளதால் முதலில் நிற்கிறார்களே.
ஆயிரத்திலொரு இரவுகள் கற்பனையோடு சவூதிக்கு ஒருவருமே போவதில்லை என்பதுதான் உண்மை. 'வெட்டிடுவானுங்கோ' என்பதை முன்னரே அறிந்தே போகிறார்கள்.

//போதைப்பொருள் கடத்தலில் குற்றம் சாட்டப்பட்டு, நிரூபிக்கப்பட்ட இளவரசருக்கு, இஸ்லாத்தில் எல்லோருக்கும் சமத்துவம் உள்ளதென்றால் கையைக், காலை வெட்டியிருக்க வேண்டும் அப்படித்தானே//

குற்றம் நிகழ்ந்ததாகச் சொல்லப்படுவது சவூதிக்கு வெளியே. குற்றம் நிருபிக்கப்பட்ட ஒருவரை தப்பிக்க விட்டது யாருடைய குற்றம்.

இஸ்லாமிய சட்டப்படி குற்றம் யார் செய்திருந்தாலும் தண்டிக்கப் பட வேண்டும். 'என்னுடைய மகள் பாத்திமா திருடியிருந்தாலும், அவர் கையையும் வெட்டுவேன்' என்று சொன்ன நபி பெருமகனார்தான் எங்களுக்கு முன் மாதிரி. இஸ்லாமிய சட்டத்தின் முன் ஆண்டியும் அரசனும் சமமே.

அந்நாட்டு இளவரசர் குற்றம் செய்து, அவர் தண்டிக்கப்படாமல் தப்புவிக்கப் பட்டிருக்கிறார் என்பது உண்மையானால், அவ்வாறு செய்தவர்கள், நாளை இறைவன் முன் குற்றவாளியாக நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்படுவார்கள் என்பதை எந்த முஸ்லீமிடமும் கேளுங்கள். உண்மையென்றே கூறுவான்.

//எல்லா நாட்டிலும் ஊழல்கள் உண்டு, எல்லா மதங்களிலும் குறைபாடுகள் உண்டு என்பது தான்.
அதை விட இஸ்லாமிய சகோதரத்துவம், சமத்துவம் பற்றிக் கூட மற்ற மதங்களுடன் ஒப்பிட்டுச் சிலர் பேசுவார்கள் அதையும் நம்பி சிலர் மதமாற்றம் கூடச் செய்து கொள்வார்கள்.//

நீங்கள் எதனோடு எதை முடிச்சு போடுகிறீர்கள்.
எல்லா நாட்டிலும் ஊழல்கள் உண்டு என்பது சரிதான்.
ஒரு நாட்டிலுள்ள ஊழல்களை இஸ்லாத்தோடு சம்பந்தப் படுத்தாதீர்கள். ஆள்பவர்கள் தவறு செய்தால், இஸ்லாமிய பார்வையில் சரியென்று யாரும் உங்களுக்கு சொன்னார்களா? எந்த முஸ்லீமும் அவ்வாறு சொல்லத் துணிய மாட்டான்.

ஆனால் இஸ்லாம் கூறும் சகோதரத்துவமும், சமத்துவமும் உன்னதமானது. வேறெங்கும் காணமுடியாத அழகான அற்புதமான வாழ்க்கைத் திட்டமாகும்.

ஆழிப்பேரலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவில்லை என்று சொல்கிறீர்கள்.
அதைப்பற்றி இஸ்லாம் தெளிவாகச் சொல்லி விட்டது.
இறப்புக்கு பின்னுள்ள மறுமை நாளில், ஒரு செல்வந்தனிடம் 'நான் உன்னிடம் உதவி கேட்ட போது நீ மறுத்தாய் என்று இறைவன் சொல்வான். அதற்கு அந்த செல்வந்தன் 'நீயே எல்லாப் பொருளுக்கும் அதிபதி. என்னிடம் எப்போது வந்தாய்? வரவில்லையே!' என்பான். இந்த ஆள் உன்னிடம் உதவி தேடியபோது, நீ கொடுத்திருந்தால், அங்கே என்னைக் கண்டிருப்பாய்' எனக்கூறி அவனை நரகம் புகச் செய்வான். (ஒரு ஹதீஸிலிருந்து, நம் பிரச்னைக்கு தேவையான பகுதியின் கருத்தாக்கம் மட்டும் தரப்பட்டுள்ளது)

சவூதியில் எல்லா இஸ்லாமிய சட்டங்களும் கடைபிடிக்கப்பட்டு, சரிவர நிறைவேற்றப்படுகிறது என்று யாரும் சொல்லவில்லை. மற்ற நாடுகளை விடவும் கூடுதலாக கடைபிடிக்கப்பட்டு, நிறைவேற்றப்படுகிறது என்றே சொல்கிறோம்.

சவூதி அரசாங்கமோ ஆள்பவர்களோ தவறு செய்தால் அதற்கு இஸ்லாம் பொறுப்பேற்காது.

'உண்மையும் பொய்யும் தெளிவாயுள்ளது. ஏற்பதும் ஏற்காததும் உன் விருப்பம். இறப்புக்கு பின்னுள்ள வாழ்க்கையில், சரியானதை ஏற்று அதன்படி வாழ்ந்திருந்தால் ஆனந்தமும், தவறானதை ஏற்று அதன்படி வாழ்ந்திருந்தால் தண்டணையும் உறுதி' என்று இஸ்லாத்தில் தெளிவு படுத்தப்பட்டுள்ளது.

Posted by சுல்தான் at 8:19 PM

Labels: இஸ்லாம், உணர்வுகள், சவூதி


14 comments:
சுவனப்பிரியன் said...
Best answers Mr Sultan! Keep it up.

9:04 PM
Udhayakumar said...
//இஸ்லாமிய சட்டப்படி குற்றம் யார் செய்திருந்தாலும் தண்டிக்கப் பட வேண்டும். 'என்னுடைய மகள் பாத்திமா திருடியிருந்தாலும், அவர் கையையும் வெட்டுவேன்' என்று சொன்ன நபி பெருமகனார்தான் எங்களுக்கு முன் மாதிரி. இஸ்லாமிய சட்டத்தின் முன் ஆண்டியும் அரசனும் சமமே. //

நபி பெருமகனார் மட்டும்தான் அப்படி சொல்லியிருக்கிறார். சவுதி அரச பரம்பரை சொல்லவில்லையோ?

//சவூதி அரசாங்கமோ ஆள்பவர்களோ தவறு செய்தால் அதற்கு இஸ்லாம் பொறுப்பேற்காது.//

ஸரியாவை நிறைவேற்றும் பொறுப்பு ஆள்பவர்களிடம் இருக்கும் பொழுது எப்படி பொறுப்பேற்க முடியாமல் போகும்?

மற்றபடி, இந்த மாதிரி அத்து மீறல்கள் அனைத்து அராசங்களிலும் இருக்கும் என்பதால் மதத்துடன் அரசியலை இணைத்துப் பார்த்தால் பைத்தியகாரத்தனமாகத்தான் இருக்கும்.

9:48 PM
Anonymous> said...
Justifiable answer.

but, why you folks become angry whenever somebody ridicules arab countries?

11:25 PM
ஆரூரன்> said...
நண்பர் சுல்தான், உங்களுக்கான பின்னூட்டம் நீட்சியாக உள்ளதால், அதை என் வலைப்பூவில் பதிந்துள்ளேன். இங்கு சென்று பார்க்கவும்.

http://unarvukal-unarvukal.blogspot.com/2007/02/blog-post_11.html

நன்றி

1:29 AM
சுல்தான் said...
Thank You Mr. Suvanapriyan.
Encouragement from peoples like you really helps me to improve.

2:03 PM
சுல்தான் said...
வருகைக்கு நன்றி திரு. உதயகுமார்
//ஸரியாவை நிறைவேற்றும் பொறுப்பு ஆள்பவர்களிடம் இருக்கும் பொழுது எப்படி பொறுப்பேற்க முடியாமல் போகும்?//

ஷரீயாவை நிறைவேற்றும் பொறுப்புள்ள ஆள்பவர்கள்தான் (தவறுகளுக்காக) கண்டிக்கப்பட வேண்டும். இஸ்லாமல்ல.
உதாரணத்துக்க: இந்திய சட்டத்துக்கு எதிராக ஆள்பவர் செயல்பட்டால், ஆள்பவர் கண்டிக்கப்பட வேண்டும். இந்தியச் சட்டமல்ல.

//மற்றபடி, இந்த மாதிரி அத்து மீறல்கள் அனைத்து அராசங்களிலும் இருக்கும் என்பதால் மதத்துடன் அரசியலை இணைத்துப் பார்த்தால் பைத்தியகாரத்தனமாகத்தான் இருக்கும்.//

மதம் ஆள்வதற்கென்று அழகான வரையறையை வகுத்துத் தந்துள்ளது. அதை மீறி, ஆள்பவர் தவறு செய்தால் கண்டிக்கப்படவும், தண்டிக்கப்படவும் வேண்டும்.
அரசியல் சட்டத்தையும், ஆள்பவர்களையும் இணைத்துப் பார்த்தால் பைத்தியகாரத்தனமாகத்தான் இருக்கும் என்று நீங்கள் நினைத்தால்...... நான் சொல்ல ஏதுமில்லை.

2:17 PM
சுல்தான் said...
Thank you for your visit Anony.

We are not getting angry to ridicule Arabs but ridiculing Islam for that reason is wrong is my point.

2:22 PM
சுல்தான் said...
வருகைக்கு நன்றி திரு. ஆரூரான்.
உங்கள் பதில் பதிவைப் படித்தேன். விரைவில் இங்கேயே பதில் தருகிறேன்.

2:34 PM
மரைக்காயர் said...
நல்ல பதில்கள் சுல்தான் அவர்களே. 'சவூதிதான் இஸ்லாமா?' என்ற தலைப்பே கூட சில பதில்களை சொல்கிறது. சில முஸ்லிம்களின் நடவடிக்கைகளை வைத்துக் கொண்டு இஸ்லாத்தை பற்றி பலர் விமரிசனம் செய்கிறார்கள். நண்பர் ஆரூரன் அவர்கள் இந்த இரண்டிற்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொண்டால், இந்த விவாதம் இன்னும் சிறப்பாக அமையும்.

8:25 AM
சுல்தான் said...
வருகைக்கு நன்றி மரைக்காயர்.
ஆரூரன் அவர்கள் இதற்கு பதிலளித்துள்ளார்.
அவர் பதிலுக்கான விளக்கத்தையும் என் பதிவிலேயே இட எண்ணியுள்ளேன். வருகை தந்து தங்கள் கருத்துக்களைத் தரவும்.

1:01 PM
asalamone said...
Brother Sulthan,

Very nice to read.
Keep it up Brother.

Asalam
Bahrain

2:59 PM
சுல்தான் said...
Thank you Brother Asalamone

3:27 PM
லக்கிலுக் said...
மிக மிக பொறுமையாக, தன்மையாக பதிலளிக்கும் உங்களது பாணி என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது.

அட்டகாசமான பதிவு திரு. சுல்தான்.

4:08 PM
சுல்தான் said...
வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி திரு.லக்கிலுக்

1 comments:

அப்துஸ்ஸலாம் said...

குற்றச்சாட்டுகளை அள்ளி வீசியவருக்கு விளக்கமாகவும் வரம்பு மீறாமலும் பதில் அளித்திருக்கிறீர்கள். சம்பந்தப் பட்டவர்களுக்கு இதெல்லாம் தெரியாதா என்ன? உறங்குபவர்களைத் தான் எழுப்ப முடியும் உறங்குவது போல் நடிப்பவர்களை.....