1. ஸஹ்ர் உணவை பிற்படுத்தி கடைசி நேரத்தில் (பஜ்ர் அதானுக்கு பத்து நிமிடம் முன்பு) உண்டீர்களா?
2. பஜர் தொழுகையை அதன் குறிப்பிட்ட நேரத்தில் அதற்குரிய சுன்னத் தொழுகையோடு தொழுதீர்களா?
3. காலைப் பொழுதிற்கான திக்ரை செய்தீர்களா?
4. ஐந்து நேரத் தொழுகையையும் அதனதன் முதல் நேரத்தில் சரியாகத் தொழுதீர்களா?
5. ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் வரையறுக்கப்பட்ட திக்ரை செய்தீர்களா?
6. ஒரு நாளுக்குரிய 13 ரகஅத் சுன்னத்தையும் தொழுதீர்களா?
7. முஸ்லீம் உம்மத்துக்காக குனூத் அல்லது துஆ செய்தீர்களா?
8. உங்களது தாய், தந்தைக்காக துஆ செய்தீர்களா?
9. இன்று ஏதாவது ஒரு நன்மையை ஏவினீர்களா?
10. இன்று ஏதாவது ஒரு தீமையைத் தடுத்தீர்களா?
11. பர்ளான தொழுகையை ஒன்றுக்கு மேற்பட்ட நேரங்களில் பள்ளியில் ஜமாஅத்துடன் தொழுதீர்களா? (ஆண்களுக்கு)
12. குர்ஆனின் ஒரேயொரு வசனத்தையாவது அதன் பொருளோடு படித்து, அறிந்து, உணர்ந்தீர்களா?
13. ஏதாவது ஒரு புதிய ஹதீஸை அதன் பொருள் விளக்கத்தோடு படித்து அறிந்தீர்களா?
14. குறைந்த அளவாக குர்ஆனின் ஒரு பக்கமாவது ஓதினீர்களா?
15. கற்றல் அல்லது கேட்டலின் மூலம் அறிவைப் பெருக்க முயன்றீர்களா?
16. நீங்கள் சரியாக கடைபிடிக்காத ஒரு புதிய சுன்னத்தை கடைபிடித்தீர்களா?
17. ஒரு முஸ்லீமின் மகிழ்ச்சிக்காவது காரணமாய் இருந்தீர்களா?
18. உங்களுடைய பெற்றோரை மகிழ்வித்தீர்களா? அவர்களை ஆரத்தழுவி முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தினீர்களா?
19. யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் இருந்தீர்களா? யாரையும் பற்றி புறம் பேசாமல் இருந்தீர்களா?
20. யாரைப்பற்றியும் வீணாண, தவறான எண்ணங்கள் வராமல் தங்கள் மனதை தூய்மையாக வைத்தீர்களா?
21. அனுமதிக்கப்பட்டதா இல்லையா என சந்தேகமான விஷயத்தை விட்டும் தவிர்ந்து கொண்டீர்களா?
22. உங்கள் உடல் நலத்தில் இயன்ற அளவு கவனம் செலுத்தினீர்களா?
23. தர்மம் செய்தீர்களா? (பொருளால்)
24. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அல்லது அதன் பாதிப்புக்கு எதிராக எதாவது செய்தீர்களா?
25. ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹி அலைஹி வஸல்லம் அவர்களுக்காக பிரார்த்தித்தீர்களா?
26. பாவமன்னிப்புக்காக தவ்பா மற்றும் இஸ்திஃபார் செய்தீர்களா?
27. இந்த தீனுக்காக குறைந்தது 10 நிமிடங்கள் உழைத்தீர்களா?
28. உங்களுக்கும் அல்லாஹ்வுக்கும் மட்டுமே தெரிந்த வகையில் ஏதாவது ஒரு நன்மையான காரியத்தை மறைவாகச் செய்தீர்களா?
29. உங்களுடைய உணவிலிருந்து உங்களை அடுத்துள்ளோருக்கும் நோன்பு திறக்க உதவினீர்களா?
29a. உண்ணும் போதும் பருகும்போதும் வீண் விரயங்களை தவிர்த்தீர்களா?
30. நோன்பை அதன் முதல் நேரத்தில் துரிதப்படுத்தி திறந்தீர்களா?
31. அஸர் நேரத்து திக்ரை செய்தீர்களா?
32. இரவுத் தொழுகையை (அல்லது தராவீஹ்) தொழுதீர்களா?
33. உங்கள் மரண சாசனத்தை எழுதினீர்களா? அல்லது அதில் செய்ய வேண்டிய மாற்றங்களை செய்தீர்களா?
34. இறப்பு மற்றும் மறுமை வாழ்க்கையைப் பற்றி சிந்தித்தீர்களா?
35. தஹஜ்ஜத் நேரத்தில் குறைந்தது இரண்டு ரகஅத்களாவது தொழுதீர்களா?
36. வித்ரு தொழுகையை தொழுதீர்களா?
37. உங்களுடைய சுவர்க்க வாழ்வுக்காகவும், நரக மீட்சிக்காகவும் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தீர்களா?
38. உளு உடைய நிலையிலேயே உறங்கச் சென்றீர்களா?
39. எந்த மனிதர் மீதும் கெட்ட எண்ணம் ஏதும் இல்லாத நிலையில் உறங்கச் சென்றீர்களா?
வெள்ளிக்கிழமைக்கு (கூடுதலாக)
40. சூரா கஹ்ப் (குகை) அத்தியாயத்தை ஓதினீர்களா?
41. உங்களை அழகு படுத்திக் கொள்ளவும் அதை சரிவர தொடர்வதற்காகவும் கூடுதல் கவனம் செலுத்தினீர்களா?
42. ஜூம்ஆ தொழுகையை அதன் முதல் நேரத்தில் தொழும் சிறந்த கூட்டத்தில் உங்களை இணைத்துக் கொண்டீர்களா?
43. இன்றைய குத்பாவில் கூறப்பெற்ற விஷயத்தைப் பற்றி குறைந்தது பத்து நிமிடங்களாவது சிநதித்தீர்களா?
ஒரு வாரத்துக்கு - சிறப்பாக
1. குர்ஆனிலிருந்து ஒரு கால் பக்கமாவது மனனம் செய்தீர்களா?![]()
2. தேவையுள்ள யாருக்காவது உணவு மற்றும் துணிகள் கொடுத்தீர்களா? யாருக்காவது ஏதும் அன்பளிப்புகள் வழங்கினீர்களா?
3. இறைத்தூதுவரின் ஹதீஸ்களிலிருந்து ஏதாவதொன்றை மனனம் செய்தீர்களா?
4. இறைத்தூதுவரின் சுன்னத்திலுள்ள ஏதாவது ஒரு துஆவை மனனம் செய்தீர்களா?
5. வேறுபட்டு பிரிந்துள்ள இரு மனிதர்களின் இதயங்கள் அன்பினால் இணைய உதவினீர்களா?
ரமதானில் சரி பார்க்க தினப்படிவம்
உண்மையை விரும்பாத அறிவிலிகளா!?
நான் சுல்தான் என்ற பெயரில் பதிவை ஏற்படுத்தி சில இடுகைகளை இட்டிருக்கிறேன். அந்தப் பதிவிலிருந்த சில இஸ்லாமிய இடுகைகளை தனியே எடுத்து இந்த பதிவைத் தொடங்கினேன். இஸ்லாத்தைப் பற்றிய தவறான கண்ணோட்டத்தை நீக்குவதற்காக என்னால் இயன்ற முயற்சிதான் இப்பதிவு. தேவையுள்ளவர்கள் அவ்வப்போது வந்து படிக்கிறார்கள். யாரோ ஒரு நண்பர் இன்று லிங்க் கொடுத்ததால், இதைப் பார்வையிட்ட ஒருவருக்கு அல்லது ஒரு குழுமத்திற்கு, இந்த பதிவு பிடிக்கவில்லையென்றால் மூடிக் கொண்டு போக வேண்டியதுதானே. என் இந்த பதிவை ஸ்பேம் என்று ரிப்போர்ட் செய்திருக்கின்றார்கள்.
அந்த நல்ல உள்ளங்களுக்கு ஏற்பட்ட வயிற்றெறிச்சலில்தான் நான் உறங்கிப் போனது தெரிந்தது. அவர்கள் வயிற்றெறிச்சலை வளர்க்க இனி அடிக்கடி இங்கேயும் எழுத முயற்சிப்பேன். டைஜின் போன்ற மாத்திரைகளை கொஞ்சம் தாராளமாக கைவசப்படுத்திக் கொள்ளுங்கள்.
என் நண்பர் ஒருவர் அவர் நண்பரோடு பத்தாண்டுகளுக்கும் மேலாக ஒரே அறையில் வசித்து வந்தார். பின்னர் நம் நண்பரின் நண்பர் வாழ்வின் முன்னேற்றம் வேண்டி கனடா போய்ச் சேர்ந்தார். அங்கே போன ஓரிரு ஆண்டுகளில் அவர் இஸ்லாத்தை தம் வாழ்வியலாக ஏற்றார். சில மாதங்கள் கழித்து அவர் நம் நண்பருடன் போனில் பேசும் போது தாம் முஸ்லீமான விடயத்தையும் தெரியப் படுத்தினார்.
அப்போது நம் நண்பர், "ஏனப்பா இவ்வளவு ஆண்டுகள் என் கூட இருந்தாய். இவ்வாறு ஒரு நாட்டமுள்ளது எனக்கு தெரியவுமில்லை. நீர் சொல்லவுமில்லையே" எனக் கேட்டபோது, அவரோ, "நான் இவ்வளவு ஆண்டுகள் உன்னுடன் இருந்தும் நீ என்றாவது இஸ்லாத்தைப் பற்றி எனக்குச் சொல்லி இருக்கிறாயா? நீ சொல்லி இருந்தால் எனக்குள் இந்த மாற்றம் முன்னமே நடந்திருக்கலாம். சொல்ல வேண்டியது உனக்கு கடமையில்லையா? ஆனாலும் இறைவன் எனக்கு இப்போதுதான் நாடியிருக்கிறான் போலிருக்கிறது" என்று சொன்னாராம். அதைக் கேட்டதிலிருந்து என் நண்பர் பல நாட்கள் தவித்தது போலவே, நானும் சில நாட்கள் தவித்திருக்கிறேன்.
என்னுடைய கடமை எடுத்துச் சொல்வது மட்டும்தான். ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பத்தில் உள்ளது. நேர்வழி கொடுக்கக் கூடியவன் இறைவன் ஒருவன்தான்.
இறைவனின் நாட்டப்படி இனி தொய்வின்றி தொடத் தொடர முயற்சிப்பேன்.
அன்புடன்
சுல்தான்
ஜிஹாதி
இந்தியர்கள் பல்வேறு வகைகளில் தனித்துவம் வாயந்தவர்கள். நம் நாட்டில் முக்கியமான நான்கு நம்பிக்கையாளர் மத்தியிலும் சிலர் தீவிரவாதிகளாக உள்ளனர். கஷ்மீரில் முஸ்லீம்கள், நாகலாந்தில் கிறித்துவர்கள், பஞ்சாபில் சீக்கியர்கள், அஸ்ஸாமில் உல்பா இந்துக்கள். மாவோயிஸ்டுகளுக்கும் நக்ஸல்களுக்கும் தீவிரவாதமே துணை. இதல்லாது முக்கியமாக காவி ஹிந்துத்வ தீவிரவாதிகள்.
நேர்மையான போரை ஜிஹாத் என்றும், அநீதியாக வன்முறை மூலம் ஒன்றுமறியாத அப்பாவிகளின் மேல் இழைக்கப்படும் கொடுமையை பஸாத்(Fasaad) என்றும் குர்ஆன் தெளிவாக வரையறுத்துள்ளது. நாட்டிலே குழப்பம் விளைவிப்பவன் பஸாதி. எவனொருவன் ஒரு மனிதரை நியாயமின்றி (பஸாத் மூலம்) கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான் மேலும், எவரொருவர் ஓர் உயிரை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்' எனச் சொல்கிறது குர்ஆன்(வசனம்32 சூரா5).
இஸ்லாமிய பார்வையில் குழப்பம் விளைவித்தல் கொலையைப் போன்றது. அதற்கு அதன் கடுமைக்கேற்ப கொல்லப்படுதல், அல்லது தூக்கிலிடப்படுதல், அல்லது மாறுகால் மாறு கை வாங்கப்படுதல், அல்லது நாடு கடத்தப்படுதல் போன்ற நான்கு விதமான விதமான தண்டணைகளை குர்ஆன் பரிந்துரைக்கிறது.
குழப்பம் விளைவிக்கும் ஒரு பஸாதி தன்னை ஜிஹாதி எனச் சொல்லிக் கொள்வதன் மூலம் முஸ்லீம்கள் மத்தியில் தன்னை நியாயப்படுத்திக் கொள்ளப் பார்க்கிறான். இவர்கள் மக்களுக்கு மத்தியில், குறிப்பாக முஸ்லீம்களுக்கும் ஹிந்துக்களுக்கும் மத்தியில் வெறுப்பை விதைப்பதற்காக குர்ஆன் வசனங்களுக்கு தவறான பொருள் தருகின்றனர். ஹிந்துத்வாக்களும் அதையேதான் செய்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் இரு பிரிவாருக்கிடையில் எந்த வேற்றுமையும் இல்லை.
இறை நம்பிக்கை சார்ந்த விடயங்களில் இரு பிரிவாருக்குள் வேறுபாடுகள் தோன்றி விட்டல் அதில் தீர்ப்பு சொல்லும் அதிகாரம் மனிதனுக்கில்லை அது இறைவனுக்குரியது. "லா இக்ரா பித்தீன் - மார்க்கத்தில் எந்த நிர்ப்பந்தமுமில்லை" என்பதும் "லகும் தீனுக்கும் வலிய்யத்தீன் உங்கள் மார்க்கம் உங்களுக்கு என் மார்க்கம் எனக்கு" என்பதும்தான் இஸ்லாத்தின் வழி. கத்தோலிக்க புலனாய்வுக்குப்பின் வெளியேற்றப்பட்ட ஸ்பெயின் நாட்டு யூதர்களுக்கு உதுமானிய சுல்தான்கள் தங்க இடம் கொடுத்தது தற்செயலாக நடந்ததல்ல. மேற்சொன்ன குர்ஆனின் நெறி.
முஸ்லீம் பெயர் தாங்கிகள் நடத்தும் சண்டைகள் எல்லாம் ஜிஹாத் ஆகி விடாது. எவ்வித உலக இலாபங்களையும் நாடாமல் இறைவனிடம் நன்மையை பெறுவதை மட்டுமே குறியாகக் கொண்டு செய்யப்படும் எல்லா நல்லறங்களும் ஜிஹாத் தான். உண்மை அறிஞனுடைய நீதிக்கான பேச்சும், எழுத்தும், பொருள் உள்ளவர்கள் வறியவர்களுக்காகவும் நன்மையான வழிகளில் தர்மமாக செலவு செய்வதும் தன்னைத்தான் தூய்மையாக்கிக் கொள்ளுதல் எனும் பெரும் ஜிஹாத் ஆகும். சிறிய ஜிஹாதுகளில் உள்ளவைதான் போர்கள்.
தம் உளத்தூய்மைக்காக செய்யப்படும் ஜிஹாதைப் போல யார் வேண்டுமானாலும் ஜிஹாத் எனும் போர் அழைப்பை செய்ய முடியாது. இஸ்லாம் கடுமையான நிபந்தனைகளுடன் போரை அனுமதித்துள்ளது. அங்கே நம்பிக்கைத் துரோகம், தவறான வழிகளில் கொள்ளையடித்தல், உடல்களை சிதைத்தல், முதியோர், பெண்கள், குழந்தைகள், அப்பாவிகள் ஆகியோரைக் கொல்லுதல், மரங்களை வெட்டுதல், உணவுக்காக அன்றி ஆடு மாடுகளைக் கொல்லுதல் போன்ற யாவும் கடுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. ஜிஹாதும் பயங்கரவாதமும் ஒன்றாகி விடாது.
ஒரு நாடு தாருல் இஸ்லாம் ஆக இல்லாமல் தாருல் ஹர்ப் ஆக இருந்தால் அங்கே போர் செய்ய இஸ்லாத்தில் அனுமதியுள்ளது. முஸ்லீம்கள் தங்கள் மார்க்கத்தை பின்பற்ற முடியாதவாறு பிற மத ஆட்சியாளர்களால் துன்புறுத்தப் பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு நாடு இருந்தால் அந்த நாடுதான் தாருல்ஹர்ப். மொஹலாயர் வீழ்ச்சிக்குப்பின் மராட்டியர்களும் இராஜபுதனத்தாரும் ஆட்சி செய்த காலம் கூட தாருல்ஹர்ப் எனச் சொல்லப்படவில்லை. முஸ்லீம்களும் அவர்களும் ஒருவருக்கொருவர் உதவியாளர்களாகத்தான் இருந்தனர்.
நமது இந்தியா சோசலிச நாடு ஹிந்து நாடில்லை. நமக்கு முஸ்லீம் தனியார் சட்டத்தை நடைமுறைபடுத்திக் கொள்ளும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. முஸ்லீம்கள் தங்கள் இஸ்லாமிய நம்பிக்கை படி வாழ நமது அரசியல் நிர்ணயச்சட்டம் உரிமை வழங்கியுள்ளது. மறுக்கப்படும் நமது உரிமைகளுக்காக நாம் நடத்தும் சிறு சிறு போராட்டங்களால் எல்லாம் நாடு தாருல் ஹர்ப் நிலையை அடைந்து விட்டதாக யாரும் நினைத்து விடக்கூடாது.
நீதியும் நியாயமும் மக்களை சமமாகப் பாவித்தலுமே குர்ஆன்படியான வாழ்வு முறையாகும்.
ஜிஹாத் எனச் சொல்லிக் கொண்டு பயங்கரவாதம் செய்வோர் எல்லாம் ஜிஹாதிகளில்லை பஸாதிகள்(வெறும் குழப்பக்காரர்கள்)தான்.
தருமி ஐயாவின் வினாக்களுக்கு என் விளக்கங்கள் கடைசி பகுதி
4)//"அவன் படைத்த மனிதர்களாகிய நமக்குள்ளேயே பிறப்பாலோ, செல்வத்தாலோ அல்லது தொழிலாலோ உயர்வும் தாழ்வும் கற்பிக்காதவனாக இறைவன் வேண்டும்."
இக்கூற்றும் சரியாக எனக்குத் தோன்றவில்லை. பார்க்குமிடமெல்லாம் வேற்றுமைகள் நிறைந்த உலகமாகத்தானே இருக்கிறது. படைப்பினில் எல்லோரும் ஒரே மாதிரியாகவா இருக்கிறோம்? இல்லையே!//
ஆம். வேற்றுமைகள் நிறைந்ததுதான் உலகம். படைப்பில் அனைவரும் ஓரே மாதிரியாக இருப்பதில்லை என்பதும் உண்மைதான்.
ஆனால் அவன் படைத்த இந்த வேற்றுமைகளின் அடிப்படையில், அவனது முன்னிலையில், மனிதர்களில் உயர்ந்தவர்கள் தாழந்தவர்கள் என்ற பேதமிருக்கக் கூடாது.
இஸ்லாத்தில், இறைவனது முன்னிலையில், மேற்கூறிய வேற்றுமைகளின் அடிப்படையிலான உயர்வு தாழ்வு இல்லை.
5)//"பூமியும் வானமும் அவனது ஒரே வார்த்தைக்குள் ஆகும்"
பின் எதற்கு 6 நாட்கள் படைப்பிற்கு - அதுவும் ஒவ்வொன்றாய்? பின் கடவுள் ரெஸ்ட் எடுத்ததாகவும் உள்ளதே!//
கடவுள் ரெஸ்ட் எடுத்ததா:
இறைவனுக்கு ஓய்வு தேவைப்படாது என்று இஸ்லாம் சொல்கிறது.
ஏனெனில் அவன் ஓய்வெடுக்கும் நேரத்தில் மனிதர்களுக்கு ஏற்படும் தேவைகளை யாரிடம் கேட்பது என்ற கேள்வி எழுகிறதல்லவா?.
பின் எதற்கு ஆறு நாட்கள்?
குர்ஆன் அத்தியாயம் 7 வசனம் 54 மற்றும் அத்தியாயம் 10 வசனம் 3லும் அல்லாஹ் வானங்களையும் புமியையும் ஆறு நாட்களில் படைத்ததாக கூறுகிறான்.
இறைவன் முடிவெடுத்து செய்கின்ற ஒன்றில் கேள்வி கேட்கிற உரிமை யாருக்கும் இல்லை. ஏன் அவ்வாறு செய்தான் என்பது அவனுக்கே வெளிச்சம்.
அவ்வாறு அவன் படைத்ததால், நடைமுறை வாழ்க்கையில் அதனால் மனிதர்களுக்கு எந்த கெடுதலும் வரப்போவதில்லை.
அவன் சக்தியை அவன் கூறும் போது,; 'மறுமையில் அவனுடைய ஒரு கைப்பிடிக்குள் பூமி அடங்கும்' என்றும் சொல்கிறான். பார்க்க குர்ஆன் அத்தியாயம் 39 வசனம் 67
6)(அ)//"தாடி வைக்க வேண்டுமென்று இறை கட்டளை உள்ளதால்..."
இதைக் கூட கட்டளையாகக் கடவுள் கொடுப்பாரா?//
வாழ்வின் அனைத்து நிலைகளுக்கும் இஸ்லாம் சில வழிமுறைகளை விதித்துள்ளது. சில கட்டளைகளை வலியுறுத்தி சொல்கிறது. சிலவற்றை தேவையானால் ஏற்று நடக்கச் சொல்கிறது.
சிறுநீர் கழிப்பதில் கூட (மற்ற மனிதர்களுக்கும், அவருக்கும் துன்பமேற்படக் கூடாதென்பதற்காக) சில வழிமுறைகளை சொல்கிறது.
இஸ்லாம் வெறும் சடங்கும் சம்பிரதாயமும் கொண்ட மதமல்ல வாழ்வியல்.
6.(ஆ)தாடி இல்லாதவர்கள் முழு முஸ்லீம்கள் இல்லையா?
தாடி இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்ட சுன்னத்.
நிர்ப்பந்தங்களினால் ஒரு முஸ்லீம் தாடி வைக்கவில்லையென்றால் அவர் குற்றம் பிடிக்கப்பட மாட்டார். தகுந்த காரணமேதுமின்றி ஒருவர் தாடி வைக்காது விட்டால், அவர் ஒரு சுன்னத்தை விட்ட குற்றமிழைத்தவராவார். அது அவருக்கும் இறைவனுக்கும் மத்தியிலுள்ளதாகும்.
7அ). //"இஸ்லாத்தை ஏற்று அம்மார்க்கத்தை சரியாகப் பின்பற்றியவர்களுக்கு பரிசாக சொர்க்கமும், இஸ்லாத்தை நிராகரித்தவர்களுக்கு தண்டனையாக நரகமும் வழங்கப்படும் என்று எவ்வித ஒளிவு, மறைவு இல்லாமல், வெளிப்படையாக இஸ்லாம் கூறுகிறது."
"You are either with us or with them". 9/11 -க்குப் பிறகு ஜார்ஜ் புஷ் சொன்ன இந்த வாக்கியத்தின் பொருளை நான் விளக்க வேண்டியதில்லை. மதத்தின் பெயரால் ஒசாமா செய்ததால் அந்த மதத்தையும், மதத்தைச் சார்ந்தவர்களையும், விரோதிகளாக அவர் பார்த்தார்; அதே போல்தான் எல்லோரும் பார்க்க வேண்டும் என்றும் எதிர்பார்த்தார். அவரின் இந்தக் கூற்றுக்கு உலகத்தின் பல நாட்டவரும், பல நாட்டுத் தலைவர்களும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். அவரைப் பொருத்தவரை அவருக்குச் சரியானதாகத் தோன்றும் ஒன்று, உலகத்தில் எல்லோருக்கும் அதே போல்தான் தோன்ற வேண்டுமென அவர் எதிர்பார்த்ததை உலகம் ஒப்புக் கொள்ளவில்லை. இல்லையா?அதாவது, நீ அந்தப் பக்கமா, இந்தப் பக்கமா என்பதை வைத்துதான் உன் மறு வாழ்க்கையும், அதற்குரிய பரிசு / தண்டனையும் தீர்மானிக்கப் படும்.
இந்த புஷ்ஷின் கருத்திற்கும், மேலே சொல்லியுள்ள இஸ்லாமியக் கருத்திற்கும் - ஒன்று மனிதன் கூறியது; இன்னொன்று கடவுளால் கூறப்பட்டதாக நம்பிக்கையாளர்களால் கருதப்படுவது என்பதைத் தவிர. இரண்டுமே கருத்துக்கள் என்ற வரையில் ஒன்றுதானே? ஆனால் ஒன்றை தவறென்று கூறி, இன்னொன்றை எப்படி புனித வார்த்தையாகக் கொள்ளுவது?//
ஒரு சில உதாரணங்களின் மூலம் இதற்கு பதிலளிக்கலாம் என எண்ணுகிறேன்.
i. கம்பெனியில்: நன்றாகவும் சரியாகவும் வேலை செய்தால் நல்ல சம்பளமும் பணியில் உயர்வும் தரப்படும். தவறாகவும் குறைவாகவும் வேலை செய்தால் சம்பளக்குறைப்போடு பணி உயர்வும் தரப்படாது என்கிறார்கள்.
ii. கல்லூரியில்: சரியான முறையில் வந்து, ஒழுங்காக நடப்பவர்களுக்கு internal assessmentல் நல்ல மதிப்பெண்கள் தரப்படும். சரியாக வராமலும், வந்தால் தகராறு செய்பவர்களுக்கும் குறைந்த மதிப்பெண்களே கிடைக்கும் என்கிறார்கள்.
iii. பள்ளியில்: ஒழுங்காக படித்து நல்ல முறையில் தேர்வெழுதினால் தேர்ச்சி அடைவதோடு வாழ்க்கையிலும் முன்னேறலாம். சரியாக படிக்காமல் தேர்வில் சரியாக எழுதாமல் இருந்தால் தேர்வடைவதிலும் வாழ்வில் முன்னேறுவதிலும் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்கிறார்கள்.
iv. கொள்ளையன் ஒருவன்: என்னோடு சேர்ந்து அந்த வங்கியை கொள்ளையடித்தால் வெகு விரைவில் நிறைய பணம் கிட்டும், மகிழலாம். யாராவது வர மறுத்தால் அவர்களை நான் உதைப்பேன், வலிதான் கிடைக்கும் என்கிறான்.
மேற்கூறப்பட்ட நான்குமே "You are either with us or with them" என்ற ஜார்ஜ் புஷ் வாதத்தைப் போன்றதுதானா தருமி ஐயா.
ஒன்று போல தோற்றமளித்தாலும், அந்தந்ந விடயங்களுக்கு தகுந்தாற் போல் பொருள் மாறுபடும். திருடன் சொல் ஆணவமாகவும் தவறானதாகவும் மற்றவை நேர்மையானதாகவும் இருக்கிறது. எனவே சிந்தனையைப் பயன்படுத்தி நாம்தான் முடிவெடுக்க வேண்டும்.
7ஆ). //However, my Q is based on the VIOLENCE in the words. whether it is aimed at fidels or infidels it is a very violent statement - a divine violence towards human beings.
a god need and should not bother whether a man reaches him through path A or B ... man should reach him, that is all what it should be.//
இதற்கும் சில உதாரணம் மூலமே விளக்க நினைக்கிறேன் ஐயா.
ஆயிரக்கணக்கானோர் பணிபுரியம் ஒரு நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவர் இருக்கிறார். அவருடைய நிறுவனத்தின் சில ஊழியர்கள் அவரை விட்டு விட்டு வேறொருவரை உரிமையாளர் என்கின்றனர். அல்லது, ஒரு கடைநிலை ஊழியர், உரிமையாளர் அமர வேண்டிய இடத்தில் அமர்ந்து கொண்டு, உரிமையாளர் போன்ற ஆணையிடுகிறார் எனக் கொள்வோம்.
உண்மையான உரிமையாளரால் அதை ஏற்றுக்கொள்ள முடியுமா?
இன்னும் சரியாக விளங்குவதற்காக ஒரு கடுமையான உதாரணம் தருகிறேன். (முகம் சுளிக்க வேண்டாம். கடுமை என நினைப்பவர்களும், பெண்களும் மன்னிக்கவும்.)
தம் மனைவி, மகிழ்வோடு இருப்பதைத்தான் நல்ல கணவன் விரும்புகிறான். அதற்காக ஒருவனது மனைவி வேறொரு ஆணிடம் படுக்கை சுகம் காண்கிறாள். கணவனுக்கும் அவ்விடயத்தில் குறை வைப்பதில்லை எனக் கொள்வோம். எந்த நல்ல ஆண்மகனும்/கணவனும் இதை ஏற்றுக் கொள்வானா? மனிதனுக்கே இவ்வளவு ரோஷம் இருக்கிறதே!
இறைவன் அன்பானவன்தான் ஆனால் ரோஷமில்லாதவனில்லை. மனிதனை விடவும் பலகோடி மடங்கு ரோஷமானவன். "அல்லாஹ் எதை வேண்டுமானாலும் தான் நாடினால் மன்னிப்பான் ஆனால் படைத்தவனாகிய தன்னை விடுத்து, வேறெதையும் இறைவனாக எடுத்துக் கொள்வதை மட்டும் மன்னிப்பதேயில்லை" என்று இஸ்லாம் கூறுகிறது.
என் அறிவுக்கு எட்டிய வகையில் பதிலளித்திருக்கிறேன். இறைவனே மிக அறிந்தவன்.
தருமி ஐயாவின் வினாக்களுக்கு என் விளக்கங்கள் (பகுதி-2)
[ பகுத்தறிவு தீர்ப்பளிக்கட்டும் என்ற தலைப்பில் நான் எழுதிய பதிவில் தருமி ஐயா சில கேள்விகள் கேட்டிருந்தார். விரிவாக விளக்கமளிக்க வேண்டிய கேள்விகளாக இருப்பதால், பதிவின் நீளம் கருதி, தனிப்பதிவுகளாக இட்டு வருகிறேன். விளக்கங்களின் பகுதி ஒன்று அங்கிருக்கிறது. இது இரண்டாம் பகுதி]
3. //"மனிதனுக்கு மேலாக சர்வ வல்லமை பொருந்திய ஒரு சக்தி உண்டென்று பகுத்தறிவு சொல்கிறது"
இந்தக் கூற்று எனக்குத் தவறாகத்தெரிகிறதே. பொதுவாக பகுத்தறிவு சொல்கின்றது என்று எதை ஒன்றையும் குறிப்பிடுவது தவறாக ஆகிவிடும் என்று நினைக்கிறேன். ஆளாளுக்கு மாறுபடக்கூடிய விஷயமாக பார்க்கிறேன்.//
பொதுவாக 'பகுத்தறிவு சொல்கிறது' என்று சொல்வது தவறாக ஆகி விடும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். இந்த விடயத்தில் என் பகுத்தறிவு எதைச் சொன்னதோ அதையே வேறொரு அறிஞரும் சொன்னார். அதனால் அதை என் பகுத்தறிவு ஏற்றுக் கொள்ளத் தயங்கவில்லை. அது என்னவென்று நான் சொல்கிறேன். மற்றவர்களின் பகுத்தறிவு இதற்கு மாற்றமாக இருக்கிறதா என்று அவரவர்கள் முடிவு செய்யட்டும்.
நாம் உருவாக்கப்பட்டுள்ள விதம், இயங்குவதற்கேற்ற மனித உடலமைப்பு, மனிதர்களின் மாறுபட்ட மன நிலை, புவி மற்றும் வான வெளி, விடாது மாறி மாறி வரும் இரவும் பகலும்,
சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், கோள்கள் போன்றவற்றின் ஒழுங்கமைப்பு மற்றும்
கட்டுக்கோப்பான அதன் இயக்கங்களும் தானாகவே வந்ததா?
மனித மூளையின் கட்டுப்பாட்டில் இல்லாத அவற்றின் நிர்மாணத்தையும், அவற்றின் ஒழுங்குகளையும், இயக்கங்களையும், கற்பனையில் கொண்டு வந்து கணிக்கக்கூட இயலவில்லை. மனிதனால் கணிக்கவியலாத இவையனைத்தும் தானாகவே வந்திருக்க முடியுமா? தற்செயலாக நிகழ்ந்தவையா?
பத்து நிறங்களில் பல கோலி குண்டுகளை எடுத்து, ஒவ்வொரு நிறத்துக்கும் ஒரு எண்ணாக 1 முதல் 10 வரை இலக்கமிட்டு, ஒரு பையினுள் போட்டு, கண்ணை மூடிக்கொண்டு, ஒழுங்கான வரிசையில் ஒன்றன் பின் ஒன்றாக 1 முதல் 10 வரை எடுப்பதற்கு உண்டான வாய்ப்பு, நிகழ்தகவு (Probability) படி, சுமார் இரண்டரை கோடி தடவைகளில் ஒன்று என்று சொல்கிறார்கள். எனில், சூரியனிலிருந்து தானாக தூக்கி எறியப்பட்ட ஒரு பொருள் (Big Bang theory) இத்தனை வகையான ஒழுங்குகளோடு அமைக்கப்பட, நிகழ்தகவின்படி வாய்ப்புகள் எத்தனை? Big Bang என அது தானாக வந்ததா? அல்லது ஒரு வல்லமை பொருந்திய சக்தி தூக்கியெறிந்து பின்னர் அதை ஒழுங்குற வடிவமைத்ததா?
சிறந்த வடிவமைப்புள்ள ஒரு உயர்ந்த கட்டிடம், ஒரு பெரிய விமானம், ஒரு ராக்கெட், ஒரு சேட்டிலைட், பெரிய கப்பல், ஒரு வாகனம் அல்லது பாலமொன்றை நீங்கள் பார்ப்பதாகக் கொள்வோம். உடனடியாக அதை வடிவமைத்துக் கட்டிய கம்பெனி அல்லது பொறியாளரைப் பற்றி மனது சிந்திக்கும்.
இந்திய அணுகுண்டு தொழில் நுட்பம் பற்றி சிந்தித்தால் குடியரசுத்தலைவர் அபுல்கலாம் நினைவுக்கு வரும் அல்லது ஸ்ரீஹரிகோட்டா சென்று ராக்கெட் வடிவமைக்கும் இடத்தை பார்வையிட்டால் உடனடியாக அவற்றை வடிவமைத்த அறிவியல் அறிஞர்களையம் பொறியியலாளர்களையம் நாம் சிந்திப்போம்.
இப்போது,
மனித மூளையைப் பற்றி சிந்தியுங்கள். எப்படி அது சிந்திக்கிறது? இயங்குகிறது? தகவல்களை திரட்டுகிறது? சேகரிக்கிறது? தேவைப்படும்போது சரியானதை பிரித்து எடுத்துத் தருகிறது? ஒன்றோடொன்றை தொடர்பு படுத்துகிறது? இவையனைத்தையும் ஒரு வினாடியின் ஆயிரத்திலொரு பங்கு நேரத்தில் எப்படிச் செய்கிறது? அதையும் எப்படி தொடர்ந்து செய்து கொண்டேயிருக்கிறது? இந்த மூளைதான் வான் முட்டும் கட்டிடங்களையும், விமானத்தையும், ராக்கெட்டையும், சேட்டிலைட்டையும், கப்பலையும், பாலத்தையும் இன்ன பிற காண்பவற்றையும் வடிவமைத்தது - தொழில் நுட்பத்தை உருவாக்கியது! மனித மூளையைப் பற்றி மேலும் சிந்தியுங்கள். அதை யார் இத்தகைய ஒழுங்குடன் உருவாக்கியது?
இதயத்தை பற்றி சிந்தியுங்கள். சுமார் அறுபது அல்லது எழுபது ஆண்டுகள் இடைவிடாமல் தொடர்ந்து எவ்வாறு மனித உடலுக்குள் குருதியைப் பெற்று, அதை உடலின் எல்லா பாகங்களுக்கும் தொடர்ந்து எவ்வாறு இறைத்துக் கொண்டேயிருக்கிறது?. அது அம்மனித வாழ்நாள் முழுதும் தொடர்ந்து எவ்வாறு இயஙகிக் கொண்டேயிருக்கிறது?
சிறுநீரகத்தின் பணிகளை சிந்தித்துப் பாருங்கள். அது மனித உடலின் சுத்தப்படுத்தும் இயந்திரம். அது ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து, நூற்றுக்கணக்கான வேதி வினைகளைப் புரிந்து, இரத்தத்தை பகுத்தாய்ந்து, மனித உடலின் நச்சுப் பொருட்களின் அளவை கூடாமல் கண்காணிதது வருகிறது. இவையனைத்தையும் அது தொடர்ந்து தானாகவே நடத்திக் கொண்டே இருக்கிறது.
உங்கள் கண்களைப் பற்றி சிந்தியுங்கள். அது மனித கேமரா. தீர்மானித்தல், focus செய்தல், என்னவென்று மதிப்பீடு செய்தல், மூளையை அறியச்செய்தல், தேவையான அளவு நிறங்களை வழங்குதல், வெளிச்சத்தின் அளவுக்கேற்றவாறு தன் உள் வெளிச்சத்தை கூட்டுதல் அல்லது குறைத்தல், தூரத்துக்கேற்றவாறு சரி செய்து கொள்ளுதல் ஆகிய இவையனைத்தையும் தானாகவே செய்து கொள்கிறது.
இவற்றையெல்லாம் யார் உருவாக்கியது என சிந்தியுங்கள். அவற்றின் எஜமானன் யார்? இவ்வாறு இருக்க வேண்டுமென முடிவு செய்தது யார்? யார் அவற்றின் பணிகளை ஒழுங்குற நிர்வகிக்கிறார்கள்? மனிதர்கள் தமக்குத் தாமே செய்து கொண்டார்களா? நிச்சயமாக இல்லை.
இனி இந்த அண்டம், பேரண்டம் இவைகளைப் பற்றி சிந்தியுங்கள். இப்புவியானது நமது சூரியக்குடும்பத்திலுள்ள(solar system) ஒரு கோள்(planet). பால் வீதியிலுள்ள(milky way) பல குடும்பங்களில் நமது சூரியக்குடும்பமும் ஒன்று. நமது பால்வீதி என்பது பால்வீதி மண்டலத்தி(galaxy)ல் உள்ள ஒரு நட்சத்திரக் கூட்டம்(constellation). இது போன்று பல இலட்சக்கணக்கான பால் வீதி மண்டலங்கள் அறியப்படாமலேயே இருக்கின்றன. (நமது சூரியக்குடும்ப ஆராய்ச்சியே இன்னும் முடிவுறாத தூரத்தில்....!) இவையனைத்தும் ஒரு குறிப்பிட்ட ஒழுங்கமைப்பில், இம்மியும் பிறழாமல், தங்களுக்கென வரையறுக்கப்பட்ட பாதையில் தொடர்ந்து நீந்திக் கொண்டேயிருக்கின்றன. அவை தங்கள் பாதையில் முரண்படுவதுமில்லை. மோதிக்கொள்வதுமில்லை. இவற்றை மனிதர்களா அவற்றின் பாதையில் மிதக்க விட்டார்கள்? இம்மியும் பிறழாமல் செல்ல வடிவமைத்தார்கள்?. நிச்சயமாக இல்லை.
இனி கடல்கள், மீன்கள், பூச்சிகள், பறவைகள், தாவரங்கள், பாக்டீரியா, இன்னும் அறியப்படாத, நாம் கண்டுபிடித்து வைத்துள்ள மிக உயர்ந்த கருவிகளாலும் காண முடியாத பல கோடி வேதிப்பொருட்கள் என்பனவற்றை சிந்தித்துப் பாருங்கள். எனினும் இவையனைத்தும் தங்களுக்கென விதிக்கப்பட்டுள்ள விதிப்படி இயங்கிக் கொண்டுதானிருக்கிறது என அறிவியல் சொல்கிறது.
ஒரே நேரத்தில் நிகழ்கிற, ஒன்றுக்கொன்று தொடர்புடைய, ஒன்றோடொன்று பொருந்துகிற, சமன்செய்யப்பட்ட, இத்தகைய திட்டங்கள், அவற்றைப் பராமரித்தல், அவைகளில் ஏற்படும் மாற்றங்கள், செயல் ஒழுங்குகள் இன்னும் முடிவுறாத எண்ணிறந்தவைகள் ஆகிய இவையனைத்தும் தானாகவே, தற்செயலாக உண்டாயிருக்குமா?
அவை நிரந்தரமாக, தவறின்றி, ஒழுங்கு குலையாமல் நடைபெறுவதும் தானாக, தற்செயலாக நடப்பதுதானா?
அவை தொடர்ந்து மறு உற்பத்தி செய்து கொள்வதும், பராமரித்துக் கொள்வதும், தானாகவே, தற்செயலாகவே நடைபெறுவதுதானா?
நிச்சயமாக இருக்க முடியாது.
தானாகவே தற்செயலாகவே வந்தது என்று நினைப்பது பொருத்தமற்றதாகவும் முட்டாள்தனமாகவும் என் பகுத்தறிவுக்குத் தோன்றுகிறது.
அது எவ்வாறு வந்ததென்று இருந்தாலும், குறைந்த பட்சம் மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்டது என்றும், இவையனைத்தையும் திட்டமிடவும், படைக்கவும், சீராக்கவும், பாதுகாக்கவும் அறிவு படைத்த, சர்வ வல்லமை பொருந்திய ஒரு சக்தியாலேயே இவையனைத்தும் ஏற்படுத்தப்பட்டதாகவும் என் பகுத்தறிவு சொல்கிறது.
அவரவர்கள் தத்தமது பகுத்தறிவை தட்டி முடிவு கேட்டுக் கொள்ளுங்கள்.
இதைத்தான்,
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது இன்னும் அல்லாஹ். ஓவ்வொன்றின் மீதும் மிகுந்த சக்தியுடையவன். நிச்சயமாக வானங்கள் மற்றும் பூமியை படைத்திருப்பதிலும், இரவும் பகலும் மாறி மாறி வருவதிலும் சிந்தித்து உணருவோருக்குப் பல சான்றுகள் இருக்கின்றன. சிந்தித்துணரும் அத்தகையோர் நின்று கொண்டும், படுத்துக் கொண்டும,; ஒருக்களித்துப் படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினைத்து, வானங்கள் மற்றும் பூமியின் படைப்பை ஆழ்ந்து சிந்தித்து, 'எங்கள் இரட்சகனே! நீ இவற்றை வீணுக்காக படைத்து விடவில்லை. உனக்கு இணையாக்கப்படுபவை அனைத்தையும் விட நீ மிகவும் தூயவன், நரக நெருப்பின் வேதனையிலிருந்து எங்களை காத்தருள்வாயாக!' என்று பிரார்த்திப்பார்கள். (அத்தியாயம் 3ல் 189 முதல் 191 வரை உள்ள வசனங்களின் கருத்துகள்)
என்று குர்ஆன் கூறுகிறது. இன்னும் பல நூற்றுக்கணக்கான வசனங்களில் மனிதனை சிந்திக்க அழைக்கிறது.
(பதிவு நீண்டதாக இருப்பதால், படிக்க சோர்வேற்படாதிருக்க பகுதி பகுதியாக எழுதுகிறேன். மீதமுள்ள கேள்விகளுக்கு அடுத்த பதிவில் எழுதி, முடிக்கிறேன்)
தருமி ஐயாவின் வினாக்களுக்கு என் விளக்கங்கள் (பகுதி-1)
நான் புதிய வீடு பார்த்து, மாறுவதற்கான முயற்சிகளில், தங்களுக்கு உடனுக்குடன் விளக்கமளிக்க இயலாதிருந்தது. தாமதத்துக்கு வருந்துகிறேன்.
இறைவன் நாடினால், இன்னும் ஓரிரு வாரங்களில் புது இடத்தில் முழுதும் செட்டிலாகி (settle) விடுவேன். அதன் பின், நிலைமை சீராகி விடும் என நம்புகிறேன்.
இனி ஒவ்வொன்றாக உங்கள் கேள்விக்கு வருவோம்.
1. //வன்முறைக்கும் துவேசத்துக்கும் இங்கே இடமேயில்லை. இது உங்கள் கருத்து.
எனது கேள்வி:
ஹ்ல்ரத் அலீ (ரலி): "உலகினில் ஏற்படுகின்ற குழப்பங்களுக்குத் தீர்வு காண அல்லாஹ்வின் வேதந்தான் சிறந்த வழி. ...(தன் அறிவைக்கொண்டு) பெருமையடிக்கிறவன் இதனை (அமல் படுத்தாமல்) விட்டு விட்டால், அல்லாஹ் அவனைத் துண்டு துண்டாக ஆக்கிவிடுவான்.
உங்களது வார்த்தைகளுக்கும், இந்த மேற்கோளுக்கும் உள்ள வித்தியாசம் ஏன்?//
நீங்கள், அலி (ரளி) அவர்களுடைய கூற்றை எடுத்துக்காட்டி, எனது வார்த்தைக்கும், இந்த மேற்கோளுக்கும் வித்தியாசம் என்று கூறியுள்ளீர்கள்.
இதற்கு பதில் சொல்லும் முன், இஸ்லாத்தைப் பற்றிய சிறு அறிமுகம் அவசியமாகும். அப்போதுதான் பதிலின் யதார்த்தம் இயல்பாய் விளங்கும்.
இஸ்லாத்தில் இணைய விரும்புபவர் நன்றாக அறிந்து, யோசித்து முடிவெடுக்க வேண்டும். இந்த உலக வாழ்க்கையே பெரிதென்றும், போதுமென்றும் நம்புபவர்களுக்கு இஸ்லாம் சிறந்த முடிவாக இருக்காது. ஏனெனில், இஸ்லாம் இறப்பிற்கு பின்னுள்ள மறுமை வாழ்க்கையை அடிப்படையாக நோக்குவது. இவ்வுலக வாழ்க்கைதான் நம் மறுமை வாழ்வுக்கு நாமிடுகிற அடித்தளம் என்று இஸ்லாம் கூறுகிறது.
'இவ்வலகத்தின் சுக போக வாழ்வே எல்லாம்' என்று நினைப்பவர்களின் பார்வையில், உண்மையான இறை நம்பிக்கையாளனுடைய இவ்வுலக வாழ்க்கை, சிறை வாழ்க்கையாகவே காட்சி தரும். ஏனெனில் கட்டுப்பாடுகளில்லாத சுகபோக வாழ்க்கையையே மனிதன் ஆசிக்கிறான். இஸ்லாம், வெறும் சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் உள்ளடக்கிய மதமன்று. அது வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் கடைபிடித்தொழுக வேண்டிய நெறிமுறைகளை சொல்லித் தந்து, அதன்படி வாழ வழிகாட்டும் ஒரு உயரிய வாழ்வியல்.
அதனால்தான் இஸ்லாத்தில் முழுதுமாக நுழைந்து விட வேண்டுமென்று இஸ்லாம் பணிக்கிறது. 'ஆற்றில் ஒரு காலும், சேற்றில் ஒரு காலும்' வைத்துக் கொண்டு வாழ்பவர்களால் இஸ்லாம் எதிர்பார்க்கும் உயர்வைப் பெற முடியாது.
நீங்கள் எடுத்துக்காட்டிய மேற்கோள், இஸ்லாத்தை தன் வாழ்வியலாகத் தேர்ந்தெடுத்தவர்களைப் பார்த்துச் சொன்ன நபிகளாரின் வாசகமாகும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு அடிப்படையில் முடிவெடுத்தால் இஸ்லாத்தில் பல பிரிவினைகள் எற்பட்டு மார்க்கம் துண்டு துண்டாகி விடும். உதாரணத்துக்கு: (எந்தவொரு பிரிவினரையும் புண்படுத்துவதோ குற்றம் சொல்வதோ என் நோக்கமன்று)
அ.) கிறிஸ்துவத்தில் ஏகப்பட்ட பிரிவுகள் இருப்பதற்கு முக்கியமான ஒரு காரணம்: அவர்களின் மூல நூலாகக் கொள்ள வேண்டிய பைபிளே பல மாதிரியாக இருப்பதும், அவரவர் கையிலுள்ளதைக் கொண்டு, ஒவ்வொரு குழுவும் தனித்தனி சட்டங்களை உருவாக்கி கொண்டதும்தான்.
ஆ.) இஸ்லாத்தை விளக்கிச் சொல்ல வந்த சில முந்தைய அறிஞர்கள் (போற்றுதலுக்குரிய இமாம்கள்), குர்ஆனையும், அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்களுக்கு கிடைத்த, நபியவர்களின் (வாழ்வும், வாக்கும், ஒப்புதலும்) ஹதீஸ்களையும் அடிப்படையாக கொண்டு சட்டங்களை அமைத்துச் சென்றனர். 'எமக்குக் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் சட்டமியற்றினோம். ஆதாரங்களை நோக்காமல் வெறுமனே எம் சட்டங்களை நோக்கலாகாது. இதைவிட சிறந்த ஆதாரங்கள் கிடைக்குமிடத்து எம் சட்டங்களை தூக்கியெறிந்து விட வேண்டும்' என்றும் சொல்லிச் சென்றனர்.
ஆனால் அவர்களது சட்டங்களை எடுத்துக் கொண்ட முஸ்லீம்களில் சிலர், (குர்ஆனும் எல்லா ஹதீஸ்களும் தரம் பிரிக்கப்பட்டு புத்தக வடிவில் கிடைக்கும் இந்நாளிலும்) அவர்கள் கூறிய அடிப்படையை விட்டதால், இஸ்லாத்தின் ஒரு சில உள் சட்டங்களினுள் சில வித்தியாசங்களை ஏற்படுத்தி விட்டனர். இந்த மாயை, தற்போது விளக்கப்பட்டு, விலகிக் கொண்டிருக்கிறது.
எனவே அச்சமூட்டி எச்சரிக்கை செய்ய வந்த நபிகளார், முஸ்லீம்கள் தங்களிடையே ஏற்படும் எல்லா பிணக்குகளுக்கும் பூசல்களுக்கும் தீர்வை, அடிப்படையான குர்ஆனைக் கொண்டே பெறச் சொல்கின்றனர். அவ்வாறு தீர்ப்பளிக்காவிட்டால் மக்கள் சிதறுண்டு விடுவார்கள். அதனால் அவ்வாறு தீர்ப்பளிக்காதவர்கள் இறப்பிற்கு பின்னுள்ள மறுமை வாழ்வில் இறைவனால் தண்டிக்கப்படுவார்கள் (நொறுக்கப்படுவார்கள்) என்று எச்சரிக்கிறார்கள்.
இஸ்லாமிய பார்வையில் குழப்பம் விளைவித்தல் கொலையைப் போன்ற கொடுமையானது. இஸ்லாம் தவறு செய்தவர்களுக்கு தவறுகளுக்கேற்ப மறுமையின் தண்டணையை கடுமையாக்கியுள்ளது.
இதிலே இவ்வுலகின் வன்முறையையும் துவேசத்தையும் குறிப்பிடவில்லை. மாறாக, இறப்பிற்கு பின்னுள்ள மறுமை வாழ்வின் தண்டணையைப் பற்றி குறிப்பிடுகிறது.
(நீங்கள் மேற்கோள் காட்டீய ஹதீஸ் திர்மிதீ என்ற நூலில், நபியவர்கள் அவ்வாறு சொன்னதாக அலி (ரளி) அவர்கள் கூறியதை ஹாரிஸ் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள். தாங்கள் நூல் குறிப்பிடாததால், இதைத் தேடுவதில் புகாரீ, முஸ்லீம் ஹதீஸ் கிரந்தங்களில் ஓரிரு நாட்கள் வலம் வந்தேன்.)
2. //"அது அல்லாத (வேறு கிரந்தத்)தில் நேர்வழியைத் தேடுபவரை வழிதவறச் செய்து விடுவான்." இஸ்லாத்தில் எவ்வித நிர்பந்தமுமில்லை என்பதும் இதன் அடிப்படைகளில் ஒன்று.//
'இஸ்லாத்தில் எவ்வித நிர்ப்பந்தமுமில்லை' என்பதை தாங்கள் தவறாகப் புரிந்து கொண்டு விட்டீர்களோ என ஐயுறுகிறேன் ஐயா!
உண்மை (எனும் நேர்வழி) எது! பொய் (எனும் தவறான வழி) எது! என பிரித்தறிவிக்கப்பட்டு, தெளிவுபடுத்தப் பட்டுள்ளது. அதை முயற்சி செய்து அறிந்து, தெளிந்து, அதன் மூலம், நேர்வழி அல்லது தவறான வழி இரண்டில் எதை வேண்டுமானாலும் ஒருவர் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அவரவர் தேர்ந்தெடுத்து வாழ்ந்த வாழ்க்கைக்குரிய நன்மை, தீமைகளை அவர்கள், மறுமை எனும் நிரந்தர வாழ்வில் அனுபவிப்பார்கள் என்பதே இஸ்லாம் கூறுவதாகும்.
எனவே 'இஸ்லாத்தில் நுழைந்தாக வேண்டுமென யார் மீதும் எவ்வித நிர்ப்பந்தமுமில்லை' என்பதே அதன் விளக்கமாகும்.
ஏனெனில், ஒருவர் இஸ்லாத்தில் நுழைந்த பின், தான் தோன்றித்தனமான வாழ்க்கை வாழ்ந்தால் அவர் சிறந்த முஸ்லீமாக முடியாது. வாழ்வின் எல்லா நிலைகளிலும் இஸ்லாமிய வாழ்வியலுக்கு இயைந்த வாழ்க்கை வாழ்ந்தாலே, இவ்வுலகில் அவர் மனிதத்தை நிலை நிறுத்தி புனிதராக வாழ முடியும். (இந்த உண்மையை வாழ்வின் ஒவ்வொரு கோணத்திலும் எங்களால் உணர முடிகிறது. அந்த நல்வழிகளில் வாழ முயற்சிப்பதையே ஒவ்வொரு முஸ்லீமும் தன் வாழ்வின் இலட்சியமாகக் கொள்கிறான்). மறுமையிலும் சிறந்த பயன்களைப் பெற முடியும் என இஸ்லாம் சொல்கிறது.
இஸ்லாத்தினுள் நுழைந்த பின்னர், பல கிரந்தங்களில் நேர்வழியைத் தேடும் ஒருவனால் வழி தவறத்தான் முடியுமே ஒழிய, இஸ்லாம் கூறும் உன்னத வழியை அடைய முடியாது.
இஸ்லாத்தை தேர்ந்தெடுக்கு முன், இஸ்லாம் உள்பட எல்லா வழிகளையும் சோதிக்கலாம். இஸ்லாம்தான் சரியான வழி என்று தேர்வு செய்து, நுழைந்த பின் அதில் உறுதியுடன் வாழ வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும்.
(விடயம் நீண்டதாக இருப்பதால், படிக்க சோர்வேற்படாதிருக்க பகுதி பகுதியாக எழுதுகிறேன்.)
அரபிக்குதிரையால் ஏமாந்த ஏமாறாதவன்
ஏமாறாதவன் என்ற பெயரில் எழுதும் வலைப்பதிவரின் இந்த பதிவுக்கு என்னுடைய பதில் இது.)
வலைப்பதிவர் ஏமாறாதவன், நான் இஸ்லாத்தை வாழ்வியலாக ஏற்றுள்ளதால், எனக்காக மிகவும் வருந்தியுள்ளார். பாவம்.
//பதிவர் திரு.சுல்தான் அவர்கள் சமீபத்தில் இரு பதிவுகளை தந்திருக்கிறார். சவுதிதான் இஸ்லாமா என்று எழுதினார். பின்னர், திருப்தி இல்லாமல் அதன் இரண்டாம் பாகத்தையும் போட்டார். (இதை போட இரவு முழுக்க ஆனதாம். ஏனென்றால், அவர் தரப்பு வாதங்கள் எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை போலும்...)//
தேவையில்லாமல் இஸ்லாத்தை வம்புக்கிழுத்த ஒரு நண்பரின் பதிவுக்கு பதிலாக, என் முதல் பதிவை எழுதினேன். என் பதிவுக்கு அந்த நண்பர் தன் மறுப்பை பதிலாகப் பதிந்த பின், அதற்கு விளக்கமாக, அடுத்தொரு பதிவையும் அது சம்பந்தமாக வெளியிட நேர்நதது. ஏமாறாதவன் என்றால் இதற்கெல்லாம் வம்பு பேசத் தோன்றுமோ!
நான் ஏமாறாதவன் போல் நன்றாக எழுதத் தெரிந்த அறிவாளி இல்லைதான். தமிழில் வேகமாக தட்டச்சு செய்யவும் தெரியாது. இஸ்லாத்தை முழுதும் அறிந்தவனாக மார்தட்டிக் கொள்ளவுமில்லை. ஆதாரமில்லாத விடயங்களை எழுதினால், என் இஸ்லாமிய சகோதரனே என் தலையில் கொட்டுவான். அதனால் சில சமயம் தெரிந்தவர்களிடம் கேட்க நேரிடும் அல்லது தேட நேரிடும். பெரிய பதிவாகி விட்டதனால் தாமதம் ஆனது.
நான் குறிப்பிட்ட நேரம், என் உறங்கும் நேரத்தின் பெரும் பகுதி. இரவின் முழுமை என்பது நான் குறிப்பிட்ட நேரம்தான் என்பது ஏமாறாதவன் போன்ற அறிவாளிகளுக்கே வெளிச்சம்.
//திரு.சுல்தான் அவர்கள் மிகவும் முயன்று இஸ்லாமுக்கு அலங்காரம் செய்து அதன் ஈனங்களை மறைக்கப்பார்த்திருக்கிறார்.
இஸ்லாமின் கோட்பாடுகளின் கோரம் முஸ்லிம் அல்லாத எல்லோருக்கும் தெரியும்.//
இஸ்லாமிய கோட்பாடுகளின் அழகையும், மேன்மையையும், தமது கைகளாலேயே தம் கண்களை மறைத்துக் கொண்டவர்களாலும், தம் இதயங்களை பூட்டிக் கொண்டவர்களாலும் உணர முடியாதுதான். அவரது கைகளில் மறைத்து வைத்திருக்கும் ஈனங்கள்தான், இஸ்லாத்திலும் இருக்குமென நினைந்து, பரிதாபமாக ஏமாந்து நிற்கிறார் ஏமாறாதவன். பாவம். அவர் கண்களும் இதயங்களும் திறக்க இறைவன் அருளட்டும்.
அது போகட்டும்.
//இஸ்லாமிய பல்லாயிரக்கணக்கான அழுக்கின் ஒரு பாகத்தை திரு.சுல்தான் அவர்களின் சப்பைக்கட்டில் படித்தபோது சிரிப்பு வந்தது.//
உங்களுக்கு சிரிப்பு மூட்டிய பகுதிகளைப் பார்த்து, விளக்கம் சொல்லாமல் நீங்கள் மட்டும் சிரித்து, அதை மற்றவர்கள் மரைகழன்ற சிரிப்பாக யூகிக்க விடாதீர்கள். ஏமாறுவீர்கள் ஏமாறாதவன்!.
//அல்லாஹ் அரபிக்களை ஏன் இறைதூதராக தேர்ந்தெடுத்தார் என்று அல்லாஹ் சொல்வதை இந்த நல்ல மனிதர் பார்க்கவில்லை//
அல்லாஹ் என்ன சொன்னார் என்று தெரியாததால் ஏமாந்து விட்டீர்கள் ஏமாறாதவன்.
உலகத்தின் எல்லா பகுதிகளுக்கும் தன் தூதரை அனுப்பியதாகவும், அவனுடைய தூதுவர் வராத சமுதாயமே இல்லையென்றுமல்லவா சொல்கிறான். ஒவ்வொரு சமுதாயத்துக்கும் அவர்கள் பேசும் மொழி பேசக்கூடியவரையே தூதராக அனுப்பியதாக வேறு சொல்கிறான்.
பாவம் ஏமாறாதவன். இன்னும் கொஞ்சம் புரட்டுங்கள். நேர்வழி இன்னதென்று தெரியவும் கூடும்.
//ஒரு சவுதி பெண்ணை ஒரு பங்களாதேஷி கட்ட முடியுமா? இது குறித்து ஷரிய்யா என்ன சொல்கிறது என்று திரு.சுல்தான் அறிவாரா?//
அரபிகளுக்கு, அஜமியை (அரபியல்லாதவர்களை) விடவும், அதுபோல் அரபியல்லாதவர்களுக்கு, அரபியர்களை விடவும் எந்த மேன்மையுமில்லை. அவரவருடைய இறையச்சம்தான் மேன்மையை அறிவிக்கும் என ஷரீயா சொல்கிறது.
இறையச்சமில்லாத அழகான ஆண்மகனை விடவும், இறையச்சமுள்ள ஒரு அடிமை மேலானவன் என்றும் ஷரீயா சொல்கிறது.
அரபிகள் நமக்கு பெண் தராததற்கு காரணம் அப்பெண்களுக்குத் தேவையான வசதிகளைத் தர நம்மால் இயலாது என்பதால்தான். இந்திய மற்றும் பாகி, பங்காளி மக்கள் இஸ்லாம் என்ற பெயரில் செய்யும் அனாச்சாரங்களையும் அவர்கள் வெறுக்கிறார்கள். ஒவ்வொருவரும் தனக்கு அறிமுகமான, நாட்டில் சாதாரணமாக பழக்கத்திலுள்ள, தேவையானால் உடனே சென்று தட்டிக்கேட்கிற அல்லது ஆறுதல் தருகிற இடத்தில்தான் தன் பெண்ளைக் கொடுக்க விரும்புவர். வேறெந்தக் கட்டுப்பாடும் இல்லை.
இதெல்லாம் அரேபியாவில் மட்டுமில்லை, அமைந்தகரையில் உள்ள பெற்றோருக்கும் உள்ள நிலைதான். எல்லா நல்ல பெற்றோர்களும், தன் மகளுக்கு தான் கொடுத்த வசதிகளை விடவும் சிறந்த வசதிகளை தரக்கூடிய நல்ல மணமகனையே தேர்நதெடுக்க முயற்சிப்பர். திருமண வயதுடைய பெண் குழந்தைகள் உங்களுக்கு இருந்தால் அவர்களை ஏமாற்றமல் இருங்கள் ஏமாறாதவன்.
அரபிகளைக் கட்டுமளவுக்கு வசதிகளைப் பெற்றுள்ள நமது நாட்டவர்களும் தன் சுற்றத்திலேயே, தான் மிகவும் அறிந்தவர்களிலேயே, நாட்டில் சாதாரணமாக பழக்கத்திலுள்ளது மாதிரியே, தேவையானால் உடனே சென்று தட்டிக்கேட்கிற அல்லது ஆறுதல் பெருகிற இடமாகப் பார்த்துதான் மணமுடிக்கின்றனர்.
கண்ணைத் திறந்து கொண்டு பேசாமல் உங்கள் சுற்றத்திலேயே தேடுங்கள். நான் சொல்வது கொஞ்சம் புரியக்கூடும். புலம் பெயர்ந்தவர்களில், வேறு வழியில்லாமல், சில விதிவிலக்குகள் இருக்கும். அரபிகளிலும் அது அப்படித்தான்.
என் ஊர் லெப்பைக்குடிக்காடு. எனது ஊரில், எங்கள் தெருவில் வசித்த ஒரு முஸ்லீமுக்கு தன் மகளைத் திருமணம் செய்து கொடுத்தவர் துபையில் உள்ள அரபி. அந்த என் ஊர் சகோதரருக்கு பெண் பிறந்து, அதற்கும் திருமணமாகி, அது சமீபத்தில் குழந்தையும் பெற்று விட்டதாக கேள்வி. அவ்வளவு பழங்கதை இது. இன்னும் அரைத்த மாவையே அரைத்து..... ஏமாந்து..... அலுக்க வில்லையா? ஏமாறாதவன்!.
//இஸ்லாம் அரேபியர்களின் உலக ஆதிக்கத்திற்கான ஒரு இயக்கம் என்பது வெளிப்படை. இஸ்லாமிய மதத்தை விருப்பு வெறுப்பின்றி ஆராயும் எல்லோருக்கும் இது புரியும். அரேபியர்கள் உலக நாட்டாமைக்காக ஏற்படுத்திய ஒரு சூழ்ச்சியே இது என்று தெரிந்ததே//
இனிமேலாவது காய்தல் உவத்தலின்றி இஸ்லாத்தை ஆராய முற்படுங்கள். அதனால் நேர்வழி இன்னதென்று ஏமாறாமல் அறிய வாய்ப்பும் கைவரக்கூடும் ஏமாறாதவன்.
//இஸ்லாமிய மத ஆராய்ச்சியாளர்களில் அண்வர் ஷேக் அவர்களை அறியாதவர்கள் இருக்க முடியாது. அவர் நூல்களை படிக்காமல் இஸ்லாமியர்கள் இருக்க கூடாது என்று கருதுபவன் நான். திரு. சுல்தான் அவர்களைப்போல கண்களை மூடிக்கொண்டிருந்த வேளையில் என் கண்களை திறந்தவர் அவர்//
அன்வர் ஷேக்கை நான் படிக்கவுமில்லை. தற்போதைக்கு ஆர்வமுமில்லை. தேவையேற்படும் போது சொல்லி, வாங்கிக் கொள்கிறேன்.
உங்களுக்கு அம்பேத்கர், அம்பேத்கர் என்று ஒருவர் இருந்தார் தெரியுமா?. தற்போதைய ஆர்.எஸ்.எஸ் தலைவர்களோடு தலைவர்களாக மேடையில் படம் காட்டப்படுகிறதாம்!!. அவர் எழுதிய 'Riddles of Rama & Krishna' படித்துக் காட்டட்டுமா? அல்லது பதிவில் எழுதிக் காட்டட்டுமா?
இதை விடவும் சிறப்பாக 'Oh You Hindu Awake'என்ற தலைப்பில் 'Dr. Chatterjee. M.A., Ph.D. (USA)' அவர்கள் எழுதிய புத்தகம் இருக்கிறது. அது, 'ஓ! இந்துக்களே! விழித்தெழுங்கள்' என்று தமிழிலும் உள்ளது. வாசித்துக் காட்டட்டுமா? அல்லது பதிவுகளில் தொகுதி வாரியாக எழுதிக் காட்டட்டுமா?
இந்தப் புத்தகங்கள், உங்களைப் போன்ற பல பேரின் மூடியிருந்த அறிவுக் கண்ணைத் திறந்ததாம். நீங்களும் அறிவைப் பலப்படுத்திக் கொள்ளவும், கண் திறக்கவும் ஆர்வமாயிருந்தால் சொல்லுங்கள். தமிழிணைய அனுமதியும் பெற்றுத் தாருங்கள். படிக்க, என் கண்களே கூசுகிறது.
உங்களுக்கு இறைவன் கொடுத்த அறிவைப் பயன்படுத்துங்கள். நீங்களே ஆராய முற்படுங்கள். திருக்குர்ஆனும், ஹதீஸ் நூல்களும் தமிழிலேயே கிடைக்கின்றது. இராமாயணம், மகாபாரதம், பகவத்கீதை, மனுஸ்மிருதி முதலிய புத்தகங்கள் கூட தமிழிலும் உள்ளதாம். உதவிக்கு நல்லெண்ணத்தில் எழுதப்பட்ட அறிஞர்களின் ஆக்கங்களைப் பார்வையிடுங்கள். இது போன்ற திமிர் புத்தகங்களை (just for curiosity) படித்தவுடன் குப்பைக்குத் தள்ளுங்கள். கண்டதையும் பார்த்து ஏமாந்ததால்தான் இப்படி ஏமாறாதவன்(!) ஆகி விட்டீர்கள்.
இனியாவது சரியானதைப் படித்து, சரியான முறையில் விவாதியுங்கள். நேர்வழி பெறலாம்.
//பதிவில் எங்கேயோ போய்விட்டேன்//
ஆமாம். உங்களுடன் நானும்.
//திரு.சுல்தான் அவர்கள் இதைப்பார்த்து அதிர்ந்து போனால், மேலே இந்த ஹதீஸையும் பார்க்க வேண்டுகிறேன்//
ஏமாறாதவன் ஆனால் ஏமாந்து விட்டீர்கள்.
இதைப்பார்த்து அதிர்ந்து போக என்ன இருக்கிறது.?!!
முதலில் அறிந்து கொள்ளுங்கள். இஸ்லாம் என்பது இறைவனிடமிருந்து வந்த திருக்குர்ஆன் போதனைப்படியும், திருநபி அவர்களின் சொல், செயல், ஆங்கீகாரம் ஆகியவற்றிலிருந்தும் பெறப்படுவதுதான்.
நீங்கள் ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளது, நபி குழந்தையாக இருக்கும்போது, யாரோ ஒரு பெண் கண்ட கனவும், அதன் படி நடந்தவுடன் கிடைத்த மழையையும் பற்றி இருக்கிறது. அந்தப் பெண் குறிப்பிடும் நபியுடைய பாட்டனார் வெள்ளை நிறத்தவராயிருப்பார் என்று அடையாளமாகச் சொல்கிறார்.
இப்போது இன்னொரு முறை நீங்கள் எழுதியதை நீங்களே படித்துப் பாருங்கள். ஏன் எழுதினோம் என்று உங்களுக்கே கூச்சமாயிருக்கும். பாவம் ஏமாறாதவன்! உங்கள் மீது கழிவிரக்கம்தான் ஏற்படுகிறது.
//வேலூரில் ஒரு இஸ்லாமிய மாநாட்டுக்கு (ஒரு 200 பேர் இருக்கும்..) போயிருந்தேன்//
உங்களைப் போன்ற எண்ணமுள்ளோரை 'ஏதோ சொல்லப் போகிறார்கள். நாமும் போய்ப் பார்ப்போமே, கேட்போமே என' ஈர்த்ததே அந்த மாநாட்டின் வெற்றி என்றும் சொல்லலாம்.
அவர்கள் எந்த மாதிரியெல்லாம் விளம்பரம் செய்தார்கள் என்று சொன்னால், அடுத்த எங்கள் கூட்டத்துக்கு அந்த முயற்சியும் செய்கிறோம். உங்களை போன்ற பத்து பேரை திருத்த முடியுமா என்று பார்க்கலாம்.
//சுல்தான் அவர்களே, இந்த இன வெறியை பாருங்கள். பாப்பான் தோத்தான் இங்கு!!//
நானும் முதலில் விபரம் தெரியாமல் 'பார்ப்பனர்' என்றுதான் எழுதினேன். பாப்பான் என்றால் அவமரியாதை பார்ப்பனர் என்றால் அவ்வாறில்லை என நினைத்தேன். அதன் பின் ஒரு நண்பர் திருத்தினார். அவர்களை பிராமணர்கள் என்றழைப்பதையே அவர்கள் சரி காண்கின்றனர் என்று.
அதன் பின்னர் அவ்வாறே எழுதுகிறேன். தேவையில்லாமல் சிலருடைய மனதை வருந்தச் செய்வதெதற்கு?
அது சரி. நீங்களே பாப்பான் என்று எழுதுகிறீர்களே. பரவாயில்லையா?.
//இஸ்லாமிய கலீபாவுக்கு ஏற்ற தகுதிகளை இஸ்லாமிய சட்டத்தின்படி பார்ப்போமா...//
இதில் நீங்கள் முக்கியமென்று தடித்த எழுத்துக்களில் போட்டுள்ளதும் அதற்கு முன்னுள்ள வரியினதும் பொருள்
நபியவர்கள். தன்னுடைய உரையில்
உலக முடிவு நாள் வரும் வரை
1. இஸ்லாம் இருந்து கொண்டேயிருக்கும் அல்லது
2. 12 கலீபாக்கள்தான் வருவார்கள் அவர்கள் குறைஷி வம்சத்தவராயிருப்பர்.
என்று கூறினார்கள்.
இந்த 2வது விஷயத்தை கீழுள்ள மாதிரியும் எடுக்கலாம். அரபி தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெளியுங்கள். அதாவது உலக முடிவு நாள் வரை 12 குறைஷிக் கலீபாக்கள்தான் தோன்றுவர்.
இந்த மூன்றில் எதை எடுப்பது?. எதை எடுத்தாலும் அதற்கு கூடுதல் ஆதாரங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
உலக முடிவு நாளுக்கு சில காலம் முன்பு வரை இஸ்லாம் இருக்கும் என்று பல ஹதீஸ் உள்ளது. அதனால் அதை எடுத்தக் கொள்வோமே.
எனவே, நீங்கள் எழுதிய
//பெண்களை இழிவுபடுத்தும் இந்த சட்டம் ஒருபக்கம் இருக்கட்டும். அடிமைத்தனத்தை இன்றும் தூக்கி வால் பிடிக்கும் இந்த சட்டம் இருக்கட்டும். ஆனால், இஸ்லாத்தை ஆள ஒரு அரபி (அதுவும் முகம்மதுவின் சாதிதான் வேண்டுமாம்...) வேண்டும் என்பது எதற்காக//
என்பதெல்லாம் அபத்தங்களின் கூட்டுக்கலவை என்றாகி விட்டது. பாவம் சார் நீங்க. அடுத்த தடவை நிறைய home work செய்யுங்க. உங்கள் மூலம், அதாவது உங்களுக்கு நான் பதிலெழுதுவதன் மூலம், பல பேர் பயனடைய வாய்ப்பாயிருக்கும்.
//சவுதியின் தெருக்களில் குப்பை வாரும் ஆயிரக்கணக்கான அரபியல்லாத முஸ்லிம்கள் எப்போதுமே அரேபியர்களின் மலங்களை அள்ளுவதே அல்லாஹ்வுக்கு பிரியமானது.//
பெட்ரோல் வருவதற்கு முன், அவன் மலத்தை அவன்தான் அள்ளினான். இப்போது அவனிடம் இருக்கும் வசதிக்கு அது அவசியமில்லாமல் போய் விட்டது.
ஆனால் பாருங்கள். சொகுசுக் கழிவறைகளில் மலம் சுத்தப்படுத்திய அவனும், அவனுடைய முதலாளியும் உயர்வு தாழ்வில்லாமல் ஓரே தட்டில் உணவருந்துவதையும் (நோன்பு காலங்களில் சவூதிப் பள்ளிவாயில்களில் சாதாரணமாகக் காணக்கிடைப்பது), தொழும்போது உயர்வு தாழ்வின்றி அவன் தோளோடு அவன் தோளைச் சேர்த்து, அவன் காலோடு அவன் காலை உரசி நின்று தொழும் அதிசயத்தை. இதைத்தான் இஸ்லாம் உலகுக்குச் சொல்லி, செயல்படுத்துகிறது.
வசதி குறைந்தால், நாளை அவனும் சுத்தம் செய்ய நேரிடும். யாருக்காகவும் (அல்லது ஒரு குழவினருக்கு) இவ்வேலையை இஸ்லாம் ஒதுக்கி வைத்துள்ளது எனக் கூறுவது அயோக்கியத்தனமானது.
உங்களின் இந்த வாதம், தன் தலை முழுவதிலும் அப்பி இருக்கும் மலத்தை மறந்து (அல்லது மறைக்க), உன் காலின் பின்புறம் மண் ஒட்டியிருக்கிறதென்று ஏளனம் செய்வதைப் போன்றுள்ளது.
ஏமாறாதவனாய் இருந்தால் போதாது. மற்றவர்களை ஏமாற்றதவானாகவும் இருக்க வேண்டும் நண்பரே.
//அல்லாஹ் அரேபியர்களை மற்ற இனத்திரை விட மேலாக தேர்ந்தெடுத்தான்' என்று சொன்னதாக ஹதீஸ்களில்//
எந்த ஹதீஸ் புத்தகம். ஆங்கிலத்திலுள்ள சட்டம் நான்கில் பாதியைப் போட்டு மீதியை விழுங்கியது போல் தோன்றுகிறது.
அரபியல்லாதவரைவிட அரபிக்கு எந்த உயர்வுமில்லை, இறையச்சம் கூடுதலாய் இருந்தாலே தவிர. அதே போல, அரபியை விட அரபியல்லாதவருக்கும் எந்த உயர்வுமில்லை இறையச்சம் கூடுதலாய் இருந்தாலே தவிர என்ற கருத்தில் வரும் நபிமொழி, தெளிவாக மேற்கண்ட கூற்றை மறுத்துக் கொண்டிருக்கிறது.
//இதனால், இந்த அரேபிய இனவெறியை கொண்ட இஸ்லாம் ஹிட்லரின் நாஸியியக்கத்தை ஒத்தது//
எது? ஒவ்வொரு சமுதாயத்துக்கும் நபிமார்களைத் தேர்தெடுக்கும்போது அந்த சமுதாயத்தின் நல்ல குலத்திலிருந்து (தலையிலும், மூக்குச்சளியிலும் பிறந்ததனால் வந்த உயர் குலம் இல்லை. தான தர்மங்கள், மற்றவர்களுக்கு உதவுதல் போன்ற பண்பாட்டில் உயர் குலம்), நல்ல மனிதரை இறைவன் தேர்நதெடுப்பதாக நபி அறிவிக்கிறார்கள். இதில் என்ன தவறிருக்கிறதென்பதை ஏமாறாதவன்தான் தெளிவுபடுத்த வேண்டும்.
இதுதான் ஹிட்லரின் நாஜியிசத்தையும், யூதர்களின் இனவெறியையும் ஒத்ததா? படிப்பவர்கள்தான்
ஏமாறாதவனுக்கு சொல்லித் தர வேண்டும்.
//குரேஷி அரேபியர்களை விரோதிக்கும் எல்லோரையும் அல்லாஹ் தீர்த்துவிடுவாராம். அல்லாஹ்வை அரேபியருக்கு சண்டியர் வேலை செய்ய விட்டு விட்டார்கள்.//
இஸ்லாமிய சரிதத்தை கொஞ்சமும் புரட்டிப் பார்க்காமல், யாரோ எடுத்த வாந்தியை, விழுங்கி, இங்கே துப்பியிருக்கிறீர்கள்.
நீங்கள் ஆங்கிலத்தில் எழுதியதைப் பாருங்கள். கஹ்தான் என்பவரும் அரபிதான் ஆனால் குறைஷிக் குலத்தவரில்லை. இது அரபியருக்கும், அரபியரல்லாதவருக்கும் சொல்லப்பட்டதல்ல. குறைஷிக் குலத்தவர்க்கும் மற்ற அரபிகளுக்கும் சொல்லப்பட்டது.
இஸ்லாத்தின் ஆரம்ப காலங்களில் உயிர், உடைமை, மானம் எல்லாவற்றையும் கூடுதலாக அர்ப்பணித்தவர்கள் குறைஷிகள். அதோடு நிர்வாகத் திறமையும் கைவரப் பெற்றிருந்தார்கள்.
அன்சாரிகளின் தியாகத்தை நான் குறைத்து மதிப்பிடுவதாக பொருளில்லை. ஆனால் குறைஷிகளின் தியாகம் பல மடங்கு உயர்ந்தது. அத்துடன் இஸ்லாமிய விளக்கங்களை கூடுதலாக அறிந்தவர்களாகவும், அர்ப்பணிப்பு மனப்பான்மை கொண்டவர்களாகவும், இறைவனால் சொர்க்கத்துக்கு உறுதியளிக்கப்பட்டவர்களில் கூடுதலாகவும் இருந்தார்கள்.
தென் ஆப்ரிக்காவில் கறுப்பின மக்களுக்காக அதிக தியாகங்கள் செய்த நெல்சன் மண்டேலாவுக்குதான் அதிபர் பதவி தரப்பட்டது. அதுவே எல்லா மக்களின் எதிர்பார்ப்புமாயிருந்தது. இதுதான் உலக இயல்பு. இதுதான் இயற்கை.
(நீங்களும் இலங்கையைச் சேர்ந்தவரா? பொதுவாக சண்டியர் என்ற பதத்தை இந்தக்கருத்தில் இந்திய தமிழர்களாகிய நாங்கள் உபயோகிப்பதில்லை. சேலத்தைப் பற்றியெல்லாம் நீங்கள் எழுதியுள்ளதால், இங்கு நான் சாதாரணமாக இந்தியத் தமிழருக்கு பதிலளிப்பதாகவே எழுதியுள்ளேன்.)
//ஹஜ் என்ற ஒரு அபத்தத்தை ஏற்படுத்தியதும் அரேபியர்களின் பொருளாதாரத்தை மேன்படுத்தவே. (அப்போது பெட்ரோல் இருப்பது தெரியாது...).//
ஹஜ் என்பதை அபத்தமெனச் சொல்வது ஈனத்தனமான, கொச்சை வார்த்தை. வன்மையாக கண்டிக்கிறேன். ஒவ்வொரு வருடத்திலும் குறைந்தது இரண்டரை மில்லியன் முஸ்லீம்கள், அதை தங்களின் வாழ்க்கையில் கிடைத்த, கிடைத்தற்கரிய பாக்கியமாக, உயர்வாக எண்ணி அங்கே செல்கின்றனர். மற்றவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பு தாருங்கள்.
சரி. உங்கள் கேள்விக்கு வருவோம்!.
அப்போதுதான் பெட்ரோல் இருப்பது தெரியாது!. இப்போதுதான் தெரிந்து, வருமானம் தழைக்கிறதே.! வருடா வருடம் ஹஜ்ஜூக்காக ஆட்கள் வந்து, அவர்கள் வழிகாட்டு முறைகளை மீறி, மரணங்களைச் சந்தித்து, அதனால் அந்நாட்டுக்கு அவப்பெயர் வந்து.....,
இதெல்லாம் இல்லாமல், ஒவ்வொரு வருடமும் புதுப்புது ஏற்பாடுகளைச் செய்யாமல், ஒரு தொந்தரவுமில்லாமல் மூடி விடலாமே.
அந்த வருமானத்துக்கு பதில் பெட்ரோலை கொஞ்சம் கூடுதலாய் இறைத்தால் போகிறது. அல்லது துபை போல் தங்கள் நாட்டையும் வணிக மையமாக்குவதன் மூலம், வருமானத்தை பெருக்கிக் கொண்டு இருக்கலாமே.
ஏன் அவ்வாறு செய்வதில்லை என்பதை நல்ல கண்களுடன் பார்க்கப் பழகுங்கள். திருந்த வாய்ப்பிருக்கிறது.
//இதை திரு.சுல்தான் அவர்கள் சிந்தித்து இந்த அடிமை கோட்பாட்டை தகர்த்து எறியுமாறு கேட்டுக்கொள்கிறேன்.//
இஸ்லாம் என்பது நியாயமான, நீதியான, அனைவரையும் சமமாகப் பாவிப்பதாக உள்ள வாழ்க்கைத் திட்டம். ஆதலால், நீங்கள்தான், பிறந்து விட்டதால் போற்றுகின்ற, இதுவரை மாற்று வழியைப்பற்றி சிந்திக்கவே மறுத்த, உங்கள் எண்ணக் கோட்பாட்டை தூக்கி எறிய முயற்சிக்க வேண்டும் நண்பரே. எது எல்லா மனிதர்களுக்கும் நன்மை பயக்குமோ அதையே நாமிருவரும் தேர்ந்தெடுப்போம்.
உங்களுக்கும் எனக்கும் 'நேர்வழி இன்னதென்று அறியவும் - அதன்படி நடக்கவும், தீயது எது என்று அறியவும் - அதை விட்டு விலகவும்' அந்த ஒப்புவமையற்ற இறை அருளட்டும். நன்றி.
Posted by சுல்தான் at 12:48 PM
Labels: அரபிக்குதிரை, ஏமாந்த ஏமாறாதவன்
13 comments:
தப்பிப் பிறந்தவன்> said...
//..உங்களின் இந்த வாதம், தன் தலை முழுவதிலும் அப்பி இருக்கும் மலத்தை மறந்து (அல்லது மறைக்க), உன் காலின் பின்புறம் மண் ஒட்டியிருக்கிறதென்று ஏளனம் செய்வதைப் போன்றுள்ளது.
..//
சரியான பதிலடி கொடுத்திருக்கிறீர்கள் சகோ. சுல்தான் அவர்களே.
யார் யாருடைய மலத்தையெல்லாம் ஏமாந்து போய் தலையில் திணிச்சு வச்சுக்கிட்டு பேர மட்டும் ஏமாறாதவன் -ன்னு வச்சுக்கிட்டு பேஸ்த் அடிச்ச மாதிரி நிற்கிறார் இந்த நபர்.
இஸ்லாத்தை பார்த்து 'ஏமாறாத அதி புத்திசாலி' நண்பரே, நீங்கள் எந்த கொள்கையை ஏற்றுக் கொண்டிருக்கிறீர் என்று சொல்லத் தயாரா? இஸ்லாத்தை விட நீர் ஏற்றுக் கொண்ட கொள்கை எப்படி உசத்தி என்பதையும் சொல்ல முடியுமா? வெளியில கவுரமா சொல்லிக்கிற மாதிரி கொள்கைதானே அது?
இந்த தகவல்களையெல்லாம் கொஞ்சம் சொன்னேள்னா உங்க தலையில அப்பி இருக்குறது என்னன்றதை நாங்களும் கன்பர்ம் பண்ணிக்கலாமோல்லியோ?
-தப்பிப் பிறந்தவன்
(எங்க நாட்டில 85%த்தினருக்கு கிடைக்காத ஒரு அரிய வாய்ப்பு எனக்கு பிறப்பிலேயே கிடைத்ததால்..)
3:18 PM
சுல்தான் said...
வருகைக்கு நன்றி தப்பிப்பிறந்தவன்
3:22 PM
சுல்தான் said...
லக்கிலுக் கூறியது. (கை தவறி ரிஜெக்ட் ஆயிடுச்சு)
ஏமாறாதவன் போன்றவர்கள் காலத்துக்கும் இப்படித்தான் பேசுவார்கள். உங்கள் பண்பான பதில் அவர்களது மழுங்கிப்போன மூளைக்கு ஏறப்போவதில்லை. தயவுசெய்து அவர்களை கண்டுகொள்ளாமல் விட்டு விடுங்கள்
வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி லக்கிலுக்.
அவர் மாறினாலும், மாறாவிட்டாலும், அவர் போன்ற எண்ணமுள்ளவர்களுக்கு கருத்துக்கள் போய்ச்சேருமே. நன்றி
3:29 PM
அழகு said...
பாவம் தமிழ்மண அனாதை!
3:55 PM
சுல்தான் said...
வருகைக்கு நன்றி அழகு
3:57 PM
Anonymous> said...
Mr. emarathavan, you are wasting your time chaning typical muslim mentality. I had been in Saudi for many years I understood this long ago. Arabs are very very egoistic people. Read my blog for more info
10:34 PM
முஸ்லிம் said...
இஸ்லாத்தை ஆராய்ந்து எதுவும் கிடைக்காமல் ஏமாந்தவன் இப்போ அன்வர் ஷேக்கை அறியாதவர் யாரும் இருக்க முடியாதுன்னு முஸ்லிம்களை ஏமாத்த கிளம்பி இருக்கிறார்.
என்னத்தை சொல்ல..... எமாந்தவனின் மிக மட்டமான பிதற்றல்களையும் மிக நேர்த்தியாக எதிர் கொண்டு பதிலடி தரும் சுல்தான் தொடர்ந்து எழுதுங்கள்.
10:15 AM
சுல்தான் said...
வருகைக்கு நனறி அனானி. உங்கள் பிளாக் முகவரி தரவில்லையே!
வருகைக்கு நன்றி முஸ்லீம் அவர்களே. தங்களின் தொடர்ந்த ஊக்கப்படுத்துதல், எம்மை தொடர்ந்து எழுதத் தூண்டுகிறது. நன்றி
2:21 PM
சுவனப்பிரியன் said...
//உங்களுக்கும் எனக்கும் 'நேர்வழி இன்னதென்று அறியவும் - அதன்படி நடக்கவும், தீயது எது என்று அறியவும் - அதை விட்டு விலகவும்' அந்த ஒப்புவமையற்ற இறை அருளட்டும். நன்றி.//
Best comments
Suvanappiriyan
5:36 PM
சுல்தான் said...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுவனப்ரியன்.
12:40 PM
ஆப்படிப்பவன்> said...
//சுல்தான் said...
வருகைக்கு நனறி அனானி. உங்கள் பிளாக் முகவரி தரவில்லையே!
//
அது தெரியாத உங்களுக்கு. காய்கறி.ப்லோக்ஸ்பாட்.காம்.
2:12 PM
asalamone said...
சுல்தான் அவர்களுக்கு,
உங்களுடைய ஒரு பதிவில், இரவு முழுவதும் இருந்து,கண் முழித்து,அடுத்த நாள் வேலைக்கு செல்லும் நிலைமையில் இருப்பதாகவும் இருக்கும் நிலைமயில் நீங்கள் எழுதியதைபார்த்து, இந்த சுல்தானை இத்துடன் பதிவு எழுதுவதேயே ஓரம் கட்டி விடலாம் என்று தான் நண்பர் ஏமாறாதவன் காட்டமான சொல்களை சொல்லி ஓரம் கட்டி விடலாம் என்று நினைத்து கடைசியில் ஏமாறாதவன் இப்பம் ஏமாந்து நிற்கிறார்.
வல்ல இறைவன் நாட்டம் இருந்தால் ஏமாறாதவன், இனியும் ஏமாறும் கூட்டதில் இருந்து தன் கொள்கைகளை மாற்றிக்கொள்வார் என நினைக்கிறோம்.
2:41 PM
சுல்தான் said...
வருகைக்கு நன்றி அஸலம்ஒன்.
2:58 PM
நண்பன் said...
சுல்தான்,
இந்த அன்வர் ஷேக் என்பவர், தன் அரைகுறை புரிதல்களுடன், எதையாவது எக்குத் தப்பா சொல்லி வைத்தால், பிரபலமாகி விடலாம் என்ற எண்ணத்துடன் ஒரு பத்து வருடங்களுக்கு முன்பாக ஒரு புத்தகம் எழுதினார் - "Islam - An Arab National Movement" என்ற பெயரில்.
இந்த அன்வர் ஷேக்கின் தாத்தா ஒரு காஷ்மீரி பண்டிட். அவர் காலத்தில் முஸ்லிமாக மாறினார். பின்னர் தந்தையர் காலத்தில் அவர்கள் புலம் பெயர்ந்து இங்கிலாந்து சென்று விட்டனர். அவர் முழு மூச்சாக வியாபாரத்தில் ஈடுபட்டு, நன்றாக சம்பாதித்த பின்னர், வியாபாரத்தை விட்டு விட்டு, புத்தகம் எழுதத் தொடங்கினார். கொழுத்த பணம் இருந்தால், ஏதாவது ஏடாகூடம் செய்து புகழ் பெற வேண்டும் என்ற நினைப்புடைய மேலை வர்க்க சிந்தனை புகுந்த அவர் மனதில், நியாயமான உணர்வுகள் இருப்பதற்கு வாய்ப்பில்லை.
இஸ்லாத்தை ஒரு அரபிய இயக்கம் என்று தலைப்பிட்டு அவர் வைக்கும் வாதங்கள் எல்லாம் பித்துக்குளித்தனம் தவிர வேறில்லை.
அரபியர்களை முதன்மைப் படுத்த வேண்டும் என்பதற்காகத் தோற்றுவிக்கப்பட்ட மதம் இஸ்லாம் என்று கூறும் அவர், உலகப் பிரசித்தி பெற்ற, நபி பெருமானாரின் இறுதி உரையைப் பற்றி அறிந்திருக்கவில்லை. அத்தனை ஞானம் மிக்கவர்!!!
இதே அரபிகளிடம் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்காக, எத்தனை துயரங்களை முஸ்லிம்கள் அனுபவித்தனர் என்ற தகவல்கள் அற்றவர்.
இஸ்லாமியர்கள் நாடுகளின் எல்லைகள் கடந்து சிந்திக்கின்றனர் - மக்காவை நோக்கித் தொழுகின்றனர் -- காரணம் அரபியர்கள் வாழும் நாட்டை முன்னிலைப் படுத்தவே என்கின்றனர்.
நாடுகளின் எல்லைகளைக் கடந்து சிந்திப்பது இஸ்லாத்தில் மட்டுமல்ல - எல்லா உயர்ந்த நாகரீகங்களிலும் நடந்திருக்கிறது. யாதும் ஊரே, யாவரும் கேளீர் என்ற பாடலை எழுதியவர்கள் அரபிகள் அல்ல, சாட்சாத் நம் தமிழினத்தவர்களே.
உலகம் முழுமையும் ஒரு குடையின் கீழ், என்ற கொள்கையுடன் முயன்ற போர் வீரர்கல் எத்தனை பேர் - மாவீரன் அலெக்ஸாண்டர் என்று கொண்டாடும் வீரன், எல்லைகள் தாண்டிய சிந்தனை, கோடுகளற்ற வரைபடம் இவற்றிற்காகத் தானே முயன்றான்? கடல் சுற்றி, இன்னல் பட்டு, துயரம் மேற்கொண்டு, யூரோப்பியர்கள், கண்டம் கண்டமாக தேடியலைந்தது எதற்காக?
அதை விடுங்கள் - இன்று Global Village என்று உலகை சுருக்கிக் கொண்டவர்கள் யார்? இன்று மாய்ந்து மாய்ந்து எழுதும் இவர்கள் இந்த க்ளோபல் வில்லேஜ் என்ற தத்துவத்தை மாய்ந்து, மாய்ந்து தூக்கிப் பிடிக்கிறார்கள். அவர்கள் டாலர்களை மாற்றி, ரூபாய்களாக விசிறியடிக்கும் பொழுது, இவர்களுக்கு இந்த உலகளாவிய சிந்தனைகள் பிடிக்கின்றன.
இப்படி, எந்த தர்க்க விவாதங்களும் இன்றி, வெறும் பரபரப்பிற்காக, தற்புகழ்ச்சிக்காக எழுதப்பட்ட புத்தகம் - சீந்துவாரின்றி போன புத்தகம். அழுகலைத் தேடி அலையும் பறவை போல், இவற்றையெல்லாம் தேடியெடுத்து வெளியிட என்றே இந்துத்வம் இருக்கையில் இது ஏதோ ஒரு அற்புதமான புத்தகம் என்ற பிரம்மையை எழுப்புகின்றனர் இவர்கள்.
1985லிருந்து இன்று வரை, சென்னை, பெங்களூர், மும்பை, ஹைதரபாத், புதுடில்லி, இப்பொழுது துபாய், ஷார்ஜா, என நான் ஏறி இறங்காத புத்தகக் கடைகளே கிடையாது. இயல்பாகவே விமர்சன புத்தகங்களைத் தேடி வாங்குவது எனது பழக்கம் -
தடை செய்யப்பட்ட Salman Rushdieன் The Satanic Verses மற்றும் தஸ்லிமா நஸ்ரின் - Lajja இவற்றையெல்லாம் கூட வாங்கிப் படித்து விட்டேன். (ஸாடானிக் வெர்ஸஸ் புத்தகத்தை என் மனைவியின் தோழி ஒருவர் அமெரிக்காவிலிருந்து திரும்ப வரும்பொழுது வாங்கி வரச் செய்து,) பாதி படித்ததும் குப்பை என்று திருப்பிக் கொடுத்து விட்டேன்.
ஆனால் இந்த அன்வர் ஷேக் எழுதிய புத்தகம் எங்கும் எனது கண்ணில் பட்டதில்லை. இன்னும் சொல்லப் போனால், புத்தக வியாபாரிகளுக்கு அவர் ஒரு பொருட்டே அல்ல. இந்துத்வ வாதிகளின் கண்களுக்கு மட்டுமே இனியவராக தெரிகிறார்.
மேலும்,
எதற்கெடுத்தாலும், அரபிப் பெண்களை கல்யாணம் பண்ணித் தருவார்களா என்று பெண்களை விலை பேசத் துடிக்கும் இவர்கள் இதன் மூலம் பெண்ணியத்தை எத்தனை கேவலப்படுத்துகின்றனர் என்று அறியவில்லை.
சமத்துவம் என்பதற்காக பெண்களைப் பண்ட பரிமாற்றம் செய்து காட்ட வேண்டும் என்பது எத்தனை இழிந்த புத்தி என்பதை இவர்கள் உணர வேண்டும். எத்தனையோ வழிகளில் சமத்துவத்தைப் பற்றி வாதாட வழி இருக்கையிலே, பெணகளைத் தருவார்களா, என்று கேட்டு, பெண்டாளத் துடிக்கும் இவர்கள் தங்கள் ஆண்மையை இழிவுபடுத்திக் கொள்கிறார்களே அன்றி, அங்கு சமத்துவம் இல்லை.
இதே கேள்வியை அவர்களை நோக்கித் திருப்பிக் கேட்க முடியும், உடன் பிறந்த உள்ளூர்க்காரனிடத்திலே உங்கள் வீட்டுப் பெண்ணை கொடுக்க முடியாத சூழல் இருக்கையிலே, வேற்று ஒரு தேசத்திலே, வேறு வேறு கலாச்சாரப் பின்னணி, உணவு, உடை பழக்கவழக்கங்களைக் கொண்ட மக்கள் பெணகளைப் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கிறார்கள்? (பெண்கள் வாசிக்க நேர்ந்தால், மன்னிக்கவும். இவர்களிடத்தில் இப்படித் தான் பேச முடிகிறது.)
என்றாலும், எத்தனை நிதானம் உங்களிடம்!!!
பாராட்டுகள்
அன்புடன்
நண்பன்
1:03 AM
சுல்தான் said...
அன்பின் நண்பன், தங்களின் வருகைக்கு நன்றி.
தங்களின் மறுமொழியிலிருந்து பல தகவல்களை அறிய முடிந்தது.
என்னுடையதில் இன்னின்ன சிறப்புகள் என்று சொல்வது ஒரு ரகம்.
தான் வைத்திருப்பதில் சொல்ல நன்மையான காரியங்கள் ஏதும் இல்லாமல் (அல்லது தெரியாமல்), உன்னுடையதில் இது தவறு என்று ஒரு புரிதலும் இல்லாமல், தப்பும் தவறுமாகச் சொல்லும் விஷமிகள் இன்னொரு ரகம்.
எல்லாம் அறிந்ததுதானே நண்பனே!.
தங்களின் பாராட்டுக்கும் கருத்துகளுக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி.
நண்பர் ஆரூரன் பதில்களுக்கு என் விளக்கங்கள்
//என்னுடைய பதிவின் கருத்தையும் நோக்கத்தையும் நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டு விட்டீர்கள் என்பது தான்.//
உங்களின் ஆதங்கம் புரிகிறது. உங்கள் நாட்டு முஸ்லீம்களாகிய அவர்களை குறை கூறுவதை விடுத்து, அதற்காக ஒரு பழைய செய்தியை எடுத்துப் போட்டு, இஸ்லாத்தை குறை கூறுவது உங்கள் நோக்கத்துக்கு எந்த வகையிலாவது உதவும் என நினைப்பது வீணில்தான் முடியும் நண்பரே.
//தமிழ் முஸ்லிம்களிடம் காணப்படும் அளவு கடந்த அரேபிய மோகமும், விசுவாசமும், தமது தமிழடையாளத்தை விட்டு, மதத்தால் வந்த அரேபிய அடையாளத்தைச் சிறந்ததாக நினைப்பதும்//
இவ்வாறு உங்களைச் செய்யத் தூண்டுவது எது என்பது பற்றி, உங்கள் நாட்டு முஸ்லீம் நண்பர் ஒருவரிடம் கேட்டேன். அவர் சொல்லியது கீழே.
'நாங்கள் வணிகர்களாக இருந்து, இனத்தோடு இனமாக இருந்து, மற்றவர்களைப்போல, அவர்கள் கேட்டபோதெல்லாம் கொடுத்துக் கொண்டுதானிருந்தோம். அடாவடியாக மிகக்கூடுதலாக கேட்டபோது தர இயலவில்லை. வணிகத்திலிருந்து எப்போதும் பெருந்தொகைகளை எடுத்துக் கொண்டேயிருக்க இயலாது. அதனால் நாங்கள் தனிமை படுத்தப்பட்டு முத்திரை குத்தப்பட்டோம்.
மசூதியில் தொழுது கொண்டிருந்த முஸ்லீம்களை கண்மூடித்தனமாகச் சுட்டு எங்களையும், எங்களின் சிறார்களையும, முதியவர்களையும் கொன்று குவித்து அதை மமதையோடு பெருமையடித்துக் கொண்டது எங்கள் பொது எதிரிகளல்ல - இதுநாள்வரை எங்கள் இனமாக நாங்கள் விரும்பிய அதே குழுவினர்தான்.
எங்களை, எங்கள் பெண்டு பிள்ளைகளுடன், எங்கள் சொந்த வாழுமிடங்களிலிருந்து, சொந்த நாட்டின் அகதிகளாக வெளியேற்றியது எங்கிருந்தோ முளைத்து வந்த எதிரிகளல்ல - இதுவரை என் சகோதரனாயிருந்த எங்கள் இனத்தவர்தாம்.
அவர்கள் முஸ்லீம்களாகிய எங்களை தங்கள் இனமாக நினைத்திருந்தால், சொந்த இனத்திலேயே ஒரு குற்றமுமறியாதவர்களை கொலை செய்யத் துணிவரா?
எங்களை அந்த இனமென்று சொல்லப்படுவதையே இப்போது நாங்கள் வெறுக்கிறோம். எங்களை நீங்கள்; சொல்வதுபோல் எங்களின் வேர்களைத் தேடி அலைய வைத்த குற்றவாளிகள் யார்? ........ ....... ....... (இன்னும் பல, கடுமையான வார்த்தைப் பிரயோகங்களுடன்)'
//நீங்கள் என்னுடைய கருத்தை மறுக்கலாம், ஆனால் நான் இதை என்னுடைய சொந்த அனுபவத்தின் அடிப்படையில் சொல்கிறேன்.//
உங்களுடைய அதே போன்ற வார்த்தையையே நானும் போடுகிறேன். நீங்கள் அவருடைய இக்கருத்தை மறுக்கலாம். ஆனால் நான் அவரிடமிருந்து கேட்டதை மட்டுமே சொல்கிறேன்.
//எந்த விதத்திலும் இஸ்லாமையோ அல்லது எந்தமதத்தையும் ஏளனம் செய்வதல்ல.//
எந்த விதத்திலும் இழிவு புடுத்தவில்லை என்று சொல்லி, இந்தப் பதிவிலேயே ஏளனம் செய்துள்ளீர். அதைப் பின்னால் விளக்குகிறேன்.
//இலங்கையின் தமிழ் முஸ்லீம்கள், மத அடிப்படையில் ஈழத்தமிழர்களின் முதுகில் குத்தியதன் ஆதங்கம், ஆற்றாமை//
அதுவேதான், அதாவது: தமிழ் முஸ்லீம்களின் முதுகில் குத்தியதன் ஆதங்கம், ஆற்றாமை தான் அவர் பேச்சிலும் தொனிக்கிறது.
இதன் உண்மையும் பொய்யும் பற்றி பாதிக்கப்பட்ட நீங்கள் அல்லது அவர்கள் கூடுதலாக அறிவீர்கள். அது பற்றி நான் வாதிட விரும்பவில்லை.
அதற்காக இஸ்லாத்தை இழித்ததால், நான் ஊடே புக நேர்ந்தது.
நீங்கள் இலங்கைத் தமிழராயிருக்கக்கூடும் என்று உங்களது ஓரிரு வார்த்தைகளை வைத்து நான் யூகித்தேன். அதில் உறுதியில்லாததால்தான் இந்தியத் தமிழருக்கு சொல்வது போல் எழுதினேன். இலங்கைத் தமிழராயிருக்கும் பட்சத்தில் மாற்றிப்படிக்கும்படியும், மேற்பகுதியில், கடைசியில் இணைத்தேன்.
உங்களுக்குள் நீங்கள் கலந்து பேசி நல்ல முடிவெடுங்கள். பிரச்னை பற்றியெறியும் இந்நேரத்தில், 'உங்கள் நாட்டுக்குள் ஒரு இனத்துக்குள் உள்ள பிரச்னையில் நல்ல முடிவெடுங்கள். நிம்மதியாக வாழுங்கள்' என்றுதான் நான் கேட்டுக்கொள்கிறேன். என் தமிழினம், தங்களுக்குள் சண்டையிட்டு பிரிந்து விடாமல், சேர்ந்து நல்லிணக்கத்துடன் வாழ வேண்டுமாய் ஏக இறையைப் பிரார்த்திக்கிறேன்.
அடுத்து உங்கள் பதிலுக்கான விளக்கத்தைத் தருகிறேன்.
//சவூதி அரேபியாவையும், அதன் அரசகுடும்பத்திலும், அரேபியர்களிலும், தமது இனமக்களிலுள்ள பாசத்தை விடக் கூடிய பாசமும், விசுவாசமுமுள்ள பல முஸ்லீம்களை எனக்குத் தெரியும், நீங்கள் கூட அதற்கு விதிவிலக்கல்ல.//
அரேபிய மக்களையும் அதன் அரச குடும்பத்தினரையும் பீற்றிக் கொள்ளுமளவுக்கு ஏதுமில்லை என்பதை என் பதிவிலேயே தெளிவு படுத்தியிருக்கிறேன். மீண்டும் ஒரு முறை பார்வையிடவும்.
//சவூதி அரேபியாவின் பெரும்பான்மையான மக்களும், பெரும்பான்மையான அரபுக்களும் வெறுக்கும் சவூதி அரச குடும்பத்துக்கு வக்காலத்து வாங்கும் உங்களின் எழுத்திலிருந்தே அது தெளிவாகிறது.//
இது குறித்து மாய் யமானி கூறியதாக, நீங்கள் கூறியதை 'சரியாகக் கூறுகிறார்' என்றே எழுதியிருக்கிறேன். மீண்டும் ஒரு முறை பார்வையிடவும்.
//உலகமே வெறுக்கும் ஒசாமா பின்லாடனுக்கு ஆதரவளித்து வீதிக்குப் படையெடுத்து ஆர்ப்பாட்டம் நடத்திய முஸ்லீம்கள் இலங்கையிலும், இந்தியாவிலும், பாகிஸ்தானிலும், பங்களாதேசிலும் ஏன், உலகம் முழுவதிலும் உள்ளார்கள். ஒசாமாவைக் கூடத்தான் ஜகத்குரு ( புனிதர்) என நினைக்கின்றனர் பல முஸ்லீம்கள்.//
ஒசாமாவை எந்த முஸ்லீமும் ஜகத்குரு என்றேல்லாம் நினைப்பதில்லை. உலகமே வெறுக்கும் அமெரிக்க ரவுடியிசத்தை, இஸ்லாத்தை வெறுக்கும் அமெரிக்காவாலேயே ஊட்டி வளர்க்கப்பட்ட அவர் தனியாக நின்று எதிர்க்கிறாரே என்று ஒரு ஹீரோவாகத்தான் மதிக்கப்படுகிறார். (ஓசாமாவின் அணுகுமறைகள் சரியானவையா என்பது தனி விடயம்.)
இந்தியாவில் இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்ட இந்துக்களை நான் காட்டினால் இந்து மதமே தவறானது என வாதிக்க நீங்கள் முன் வருவீர்களா?
//சர்வாதிகாரி சதாமுக்காக எத்தனை தமிழ் முஸ்லீம்கள் அழுது வடித்தார்கள் இங்கே. சதாமைக் கூட மாவீரன் என மார்தட்டிய தமிழ் முஸ்லீம்கள் எம்மிடையேயுள்ளார்கள்//
நான் மேலே கூறிய அதே மாதிரி, சதாமையும் அமெரிக்க வில்லத்தனத்துக்கு எதிரான ஒரு ஹீரோவாகத்தான் பார்க்கிறார்கள். திரும்பவும் அதையேதான் கேட்கிறேன்.
அவ்வாறு வாதிட்ட முஸ்லீமல்லாத தமிழர்களை காட்டினால் அதை இந்து மதத்தின் அரேபிய விசுவாசம். இந்து மதத்தின சாபக்கேடு, ஆபத்தானது என்று சொல்வீர்களா? நண்பரே. இப்போதாவது உங்கள் எண்ணத்தில் உள்ள பிழையை உணர முடிகிறதா?
//முஸ்லிம்களுக்கு தமது புனித நகர் மக்கா எந்தளவுக்குப் புனிதமானதோ அதே போல் தான் இந்துக்களுக்கும் அவர்களது புனித நகரங்கள் புனிதமானவை என்பதைச் சில நேரங்களில் முஸ்லீம்கள் மறந்து விடுகிறார்கள் என்பது போல் தோன்றுவது தான் கவலைக்குரிய விடயம்//
உங்களுக்கு தவறாகத் தோன்றுகிறது நண்பரே.
என்னுடைய நிலத்தை அபகரிக்காமல், என்னுடைய வீட்டை இடிக்காமல், எனக்கு எந்தப் பாதகமும் செய்யாமல், உங்களது புனித நகரை நீங்கள் புனிதப்புடுத்தினால் எங்களுக்கு ஆட்சேபணை தெரிவிக்க என்ன இருக்கிறது?. அவ்வாறெல்லாம் முஸ்லீம்கள் உங்கள் புனித நகரங்களுக்கு புனிதம் தருவதை மறுக்கவோ மறக்கவோயில்லை
//அதனால் தான் இந்தியாவுக்கு வெளியிலிருந்து வந்த பல்வேறு மதங்களும் இந்தியாவில் செழித்து வளர்ந்தன. ஆனால் அவை எவ்வளவோ முயன்றும் கூட அவற்றால் இந்துமதத்தை விழுங்கி, ஏப்பமிட முடியவில்லை//
சிறிது குழம்பி விட்டீர்கள். இந்து மதம், ஏத்தனையோ மதங்களை விழுங்கி, அவற்றை செரித்து, வளர்ந்ததாக, ஆதாரங்களை அடுக்கியுள்ள பல பதிவுகளை இங்கு என்னால் காட்ட முடியும் நண்பரே. ஆனால் இஸ்லாம் எங்கு சென்றாலும் அதன் தனித்துவத்தை இழக்காது, செம்மாந்து, உயர்ந்து நிற்கும். எத்தனை காலமாகியும் இஸ்லாத்தை விழுங்க முடியா குறைதான், தன்னை உயர்சாதியாக பீற்றிக் கொள்ளும் சில ஈனர்களிடம் இருப்பதை என்னால் அவதானிக்க முடிகிறது.
ஒரு குறிப்பு நண்பரே!. மற்றவற்றிலிருந்து எதையாவது ஒன்றை எடுத்து இஸ்லாத்தில் கூடுதல், குறைவு செய்ய முடியாதென்பதுதான் இஸ்லாத்தின் தனிச்சிறப்பே!
//அரேபியாவில் அன்பிருப்பதில் தவறில்லை, ஆனால் அந்த அன்பு அளவுகடந்து, சொந்த சகோதரர்களையும், இனத்தையும் விட்டு, இல்லாத வேர்களைத் தேடி ஒடுவது தான் தவறு என்பது என்னுடைய கருத்து//
'அவ்வாறு அவர்களை ஓடச்செய்தது யாருடைய குற்றம்' என்று அவர் கேட்பதற்கு என்னிடம் பதிலில்லை. அதை நீங்களும் அவர்களும் உங்களுக்குள் கலந்து பேசி நல்ல முடிவாயெடுங்கள்.
//கிறிஸ்தவத் தமிழர்களுக்கு யேசுநாதர் பிறந்த பெத்லகேமிலும், பலஸ்தீனத்திலும் தமிழ் முஸ்லீம்கள் மக்காவில் கொண்ட 'அன்பு' போன்றளவுக்கில்லை. இலங்கைச் சைவர்களுக்கு கைலாசத்திலும், நேபாளத்திலும் அப்படியான அளவு கடந்த அன்பு கிடையாது//.
அது உங்கள் கண்ணோட்டம் மற்றும் அவரவர்களுடைய விருப்பம். அதில் குறை நிறை சொல்வது எனக்கு அவசியமாகப்படவில்லை.
//ஈழத்தில் தமிழன் கொல்லப்படும் போது அவர்களின் இதயம் துடிக்காது ஆனால் ஈராக்கில் குண்டு விழுந்தால் ஆவி துடிக்கும்//
ஈழ மக்களுக்காக போராட்டத்தில் கலந்து கொண்ட எத்தனை எத்தனையோ முஸ்லீம்களும், அமெரிக்காவின் ஈராக்கிய போருக்கெதிராக போராட்டத்தில் கலந்த கொண்ட எத்தனையோ முஸ்லீமல்லாதவர்களும் இருக்கிறார்கள். உங்களின் அழுக்குக் கண்ணாடியை கழற்றிப் பார்த்தால் தெரியம். இது பார்வைக் கோளாறு.
தமிழகத்தில், பெரம்பலூரில், (இஸ்லாத்தில் தற்கொலை பெருந்தவறென்றிருந்தும்) ஈழத்தமிழர்களுக்காக தமது இன்னுயிரை தீக்குத் தின்னக் கொடுத்தவன் ஒரு முஸ்லீம். அவன் எனதூரைச் சார்ந்த எனது சொந்தங்களில் ஒருவன்.
//பெங்களுரில் தமிழர்களுக்கு எதிராக நடப்பவற்றை வெளிப்படையாகக் கண்டிக்க முன்வருவதில்லையே ஏன்?//
என் நாங்களும் கண்டிக்கிறோம். உங்களுக்குத் தெளிவாகத் தெரிவதற்காக –
தஞ்சைத் தரணியில் தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை, தமிழகத்தின் நியாயமான உரிமையை, உரிய முறைப்படி தராமல் இருப்பதையும், பெங்களுருவில் என் தமிழினத்துக்கு எதிராக நடக்கும் கொடுமைகளையும் வன்மையாக கண்டிக்கிறோம் என்பதை இதன் மூலம் பதிவு செய்கிறேன்
//நான் கேட்டதெல்லாம், இஸ்லாம் சமத்துவமான மதம், சவூதி அரேபியா வேறுபாடற்ற சமத்துவமான நாடென்றால்//
இந்து மதத்திலே இல்லாத, நான் கூறிய அந்த சமத்துவம் இஸ்லாத்தில் இருக்கிறது. அது அரேபியாவில் நடைமுறைப் படுத்தப்படுகிறது.
சவூதி இளவரசர் தவறு செய்து, அதற்கு ஆள்பவர்கள் ஆதரவு தந்தால் அது தவறு. இறைவன் முன்னிலையில் தண்டனை பெறுவார் என்று நான் எழுதியுள்ளதை திரும்புவும் பாருங்கள்.
//நான் எத்தனையோ கோயில்களுக்குப் போயிருக்கிறேன், எங்குமே தீண்டாமையை நான் பார்த்ததில்லை//
அவ்வாறிருந்தால் நல்லதுதான். சில குழுவினர்தான் இறைவன் முன் ஓத முடியும். சில குழுவினர் கருவறைக்குள் நுழையக்கூட முடியாதென்ற நடைமுறை இருப்பதாக நான் கேட்டிருக்கிறேன். தமிழிணையத்தில் பற்பல முறை படித்துமிருக்கிறேன். நீங்கள் சொல்வதுதான் உண்மை. அவ்வாறு எழுதியவர்களெல்லாம் தவறென்றால்... நல்லதுதான். அவ்வாறே எல்லோரும் இறைவன் முன் சரிநிகர் சமானம் என்றிருப்பதையே நானும் விரும்புகிறேன் திரு.ஆரூரன்.
//கடவுள் படைத்தது ஆணையும் பெண்ணையும் தான், அந்தப் பெண்ணைக் கடவுளை வழிபடுமிடத்திலிருந்து பிரித்தவர்களுக்குக் கடவுள் முன்னிலையில் யாவரும் சமம் என்ற தத்துவத்தை உச்சரிக்கத் தகுதியுண்டா?//
கடவுள்தான் ஆணையும் பெண்ணையும் படைத்தார். இரு சாராரையும் ஒரே மாதிரி அவர்களின் உருவத்திலும், அங்க அவயங்களிலும், இயல்புகளிலும் படைக்காமல், சில வேற்றுமைகளையும் அவரே ஏற்படுத்தினார். அதனால் ஆணும் பெண்ணும் தங்கள் குடும்பத்திலுள்ள நெருங்கிய சொந்தங்களுடன் வீட்டில் ஒன்றாக தொழ அனுமதித்து, வெளியில் அல்லது பொது இடங்களில், பெண்களும் ஆண்களும் தனித்தனியாக தொழச் செய்ததும் இஸ்லாத்தின் சிறப்புகளில் உள்ள ஒன்றுதான். ஆணும் பெண்ணும் ஒன்றாய் வழிபடுமிடத்திலேற்பட்ட துன்பங்களை அனுபவித்தவர்களுக்கும், அவர்கள் பள்ளிவாசலில் தொழுமிடத்து தனித்தனியாய் தொழுவதிலுள்ள நன்மைகளை அனுபவிப்பவர்களுக்கும் அது புரியும். ஆணையும் பெண்ணையும் ஓரே மாதிரியாக இறைவன் ஏன் படைக்காது விட்டார் என்று உங்களுக்கும் எனக்கும் தெரியுமாதலால் வீண் கேள்விகள் வேண்டாமே!. தவறு ஏற்படக்கூடிய வாய்ப்பைக்கூட இஸ்லாம் தடுக்கிறது என்பதில் எமக்குப் பெருமிதம்தான் நண்பரே.
//ஏதோ நான் அத்வானியின் அபிமானி போலவும், அத்வானி தான் ஈழத்தமிழர்களின் இணையற்ற தலைவர் போலவுமல்லவா பேசுகிறீர்கள், அத்வானியைப் பற்றி எனக்கு அவ்வளவு தெரியாது, அறிவதற்கு அப்படி ஒரு ஆர்வமும் கிடையாது.//
மன்னியுங்கள் ஐயா. அதை எழுதியது ஆருரன் என்ற ஒரு ஈழத்தமிழர் என்று அப்போது உறுதியாகத் எனக்குத் தெரியாது.
//ஒரு குற்றவாளி எத்தனை முறையும் தண்டனையை அனுபவிக்கலாம், ஆனால் ஒரு நிரபராதி ஒரு போதும் தண்டனையனுபவிக்கக் கூடாது, அந்த அடிப்படையில் ஷாரியா நவீன நீதித்துறையின் அடிப்படைக் கொள்கைக்கே முரணானது, நீதிபதிகளும் மனிதர்களே//
கையை வெட்டுவதும், கழுத்தை வெட்டுவதும் ஏதோ தினசரி நிகழ்வு போல பேசுகிறீர்கள். சவூதியில் கடைத்தெருவில் நடக்கின்ற மனிதர்களில் மூன்றில் ஒரு மனிதருக்கு கை, கால்கள் வெட்டப்பட்டு இருப்பதைப் போல் நினைக்கிறீர்கள். எல்லா சந்தேகங்களும் நிவர்த்தி செய்யப்பட்டு, குற்றம் சந்தேகமற உறுதி செய்யப்பட்டாலே தண்டணையளிக்கப்படும்.
உங்கள் வாதப்படி பார்த்தால் யாருக்கும் தண்டணையே கூடாது. ஏனெனில் நீதிபதிகளும் தவறிழைப்பவர்களே. சிறு தண்டனைதான் என்றாலும் குற்றமற்றவன் அதை அனுபவிக்கக்கூடாது என்பதுதானே கருத்து.
//சகோதரர் சுவனப்பிரியன் பீற்றிக் கொள்ளும் சமத்துவம் சவூதி அரேபியாவில் கிடையாது//
சிலர் பல காலம் ஒரு வீட்டில் உண்டு விட்டு, வேறு வீட்டில் அதை விட கூடுதலாக கிடைக்கிறதென்பதற்காக, உண்ட வீட்டுப் பாத்திரத்திலேயே மலம் கழித்துச் செல்வார்கள். நீங்களும் அவர்களைப் போலவே வாதம் செய்கிறீர் நண்பரே.
பொதுவாக, அந்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் எப்படி இருக்கிறதென்று பாருங்கள். எங்கேயும் இருக்கின்ற சில விதி விலக்குகளையே விதியென்று கூறாதீர்கள்.
அமெரிக்கா போன்ற நாடுகளில் இன்னும் சிலர் பிச்சையெடுத்தே வாழ்கின்றனர். கனடாவில் எப்படி?
அதற்காக அங்கு சவூதியை ஆள்பவர்கள் கூடுதலாக அனுபவிப்பதை இல்லையென்று நான் சொல்வதாக பொருளாகாது. இஸ்லாம் அதை ஆதரிப்பதாகவும் பொருளாகாது.
//நான்கில் ஒரு பங்கு என்பது நான் என்னுடைய தொப்பிக்குள் இருந்து எடுத்த எண்ணல்ல, அமெரிக்கப் பத்திரிகையில் வந்த செய்தியிலிருந்து எடுக்கப்பட்டது//
//முதன் முதலில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திலே முதுமாணிப் பட்டம் பெற்ற சவூதிப் பெண். அவர் தான். சவூதி அரசு செய்வதெல்லாம் இஸ்லாமுக்கு எதிரானதென விமர்சிக்கிறாரே தவிர நானல்ல//
அது உங்கள் தொப்பியிலிருந்து அல்ல, நீங்கள் கூறிய மாய் யமானி தொப்பியிலிருந்துதான் எடுத்திருப்பீர்கள். அமெரிக்காவில் அரபியர்களைப் பற்றி பொதுவான கண்ணோட்டம் இருக்கிறது. அதை மறுப்பதற்காக, அந்நாட்டை பிடிக்காத ஒருவர் சொன்னது முழுதும் உண்மையே என்று யூகிக்கும் உங்களை நினைத்து அழுவதா சிரிப்பதா என்று எனக்கும் தெரியவில்லை.
முதன் முதலில் பட்டம் பெற்றதால் அவர் தவறாக சொல்லவே மாட்டாரா? பட்டம் பெறுவதுதான் உண்மையாளனுக்கு உள்ள இலக்கணமா?
//ஒரு சவூதியரே சொல்லும் போது சகோதரர் சுவனப்பிரியன் சொல்வது சரியாக இருக்க முடியாதல்லவா?//
இது மாதிரி பல விடயங்களைச் சொல்லலாம் நண்பரே.
'இது நாள் வரை அத்தலைவரின் கூட இருந்தவரே, அதுவும் அத்தலைவராலேயே தளபதியென போற்றப்பட்டவரே சொல்லும்போது ஆருரன் சொல்வது சரியாக இருக்க முடியாதல்லவா' என்று உங்களின் சில வாதங்களை நான் மறுத்தால், அது சரியானதென்று உங்களால் ஏற்க இயலுமா?!.
//ஒப்பந்தங்களைக் கையெழுத்திட மறுப்பதாகப் பயமுறுத்தியும், போதைப்பொருள் கடத்திய இளவரசரைக் காப்பாற்றியுள்ளது.//
அவ்வாறு நடந்திருந்தால் அது குற்றமே. அதற்கும் இஸ்லாத்துக்கும் சம்பந்தமில்லை. இஸ்லாம் அதற்கு எதிராக இருக்கிறது.
//அதன்படி 'என்னுடைய மகள் பாத்திமா திருடியிருந்தாலும், அவர் கையையும் வெட்டுவேன்' என்று சொன்ன நபி பெருமகனார்' காட்டிய நீதி நெறி சவூதி இளவரசரைக் காப்பாற்ற மீறப்பட்டுள்ளது. 'இஸ்லாமிய சட்டத்தின் முன் ஆண்டியும் அரசனும் சமமல்ல' என்பது வெளிப்படையாக நிரூபிக்கப்பட்டுள்ளது//
நீங்கள் சொல்வது போல் நடந்திருந்தால், நபி பெருமகனார் காட்டிய நீதி நெறி சவூதி இளவரசரைக் காப்பாற்ற மீறப்பட்டுள்ளது என நானும் ஏற்றுக் கொள்கிறேன்.
ஆனால் அடுத்த வரியில் குழம்புகிறீர்கள்.
அதற்காக 'இஸ்லாமிய சட்டத்தின் முன் ஆண்டியும் அரசனும் சமமல்ல' எனச் சொல்வது அறிவீனம்.
நீங்கள் சொல்வது போல் நடந்திருந்தால், அங்கு ஆள்பவர்களால், இஸ்லாமிய நெறிமுறைகள் மீறப்பட்டு, அங்கு ஆண்டியும் அரசனும் சமமல்ல' என்பது வெளிப்படையாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்று சொல்லலாம்.
//எண்ணெய் வளம் கொழிக்கும் அரேபியாவும் உதவவில்லை. அது தான் உண்மை, சில முஸ்லீம்கள் இப்பொழுது மறுத்தாலும் அது அல்லாவுக்குத் தெரியும்.//
நாடுகள் தங்கள் வருவாயில் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஆபத்து கால உதவிக்காக வைத்திருக்கும். அது அவர்களால் செலவழிக்கப்பட்டிருக்கலாம். ஆதனால் தாமதமேற்பட்டிருக்கலாம். இது வெறும் யூகம்தான். ஏனெனில் அவர்களின் பொருளாதாரத்தின் ஒரு பெருந்தொகையை நன்மையான காரியங்களில் செலவிடுவதாய் நான் கேட்டுள்ளேன்.
ஆனாலும் அவ்வாறில்லாமல், ஆழிப்பேரலை விவகாரத்தில் நீங்கள் சொல்வது உண்மையானால், அங்கு ஆள்பவர்களால், இஸ்லாமிய நெறிமுறைகள் மீறப்பட்டுள்ளது எனக் கொள்ளலாம். அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
முடிவாக: இலங்கைத் தமிழர்களின் துயரமான வாழ்வும் நிலையும் கண்டு, துயருறுபவர்களில் நானும் ஒருவன். அவர்களில் சொந்த மண்ணை விடுத்து, வேறு வழியில்லாமல், புலம் பெயர்நது வாழ்பவர்களை, துயருரும் என் சகோதரர்களாகவே நான் காண்கிறேன்.
எனவே உங்களுக்கிடையிலுள்ள (தமிழ் முஸ்லீம்களுக்கும் மற்ற தமிழர்களுக்கும்) குடும்பத் தகராறில் இஸ்லாத்தை அவமரியாதை செய்யாதீர்கள் என்பதே என் வேண்டுகோள்.
மாற்றுமதத்தை குறை சொல்வதை தவிர்க்க விரும்புபவன் நான். உங்களுடைய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது அதற்கான கட்டாயத்தால் வருத்தத்துடனேயே சில விமரிசனங்களை இதில் முன் வைக்க நேர்நதது. எனவே இது குறித்து மேற்கொண்டு எந்த விவாதமும் செய்ய நான் தயாரில்லை.
தங்களின் மனதை காயப்படுத்துவது எனது நோக்கமல்ல. தனிப்பட்ட தாக்குதலாக ஏதும் இதில் இருந்தால் அதற்காக வருந்துகிறேன்.
[அது மட்டுமில்லாமல் இரவு 11க்கு எழுதத் துவங்கி விடியல் 4 மணிக்குத்தான் எழுதி முடித்தேன். இது என் பணியை பெரிதும் பாதிக்கும். ஏதோ தமிழ் திரட்டிகளின் பக்கம் வந்தோமா தமிழில் நாலெழுத்து நல்லவற்றைப் படித்தோமா, சிறிய மறுமொழி இட்டோமா என்று போவதே எனக்கு வசதி.:)))))))))))]
Posted by சுல்தான் at 12:55 PM
23 comments:
லக்கிலுக் said...
நண்பர் ஆருரனை சில ஆண்டுகளாக அறிவேன். வாதிடுவதில் வல்லவர். அவர் வாதிட்டால் எதிர்வாதம் செய்பவரின் நிலை எப்போதுமே பரிதாபம் தான் :-)
அவர் மனம் நோகாவகையில் சரியான எதிர்வாதத்தை முதன்முறையாக உங்கள் மூலமாக காண்கிறேன்.
உங்கள் இருவருக்குமாக சொற்போர் இனியும் தொடர்ந்தால் நல்லது. எனக்கும் தெளிவுபெற பல விஷயங்கள் உங்கள் இருவரின் வாதங்களிலும் இருக்கிறது.
4:29 PM
Anonymous> said...
//ஈழத்தில் தமிழன் கொல்லப்படும் போது அவர்களின் இதயம் துடிக்காது ஆனால் ஈராக்கில் குண்டு விழுந்தால் ஆவி துடிக்கும்//
1995 இல் யாழ்ப்பாணத்திலிருந்து 5 லட்சம் மக்கள் அகதிகளாக சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பால் இடம் பெயர்ந்து நின்ற போது தமிழகத்தில் நெருப்பில் எரிந்து தன்னை மாய்த்தவன் ஒரு இஸ்லாமிய தமிழன் தான். அவனது உயிரே துடித்தது. இதயம் துடித்ததா என என்ன இத கேள்வி.. ?
யாழ்ப்பாண சைவ உயர் வேளாளர்களின் சிந்தனை இவ்வாறு தான் இருக்கும்.
4:34 PM
Anonymous> said...
அப்துல் ரவூப் என்னும் மனிதன் ஈழத்து சோதருக்காக தன்னை மாய்த்ததை வசதியாக மறந்து விடுகிறாரே ஆரூரன்..?
4:35 PM
சுல்தான் said...
வருகைக்கும் நன்றி திரு.லக்கிலுக்.
அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது எனக்கும், நான் என்ன சொல்ல விழைகிறேன் என்பதை அவரும், அதனூடாக மற்றவர்களும் அறிகின்றனர். இத்தனை போதுமே.
வீண் விவாதங்களில் பலனேதுமில்லை நண்பரே.
4:37 PM
sreesharan said...
////எண்ணெய் வளம் கொழிக்கும் அரேபியாவும் உதவவில்லை. அது தான் உண்மை, சில முஸ்லீம்கள் இப்பொழுது மறுத்தாலும் அது அல்லாவுக்குத் தெரியும்.//
நாடுகள் தங்கள் வருவாயில் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஆபத்து கால உதவிக்காக வைத்திருக்கும். அது அவர்களால் செலவழிக்கப்பட்டிருக்கலாம். ஆதனால் தாமதமேற்பட்டிருக்கலாம். இது வெறும் யூகம்தான். ஏனெனில் அவர்களின் பொருளாதாரத்தின் ஒரு பெருந்தொகையை நன்மையான காரியங்களில் செலவிடுவதாய் நான் கேட்டுள்ளேன்.
ஆனாலும் அவ்வாறில்லாமல், ஆழிப்பேரலை விவகாரத்தில் நீங்கள் சொல்வது உண்மையானால், அங்கு ஆள்பவர்களால், இஸ்லாமிய நெறிமுறைகள் மீறப்பட்டுள்ளது எனக் கொள்ளலாம். அல்லாஹ்வே மிக அறிந்தவன்.//
இதனால் நீங்கள் கூறுவது என்னவெனில் இஸ்லாம் மதத்தை பின்பற்றாத யார் அழிந்தாலும் உங்களுக்கு கவலை இல்லை. உதவ முன்வர மாட்டீர்கள்.
4:48 PM
சுல்தான் said...
வருகைக்கு நன்றி ஸ்ரீஷரன்.
நீங்கள் சொல்வது போன்ற கருத்தை, என் எழுத்தின் எந்தப் பகுதியில் எடுத்தீர்கள் நண்பரே!.
5:55 PM
அழகு said...
ஆரூரான் என்பவர் முழுப்பூசணியைப் பானுக்குள் மறைக்கப் பார்க்கிறார்.
தமிழன் என்று சொல்லிக் கொண்டு, காத்தான்குடி பள்ளியிலும் வாழைச்சேனை, அட்டாளச்சேனையின் அப்பாவித் தமிழ் முஸ்லிம்களைத் தோக்குகளால் ஆசீர்வதித்த அந்தக்காலம் ஒரு பக்கமிருக்கட்டும்.
அண்மையில் நடந்த உண்மைச் சம்பவம்.
புலிகள் கஷ்டப்பட்ட காலத்தில் உணவுப் பொருளும் டீஸல் போன்ற அத்யாவசியப் பொருட்களும் கொடுத்து உதவிய மூதூர் மக்களின் நன்றியை மறந்தது மட்டுமின்றி, "24 மணித்தியாளங்களுக்குள் வெளியேறவும்" என்ற உத்தரவை சொந்த(?) சகோதரனுக்கு விடுத்து, பிறந்த மண்ணிலேயே மூதூர் முஸ்லிம்களை அகதிகளாக அலைய விட்டது யார்?
தமிழன்(!)தானே?
பல உயிர்களையும் இலட்சக் கணக்கில் சொத்துக்களையும் மூதூர் முஸ்லிம்கள் இழந்ததற்குக் காரணம் யார்?
தமிழன்(!)தானே?
ஆரூரானால் மறுக்க முடியுமா?
எங்களுடைய தமிழ்ப் பற்றை நிரூபிக்க எவனிடமும் சான்றிதழ் பெறவேண்டிய அவசியம் எமக்கில்லை.
6:13 PM
சுல்தான் said...
வருகைக்கு நன்றி அழகு.
உங்களின் கோபத்தைக் குறித்து நான் கருத்து கூறுவது பொருத்தமாயிருக்காது நண்பரே. மன்னிக்கவும்.
6:37 PM
சுல்தான் said...
//தமிழகத்தில் நெருப்பில் எரிந்து தன்னை மாய்த்தவன் ஒரு இஸ்லாமிய தமிழன் தான். அவனது உயிரே துடித்தது. இதயம் துடித்ததா என என்ன இத கேள்வி.. ?//
//அப்துல் ரவூப் என்னும் மனிதன் ஈழத்து சோதருக்காக தன்னை மாய்த்ததை வசதியாக மறந்து விடுகிறாரே ஆரூரன்..?//
வருகைக்கு நன்றி அனானி-1 மற்றும் அனானி-2
அதைத்தான் நான்
//உங்களின் அழுக்குக் கண்ணாடியை கழற்றிப் பார்த்தால் தெரியம். இது பார்வைக் கோளாறு.
தமிழகத்தில், பெரம்பலூரில், (இஸ்லாத்தில் தற்கொலை பெருந்தவறென்றிருந்தும்) ஈழத்தமிழர்களுக்காக தமது இன்னுயிரை தீக்குத் தின்னக் கொடுத்தவன் ஒரு முஸ்லீம். அவன் எனதூரைச் சார்ந்த எனது சொந்தங்களில் ஒருவன்.// என்று குறித்திருக்கிறேன்.
7:01 PM
அட்றா சக்கை said...
சகோதரர் சுல்தான்
அருமையான அழகான நிதானமான பதில்கள்.
unarvukal என்ற பெயரில் எழுதும் சகோதரர் தம் வீட்டுச்சண்டைக்குத் தீர்வுகாணும் முயற்சியில் இஸ்லாத்தின் மீது பழி சுமத்தி இருக்கிறார். அது போன்ற ஒரு வாய்ப்புக்காகவே காத்திருந்த முதல் த.அ. ஒன்று அவர் பதிவில் விவாதத்தைத் திசை திருப்ப மலம் கழித்துச் சென்றிருக்கிறது. அதை அவர் அறிந்தே பிரசுரித்தாரா என்பது அவருக்குத் தான் தெரியும்.
இருப்பினும் அந்த த.அ. மூலம் விவாதம் திசைதிருப்பாமல் அழகான பதில்களைத் தந்து சுமுகமான விவாதத்தைத் தொடர்ந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
குறிப்பு: த.அ = தமிழ்மண அனாதை
10:56 PM
Anonymous> said...
//சிலர் பல காலம் ஒரு வீட்டில் உண்டு விட்டு, வேறு வீட்டில் அதை விட கூடுதலாக கிடைக்கிறதென்பதற்காக, உண்ட வீட்டுப் பாத்திரத்திலேயே மலம் கழித்துச் செல்வார்கள்.//
இவர் யாரென்று சொல்லுங்களேன்!
10:56 PM
சுவனப்பிரியன் said...
நண்பர் சுல்தான்!
பல வேளைகளுக்கு மத்தியில் இரவு 4 மணிவரை பதிவை எழுதி முடித்திருக்கிறீர்கள். உங்களின் ஆர்வம் என்னை ஆச்சரியப்படுத்துகிறது. தொடரட்டும் உங்கள் பணி.
நண்பர் ஆரூரானுக்கு இலங்கை தமிழ் இந்துக்களும், தமிழ் முஸ்லிம்களும் ஏன் ஒன்றுபடவில்லை என்பதை ஒரு இலங்கையரை வைத்தே பதிலளித்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.
5:31 AM
சுல்தான் said...
வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி அட்றா சக்கை.
இஸ்லாத்தை யார் இழித்துச் சொல்வார்கள்! அங்கே போய் எவ்வாறு விஷமம் செய்யலாம்! என்று ஒருவரல்ல. தமிழிணையத்தில் ஒரு குழுவே காத்திருக்கிறது சகோதரரே.
2:58 PM
சுல்தான் said...
அனானி 3 வருகைக்கு நன்றி.
அவர் யாரென்று நான் வேறு சொல்ல வேண்டுமா?
அவரை விருந்துக்கு அழைத்தால், அவர் உண்பதிலே கவனம் செலுத்தாமல், உண்டு முடித்த இடம் எவ்வாறு இருக்கும்(!??!) என்று பார்த்து அதை ஏளனம் செய்வதிலே பெருமை கொள்ளும் பின்புத்திக்காரர்
எல்லோரும் அறிந்தே இருக்கிறார்கள்.
3:04 PM
சுல்தான் said...
தொடர் வருகைகளுக்கும், பாராட்டுகளுக்கும் நன்றி சுவனப்ரியன்
3:06 PM
அப்துல் குத்தூஸ் said...
சகோதரர் சுல்தான் அவர்களுக்கு என் நன்றிகள்.
சரியாகத்தான் பதில் கொடுத்துள்ளீர்கள். ஆனால், இது இஸ்லாத்தின் உயர்வுக்கு அணி சேர்ப்பதாகவல்லவா உள்ளது. நிச்சியம் அதை இவர்களால் ஜீரணிக்க இயலாது. அதனால் இப்பொழுது உள்வாங்குவார்கள். சிறிது காலம் கழித்து மீண்டும் அதே பல்லவியை வேறோரு அவதாரத்தில் ஆரம்பிப்பார்கள்.
3:37 PM
சுல்தான் said...
வருகைக்கு நன்றி அப்துல் குத்தூஸ்.
3:55 PM
லொடுக்கு said...
உள்குத்து/வெளிகுத்து இல்லாமல், விவாதத்தை திசை திருப்பாமல், சுற்றி வளைக்காமல் சிலர் மட்டுமே தமிழ்மணத்தில் எழுத காண்கிறேன். அதில் நீங்களும் ஒருவர். உங்களின் வாதம் அருமை. உங்களிடமிருந்து அறிந்து கொள்ள நிறைய இருக்கிறது.
தொடருங்கள்!
4:16 PM
சுல்தான் said...
வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி லொடுக்கு.
4:30 PM
Anonymous> said...
சகோதரர் சுல்தான் அவர்களுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் மற்றும் மறுமை வாழ்வு சிறப்பதற்கான பிரார்த்தனைகளும்.
திரு.ஸ்ரீசரன் அவர்களின் பார்வைக்கு..
//இதனால் நீங்கள் கூறுவது என்னவெனில் இஸ்லாம் மதத்தை பின்பற்றாத யார் அழிந்தாலும் உங்களுக்கு கவலை இல்லை. உதவ முன்வர மாட்டீர்கள்.//
தமிழகத்தில் ஆழிப்பேரலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் பொருளாதாரம் வசூலித்து கொடுத்து உதவியது. நோய் தொற்றும் என்ற பயத்தில் பலரும் தொட அஞ்சிய அழுகிய உடல்களை எ(உ)ங்களது முஸ்லிம் சகோதரர்கள் தொட்டு தூக்கி சேவையாற்றியுள்ளனர்.
அரசியல்வாதிகளோ, சினிமா நடிகர்களோ 5 ரூபாய் தர்மம் வழங்கினாலும் அதை 5000 ரூபாய் செலவு செய்து மக்களுக்கு எடுத்துச்செல்லும் செய்தி நிறுவனங்கள் தமிழகத்தில் தாராளமாக உண்டு. எங்களுடைய இந்த சேவைகளை பொதுவான மக்களுக்கு எடுத்துச்சொல்ல (எங்களைத்தவிர) எங்களுக்கு நாதியில்லை.
ஒரு மனிதனின் சோகத்தில், இழப்பில் மதத்தைப்பார்த்து உதவுவது என்பது மனிதத்தன்மைக்கு முற்றிலும் எதிரானது. மனிதத்தன்மைக்கு உறியவர்களாக முஸ்லிம்கள் நாங்கள் நடந்து காட்டி இருக்கிறோம். அப்படி இருக்கச்சொல்லி இஸ்லாம் எங்களுக்கு கட்டளையிட்டிருப்பதால்.
இஸ்லாத்தை பின்பற்றாதவர்களாக இருந்தாலும் அவர்களுடைய சோகத்தில் பங்கு கொள்வது, அதற்காக உதவுவது எங்களுடைய கடமையாக இருக்கிறது.
அபிவிருத்தி
ரியாத் - சவுதி அரேபியா
6:52 PM
சுல்தான் said...
முதன் முதலாக என் பதிவுக்கு வருகை தந்துள்ளமைக்கும் கருத்துகளுக்கும் நன்றி அபிவிருத்தி(பரக்கத்).
7:06 PM
முஸ்லிம் said...
சுல்தான் நல்ல விளக்கமளித்துள்ளீர்கள் தொடர்ந்து எழுதுங்கள்.
7:53 PM
சுல்தான் said...
வருகைக்கு நன்றி முஸ்லீம் அவர்களே.
8:11 PM
சவூதிதான் இஸ்லாமா?
(உணர்வுகள் வலைப்பூவில் “போதைப் பொருள் கடத்திய சவூதி இளவரசரை இஸ்லாமிய ‘ஸாரியா’ ஏன் தண்டிக்கவில்லை?” (http://unarvukal-unarvukal.blogspot.com/2007/02/blog-post_6745.html) என்ற தலைப்பில் இஸ்லாத்துக்கு எதிராகவும் எழுதப்பட்டுள்ளது. அதற்கு மறுப்பாக மறுமொழி இட எழுதியது நீண்டு விட்டதால் தனிப்பதிவாக.
எழுதியவர் இலங்கையைச் சார்நதவராகத் தெரிகிறது. அவ்வாறெனில் இந்தியாவைப் பற்றிச் சொல்லியுள்ள இடங்களில், இலங்கையைத் தொடர்பு படுத்திக் கொள்ளுங்கள்.)
//மூன்றாவதுலக நாடுகளின் முஸ்லீம்கள் சவூதி அரசகுடும்பத்தைப் பற்றிப் பீற்றிக் கொள்வதையும் அரேபியாவின் மீது அவர்களுக்குள்ள அளவுகடந்த விசுவாசத்தையும், ஏன் முழு அரேபியாவையுமே ஏதோ கடவுளின் சொர்க்கபூமி போல் நினைப்பதையும் எங்களில் பலர் அனுபவத்தில் அறிந்துள்ளோம்//
சவூதி அரச குடும்பத்தைப் பற்றி பீற்றிக் கொள்ள என்ன இருக்கிறது. அவர்களும் மனிதர்கள்தான். மனிதர்களுக்குரிய எல்லா பலவீனங்களும் அவர்களுக்கும் இருக்கும். 'ஜகத்குரு'க்களாக மனிதர்களால் நம்பப்படுபவர்களே பெருந்தவறு செய்ததாக சந்தி சிரிக்கிறதே.
இஸ்லாம் என்ற வாழ்க்கைப் பாதையில்
'எல்லா மனிதர்களும் தவறு செய்பவர்களே. அவர்களில் சிறந்தவர்கள் தன் தவறுக்காக வருந்தி இறைவனிடம் பாவ மன்னிப்புக் கோரி திருந்துபவர்களே.'
உடல் நலமும் பொருள் வளமும் உள்ளவர்கள் தம் வாழ்க்கையில் ஒரு முறையாவது மக்காவில் உள்ள அந்த புனிதத்தலத்தை தரிசிப்பது ஒவ்வொரு முஸ்லீமின் மீதும் கடமையாக இருப்பதால், எல்லா முஸ்லீம்களும் அந்த புனிதத்தலத்தை நினைவிலிருத்துகின்றனர்.
கல்லையும் மண்ணையும் கடவுளாக வணங்கி வந்த எங்களுக்கு, இஸ்லாம் என்ற மார்க்கத்தை எடுத்துச் சொன்னவர், அராபியாவிலிருந்து வந்ததால், அந்த பூமியின் மீது சிலருக்கு அன்பு இருக்கலாம். அஃதொன்றும் தவறல்லவே.
//சவூதி அரேபியா வேறுபாடுகள் இல்லாத சமத்துவமுள்ள நாடு போலவும், கையையும், காலையும் வெட்டியெறியும் இஸ்லாமிய ஸாரியாவை 21ம் நூற்றாண்டிலும் நடைமுறை ப்படுத்துவது சரியானதெனவும் வாதாடுவதைக் காணலாம்.//
சவூதியாவில் எந்த மனிதராயிருந்தாலும், அவர் கறுப்பராயிருந்தாலும் வெள்ளையராயிருந்தாலும், அவர் முன்னே வந்தால் முன்னே நின்று தொழுகிறார். அங்கு எவரும் 'கடவுள் முன்னிலையில் தாம் தான் உயர்ந்தவர்' என்று சொல்வதில்லை.
எமக்கு இஸ்லாம் கற்றுத் தந்துள்ளபடி, 'கடவுள் முன்னிலையில் இரண்டு சாரார்தான். ஒரு சாரார் இறையச்சம் நிறைந்த சிறந்த மனிதர்கள் - உயர்ந்தவர்கள். மற்றொரு சாரார் இறையச்சம் குறைந்தவர்கள் (அல்லது இறையச்சம் இல்லாதவர்கள்) -தாழ்ந்தவர்கள்.'
யாரோ ஒரு குழுமத்தில் பிறந்ததால் அவர் உயர்ந்தவர், வேறொரு குழுமத்தில் பிறந்ததால் அவர் தாழ்ந்தவர் என்று, அவர் செய்யாத தவறுக்கு, பிறப்பால் உயர்வு தாழ்வு பாராட்டாத, இந்த சமத்துவம்தான் சொல்லப்படுகிறது.
கையை காலை வெட்டும் ஷரியா தவறென்றால், அத்வானி போன்றவர்களே கற்பழிப்புக்கு மரண தண்டனை தர வேண்டும் என்று கேட்டதை யோசியுங்கள்.
தவறு செய்பவர்கள்தான், 'கையையும் காலையும் இழப்போமே' என்று வருந்த வேண்டும். 'இந்த தண்டணைகளால் தவறு செய்ய நினைப்பவர்களும் திருந்துவார்களே' என்று நல்லவர்களும், நீதி நியாயத்தின்படி வாழ நினைப்பவர்களும் எண்ணாமல் கலக்கமடைவது ஏன் என்பது புதிர்.
//பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் பெருமளவு சமப்படுத்தப் பட்டுள்ளதைக் காண்கிறோம்' என்கிறார் சுவனப்பிரியன்//
இந்தியாவையும் சவூதியையும் ஒப்பு நோக்குங்கள். ஏற்றத்தாழ்வுகளே இல்லை என்று சொல்லப்படவில்லை. பெருமளவு சமப்படுத்தப் பட்டுள்ளதாகத்தான் சொல்கிறார். தவறென்கிறீர்களா?
அங்கு போய் வந்தவர்களைக் கேளுங்கள். அங்கு அந்நாட்டு அரபிகளில், எத்தனை பேர் வீடு வாசலின்றி, தெருவோரம் தூங்கி, பிச்சையெடுத்து அலைகின்றனர் என்று. பின்னர் ஒப்பு நோக்குங்கள். பெருமளவு என்பதன் பொருள் புரியும்.
//நான்கில் ஒரு பங்கு சவூதி மக்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். பல சவூதி இளைஞர்களுக்குப் படித்து முடித்தாலும் சரியான தொடர்பில்லாது விட்டால் வேலை கிடைப்பதில்லை.//
நான்கில் ஒரு பங்கு என்று மிக மிகக் கூடுதலாக சொல்லப்பட்டுள்ளது.
வேலையில்லாதவர்களும், அவர்களின் தேவைகளுக்கான வசதியோடு இருப்பதைப் பார்க்கத் தவறுவது ஏன்?
அங்குள்ள களில் பலவற்றையும் வெளி நாட்டினர் செய்து அதற்கான ஊதியம் பெறுகின்றனர்.
'மற்ற மாநிலத்தவர் இங்கு வருவதால் இந்த மாநிலத்தார்க்கு வேலை கிடைப்பதில்லை' என்று ஒரே இந்தியாவில், ஒரு மாநிலத்தார் மற்றவர்களை அடித்துத் துரத்துகிறோம். உதாரணம்: நேற்று மும்பையிலும் பெங்களுருவிலும், இன்று அஸ்ஸாம்.
அங்கு, இப்போது, வெளிநாட்டவரை......
அங்கு சரியான தொடர்பில்லாத யாரும் வேலையில் இல்லையா? அல்லது அங்கு வேலையிலிருப்பவர்கள் எல்லாம் சரியான தொடர்பு வைத்திருப்பவர்கள்தானா?
வேலையில்லாத் திண்டாட்டம் இல்லாத நாடு எது? சவூதியில் உள்ளதை மட்டும் ஊதிப் பெரிதாகக் காட்டும் அவரின் நோக்கத்தை நீங்கள் புரிந்து கொள்ளாதது ஏன்?
//முன்னாள் சவூதி பிரஜையும் இன்று லண்டனில் வசிப்பவராகிய மாய் யமானி//
அவர் சொல்வதெல்லாம் எல்லா நாட்டிலும் உள்ளதுதான்.
ஒரு நாட்டை விட்டு வெறியேற்றப்பட்டவர் அல்லது அந்நாட்டு ஆள்பவர்களைப் பிடிக்காதவர்கள், வேறு நாட்டில் தங்கிக்கொண்டு இம்மாதிரி சொல்வதெல்லாம் வாடிக்கைதான். அதைத் தூக்கிப்பிடித்து இஸ்லாத்தை விமர்சிக்க அவசியமேதுமில்லை.
குடியாட்சியுள்ள இந்தியாவிலேயே, ஆள்பவர்களின் பிள்ளைகள் அமெரிக்காவிலும், இலண்டனிலும், பாரிசிலும் உல்லாசப் பொழுது போக்குக்கு போகவில்லையா? ஆளக்கொடுத்த எல்லோராலும் முடிகிற ஒன்றா? முடியாட்சியில் இது கொஞ்சம் கூடுதலாயிருக்கும். ஆனாலும் அது தவறுதான் என்பதை
//சவூதி அரச குடும்பத்தின் தனிப்பட்ட 'ஜெற்' விமான சுற்றுலாக்களையும், ஆடம்பரங்களையும், கேளிக்கைகளையும் பெரும்பான்மையான சவூதி அரேபியாவின் மக்கள் வெறுக்கிறார்கள் அது மட்டுமல்ல அவை இஸ்லாமிய விதி முறைகளுக்கும் எதிரானவை// என்று அவரே சரியாகச் சொல்கிறாரே.
//மூன்றாவதுலக நாடுகளின் முஸ்லீம்கள் மட்டும் சவூதி அரேபியாவைப் பற்றி அழகான ஆயிரத்திலொரு இரவுகள் மாதிரியான கற்பனையைக் கட்டவிழ்த்து விடுகிறார்கள்.//
முஸ்லீம்கள் மட்டுமா? மற்றவர்கள் இல்லையா?
அவ்வாறு சொல்லப்படுவதைக் கேட்டு அங்கே போகிறவர்களில் (முஸ்லீம்களல்லாத மற்றவர்களும்) திரும்பத் திரும்பப் போகிறார்களே. மும்பையில் சென்று பார்த்தால் போய் வந்தவர்கள் சவூதி வேலைக்கு அனுபவமுள்ளதால் முதலில் நிற்கிறார்களே.
ஆயிரத்திலொரு இரவுகள் கற்பனையோடு சவூதிக்கு ஒருவருமே போவதில்லை என்பதுதான் உண்மை. 'வெட்டிடுவானுங்கோ' என்பதை முன்னரே அறிந்தே போகிறார்கள்.
//போதைப்பொருள் கடத்தலில் குற்றம் சாட்டப்பட்டு, நிரூபிக்கப்பட்ட இளவரசருக்கு, இஸ்லாத்தில் எல்லோருக்கும் சமத்துவம் உள்ளதென்றால் கையைக், காலை வெட்டியிருக்க வேண்டும் அப்படித்தானே//
குற்றம் நிகழ்ந்ததாகச் சொல்லப்படுவது சவூதிக்கு வெளியே. குற்றம் நிருபிக்கப்பட்ட ஒருவரை தப்பிக்க விட்டது யாருடைய குற்றம்.
இஸ்லாமிய சட்டப்படி குற்றம் யார் செய்திருந்தாலும் தண்டிக்கப் பட வேண்டும். 'என்னுடைய மகள் பாத்திமா திருடியிருந்தாலும், அவர் கையையும் வெட்டுவேன்' என்று சொன்ன நபி பெருமகனார்தான் எங்களுக்கு முன் மாதிரி. இஸ்லாமிய சட்டத்தின் முன் ஆண்டியும் அரசனும் சமமே.
அந்நாட்டு இளவரசர் குற்றம் செய்து, அவர் தண்டிக்கப்படாமல் தப்புவிக்கப் பட்டிருக்கிறார் என்பது உண்மையானால், அவ்வாறு செய்தவர்கள், நாளை இறைவன் முன் குற்றவாளியாக நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்படுவார்கள் என்பதை எந்த முஸ்லீமிடமும் கேளுங்கள். உண்மையென்றே கூறுவான்.
//எல்லா நாட்டிலும் ஊழல்கள் உண்டு, எல்லா மதங்களிலும் குறைபாடுகள் உண்டு என்பது தான்.
அதை விட இஸ்லாமிய சகோதரத்துவம், சமத்துவம் பற்றிக் கூட மற்ற மதங்களுடன் ஒப்பிட்டுச் சிலர் பேசுவார்கள் அதையும் நம்பி சிலர் மதமாற்றம் கூடச் செய்து கொள்வார்கள்.//
நீங்கள் எதனோடு எதை முடிச்சு போடுகிறீர்கள்.
எல்லா நாட்டிலும் ஊழல்கள் உண்டு என்பது சரிதான்.
ஒரு நாட்டிலுள்ள ஊழல்களை இஸ்லாத்தோடு சம்பந்தப் படுத்தாதீர்கள். ஆள்பவர்கள் தவறு செய்தால், இஸ்லாமிய பார்வையில் சரியென்று யாரும் உங்களுக்கு சொன்னார்களா? எந்த முஸ்லீமும் அவ்வாறு சொல்லத் துணிய மாட்டான்.
ஆனால் இஸ்லாம் கூறும் சகோதரத்துவமும், சமத்துவமும் உன்னதமானது. வேறெங்கும் காணமுடியாத அழகான அற்புதமான வாழ்க்கைத் திட்டமாகும்.
ஆழிப்பேரலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவில்லை என்று சொல்கிறீர்கள்.
அதைப்பற்றி இஸ்லாம் தெளிவாகச் சொல்லி விட்டது.
இறப்புக்கு பின்னுள்ள மறுமை நாளில், ஒரு செல்வந்தனிடம் 'நான் உன்னிடம் உதவி கேட்ட போது நீ மறுத்தாய் என்று இறைவன் சொல்வான். அதற்கு அந்த செல்வந்தன் 'நீயே எல்லாப் பொருளுக்கும் அதிபதி. என்னிடம் எப்போது வந்தாய்? வரவில்லையே!' என்பான். இந்த ஆள் உன்னிடம் உதவி தேடியபோது, நீ கொடுத்திருந்தால், அங்கே என்னைக் கண்டிருப்பாய்' எனக்கூறி அவனை நரகம் புகச் செய்வான். (ஒரு ஹதீஸிலிருந்து, நம் பிரச்னைக்கு தேவையான பகுதியின் கருத்தாக்கம் மட்டும் தரப்பட்டுள்ளது)
சவூதியில் எல்லா இஸ்லாமிய சட்டங்களும் கடைபிடிக்கப்பட்டு, சரிவர நிறைவேற்றப்படுகிறது என்று யாரும் சொல்லவில்லை. மற்ற நாடுகளை விடவும் கூடுதலாக கடைபிடிக்கப்பட்டு, நிறைவேற்றப்படுகிறது என்றே சொல்கிறோம்.
சவூதி அரசாங்கமோ ஆள்பவர்களோ தவறு செய்தால் அதற்கு இஸ்லாம் பொறுப்பேற்காது.
'உண்மையும் பொய்யும் தெளிவாயுள்ளது. ஏற்பதும் ஏற்காததும் உன் விருப்பம். இறப்புக்கு பின்னுள்ள வாழ்க்கையில், சரியானதை ஏற்று அதன்படி வாழ்ந்திருந்தால் ஆனந்தமும், தவறானதை ஏற்று அதன்படி வாழ்ந்திருந்தால் தண்டணையும் உறுதி' என்று இஸ்லாத்தில் தெளிவு படுத்தப்பட்டுள்ளது.
Posted by சுல்தான் at 8:19 PM
Labels: இஸ்லாம், உணர்வுகள், சவூதி
14 comments:
சுவனப்பிரியன் said...
Best answers Mr Sultan! Keep it up.
9:04 PM
Udhayakumar said...
//இஸ்லாமிய சட்டப்படி குற்றம் யார் செய்திருந்தாலும் தண்டிக்கப் பட வேண்டும். 'என்னுடைய மகள் பாத்திமா திருடியிருந்தாலும், அவர் கையையும் வெட்டுவேன்' என்று சொன்ன நபி பெருமகனார்தான் எங்களுக்கு முன் மாதிரி. இஸ்லாமிய சட்டத்தின் முன் ஆண்டியும் அரசனும் சமமே. //
நபி பெருமகனார் மட்டும்தான் அப்படி சொல்லியிருக்கிறார். சவுதி அரச பரம்பரை சொல்லவில்லையோ?
//சவூதி அரசாங்கமோ ஆள்பவர்களோ தவறு செய்தால் அதற்கு இஸ்லாம் பொறுப்பேற்காது.//
ஸரியாவை நிறைவேற்றும் பொறுப்பு ஆள்பவர்களிடம் இருக்கும் பொழுது எப்படி பொறுப்பேற்க முடியாமல் போகும்?
மற்றபடி, இந்த மாதிரி அத்து மீறல்கள் அனைத்து அராசங்களிலும் இருக்கும் என்பதால் மதத்துடன் அரசியலை இணைத்துப் பார்த்தால் பைத்தியகாரத்தனமாகத்தான் இருக்கும்.
9:48 PM
Anonymous> said...
Justifiable answer.
but, why you folks become angry whenever somebody ridicules arab countries?
11:25 PM
ஆரூரன்> said...
நண்பர் சுல்தான், உங்களுக்கான பின்னூட்டம் நீட்சியாக உள்ளதால், அதை என் வலைப்பூவில் பதிந்துள்ளேன். இங்கு சென்று பார்க்கவும்.
http://unarvukal-unarvukal.blogspot.com/2007/02/blog-post_11.html
நன்றி
1:29 AM
சுல்தான் said...
Thank You Mr. Suvanapriyan.
Encouragement from peoples like you really helps me to improve.
2:03 PM
சுல்தான் said...
வருகைக்கு நன்றி திரு. உதயகுமார்
//ஸரியாவை நிறைவேற்றும் பொறுப்பு ஆள்பவர்களிடம் இருக்கும் பொழுது எப்படி பொறுப்பேற்க முடியாமல் போகும்?//
ஷரீயாவை நிறைவேற்றும் பொறுப்புள்ள ஆள்பவர்கள்தான் (தவறுகளுக்காக) கண்டிக்கப்பட வேண்டும். இஸ்லாமல்ல.
உதாரணத்துக்க: இந்திய சட்டத்துக்கு எதிராக ஆள்பவர் செயல்பட்டால், ஆள்பவர் கண்டிக்கப்பட வேண்டும். இந்தியச் சட்டமல்ல.
//மற்றபடி, இந்த மாதிரி அத்து மீறல்கள் அனைத்து அராசங்களிலும் இருக்கும் என்பதால் மதத்துடன் அரசியலை இணைத்துப் பார்த்தால் பைத்தியகாரத்தனமாகத்தான் இருக்கும்.//
மதம் ஆள்வதற்கென்று அழகான வரையறையை வகுத்துத் தந்துள்ளது. அதை மீறி, ஆள்பவர் தவறு செய்தால் கண்டிக்கப்படவும், தண்டிக்கப்படவும் வேண்டும்.
அரசியல் சட்டத்தையும், ஆள்பவர்களையும் இணைத்துப் பார்த்தால் பைத்தியகாரத்தனமாகத்தான் இருக்கும் என்று நீங்கள் நினைத்தால்...... நான் சொல்ல ஏதுமில்லை.
2:17 PM
சுல்தான் said...
Thank you for your visit Anony.
We are not getting angry to ridicule Arabs but ridiculing Islam for that reason is wrong is my point.
2:22 PM
சுல்தான் said...
வருகைக்கு நன்றி திரு. ஆரூரான்.
உங்கள் பதில் பதிவைப் படித்தேன். விரைவில் இங்கேயே பதில் தருகிறேன்.
2:34 PM
மரைக்காயர் said...
நல்ல பதில்கள் சுல்தான் அவர்களே. 'சவூதிதான் இஸ்லாமா?' என்ற தலைப்பே கூட சில பதில்களை சொல்கிறது. சில முஸ்லிம்களின் நடவடிக்கைகளை வைத்துக் கொண்டு இஸ்லாத்தை பற்றி பலர் விமரிசனம் செய்கிறார்கள். நண்பர் ஆரூரன் அவர்கள் இந்த இரண்டிற்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொண்டால், இந்த விவாதம் இன்னும் சிறப்பாக அமையும்.
8:25 AM
சுல்தான் said...
வருகைக்கு நன்றி மரைக்காயர்.
ஆரூரன் அவர்கள் இதற்கு பதிலளித்துள்ளார்.
அவர் பதிலுக்கான விளக்கத்தையும் என் பதிவிலேயே இட எண்ணியுள்ளேன். வருகை தந்து தங்கள் கருத்துக்களைத் தரவும்.
1:01 PM
asalamone said...
Brother Sulthan,
Very nice to read.
Keep it up Brother.
Asalam
Bahrain
2:59 PM
சுல்தான் said...
Thank you Brother Asalamone
3:27 PM
லக்கிலுக் said...
மிக மிக பொறுமையாக, தன்மையாக பதிலளிக்கும் உங்களது பாணி என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது.
அட்டகாசமான பதிவு திரு. சுல்தான்.
4:08 PM
சுல்தான் said...
வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி திரு.லக்கிலுக்
